பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து கட்டணம் குறையாது அதிரடி அறிவிப்பு

பேரூந்து கட்டணம் குறையாது அதிரடி அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்க பட்டாலும் பேருந்துகளின் விலைகள் குறைக்க பட மாட்டாது என பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது .

நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்லும் நிலையில் ,அதன் விலை வாசிகள் குறைக்க படும் நாள் வருமா என மக்கள் ஏங்கி தவித்து வரும் நிலையில் ,இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

இலங்கையின் முக்கிய பகுதிகளில் வசிக்கும் வறுமையியல் வாடும் குடும்பங்களுக்கு ஆசை வார்த்தை காண்பித்து ,சிறுநீரகத்தை பெற்று ,கள்ள சந்தையில் விற்று வந்த முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

150 லட்சம் அவரைக்கு ஒரு சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

கிழக்கு மாகாணத்தில் மழை மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் மழை மக்கள் அவதி

கிழக்கு மாகாணத்தில் மழை மக்கள் அவதி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வட அந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளது.

அது ஒருகுறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையும் , நாளை மறுதினம் (08 ஆம் திகதி) மழை நிலைமையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில
இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்

நாளை இடம்பெறும்உத்துவப் முழுநோன்மதி தினத்திற்கு அமைவாக பௌத்த சம்பிரதாயங்களுக்கு அமைவான யாத்திரை சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைவாக பெல்மடுல, கல்பொத்தாவல, சிறிபாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள புனிதப்பொருள், சமன்தேவ உருவச்சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் நான்கு பாதைகள் ஊடாக சிவனொளிபாத மலைக்கு இன்று எடுத்துச் செல்லப்படும்.

குருவிற்ற எரந்த பாதை, இரத்தினபுரி பலாபத்தல பாதை, பலாங்கொட பாதை, ஹட்டன் நல்லதண்ணி பாதை ஆகிய வழிகள் ஊடாக இவை எடுத்துச் செல்லப்படும்.

இன்று மாலை சிவனொளிபாத மலை வரை எடுத்துச் செல்லப்படும் இந்த புனித பொருட்கள் நாளை
அதிகாலை சிவனொளிபாத மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.

உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

பசளையை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதற்கு முன்னர் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து பசளையை தரையிறக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது.

உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

அமெரிக்கா, இலங்கைக்கு ஒன்பதாயிரத்து 300 மெற்றிக் தொன் பசளையை வழங்கியுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் வழங்கியுள்ள இந்தப் பசளை அந்த நிறுவனம் நாட்டுக்கு வழங்கும் உதவியின் முதல் தொகுதியாகும்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தப் பசளையை நேற்று (05)கொழும்பு துறைமுகத்தில் பொறுப்பேற்றார்.

அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இலங்கையின் விவசாயிகளுக்கு உதவ தமது நாடு விருப்புத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்துள்ள யூரியா
பசளையின் அளவு 85 ஆயிரம் மெற்றிக் தொன்களாகும்.

பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பேருந்து விபத்து: 23 பேர் காயம்

கிளிநொச்சியில் பேருந்து விபத்து: 23 பேர் காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்க கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற களஞ்சியசாலையிலிருந்த தங்கக்கட்டிகள் மாயம்

நீதிமன்ற களஞ்சியசாலையிலிருந்த தங்கக்கட்டிகள் மாயம்

கொழும்பு- புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்கு பொருள்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 8 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்ககட்டிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வாழைத்​தோட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வழக்கு பொருட்கள் களஞ்சியசாலைக்கு பொறுப்பானவரால் இந்த மாதம் முதலாம் திகதி மாலை வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாளிகாவத்த பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 79.80 கிராம் நிறையுடைய தங்ககட்டி, பொரல்ல பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட104.39 கி​ராம் நிறையுடைய தங்ககட்டி மற்றும் உருக்கப்பட்ட 204.24 கிராம் நிறையுடைய தங்கமும் இவ்வாறு காணாமல் போயுள்ளது என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார சபையை இல்லாது ஒழிக்கவும்: அரசாங்கத்துக்கு பரிந்துரை

மின்சார சபையை இல்லாது ஒழிக்கவும்: அரசாங்கத்துக்கு பரிந்துரை

மறுசீரமைப்பின் கீழ், இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து, புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

2002 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார சபையை இல்லாது ஒழிக்கவும்: அரசாங்கத்துக்கு பரிந்துரை

புதிய 8 நிறுவனங்களை ஸ்தாபிப்பது தொடர்பான குழுவின் அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நிறுவப்படும் 8 நிறுவனங்களின் கீழ், மின் உற்பத்திக்காக இரண்டு நிறுவனங்களும், பரிமாற்றத்துக்காக இரண்டு நிறுவனங்களும், விநியோகத்துக்காக நான்கு நிறுவனங்களும் உருவாக்கப்படவுள்ளன.

