அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு விஜயம்
அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவரை வரவேற்று, நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம்,
பாதுகாப்பு மற்றும் அக்கறைக்குரிய ஏனைய பொதுவான விடயங்களில் விசேட கவனம் செலுத்தி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கினார்.
இவ் விஜயத்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதியுடன் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி
நெல்சன், அமெரிக்க உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு. சேத் நெவின்ஸ்,
மற்றும் திருமதி. அனாமிகா சக்ரவர்த்தி (அரசியல் அதிகாரி) ஆகியோர் உடன் இருந்தனர்.
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது








