செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

தம்பதிகள் சடலமாக மீட்பு- நடந்தது என்ன ..?

தம்பதிகள் சடலமாக மீட்பு- நடந்தது என்ன ..?

மினுவாங்கொட ஓபாத பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் – மனைவி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர்

கணவன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த மனைவி 37 வயதுடையவர் என்றும் கணவனுக்கு 45 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா

திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்- சரத் பொன்சேகா

இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற

உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு

அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார்.

அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர்

வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், 270,000 பேரை பாதுகாக்க முடிந்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளித்ததாகவும் கூறினார்.

எனவே, புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள் மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

2009 ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் தின நிகழ்வை நடத்த சந்தர்ப்பம் கிட்டாது என அன்று பயங்கரவாதிகளுக்கு கூறினேன். அதே

நிலைப்பாட்டுடனேயே இன்றும் உள்ளேன் என சரத் பொன்சேகா கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம் – photo

லண்டனில் -சிங்கள இராணுவ தளபதிக்கு எதிராக நீதிமன்று முன் போராட்டம்- photo

இன்று பிரிட்டன் லண்டன் பகுதியில் அமைந்துள்ள Royal Court of Justice நீதிமன்றம் முன்பாக தமிழர்களின் கழுது வெட்டுவேன் என

சமிக்கை மூலம் தெரிவித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்த சிங்கள அரச பயங்கரவாத இராணுவ தளபதிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர்

பிரியங்கா பெர்னாண்டோ என்ற இராணுவ தளபதியே லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் நடத்திய சாத்வீக

போராட்டத்தின் பொழுது அங்கு கலந்து கொண்டவர்களை காணொளிகள் ,படங்கள் பிடித்து ,சமிக்கை மூலம் கழுத்து வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்

மேற்படி கிரிமினல் குற்றம் தொடர்பாக ,அவருக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கை அடுத்து அவர் லண்டனை விட்டு தப்பி இலங்கை சென்றார் ,


இதனை அடுத்து கொரனோ கால கட்டத்தில் மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர் அதில் சிலர் மட்டும் கலந்து கொள்ள

போலீசார் அனுமதி வழங்கியதை அடுத்து மேற்படி தமிழர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இலங்கை செல்லும் தமிழர்கள் ,குறித்த இராணுவ தளபதியின் நேரடி வழிகாட்டலில்

கடத்த பட்டு,கொலை,மற்றும் காணாமல் செய்யும் நடவடிக்கையில் தொடராக ஈடுபட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிட தக்கது

read more clik here மேலும் பார்க்க இதில் அழுத்துங்கள்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பரவி வந்த கொவிட் தொற்றினால் மேலும் நான்கு பேர்

உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இலங்கையில் கொவிட்

தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு

பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள்

மூடப்படும் என்று மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும்

மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை நாளை தொடக்கம் விடப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலை நோக்கி நகரும் புரவி சுறாவளி – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

திருகோணமலை நோக்கி நகரும் புரவி சுறாவளி – மக்களுக்கு கடும் எச்சரிக்கை

புரவி சுறாவளி இன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் ஊடாக நகர்ந்து இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்பொது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

சிறை மோதல் – உயிரிழந்த 8 பேருக்கு கொரோனா

சிறை மோதல் – உயிரிழந்த 8 பேருக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ராகமை

வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

இதன்போது, மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் தீர்வு

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் தீர்வுக்கான வாதுரைகளை முன்வைத்தது நாடுகடந்த தமிழிழ அரசாங்கம் !

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டப்போராட்டத்தின்

முதல்கள வெற்றியினைத் தொடர்ந்து, தீர்வு தொடர்பான தனது அடுத்த கட்ட வாதுரைகளை தடைசெய்யப்பட்ட

அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது.

பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல்

சட்டமுறைமைக்கு முரணானது என இவ்ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21ம் தேதி) முன்னராக வழங்கியிருந்தது.

இத்தீர்ப்பு தொடர்பில் அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் சட்டத்துக்கு

முரணான தடை நடவடிக்கை குறித்து, சட்டமுறைப்படி தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை,

உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்துள்ளது.