மின்சார உற்பத்திக்காக நிறுவப்படும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திக்காகவும் மற்றைய நிறுவனத்தை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் நிறுவ முன்மொழியப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களை அரசுக்கு சுமையாக இல்லாமல் வணிக நிறுவனங்களாக நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவிக்குப் பதிலாக, இந்த எட்டு நிறுவனங்களுக்கும் உரிய அதிகாரியொருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக, மின்சாரத்துக்கான தனியான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நியமிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, மின் கட்டணத்தை 70 சதவீதத்தால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதில் முப்பது சதவீதத்தை ஜனவரி மாதத்திலும்
40 சதவீதத்தை ஜூன் மாதத்திலும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்று (05 ஆரம்பமாகிறது. இதற்கமைவாக இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், மார்ச் மாதம் 24 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேதஜயந்த தெரிவித்தார்.

கொவிட் தொற்று வைரசு காரணமாக பாடசாலை தவணை கல்வி நடவடிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தடைப்பட்டன.

இதன் காரணமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவிருந்த 03ம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதேவேளை நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணைக்கான இறுதிக் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் மார்ச்
24ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்

வங்காள விரி குடா கடலில் நிலநடுக்கம்

வங்காள விரி குடா கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று (05) காலை 8.32 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ளவர்களும்
உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கு அவர்கள் விரும்பினால் அனுமதிக்கலாம்.கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ,இவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுலா பயணி பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலா தொழில்துறையினை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கமாகும். 15 இலட்சம் சுற்றுலா பயணிகளை அடுத்த வருடம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு
திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கற்பழிப்பதை நண்பர்களுடன் வீடியோ பிடித்த காதலன்

காதலியை கற்பழிப்பதை நண்பர்களுடன் வீடியோ பிடித்த காதலன்

16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதை வீடியோ பதிவு செய்து, அதைக் காட்டி சிறுமியை பாலியல்

செயற்பாட்டுக்காக படுக்கைக்கு அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி

ஒருவரை 2 மாதங்களுக்கு முன்னர் அதே வயதுடைய அவரது காதலன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் சிறுமியை அவர் துஷ்பிரயோகம் செய்தபோது, நண்பர்கள் மூவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், குறித்த சிறுமியை தொடர்பு கொண்ட காதலனின் நண்பர்கள், குறித்த உடலுறவு வீடியோ சீடி வடிவில் தம்மிடம் உள்ளதாகவும் தங்களுடன் உடல்

உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

காதலியை கற்பழிப்பதை நண்பர்களுடன் வீடியோ பிடித்த காதலன்

இது தொடர்பாக சிறுமி, பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேரை கைது செய்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில்
ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது

கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்கள் யாவரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை ,திருட்டில் ஈடுபட்டமை ,மக்களை அச்சுறுத்தியமை ,வீடுகளை உடைத்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்ட நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர் ,

சுருங்க கூறின் ஆறு ரவுடிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .

விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் மிரட்டும் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

சமஷ்டி வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம்- சாணக்கியன்

சமஷ்டி வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம்- சாணக்கியன்

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் நகரங்களை காண முடியாது. நகரங்கள் இருந்தால் தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை.

நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒருபகுதி கூட கிராமிய அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை, எழுவான் கரை ஆகிய பிரதேசங்கள் உள்ளன.

சமஷ்டி வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம்- சாணக்கியன்

எழுவான்கரை பிரதேசத்தில் நகரங்கள் இல்லை. 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதேச அபிவிருத்திக்கு இரு பிரதிநிதிகளையும், அரசியல் உரிமைக்காக இரு பிரதிநிதிகளையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

காணி அபகரிப்பு, அரசியல் கைதி விடுதலை, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து எமக்கு மக்கள் வழங்கிய பொறுப்பை முறையாக செயற்படுத்தி வருகிறோம்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன.

அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட இரு பிரநிதிகளுக்கு செயற்திறன் இல்லையா என்பது தெரியவில்லை.

மட்டக்களப்பில் படுவான்கரையும், எழுவான் கரையையும் இணைக்கும் பட்டிருப்பு பாலம் எனது பாட்டனார் சி.மு.இராசமாணிக்கம் இருந்ந காலத்தில் இருந்ததை போன்று இன்றும் அதே நிலையில் தான் உள்ளது.

கி ராமங்களை நகரங்களாக மாற்றியமைக்க வேண்டுமாயின் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மண்டூர் பிரதேசத்தில் இருந்து பிரதான நகரத்திற்கு வருவதற்கு பாலம் ஒன்று இல்லாத காரணத்தினால் பெரும்பாலானோர் மண்டூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.

அம்பலாந்துரை ஒரு நகரமாக்க வேண்டுமாயின் அங்கு ஒரு பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆனால் அடிப்படை அபிவிருத்திகள் தற்போது கவனத்திற் கொள்ளப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள மக்கள் ஏ.டி.எம். சேவை வசதியை பல காலமாக கோருகிறார்கள். நகரமாக அபிவிருத்தி செய்ய முன் ஒரு ஏ.டி.எம்.சேவை வசதியை வழங்குங்கள்.

கோட்டைக்கல்லாறு பகுதிக்கு ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தை கூட கொண்டு வர முடியாத நிலையில் தான் மட்டக்களப்பு மாவட்ட இரு அபிவிருத்தி நாயகர்கள் உள்ளார்கள்.

