Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணாமாக மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது

,இதனால் நாடளாவிய ரீதியில் எழுபத்தி ஆறாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

செயல் இழந்த இணைப்புக்களை சீர் செய்வதில் மின்சார சபை ஈடுபட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

    ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

    இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      ஆவி தாக்கியதில் ஐவர் காயம் – கொரனோ செய்த கொலை வெறி

      ஆவி தாக்கியதில் ஐவர் காயம் – கொரனோ செய்த கொலை வெறி

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள நீராவி பிடித்து வருகின்றனர்

      இவ்வாறு சூடான பாத்திரத்தில் வைக்க பட்ட நீர் கவிழ்ந்து தாக்கியதில் ஐவர் பலத்த

      எரிகாயங்களுக்கு உள்ளன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      இந்த ஆவி பிடிப்பின் மூலம் மூச்சு விடுதல் இலகுவாக இருக்கும் ,அதனால் மக்கள் இதனை செய்து

      வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்

        கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்

        இலக்கையில் வேகமாக பரவி வருமாம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 28 பேர்

        மரணமாகியுள்ளனர் .இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,269 ஆக அதிகரித்துள்ளது

        அரசு கூறும் இந்த உயிரிழப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் கருத்துக்களை பகிர்ந்து

        வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டா மன்னித்தார் – 240 கைதிகள் விடுதலை

          கோட்டா மன்னித்தார் – 240 கைதிகள் விடுதலை

          இன்று இலங்கையில் வெசாக் தினம் என்பதால் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவின் பொது

          மன்னிப்பின் கீழ் 240 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

          பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் ஈடுபட்ட நபர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

          என்பது இங்கே குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பீதியில் மக்கள்

            ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – பீதியில் மக்கள்

            இலங்கையின் ஆறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

            நுவரெலியா ,இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் உள்ளது எனவும்

            ,இவ்வேளை இங்குள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            திருமலையில் கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

            திருமலையில் கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

            இலங்கை கிழக்கு மாகாணம் திருமலை பகுதியில் கடலுக்கு சென்ற மூவர் காணாமல்

            போயுள்ளனர் .,பெரும் புயல் வீசி கொண்டுள்ள

            இவ்வேளையில் இவர்கள் காணாமல் போயுள்ளது

            குடும்பத்தினரை கண்ணீரில் உறைய வைத்துள்ளது

            கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்ட

            கால பகுதியில் இந்த் சம்பவம்

            இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

              வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது

              வீடு புகுந்து 30 மில்லியன் கொள்ளையடித்த நபர் கைது

              இலங்கை பத்தரமுல்லையில் வீடொன்றுக்குள் புகுந்து சுமார் 30.6 மில்லியன் ரூபாய்களை

              கொள்ளையடித்து சென்ற நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

              கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                Posted in இலங்கை செய்திகள்

                கொரனோ மரணம் 1243 ஆக உயர்வு

                கொரனோ மரணம் 1243 ஆக உயர்வு

                இலங்கையில் கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,243 ஆக

                உயர்வடைந்துள்ளது

                அரசு தெரிவிக்கும் எண்ணிக்ககையை விட உயிரிழப்பு இரு மடங்கு அதிகம் என மக்கள் மத்தியில்

                பேச படுகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது

                  தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது

                  இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 745 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                  கைதானவர் முக கவசம் ,மற்றும் எல்லை தாண்டி பயணித்தமை தொடர்பில் கைது செய்ய பட்டுள்ளனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல்

                    இறக்குமதியை இடைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல்

                    நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள்

                    அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                    கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸும் zoom தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                    தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன

                    இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

                    அதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதி செய்வது

                    தொடர்பில் இதற்கு முன்னதாக காணப்பட்ட திட்டத்தை அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது

                      பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது

                      பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளைய தினம் பொது பயணிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறாது.

