Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை
நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டஙகளில் மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை , நுவரரெலியா மற்றும் இரத்னபுரி ஆகிய மாவட்டங்களுக்கு
மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணிவரை ஏற்புடையது என கட்டிட ஆய்வு
நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO
லண்டன் இஸ்ரேல் தூதரகம் முன்பாக தமிழர்கள் – பலஸ்தீனர்கள் போராட்டம் – கொடிகள் எரிப்பு PHOTO
லண்டன் கென்சிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்றைய தினம் பாலஸ்தீன சார்பு பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள்’இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’என்று கோஷமிட்டு இஸ்ரேலிய கொடியை
எரித்தார்கள்.இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டார்கள்.
செய்தி பகிர்வு -ஈழம் ரஞ்சன்





கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 46 பேர் பலியாகியுள்ளன .இதுவரை இந்த தகத்தலில் சிக்கி சுமார் 1,178 பேர் பலியாகியுள்ளனர் ,
நோயினை கட்டுப் படுத்த தனிமை படுத்தல் சட்டங்கள் விதிக்க பட்டுள்ள போதும் குறித்த
நோயினை கட்டுப்படுத்த முடியாது இலங்கை திணறி வருகிறது ,நோயாளர்களினால் மருத்துவ மனை நிரம்பி வழிகிறது
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
சுமார் 2,145 பேராக உயர்வடைந்துள்ளது
வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டுப்படுத்த பயண தடைகள் விதிக்க பட்டுள்ளது
,எனினும் அவை தாண்டி இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது
சாராய கடைகள் பூட்டு
எதிர் வரும் இருபத்தி ஐந்தாம் திகதி முதல் சாராய கடைகள் அனைத்தும் அடித்து பூட்டுமாறு
உத்தர விட பட்டுள்ளது ,இதனால் குடி மகன்கள் பெரிதும் கலக்கத்தில் உறைந்துள்ளனர்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
தற்போது கடல் பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபட்டிருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் நாளை மறுதினம் புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா
கடல் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காற்று 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு
பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னரும் வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதா இல்லையா என்பது
பற்றி தீர்மானிக்கப்படும் என்று கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதோடு அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொது மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த பயணக்கட்டுப்பாட்டில் அன்றைய தினம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார். அரசாங்கம் வழங்கும் சலுகைகளை இந்த
சந்தர்ப்பத்தில் துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததுடன் ,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார
கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை
கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை
கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொறோனா வைரஸினால் பாதிககப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ பிரதமரின்
இந்து விவகாரம் தொடர்பான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர்இ பாதிக்கப்பட்டிருக்கின்ற
சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.
இதன்போதுஇ சிவாச்சாரியர்களுக்கு தேவையான சைவ உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேவேளைஇ வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில்
தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்
வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன்இ தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான
தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் காவல் துறையினரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் முகக்கவசம் அணியாது சென்றவர்கள் என
தெரிவிக்க படுகிறது
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் ஆயிரம் சிறுவர்கள்
பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறு பாதிக்க பட்ட சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்திட இலங்கை அரசு முயன்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி சென்றுள்ளதுடன் இதன்போது மாடியில் இருந்து விழுந்ததாக
கூறப்பட்ட நபருக்கு எவ்வித காயங்களும் இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சிலர் ஓட்டுனர் மற்றும் உதவியாளரான பெண்ணின் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
இன்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவிருக்கிறது.
பயணக்கட்டுப்பாடு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து
வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லையென பொலிசார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண ,அரசாங்க
தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய
மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.
அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப்பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன
விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கூறினார்.
பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக பங்கெடுக்க இருக்கின்ற பூகான்வீல் நாட்டு சபாநாயகர் சிமொன் பெனானு ( Speaker of
BougainvilleHouse of Representatives ) அவர்கள் ‘இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற நடைபெற இருக்கின்ற அரசவை அமர்வில், பல்வேறு சர்வதேச வள அறிஞர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர்.
பசுபிக் பெருங்கடல் தீவின் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் பப்புவாக்கினாயாவில்
இருந்து பிரிந்து சுதந்திர நாடாக தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசம் ‘பூகான்வீல்’.
சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை பூகான்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில்;, அத்தேசத்தின்
சபாநாயகர், பொதுவாக்கெடுப்பு நோக்கிய தமது அரசியல் செயல்வழிப்பாதையினை பகிர்ந்து கொள்ளும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றார்.
இதுதவிர ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும் Self Determination and Remedial Secession’ – ‘இந்தியப் பெருங்கடல் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும் அதனை
தடுப்பதற்கான பொறிமுறையும் Growing Chinese influence in the Indian Ocean specially in Sri Lanka and measures to counter it. ‘ எனும் தலைப்புக்களிலும் பலவள அறிஞர்கள் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட அரசவை அமர்வின் கூட்டமர்வில் வளஅறிஞர்கள், அரசவை உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் பகிரும் வகையில்
‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் கருப்பொருளில் கலந்தாய்வு இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
இலங்கை Polgahawela பகுதியில் உள்ள மாஸ் தொழில் சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 380
பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த நோய் பரவலை அடுத்து குறித்த நிறுவனம் தனிமை படுத்த பட்டுள்ளது
இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு அருகில் ஆண் ஒருவர் எரிக்க பட்டு உருக்குலைந்த
நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் அடித்து கொலை செய்ய பட்ட பின்னர் தீயில்; எரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த படுகொலைகாண் காரணம் தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் வேட்டை 493 பேர் கைது
தொடரும் வேட்டை 493 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு
பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது
செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
இலங்கை நோர்வூட் ஆடைத்தொழில் சாலையில் பணிபுரிந்த வரும் தொழிலாளர்கள் பதினாறு
பேருக்கு நிகழ் கால கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து குறித்த நிறுவனம் அடித்து பூட்ட படுகிறது ,பாதிக்க பட்டவர்கள் தலைமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்
ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்படி கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 3.051 பேர் கொரனோ நோயின் தாக்குதலில் பாதிக்க
பட்டுள்ளனர் ,மேலும் நாள் தோறும் இந்த நோயில் சிக்கி பலியாகின்ற மக்கள் தொகையும்
அதிகரித்த வண்ணம் உள்ளது
மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது சிங்கள அரசு திணறி வருகிறது
இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்! photo
இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!
தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பின் 12ம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில்
உலகத் தமிழர் இயக்கத்தினால் தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விழிப்புணர்வுப் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழீழத்தின் மீதான தொடரும் இனவழிப்பை சிறீலங்கா பௌத்த பேரினவாத இனவழிப்பு அரசாங்கமும் அதற்கு முண்டுகொடுத்து வரும் பன்னாட்டு வல்லாதிக்க சக்திகளும்
மூடிமறைப்பதற்கான பல பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது. இத்தகையதொரு சூழலில் உலகத் தமிழர் இயக்கம் இவ்விடையத்தை பொதுசன வெளியில் எடுத்துச்செல்வதற்கான
செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனொரு கட்ட வேலைத்திட்டமாக இவ்விரு மாநிலங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக இவ்வாறன செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மினத்தின் நீதிக்கும்
உரிமைக்குமான விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க அனைவரது ஆதரவையும் உலகத்தமிழர் இயக்கம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கிறது.
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரனோ ஊசி
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரனோ ஊசி
இலக்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டுப்படுத்த 12 வயதுக்கு ஏற்பட்ட
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட பரிந்துரைக்க பட்டுள்ளது
இதனை அடுத்து விரைவில் இவர்க்ளுக்கு செலுத்த அரசு தயாராகி வருகிறது