‘விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட பட்டியலில் இட்டது பாராளுமன்றம் என்றபடியால், அதனை அப்பட்டியலில் இருந்து நீக்குவதா அல்லது தொடர்வதா என்ற முடிவினை பாராளுமன்றமே

எடுக்க வேண்டும். மேலும் சிறிலங்காவில் இருந்து பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு தேடி வந்த தமிழ்உறவுகள், பிரித்தானியாவிலும் தொடர்ந்து தமிழீழ கோரிக்கைக்கான

முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு, அவர்கள் மீதிருக்கும் பயங்கரவாத முத்திரை நீங்குவதற்கு இத்தடை நீக்கம் வழிசமைக்கும் எனவும் இத்தடை நீக்கம் மனித உரிமைகளின்

அடிப்படையிலான தமிழர்களுடைய பேச்சு சுதந்திரத்தினையும், கருத்து சுதந்திரத்தினை முழுமையாக எந்தவித அச்சமும்மின்றி

அனுபவிக்க வழிகோலும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய அரச தரப்பும் தமது வாதுரைகளை ஆணையத்திடம் எழுத்துமூலமாக முன்வைத்துள்ள நிலையில் வழக்கு விசாரணையின் போது வாதிட்டது போலவே, இப்போதும்

தடை தொடர்பான முடிவினை எடுக்க தமக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என வாதுரைத்துரையில் ஆணையத்திடம் கோரியுள்ளது.

உள்துறை அமைச்சரின் வாதத்தினை ஏற்றுக் கொண்டால், உள்துறை அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் தடைப்பட்டியலில் இடும்பட்சத்தில் இந்த தடைக்கு எதிரான

சட்டநடவடிக்கை மீண்டும் ஆரம்பில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதத்தில் தெரிவித்துள்ளது.

தீர்வு தொடர்பாக இன்னுமொரு விசாரணை வேண்டுமா, அல்லது எழுத்து மூலமான வாதுரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கலாமா என்பது தொடர்பில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் பரிசீலித்து வருகிறது.

பிரித்தானிய உள்துறை அமைச்சின் தடையினை நீக்குகின்ற அதிகாரம் இந்த ஆணையத்துக்கு இல்லாதுவிட்டாலும், இத்தீர்ப்பின் அடிப்படையில் அரசியல்ரீதியான கொள்கை முடிவினை பிரித்தானிய அரசு எடுக்க வேண்டிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், பிரித்தானிய பாராளுமன்றத்துக்குள் இவ்வியத்தினை கொண்டு செல்லும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு

அம்பாறை மாவட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ளவர்கள் விஷேட தொலைபேசி இலக்கங்ளை

தொடர்பு கொண்டு இலகுவான முறையில் மருந்துப் பொதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு

பைஷல் இஸ்மாயில் –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ளவர்கள் விஷேட தொலைபேசி இலக்கங்ளை தொடர்பு கொண்டு இலகுவான முறையில் மருந்துப் பொதிகளை பெற்றுக்கொள்ள சகல

ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல்

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள

அதேவேளை நோயாளர்களுக்கான மருந்துகளை பொதி செய்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விஷேட வைத்திய சேவைக்காக, 075 9966441, 067 2052080 ஆகிய விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்பு கொண்டு

உங்களின் நோய் தொடர்பில் வைத்தியருடன் கலந்துரையாடி நோய்க்கான மருந்துப் பொதிகளை நீங்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சையை பெற்றுவந்த நோயாளர்களும் தங்களுக்கான மருந்துப் பொதிகளை குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொர்பு கொண்டு

பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக கிளினிக் நோயாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கிளினிக் பதிவு இலக்கத்தை

தெரியப்படுத்தி தங்களுக்கான மருந்துகளை பொதி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சேவை ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும்,

சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு

மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் இருந்து

மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று (30) இரவு 11 மணியளவில் பருத்தித்துறை வல்புரம் குறிச்சிப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தன்னை குழுவொன்று கடத்திச் சென்று தாக்கியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு சொந்தமான வயல்

காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்

இந்த நிலையில், மணல் கடத்தல்காரர்களுக்கும் காணி உரிமையாளருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுடன், மணல் கடத்தல் குழுவினர் கடந்த சனிக்கிழமை மாலை காணி

உரிமையாளரின் வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர்.

அதுதொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் உடனடி நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு மீண்டும் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியது.