                      கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                      நாளை எதுவித பயணிகள் போக்குவரத்து ரயிலும் சேவையில் ஈடுபடாது என ரயில்வே

                      திணைக்களத்தின் போக்குவரத்துக்கான பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

                      எனினும் பொருட்கள் மற்றும் எரி பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஜூன் 7 ம் திகதிவரை கட்டு பாடு நீடிப்பு – வாகனங்களில் செல்ல தடை

                        ஜூன் 7 ம் திகதிவரை கட்டு பாடு நீடிப்பு – வாகனங்களில் செல்ல தடை

                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலைஅடுத்து புதிய கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன .


                        இதனை அடுத்து விதிக்க பட்ட பயண கட்டுப்பாடு எதிர்வ்ரும் மதம் ஏழாம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது

                        மேலும் பொருட்கள் கொள்வனவு செய்திட அருகில் உள்ள கடைகளிற்கு மட்டுமே செல்ல முடியும்

                        ,வாகனங்களில் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.

                          பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.

                          பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புக்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது.


                          இனிவரும் காலங்களில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கடிதத் தொடர்புகளை

                          பின்வரும் முகவரி ஊடாக மேற்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

                          Tamils Coordinating Committee (UK)
                          Kingfisher House
                          Restmor Way,
                          Hackbridge, Surrey
                          SM6 7AH

                          நன்றி

                            Posted in இலங்கை செய்திகள்

                            தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்-மனோ கணேசன்

                            தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்

                            மனோ கணேசன்

                            தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு

                            விட்டது என சீன தூதரகம் எனக்கு தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்து பார்த்தால், தமிழ் மொழியை புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகிறது.

                            சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பை கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழி சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி,

                            திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கிறார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடந்த “சட்டமா” குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீன தூதரகமா? இலங்கை அரசா?

                            எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை-சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழி போராட்டத்தை கொழும்பு தெருக்களில், துறைமுக

                            நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

                            சீன நிறுவன பெயர் பலகைகளில் தமிழ் மொழி தவிர்க்கப்படுவது பற்றி தனது டுவீடர் தளத்தில் பதிவு செய்துள்ள மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                            தமிழ் மொழியை தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர் பலகைகளும் இந்நாட்டில் உள்ளன.

                            நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கி கூறியுள்ளேன். சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும், அதேபோல் சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில், பண்டைய வரலாற்று காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளை பற்றி அப்போது சீன தூதுவர் என்னிடம் மிகவும் சிலாகித்து கூறினார்.

                            இவ்வருடம் பெப்ரவரி மாதமே நான் சீன தூதரகத்துக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்க போகும் சீன நிறுவனங்கள் இதுபற்றி மிக

                            கவனமாக இருக்க வேண்டும் என கூறினேன். சீன தூதரகத்தில் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்.

                            தற்போது சமூக ஊடகங்களில் உலாவரும் ஒரு தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் கொண்ட பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டது என சீன தூதரகம் எனக்கு

                            அறிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் கிடையாது. இது கவலைக்குரியது. இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக எமது மொழியுரிமை குறித்து, நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.

                            இன்று யோசித்து பார்த்தால், இலங்கை வரும் சீன நிறுவனங்கள், தமிழை புறக்கணிக்க, நமது இலங்கை அரசிடம்தான் கற்றுகொள்கின்றனர் போல் தெரிகிறது. அந்தளவுக்கு உள்ளூர் நிலைமை மோசம்.

                            கடந்த அரசாங்கத்தில், அரச கரும மொழித்துறையும் எனது நேரடி பொறுப்பில் இருந்த போது, எனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களை கொண்டு மிக அதிகமான பணியை நான் ஆற்றினேன்.

                            நாட்டில் எங்காவது பெயர் பலகைகளில் தமிழ் இல்லாமலோ, பிழையாகவோ இருந்தால், எவரும் என்னை நேரடியாக எனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி

                            கொடுத்தேன். நாட்டில் மொழித்துறைக்கு பொறுப்பாக ஒரு அமைச்சர் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலைமை நிலவியது. இது அனைத்து தமிழ் மொழி எழுதி, பேசி வரும் அனைவரது மனசாட்சியும் அறிந்த உண்மை.

