டிக் டாக் எடுக்கும்போது கடலில் விழுந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக் எடுக்கும்போது கடலில் விழுந்த இளைஞன்

டிக் டாக் எடுக்கும்போது கடலில் விழுந்த இளைஞன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர் ஒருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.

இரண்டு நண்பர்கள் இணைந்து மோட்டார் சைக்கிளில் ‘ரிக் ரொக்’ எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை
உயிருடன் மீட்டெடுத்ததுடன், மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர்.

முத்தம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனுக்கு முத்தம் கொடுத்த டீச்சர்

மாணவனுக்கு முத்தம் கொடுத்த டீச்சர்

15 வயதுடைய மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 42 வயதுடைய தாய் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாயின் சகோதரியிடமே (சித்தி) பாதிக்கப்பட்ட மாணவன் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் சித்தி வீட்டை விட்டுச் சென்றபோது, ​​சந்தேகநபரான ஆசிரியை வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது சித்தி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது, மாணவனும், ஆசிரியையும் ஒன்றாக இருப்பதையும், மாணவனுக்கு ஆசிரியை முத்தம் கொடுப்பதையும் கண்ட சித்தி வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் தொலைபேசிக்கு ஆசிரியை காதல் வார்த்தைகள் கூறி குறுஞ்செய்தி
அனுப்பியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எயிட்ஸ் நோயினால் 600 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எயிட்ஸ் நோயினால் 600 பேர் பாதிப்பு

எயிட்ஸ் நோயினால் 600 பேர் பாதிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் ஒப்பீட்டளவில் பெண்களை விட ஆண்களுக்கே வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாகவும், தொற்றாளர்களில் 20 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற ரீதியில்

பதிவாகியுள்ளதாகவும், இளம் வயதினரிடையே இந்த அதிகரிப்பு காணப்படுவதாகவும் இலங்கை பாலியல் சுகாதார மற்றும் எச்.ஐ.வி மருத்துவ நிபுணர் விசேட வைத்தியர் மஞ்சுளா ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார் .

உலக அளவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 38.4 மில்லியனாகும். கடந்த ஆண்டில் மாத்திரம் 1.5 மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் 0.1 சதவீதத்திற்கும் குறைவானதாகவே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 410 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான

காலப்பகுதியில் 429 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 600 ஆக பதிவாகலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் மூலமாக ஏனையோருக்கு வைரஸ்
பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. அத்துடன் நீண்டகால மருத்துவ சிகிச்சைகளை பெற்றாக வேண்டும். மேலும் வெறுமனே உடலுறவு மூலமாக

மட்டுமே எச்.ஐ.வி வைரஸ் பரவும் என கருதக்கூடாது. இரத்தம் மூலமாகவும் பரவும். எனவே இரத்ததானம் செய்யும் வேளையிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தாயிடம் எச்.ஐ.வி தொற்று இருக்குமானால் பிள்ளைகளுக்கு

கடத்தப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்தார். எனினும் இலங்கையை பொறுத்தவரையில் தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று

கடத்தப்படாத நாடக இலங்கை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

.

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை

இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த சிறப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும்.

இந்த உலக பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவ்வாறான பை ஒன்றை உருவாக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட பணிப்புரைக்கமைய, இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் விவரக்குறிப்புகளின்படி,

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் தலைமையிலான துறைசார் நிபுணர்கள் குழு, சிறப்பு தொழில்நுட்பத்துடன் தனித்துவமான வடிவமைப்பாக இந்த பையை உருவாக்கியது. .

இது ஒரு ஜனாதிபதிக்கு பின்னர் மற்றுமொரு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடிய நீடித்து நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததுடன், அதற்கமைய பாதுகாப்பான மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் உயர்தர தோலைப் பயன்படுத்தி இந்தப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கையொப்பத்தைப் பெறுவதற்காக, அமைச்சுகள் நாளாந்தம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கோப்புகளை அனுப்புகின்றன, மேலும் ஆவண கோப்புறைகளுக்காக செலவிடப்படும்

பணத்தை குறைக்க அனைத்து அமைச்சுகளுக்கும் இத்தகைய பையை பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், தேவையான பைகளை இராணுவம் தயாரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு உயர்தரத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கலைஞர்களையும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட
ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது

வங்கி கணக்குகளை ஹேக் செய்த 8 பேர் கைது

வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

நவம்பர் 24 ஆம் திகதி சந்தேக நபர்கள் வணிகரின் வங்கிக் கணக்கிற்கு அனுமதியற்ற அணுகலைப் பெற்று அதிலிருந்து 13.7 மில்லியன் ரூபாயை மற்றுமொரு கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் நவம்பர் 30ஆம் திகதி கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, டிசெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கணினி குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், வங்கிக் கணக்குகளை
அடிக்கடிச் சரிபார்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கட்டாருக்கு வேலைக்கு சென்ற 343 இலங்கையர்கள் மரணம்

கட்டாருக்கு வேலைக்கு சென்ற 343 இலங்கையர்கள் மரணம்

இலங்கையில் இருந்து கட்டாருக்கு வேலைக்கு சென்ற இலங்கையை சேர்ந்த 343 பேர் மணமாகியுள்ளனர் .

2014 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில், பலியானவர்கள் விபாரத்தை வெளி நாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொரனோ ,விபத்து ,தற்கொலை ,இயற்கை மரணம் ,மற்றும் ஏனையவை உள்ளிட்டவையாக இவை அடங்க பெற்றுள்ளது .

சிறிய நாடுகளுக்கு வேலைக்கு என செல்லும் இலங்கையர்கள் ,அங்கு இடம் பெறும் துன்புறுத்தல்களை அறிந்து கொள்ளாது சென்று சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு

யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்குள் இருந்து 37 வயதுடைய நபரது சடலம் மீட்க பட்டுள்ளது .

இந்த குளத்தில் குளிக்க சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .

இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க படவில்லை .

புலிகளின் சயனட் இலக்கத்தகடு மனித எச்சங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் சயனட் இலக்கத்தகடு மனித எச்சங்கள் மீட்பு

புலிகளின் சயனட் இலக்கத்தகடு மனித எச்சங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான் தடையவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் ஆகியோர் தோண்டப்பட்டுள்ளது.

புலிகளின் சயனட் இலக்கத்தகடு மனித எச்சங்கள் மீட்பு

இதன்போது 3 வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி இரவைகள் மற்றும் உடைகள் என்பன காணப்பட்டுள்ளன விடுதலைப் புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணு பரிசோதனையின் பின்னர்
நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயிலுடன் மோதி இருவர் மரணம்

ரயிலுடன் மோதி இருவர் மரணம்

காலி உன வட்டுன பகுதியில் ஆட்டோ ஒன்று ரயிலுடன் மோதி சிதறியது . இதன் பொழுது சம்பவ இடத்தில இருவர் பலியாகியுள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து
வைத்தியசாலையின் பணிகளை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடுகள் முற்றுகை இருவர் கைது

வீடுகள் முற்றுகை இருவர் கைது

மட்டக்களப்பு – புதூர் பகுதியில் இரண்டு வீடுகளில் கசிப்பு விற்பனை இடம்பெற்ற நிலையில் இன்று அதிகாலை குறித்த வீடுகள்

முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடுப்பதற்கு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர்ப்பகுதியில் இரண்டு இடங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின்

போதையொழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டது.

இதன்போது ஒரு வீட்டிலிருந்து 40,000மில்லி லீற்றர் கசிப்பும் இன்னுமொரு வீட்டிலிருந்து 10,000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை தோட்டத்தின் தேயிலை மலையொன்றிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (1) காலை மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து பற்கள், தோல், நான்கு கால்கள் என்பனவும் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர் தேயிலைத் தோட்டங்களில் பொறிகளை வைப்பதாகவும் இதில் சிறுத்தைகளும் சிக்கி உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனத் தெரிவித்துள்ள பொகவந்தலாவை பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு நல்லதண்ணி வனஜீவராசிகள்
அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் - அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் – அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் – அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு

முட்டாள் கொள்கை வகுப்பு தொடரினால் கடந்த காலங்களில் அரசுகள் தோற்று போனதாக்கி வியாழேந்திரன் எம்பி கண்டுபிடித்து தெரிவித்தார் .

இலங்கையின் இன்றைய பரிதாப நிலைக்கு அரசுகளின் முட்டாள் தனமும் ,அடக்கியாளும் அதிகார இனவாத போக்கும் காரணம் என்கிறார் .

சிறந்த முறையில் உறைக்கும் வகையில் இடித்துரைத்துள்ளார் .இவரது துணிவும் அறிவும் கண்டு உலக தமிழ் மக்கள் வியப்பில் உறைந்துள்ளனர் .