செங்கடலடி சந்தை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. மழை காலங்களில் இந்த சந்தைக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலம் காலமாக அமைச்சராக பதவி வகிக்கிறார் மறுபுறம் அங்கஜன் இராமநாதன் பலமுறை இராஜாங்க அமைச்சுக்களை வகித்துள்ளார்.

தற்போது இருவர் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடையவில்லை.

இதன் காரணமாகவே அதிகாரத்தை வழங்குமாறு கோருகிறோம். சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம்.

பல ஆண்டுகாலமாக எமது மக்களின் முன்னேற்றத்திற்காக அதிகாரத்தை கோருகிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியடைந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவானதாக அமையும்.“ எனக் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ‘இலங்கை வங்கியுடன் கலந்தாலோசித்து கோட்டைக்கல்லாறு பகுதிக்கு ஏ.டி.எம்.இயந்திய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்.“ என்றார்.

மீண்டும் உரையாற்றிய சாணக்கியன், ‘மிக்க நன்றி. நாட்டின் நீதியமைச்சர் ஏ.டி.எம் இயந்திரத்தை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை .இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வாடகை வீடுகளிலும், வீடு இல்லாமலும் வாழ்கிறார்கள்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை அரசியல் நோக்கமற்ற வகையில் நிறைவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளில் புறக்கணிப்புக்கள் மாத்திரம் காணப்படுகின்றன. அரசியல் உரிமை ஊடாகவே அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் செயற்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். ஒருசில இனவாதிகள் அதிகார பகிர்வு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள்.

இலங்கை மேலவை கூட்டணி என்பதை அமைத்து தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிரதான நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் எம்.சி.சி ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் தான் இல்லாமலாக்கினார்கள்.

எம்.சி.சி தொடர்பில் தவறான நிலைப்பாட்டை இவர்கள் தான் தோற்றுவித்தார்கள். பிளவுபடாத இலங்கைக்குள் தான் அதிகாரத்தை கோருகிறோம்.

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு இருவர் காயம்

யாழில் வாள்வெட்டு இருவர் காயம்

யாழ்ப்பாணம் தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகில் வாள்வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது .

பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்ட இருவரும் ,தற்பொழுது யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த சம்பம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையின் களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளமே இந்த மண் சரிவு அபாயத்திற்கான காரணமாக உள்ளது கண்டறிய பட்டுள்ளது .

இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

14 வயது பெண்ணை கற்பழித்த தாத்தா கைது

14 வயது பெண்ணை கற்பழித்த தாத்தா கைது

இலங்கை கொக்கிராவ பகுதியில் 14 வயது சிறுமியை கற்பழித்த 60 வயதுடைய நபர் கைது செய்ய பட்டுஉள்ளார் .

கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் .

சிறுமியின் வீட்டில் தங்கி இருந்த நபர் ,பெற்றவர்கள் வெளியில் செல்லும் வேளை பார்த்து சிறுமியை கற்பழித்துள்ளதாக கண்டறிய பட்டுள்ளது .

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 400க்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 400க்கு ஆப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 400க்கு ஆப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 400 றின் லைசன்ஸ் இரத்து செய்யப்பட்டுள்ளது .

உல்லாச பயண விசாவில் மக்களை நாடுகளுக்கு வேலைக்கு என அனுப்பி பல லட்ஷம் சம்பாதித்து வந்த நிறுவனங்களுக்கே, இந்த ஆப்பு இடம்பெற்றுள்ளது .

ஓமானில் சிக்கி தவித்த 90 பெண்கள் நிலையை அடுத்து நடத்த பட்ட கேள்வி விசாரணைகளில் ,உரிய தரவுகளை வழங்க தவறிய நிறுவனங்களுக்கே இந்த ஆப்பு வைக்க பட்டுள்ளது .

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்
Posted in இலங்கை செய்திகள்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்

நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள் , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

=

இந்த வருடத்தில் துறைமுகத்தறையில் சுமார் 39 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.கடந்தவருடத்தில் இத்தொகை 15.5 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் .எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒடுக்கீடு தொடர்பில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில்,சமகால அரசாங்கம்

துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பாரிய தொகை நிதியை செலவிட வேண்டியுள்ளது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 480 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

இதனை அரசாங்கமே வைத்திருக்க வேண்டுமென துறைமுக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கிழக்கு முனையத்தை அரசாங்கமே மேம்படுத்த வேண்டும்.
இந்த நோகத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

He 02 1பல்வேறு திறன்களைக் கொண்ட விசேட தேவையுடையவர்கள் இருப்பதனால், அவர்களின் படைப்புத் திறமைகளை நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக திறம்பட பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

விசேட தேவையுடையோரின் நலனுக்காக ,புதிய வேலைத்திட்டம்

news.lk Disable Ranilஅரச நிறுவனங்களில் விசேட தேவையுடையோரின் நலன் தொடர்பில் நிலவும் குறைபாடுகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அது தொடர்பில் ஆராய்ந்து அத்துறைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சமூக

வலுப்படுத்துகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் நீல்

பண்டார ஹபுஹின்ன, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தலைமைச் செயலகத்தின் பணிப்பாளர் அனுராதா ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.