                            பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களை அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக நியமித்து, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். புகார்களை உள்வாங்கி திருத்தி அமைக்கும் நிலையம் ஒன்றை, அமைச்சில் அமைத்தேன்.

                            அதேபோல், அரச நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைக்க வசதி இல்லாவிட்டால் எனது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தேன். கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து மொழி சட்ட அமுலாக்கலை படிபடியாக மேம்படுத்தினேன்.

                            இப்போது அந்த பெயரில் அமைச்சே கிடையாது. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் ஆகியவை எந்த அமைச்சின் கீழ் உள்ளன என்றே பாமர

                            மக்களுக்கு தெரியவில்லை. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் யார் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது.

                            இதுதான் இன்றைய அரசின் நிலைமை. இது இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்பீக்கள் ஆகியோருக்குதான் வெளிச்சம். இந்த அரசாங்க எம்பீக்களுக்கே, இன்று இந்த மொழித்துறை அமைச்சர் யார் என தெரியுமோ என எனக்கு பெரும் சந்தேகமாக உள்ளது.

                            இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். அந்த போராட்டத்தையும், இலங்கை, சீனம் ஆகிய இரண்டு நாட்டு அரசுகளுக்கும் எதிராகவே செய்ய

                            வேண்டி வரும். இந்நாட்டு அரசியலமைப்பில் உள்ள அரச கரும மொழி சட்டத்தை மீறும் பெயர் பலகைகளில் கறுப்பு வண்ண தாரை பூசும் போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்தவேண்டிவரும்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

                              மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது

                              வெலிகம பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மற்றொரு நபரைத் தாக்கும்போது அதனைக் கண்டுங்காணாததுபோல வேடிக்கைப் பார்த்த இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                              வெலிகம பிரதேசத்தில் வைத்து பஸ் சாரதி ஒருவர் அங்கிருந்த மற்றொரு நபரை இரவில் கடுமையாகத் தாக்கியிருந்த நிலையில்,

                              சம்பவ இடத்திலிருந்த இரு பொலிஸார் அதனை வேடிக்கைப் பார்த்ததோடு, தாக்குதலை தடுக்கத் தவறியமைத் தொடர்பான சிசிடீவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

                              இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, அச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தில்

                              தாக்குதலை மேற்கொண்ட குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

                              மேலும் இச்சம்பவம் நடைபெற்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமாக இருந்தால், அதனைத்

                              தடுக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. தாக்குதலுக்குள்ளாகும் நபரைக் காப்பாற்ற வேண்டியதும், தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளியை கைது செய்வதும் பொலிஸாரின் பொறுப்பு என்றார்.

                              எனவே தாக்குதலைத் தடுக்கத் தவறியப் பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றில்

                              முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்.

                              சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்.

                              கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குணமடைந்து

                              திரும்பும் வரை, கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டுள்ளன.

                              அதற்கமைய, கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்சல் பொன்சேகா, கட்சியின் பொதுச் செயலாளர்

                              ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர்

                              ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

                              தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

                              கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான

                              குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு

                              விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

                              கொரோனா: இன்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1210

                              இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

                              கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நேற்றைய (23) தினம் ஜவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ,மே 22 ஆம் திகதி

                              வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

                              இதற்கமைவாக இலங்கையில் இன்று (24) காலை வரையில் கொரோனா (கொவிட்) மரணங்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

                              நேற்று மேலும் 2950 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 2945 பேர் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன்

                              சம்பந்தப்பட்டவர்கள் என்றும் 14 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம்

                              ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக பயன்படுத்த தீர்மானம்

                              நாட்டில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலைகளில் 50 வைத்தியசாலைகளை கொரோனா வைரசு

                              நோய்க்கு சிகிச்சை அளிக்கும் இடை சிகிச்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                              சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக

                              பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் திருமதி.பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார்.

                              ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலைகள் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக

                              மாற்றப்படுவதையடுத்து 3 500 கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

                              சம்பந்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா நோய் சிகிச்சை சேவை

                              தொடர்பான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதே போன்று இவர்களுக்கு கொரோனா வைரசு தொற்று தடுப்பூசியும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.