முட்டை விலை 75 ரூபாவாக அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முட்டை விலை 75 ரூபாவாக அதிகரிப்பு

முட்டை விலை 75 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கையில் முட்டை ஒன்றில் விலை 75 ரூபா வரை அதிகாரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

நத்தார் பாண்டியை முன்னிட்டு நாட்டில் முட்டை பாவனை அதிகரித்து வரும் நிலையில் ,இதன் விலை 75 ரூபாவுக்கு மேல் செல்ல கூடும் என அறிவிக்க பட்டுள்ளது .

அரசு தலையிடா விட்டால் இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த முடியாது போகும் என படுகிறது .

பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் - நெருக்கடியில் - கோட்டா
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு

கோட்டா மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் அரசுக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களின்படி, ராஜபக்ச சகோதரர்கள்

இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 44, 739,184.91 ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது.

கோட்டா மஹிந்தவின் வெளிநாட்டு பயணங்களுக்கு 40 மில்லியன் செலவு

எவ்வாறாயினும், இது தொடர்பான மேல்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விவரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு குறித்த அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலகங்கள் 14 வேலை நாட்கள் அல்லது 21 நாட்களுக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என்றாலும், அவர்கள் பத்து மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.

கிடைத்த விவரங்களின்படி, சுமார் 36 மில்லியன் (ரூ.36, 970,864.14) ரூபாய் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு 7 மில்லியன் செலவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க், கிளாஸ்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக 7,768, 320.77 ரூபாய் செலவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் செய்தார்.
இத்தாலியில் நடந்த மாநாட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துகொண்டதாகவும் தெரிிவிக்கப்படுகின்றது.

மகிந்தா ராஜபக்சவுடன் உறவை பேண விரும்புகிறோம் சீனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கடன்பொறியை நிராகரித்தது சீனா

கடன்பொறியை நிராகரித்தது சீனா

சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா

ஒருபோதும் கொண்டிருக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் அந்நாட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

கடன் நிதி உதவிகள் விடயத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்தை வரவேற்கின்றோம், சீனாவின் உதவிகளை வரவேற்பதாகவும், நாம்

இரு தரப்பும் நட்பு நாடுகள் என அவர் தெரிவித்துள்ள கருத்தானது ஆரோக்கியமானது என்றார்.

கடன்பொறியை நிராகரித்தது சீனா

குறிப்பாக இலங்கையில் சீனாவின் கடன்பொறி என பயன்படுத்தப்படும் சொல்லாடலை வலுவாக நிராகரிக்கும் கருத்து இதுவாகும். அதுமட்டுமல்ல

சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா கொண்டிருக்காது என்றார்.

இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை. தற்போது இலங்கை பல்வேறு

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களை சீனா முழுமையாக புரிந்துகொண்டுள்ளது. இந்த பிரச்சினைகளை உரிய விதத்தில் தீர்ப்பது குறித்து உரிய நிதி

அமைப்புகளிற்கு சீன ஒத்துழைப்புகளை வழங்குகின்றது. அத்துடன் உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க நானும் பணியாற்றுகின்றோம்.

மேலும் எங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் நாங்கள் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கி வந்துள்ளோம்.

சீனா தொடர்ந்தும் இலங்கையுடன்
நெருக்கமான நட்புறவை கையாண்டு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றார்.

சமூக விழிப்புணர்வு குறும்படம் இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்
Posted in இலங்கை செய்திகள்

சமூக விழிப்புணர்வு குறும்படம், இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்

சமூக விழிப்புணர்வு குறும்படம், இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இளைஞர் அபிவிருத்தி “அகம்” இணைந்து நடாத்தியமா பெரும் சமூக விழிப்புணர்வு

குறும்படம் மற்றும் இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழா நேற்று மாலை (29) உவர் மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி “அகம்” இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன், பட்டைய முகாமைக் கணக்காளர் கலாநிதி இ.ஸ்ரீஞானேஸ்வரன் ஆகியோரும், சிறப்பு

சமூக விழிப்புணர்வு குறும்படம் இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்

விருந்தினர்களாக குறும்படத் தயாரிப்பாளர் இயக்குனர் வடமலை ராஜ்குமார், உள்ளூராட்சி திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் சி.சர்வேஸ்வரன், உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் அதிபர் க.ரவிதாஸ்,

கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் ப.கோணேஸ்வரராஜா, இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், மாவட்ட

செயலக மாவட்ட சமூகவேவை அதிகாரி தவராஜா பிரணவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில், மனிதி, வீழ்வேனென்று, அடையல், அறுவதை, வெற்றிக்கதை, பள்ளிக்கூடம் என்ற குறும்படங்களும், தலைமகள் என்ற நாடகமும்

அரங்கேற்றப்பட்டது. இதில் மதனி என்ற குறும்படம் முதலாம் இடத்தினையும், வீழ்வேனென்று என்ற குறும்படம் இரண்டாம் இடத்தினையும், பள்ளிக்கூடம் என்ற குறும்படம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதினை வெற்றிக்கதை குறும்படத்தின் மோகேந்திரன் சாந்தகோபு, வி.கிருபானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த இயக்கம் மற்றும் தயாரிப்புக்கான விருதினை மனிதி குறும்படத்தின் விநாயகமூர்த்தி அபிவர்ஷன் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை மனிதி குறும்படத்தின் ஜே.செலினி பெற்றுக்கொண்டார்.

சிறந்த இசை மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான விருதினை வீழ்வேனென்று குறும்படத்தின் ஜே.சமீல், ஜே.டி.கொட்வின் செல்லர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பள்ளிக்கூடம் குறும்படத்தின் விவேக்ஷன் மனோகரனும், கோ.கம்ஸத்வேனியும் பெற்றுக்கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இளைஞர்களின் ஆளுமைகளை டிஜிட்டல் யுகத்தில் பயனுள்ளதாக ஆக்கும் நோக்கிலும்,


இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்களை நம்பிக்கையூட்டும் வகையில் கொண்டு செல்வதற்கும், உரிமை சார் கருத்துக்களை


விழிப்புணர்வு செய்வதற்கும் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட குறும்படம் மற்றும் நாடக வெளியிடலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான விருது,


சான்றிதழ்களை இன்றைய அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபுஅலா –

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளியவளை பெண் பலரால் கற்பழிப்பு

முள்ளியவளை பெண் பலரால் கற்பழிப்பு

முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில்
உள்ள வாடகை வீடு மற்றும் பிறிதொரு இடத்தில் வைத்து, இரு வெவ்வேறு நபர்களால் பாலியல்
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக முள்ளியவளை

முள்ளியவளை பெண் பலரால் கற்பழிப்பு
மாஞ்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற குறித்த சிறுமி முல்லைத்தீவில் இருந்து
புதுக்குடியிருப்புக்கு முகமறியாதவர்களின் வாகனத்தில் பயணித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி செல்வதாக தெரிவித்த இளைஞன் ஒருவரின்
உந்துருளியில் பயணம் செய்தவேளை, அப்பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டுக்கு கொண்டு
செல்லப்பட்ட சிறுமி, இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வீதியில் விடப்பட்ட போது, மற்றுமொருவர் சிறுமியியை ஏற்றிச்சென்று
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வீதியில் கொண்டுவந்து விட்டுள்ளார்.

இரவு முழுவதும் வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற சிறுமி, சனிக்கிழமை காலை கிளிநொச்சி
சென்று, பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நிலையில் கிளிநொச்சி
பொலிஸாரால் சிறுமி மீட்கப்பட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 36வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்
மற்றுமொரு இளைஞனை தேடிவருவதாகத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பொலிஸார், மேதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஓமான் 90 பெண்கள் நிர்கதி கண்ணீரில் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஓமானில் உள்ள 77 பேரை அழைத்து வர நடவடிக்கை

ஓமானில் உள்ள 77 பேரை அழைத்து வர நடவடிக்கை

ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் ஆகியோர்
அடங்கிய குழுக்கள் அந்தந்த நாடுகளுக்கு பயணிக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளைஞனை தாக்கியமை குறித்து விசாரணை

யாழில் இளைஞனை தாக்கியமை குறித்து விசாரணை

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து யாழ்.


மானிப்பாயில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை


ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த போது,

யாழில் இளைஞனை தாக்கியமை குறித்து விசாரணை


தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில்
வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, இராணுவத்தினரும் பொலிஸாரும் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை
மேற்கொண்ட போது, வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி
படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த
பொலிஸார், மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன்


நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனை
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் நேற்று (29) வாக்கு மூலத்தை பதிவு
செய்துள்ளத மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், சட்ட வைத்திய அதிகாரியின்


மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக
தெரிவித்தார்.