இதன்போது, குறித்த வீட்டார் தஞ்சமடைந்திருந்த அயல் வீட்டுக்கு சென்ற குழுவினர், அவர்களை தாக்க முற்பட்ட நிலையில் தஞ்சமடைந்த வீட்டை சேர்ந்த நபர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த குழுவினரின் தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை துரைராசா (வயது 68) என்ற நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காணிக்கு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது 24) என்ற இளைஞன் சனிக்கிழமை மாலை குடிதண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வடமராட்சி முராவில் பகுதியில் சேதங்களுக்கு உள்ளான நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

இந்த நிலையிலேயே காணாமல்போன இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கும்பிட்டு கேட்கிறோம் பிள்ளைகளைக் காட்டுங்கள்’

கும்பிட்டு கேட்கிறோம் பிள்ளைகளைக் காட்டுங்கள்’

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சிறைச்சாலையில், மீதமிருந்த கைதிகளில் சிலர், வெவ்வேறு சிறைகளுக்கு

நேற்றுக்காலை அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குஓரளவுக்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவத்தை கேள்வியுற்ற கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும், சிறைச்சாலைக்குச் செல்லும் வீதியின்

இருமருங்கிலும் நின்றிருந்தனர். அதில், பெரும்பாலானவர்கள், சிறையிலிருப்போரின் தாய்மார், இன்னும் சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்து கதறியழுதனர்.

அவர்களுடன், கையிலிருந்த குழந்தைகளும் வீரிட்டு அழுதன, அம்மாவின் கையை தாங்கியிருந்த பிள்ளைகள் அழுதனர். தந்தைமாரும் கண்ணீர் சிந்தி, பிள்ளைகளை காட்டுமாறு

கைக்கூப்பிக் கேட்டுக்கொண்டனர். எனினும், மீதமிருந்த கைதிகளை ஏற்றியிருந்த சிறைச்சாலைகள் பஸ்கள் இரண்டும்,

கடுமையான பாதுகாப்பு பரி​வாரங்களுடன் அங்கிருந்து பரந்துவிட்டன.

குழுமியிருந்தவர்கள், “எங்கள், பிள்ளைகள், இருக்கின்றனரா? இல்லையா? எனக் காட்டுங்கள்” “இல்லையேல், கூறுகங்கள்”, “குடு

போட்டுதான் பிடித்துச் சென்றனர், ஆகையால், கும்பிட்டு கேட்கின்றோம், பிள்ளையைத் தாருங்கள்” என்றனர்.

மஹர சிறையிலிருந்த பலருக்கும் பிணைகள் கிடைத்துள்ளன. எனினும், விடுவிக்கப்படவில்லை என்பது அங்கிருந்தவர்கள் ஆதங்கமான குரலிலிருந்து புரிந்துகொள்ளமுடிந்தது.

“ என்னுடைய மகனுக்கு பிணை கிடைத்தது. எனினும், ​விடுவிக்கவில்லை” என தாயொருவர் கதறியழுதார்.

“இரண்டு மாதங்களாக, எனது பிள்ளையை பார்க்கவில்லை. பார்க்கவும் விடவில்லை. இருக்கிறாரா? இல்லையா? என்பதையாவது காண்பியுங்கள்” என்றார்.

அங்கிருந்தவர்களின் ஆதங்க குரலில், “ எங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்லர், ஆனால், கொரோனாவில் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. கொரோனா தொற்றில், இறந்துவிடுவார் எனக் கூறிவிடுவர்” என அச்சப்பட்டனர்.

சுதுபுத்தாவை தேடித்தாருங்கள்” என மார்பிலேயே அடித்துக்கொண்டு கதறியழுத மற்றுமொரு தாய், மஹரவிலிருந்து சற்று தூரத்திலிருந்தே தான் வருகின்றேன். “மூன்று மாதங்களாக பிள்ளையை பார்க்கவில்லை”, “பால்குடி மறவாத குழந்தைக்கு, எங்களால் என்ன கூறுவதென்றே தெரியவில்லை” எனக்கூறி அழுதார்.

“எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்று கூறுங்கள்” எனக் கெஞ்சிக்கேட்ட மற்றுமொரு தாய், “போன் எடுத்து கொடுங்கள், ஒரேயொரு தடவை பேசிகொள்கின்றோம்” என மற்றுமொருதாய் அழுது புலம்பியது அங்கிருந்தவர்களையும் அழச்செய்துவிட்டது.

