Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
இலங்கையில் முதலாவத் குரங்கமாமி நோயாளி அடையாளம் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
குறித்த குரங்கம்மை நோயால் பாதிக்க பட்டவர் ,சிறப்பு பிரிவில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
உலகத்தை அச்சுறுத்தி வரும் நோய்களில் இவையும் ஒன்று என்பது குறிப்பிட தக்கது .
மோசடி பிரபல பெண் கைது
மோசடி பிரபல பெண் கைது
இலங்கையில் பல பில்லியன் பணத்தினை கொள்ளையடித்து கைதாகியுள்ள தோலின் பிரியாமலி வழங்கிய தகவலின் அடைப்படையில் முக்கிய பிரபல பெண் ஒருவர் கைது சிஏய பட்டுளளார் .
கைதானவரிடம் தொடர்ந்து விசாரணிக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வரை அடுத்து மேலும் பல் முக்கிய புள்ளிகள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது
துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
துயிலும் இல்லத்தில் சிரமதானம் கஜேந்திரன் எம்பி களத்தில்
யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக நேற்று (02) சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது.
மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதான பணிகள்
மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார்.
உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர்
உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப் படம்
கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில் ஒருவரின் 5 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால் எந்த விரல்களிலும் நகங்கள் இல்லை.
இந்த பாதிப்புக்கு அனோனிச்சியா காங்கினிடா என்று பெயர். இது மிகவும் அரிய வகை நோயாகும். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது. அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் கூறுகையில்,
“அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும். இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை.
ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம்” என்று கூறுகிறது.
வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி
வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவு செய்யப்பட்ட மாணவி
வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட
மாணவிகளுக்கு காப்போம் நிறுவனம் நிதியுதவி வழங்கி வைப்பு!
அபு அலா –
தந்தையிழந்து மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் கல்விகற்று யாழ்.
பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட முள்ளிவாய்கால் –
உடையார்கட்டு பிரதேசத்தைச் இரு மாணவிகளின் உயர்படிப்பை கஷ்டமின்றி
தொடர்வதற்கு இலங்கை காப்போம் தொண்டு நிறுவனம் நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளது.
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்
கு.பிரதீப்கரன் (திலீப்) உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்கால் – உடையார்கட்டு பிரதேசத்திலுள்ள சு . சங்கவி மற்றும் த. கிந்துஜா என்ற இரு மாணவிகளின் இல்லம்தேடிச் சென்று தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் முதற்கட்டமாக இந்த நிதியுதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.
இதன்போது யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பிரதி அதிபர் கு.சுதாகரன்,
வடகிழக்கு கலைப்பிரிவு மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் த.
யதுர்சனன் மற்றும் காப்போம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
மலையகத்தில் தொடர்பெய்து வரும் மழையால் நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா- டெஸ்போட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடான டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் தற்போது அந்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

.யாழ்ப்பாணம் வலி வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்.தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தெல்லிப்பழைச் சந்தியில் முற்பகல் 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகிப் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் வரை பேரணி சென்றடைந்தது.
தொடர்ந்து தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக காங்கேசன்துறை வீதியை மறித்து போராட்டம் இடம்பெற்றது. இதனால் வீதி போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.
பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீயிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், காணி உரிமையாளர்கள், மத குருமார்கள்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக வலி வடக்கில் 3027.85 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது அதில் இராணுவத்தின் பிடியில்-2054.25 ஏக்கர், கடற்படையின்
பிடியில்-274.57ஏக்கர், விமான படையின் பிடியில்-646.50 ஏக்கர், பொலிஸ் பிடியில்-52.53 ஏக்கர் விடுவிக்கப்பட
வேண்டும் என வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்ற குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்தது
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய கப்பல் வந்தடைந்தது

இலங்கைக்கு அமெரிக்கா அரசு பாரிய கப்பல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது .
அவ்விதமான அன்பளிப்பு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது .
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றிருந்த விசேட குழுவினர் குறித்த கப்பலை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வந்தனர் .
பல நாட்களின் பயணத்தின் பின்னர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது .
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி
கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் மோதச் செய்ததாக கூறப்படும் கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவவ பிரதேசத்தின் போதிருக்காராம விகாரையின் 29 வயதுடைய தேரர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விகாரையில் இந்த தேரர் மாத்திரமே தங்கியுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
இவர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றி அதிலிருந்து விலகியதன் பின்னர் பிக்குவாக மாறியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தேரர் மற்றும் குறித்த விகாரையில் உள்ள உதவியாளர் உட்பட நால்வர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இலக்கம் 43/A, டயஸ் வத்த, மல்வான, வாரியபொல என்ற முகவரியில் வசித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.பி. சுனில் (12601) என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரியின் தலையில் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு
சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த விசேட அறிவிப்பு
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 06 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதற்கான அட்டைகளை ஆஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா
யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா
யாழ்ப்பாணம் வருகிறார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .வடபகுதிக்கு பயணிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளாராம் .
மக்களின் பிரச்னைகளிற்கு தீர்வு கண்டு, அதன் ஊடாக தேர்தலில் வெற்றிவாய்ப்பை பேணும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை
கிளிநொச்சியில் நடமாடும் நீதி சேவை
வடக்கு மக்களுக்கான நீதி அமைச்சின் நடமாடும் சேவை திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை கிளிநொச்சியில் நேற்று (01) நடைபெற்றது.
கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச வரவேற்கப்பட்டார்..
இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து அகதிகளாக சென்று, மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்
நீதியமைச்சினால் விசேட
நடமாடும் சேவை வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு
நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு
நாடு முழுவதும் இன்று (02) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2 மணி நேரம் மின் துண்டிப்பு
இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
கொள்ளையடித்த முற்றும் துறந்த பிக்கு சிக்கினார்
கொள்ளையடித்த முற்றும் துறந்த பிக்கு சிக்கினார்
இலங்கையில் திலினி பிரியாமாலியின் பின்னால், உள்ளமுக்கிய முதலைகள் தொடராக சிக்கிய வண்ணம் உள்ளனர் .
இவர்கள் யாவரும் தமது கள்ள பணத்தை வெள்ளை பணம் ஆக்கும் நகர்வில் ஈடுபட்டனர் .
பல கோடி ரூபாய்களை பங்கு சந்தை வர்த்தகம் என்ற போர்வையில் ,முறைகேடாக பயன் படுத்தி கொள்ளையடித்து வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது .
தற்போது முற்றும் துறந்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டு ,விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
மூன்று பில்லியன் ரூபாய்களை, திலினி பிரியாமாலினி சுருட்டியுள்ளார் .
இவரது பின்புலத்தில் மகிந்தா மனைவி உள்ளிட்டவரக்ள் சிக்கியுள்ளதால் ,,அரசியலில் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 11000 தமிழ் அகதிகள் மீள தாயகம் திரும்பியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு போர் காணமாக ,புலம்பெயர்ந்த தமிழர்களே தற்போது 26 வருடங்கள்,கழித்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறு இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு, இலவச டிக்கட் வழங்கி இலங்கை அழைத்து வந்துள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையில் நிலவி வருமுன் சீரற்ற கால் நிலை காரணமாக ,கண்டி, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா , இரத்தினபுரி,பதுளை, கேகாலை, குருநாகல், ஆகிய பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் பிறிதொரு இடத்திற்கு நகர்ந்த வண்ணம் உள்ளனர்.
நண்பனுடன் மனைவி உல்லாசம் வீடியோ பிடித்து மகிழ்ந்த கணவன்
நண்பனுடன் மனைவி உல்லாசம் வீடியோ பிடித்து மகிழ்ந்த கணவன்
தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அவ்விருவரும் படுகையறையில் இருந்தபோது, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.
தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில் மதுபானத்தை பருகிவிட்டு, அவ்விளைஞனுடன் கணவன், மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார்.
தானும் அவ்விளைஞனும் படுக்கை அறைக்குச் சென்றதன் பின்னர், அங்கு கணவன் மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். கடுமையாக தாக்கியும் உள்ளார்.
அதன்பின்னர், படுக்கையறை காட்சிகளை தன்னுடைய அலைபேசியில் வீடியோவாக எடுத்துக்கொண்டுள்ளார் என அவரது மனைவி தெரிவித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பனுடன் மனைவி உல்லாசம் வீடியோ பிடித்து மகிழ்ந்த கணவன்
அந்த வீடியோ காட்சிகளை பார்த்து தன்னுடைய கணவனும் அவ்விளைஞனும் சந்தோஷமடைந்துள்ளார்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பெந்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, இளைஞனும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெந்தோட்ட நகரில் வர்த்தக நிலையமொன்றை நடத்திச் செல்லும் 50 வயதான நபரும் 42 வயதான பெண்ணும் சட்டரீதியில் திருமணமானவர்கள் அவ்விருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
அவ்விருவரும் கொழும்பில் தங்கியிருந்து கல்விக்கற்கின்றனர்.
தன்னுடைய விருப்பமின்றி இவ்வாறு படுக்கை அறையை பகிர்ந்துகொண்டதாக தெரிவித்த அந்தப் பெண், அலைபேசியில் இருந்த
வீடியோவை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது அதனை பிடுங்கி தரையில் அடித்து நொறுக்கிவிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேபோல, இதற்கு முன்னர் கதிர்காமத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த போதும், மற்றுமொரு இளைஞனுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளுமாறு தன்னுடைய
கணவன் வற்புறுத்தியதாகவும் எனினும், அதிலிருந்து தப்பிவிட்டதாகவும் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளது
நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளது
கடந்த வாரம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளதுடன், இந்த காலப்பகுதிக்கு தேவையான 38 மெட்ரிக் தொன்நிலக்கரி இறக்குமதியில் இதுவே பிரதான நிலக்கரி தொகையாகும்.
மேலும் ஐந்து நிலக்கரி கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடைய உள்ளதாகவும், அவற்றை முன்னர், ஒப்பந்தம் செய்யப்பட்ட
நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரியை ஏற்றிய கப்பல் கொழும்பு வந்துள்ளது
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தற்போது உள்ள நிலக்கரி கையிருப்பு 2022 ஒக்டோபர் இறுதி வரை மட்டுமே போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளதுடன்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியினை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு விஜயம்
அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு விஜயம்
அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவரை வரவேற்று, நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம்,
பாதுகாப்பு மற்றும் அக்கறைக்குரிய ஏனைய பொதுவான விடயங்களில் விசேட கவனம் செலுத்தி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கினார்.
இவ் விஜயத்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதியுடன் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி
நெல்சன், அமெரிக்க உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு. சேத் நெவின்ஸ்,
மற்றும் திருமதி. அனாமிகா சக்ரவர்த்தி (அரசியல் அதிகாரி) ஆகியோர் உடன் இருந்தனர்.








