“பிடிவிறாந்து பிடிக்கப்பட்டும், எம்.பிகள் பலரும் தலைமறைவாக சுற்றிதிரிந்தனர்” என ஆதங்கப்பட்ட மற்றுமொரு பெண், “பிணையில் எடுப்பதற்கான பணம் இன்மையால் ஏற்பட்ட தவறுக்காக, தன்னுடைய கணவனை அடைத்துவைத்துள்ளார்கள், தயவுசெய்து அவரை விட்டுவிடச் சொல்லுங்கள்“ என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை

சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 107 பேர் கைதிகள் எனவும் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதியாக அனுமதிக்கப்பட்ட கைதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மஹர சிறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, விசாரணைக்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சிலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதுடன், 8 பேர் மேற்படி கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

12 மணி நேரத்தில் சூறாவளி

12 மணி நேரத்தில் சூறாவளி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து

திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்,

தொடர்ந்துவரும் 12மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும்

முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை புதன்கிழமை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களில் சில இடங்களில் 100மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மேல்,மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிகப்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப் போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படு கின்றது.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் கைதிகள் மோதல் -இதுவரை 6 பேர் பலி!

சிறையில் கைதிகள் மோதல் -இதுவரை 6 பேர் பலி!

அதேபோல், குறித்த சம்பவத்தில் காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில்

இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மதியம் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ள

நிலையில் இதன்போது சில துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பின்னர் பொலிஸ் விசேட அதிரடப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பினை பலப்படுத்திய நிலையில், களனி மற்றும் ராகமை பொலிஸ் நிலையங்களில்

இருந்து 5 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மஹர சிறைகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை முழுமையாக

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப்

பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கோரவெளி

காட்டுப்பகுதியில் சம்பவ தினமான நேற்று பொலிசார் குறித்த பகுதியிலுள்ள

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்

இலங்கையில் ஆல மரத்தில் அம்மன் – குவியும் மக்கள்

இலங்கை வாழைச்சேனை பகுதியில் உள்ள ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்றில் அம்மன் சிலை ஒன்று காணப்பட்டுள்ளது

இதனை அடுத்து அங்கு மக்கள் குவிந்து தரிசித்து செல்கின்றனர்
தொடர்ந்து

இந்த செய்தி காட்டு தீ பரவியதால் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்

மேற்படி சம்பவம் இலங்கையில் ஏதோ பெரும் சம்பவம் இடம்பெற போவதை இது உணர்த்துவதாக தெரிவிக்க படுகிறது

ஆல மரத்தில் அம்மன்
ஆல மரத்தில் அம்மன்
Posted in இலங்கை செய்திகள்

வயாகரா படகை நடுக்கடலில் மடக்கிய சிங்கள கடல் படை

வயாகரா படகை நடுக்கடலில் மடக்கிய சிங்கள கடல் படை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வயாகரா மாத்திரைகளை

படகில் கடத்தி வந்த பைபர் படகு ஒன்றை சிங்கள கடல் படையினர் மடக்கி பிடித்தனர்

இதன் பொழுது அந்த படகில் இருந்த சுமாரா ஆறு லட்சம் ரூபா பெறுமதியான

மாத்திரைகள் கண்டு பிடிக்க பட்டதாக சிங்கள கடற்ப்படையுடன் இணைந்து போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த கடத்தலில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த சிலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பண்டி வடிவில் புதிய மான் கண்டு பிடிப்பு

இலங்கையில் பண்டி வடிவில் புதிய மான் கண்டு பிடிப்பு

இலங்கையில் உலகில் காணப்படும் அரிய வகை சருகு மான் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட மான் சரணாலயத்தில் விடுவதற்கு எடுத்து

செல்ல பட்டுள்ளது ,குறித்த மானை மக்களே துரத்தி சென்று பிடித்ததாக தெரிவிக்க படுகிறது

மான்
மான்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபக் குடும்பத்தினர் மீது,

இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுக்கு தாக்குதலுக்கு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாளும் மீட்கப்பட்டுள்ளது

சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு

இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட

விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்

கொரோனா வைரஸ் – 81 பேர் கொழும்பில் மட்டும் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரில்

அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இதுவரை உயிரிழந்த 109 பேரில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தோரில் அதிகமானோர் 71 வயதைக்

கடந்தவர்கள் என்பதுடன், நடுத்தர வயதினர் பலரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் களுத்துறையில் 06 பேரும், குருநாகலில் 04 பேரும், புத்தளத்தில் 03 பேரும், நுவரெலியாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளன