Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தமிழர்களுக்கு தீர்வு கொடுதல் – புத்த மதத்தை பாதுகாக்க முடியாது இனவாத அமைச்சர் முழக்கம்
தமிழர்களுக்கு தீர்வு கொடுதல் – புத்த மதத்தை பாதுகாக்க முடியாது இனவாத அமைச்சர் முழக்கம்
இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்க பட்டு அதன் ஊடாக சமஸ்டி முறையில் நாடு பிரிக்க பட்டால் ,இலங்கையில் புத்த மதத்தை பாதுகாக்க முடியாது என இனவாத அமைச்சர் வீரசேகர தெரிவித்துள்ளார் .
போரில் மடிந்த மக்கள் புலிகளை வீடுகளுக்குள் வைத்து வணங்குங்கள் .
இலங்கை ஒன்பது துண்டுகளாக பிரிக்க பட்டால் ,வடக்கு கிழக்கில் பவுத்த மதம் காப்பாற்ற பட மாட்டாது எனவே ,நாடு பிரிக்கப்பட முடியாது என்கிறார் .
நாடு பிச்சை எடுக்கும் நிலையிலும் ,மக்கள் அழிவின் விழிம்பில் உள்ள பொழுதும் ,தமது வியாபாரத்தை ,இவ்விதம் இனவாதம் கக்கியே நாட்டை ஆட்சி செய்கிறது இவ்விதமான இனவாத குழுக்கள் .
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது இராணுவம் தாக்குதல்
யாழில் வாலிபன் மீது சிங்கள இராணுவத்தினர் வன்கொடுமை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் ,யாழ்பான போதனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
தலைக்கவசம் அணிய மறுத்து ,ஊந்துருளியில் பயணித்த இருவரை காவல்துறையினர் வழிமறித்தனர் .
தலைக்கவசம் அணியாது செல்வதால் தண்டம் எழுதிட போலீசார் முனைந்துள்ளனர் .
அதற்கு அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் இராணுவத்தினர் வரவழைக்க பட்டனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினருடன் அவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டதல் ,இராணுவத்தினர் வாலிபன் மீது தாக்குதல் நடத்தியாக தெரிவிக்க படுகிறது .
காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்
காலிமுக திடலில் மனித சடலம் – மிரட்டும் கொலைகள்
இலங்கை கொழும்பு காலிமுக திடல் கொடி கம்ப பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடைய கிராண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் என அடையாள காணப் பட்டுள்ளார் .
இவர் கொலை செய்யபட்டு இங்கே வீச பட்டு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
எனினும் இந்த மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கை மக்களை இவ்விதாமன் மிரட்டும் கொலைகள் துரத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடலில் வைத்து கைது
தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடலில் வைத்து கைது
இலங்கை காரைநகர் கடல் பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில், தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
சிங்கள கடற்படையினரால் கைது செய்ய பட்ட இவர்கள் ,காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் ,தற்போது நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலி புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
பரீட்சையில் 9 A பெற்ற மாணவன் தீ வைத்து எரிப்பு
பரீட்சையில் 9 A பெற்ற மாணவன் தீ வைத்து எரிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நபர்களே இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஈஸ்டர் சந்தேக நபர் நடுவீதியில் கொலை
ஈஸ்டர் சந்தேக நபர் நடுவீதியில் கொலை
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டார். என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சட்டத்தை மதிக்காத அராஜக போக்குதலைதூக்கியுள்ளது என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று(29) கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிரந்த அமரசிங்க என்ற சமூக ஊடக செயற்பாட்டாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காணொளியொன்று உள்ளதாகவும், மறுபுறம்,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் வீதியில் கொல்லப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் சந்தேக நபர் நடுவீதியில் கொலை
சமூகம் அச்சத்தில் மூழ்கும் முன் இதுதொடர்பாக சபை முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்ட மட்டக்குளிய சஃபியா ஒழுங்கையில் வசிக்கும் மொஹமட் பதூர்தீன் மொஹமட் ஹரிநாஸ் (வயது 38) என்பவர், நேற்று (28) படுகொலை செய்யப்பட்டார்.
காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர்,
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம் MP
பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம் MP
பொருளாதாரத்தை வலுப்படுத்த பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரமன்றி ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம் என்று வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
தகவல் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் என்பன பலப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கிராமத்தை நோக்கிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
தேசிய நெருக்கடியின் போது, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அந்த நிறுவனங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்..
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் ,கிராம மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கடந்த காலத்தில் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில்
பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம் MP
ஏற்படுத்தப்பட்டகளங்கத்தை துடைத்து எரிவதற்கு ஊடகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று (29) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது காலி மாவட்ட எம்பி ஷான் விஜேலால் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறப்பான ஊடக கலாசாரத்தை உருவாக்குவது முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர், ஊடக நிறுவனங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சுயமாக நிதி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நிறுவனமாக அவை இயங்குகின்றன.
இதனால் அவற்றில் அரசாங்கம் தலையீடு செய்வது சிறந்தது அல்ல. அரச ஊடகம் தனியார் ஊடகம் என இரண்டிற்குமே சமநிலை வழங்கப்பட்டுள்ளது என்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில்
இந்து நிறுவனம் நட்டத்தில் இயங்கிவருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த சில மாதங்களாக அது இலாபத்தில் இயங்கிவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 25 மில்லியன் ரூபாவையும் நவம்பர் மாதம் 30 மில்லியன் ரூபாவையும் அந்த நிறுவனம் இலாபமாகப் பெற்றுள்ளது.
அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில், எத்தகைய அழுத்தங்களையும் பிரயோகிப்பதில்லை.
தனியார் ஊடகம் அரச ஊடகம் என பாரபட்சமின்றி அனைத்தும் சுதந்திரமாக செயல்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும்
வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மேலும் தெரிவித்தார்.
மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை
மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை
சில மருந்து வகைகளுக்கான கேள்வி மனு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவை நாட்டை வந்தடைய சில மாதங்கள் செல்லும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,தேவையான உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் எந்தத் தட்டுப்பாடும் இல்லையென செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான நீங்கிவிடும். மருந்து இறக்குமதிக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மருந்து இறக்குமதிக்காக ஏழாயிரத்து 300 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, எதிர்காலத்தில் உள்நாட்டு மருந்து விநியோகஸ்தர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த மருந்து விநியோகத்தில் 40 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும்.
தற்போது மருந்துத் தேவையில் 20 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
வைத்தியசாலைகளில் மின் கட்டண கொடுப்பனவு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் பயன்படுத்தப்படும் உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் 14 மருந்துகள் உள்நாட்டில் காணப்படுகின்றமை..
அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளை
ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்
அமெரிக்கா பயணமானார் அலி சப்ரி
அமெரிக்கா பயணமானார் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்
காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது
காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது
காலி முகத்திடல் போராட்டத்திற்கு சரியான திட்டம் இல்லாததால் அது செயலற்று முடங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
சரியான தலைமைத்துவம் மற்றும் சரியான உத்திகள் அல்லது திட்டங்கள் இல்லாததால் போராட்டம் முடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றிவளைக்கப்பட்ட Facebook களியாட்டம்
சுற்றிவளைக்கப்பட்ட Facebook களியாட்டம்
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள்கள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, கனங்கே, தெலிஜ்ஜவில, வன்சாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் மூலம் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என,
கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதிகளில் நீண்ட காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை
பல்கலைக்கழக விடுதிகளில் நீண்ட காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை
பல்கலைக்கழக விடுதிகளில் இட நெருக்கடியை குறைப்பதிலும், புதிய மாணவர்களுக்கான இட வசதி தொடர்பிலும் உயர்கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அதற்காக 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக வதிவிடத்தில் தங்கியுள்ள பல மாணவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தனது கவனத்திற்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு காலம் தங்கியிருக்கும் மாணவர்கள் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 4 வருடங்களுக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாவிட்டால், விசேட
சூழ்நிலையில் மூன்று வருடங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வெளித் தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் அதிகளவான மாணவர்கள்
முழுநேர அரசியலில் ஈடுபடுவது பிரச்சினையாக உள்ளது.அவர்கள் இனி பல்கலைக்கழக மாணவர்களாகக் கருதப்படுவதில்லை என்பதால், அவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலோ அல்லது விடுதி வளாகங்களிலோ
தங்கியிருப்பது சட்டப்பூர்வமானது அல்ல. முதல் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அவர்களுக்கு தங்கும் விடுதிகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் இதர
வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்று சிரேஷ்ட
பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
அரச நிறுவனங்களின் திறப்பு விழா, பதவியேற்பு மற்றும் ஓய்வு தொடர்பான நிகழ்வுகள், சிநேகபூர்வ சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் உட்பட அனைத்து
வகையான நிகழ்வுகளுக்கும் ,அரசாங்க பணத்தை செலவிடுவதை நிறுத்துமாறு நிதியமைச்சு, நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச
நிறுவன தலைவர்கள் மற்றும் அரச வங்கி தலைவர்களுக்கு சுற்றறிக்கை ,நிதி அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் சிலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பொதுச் செலவில் ஓய்வு விழாவை நடத்தத்
திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணத்திற்கு அவர்களே பொறுப்பு என்பதால்,
அந்த பணம் தவறாக பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நீடிப்பு
20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நீடிப்பு
இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிற்பகல் வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் ஒரு மணித்தியாலம் 20
நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.
வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல் சூழலும் தமிழீழத்துக்கான வாய்ப்புக்களும் ! – மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல் சூழலும் தமிழீழத்துக்கான வாய்ப்புக்களும் ! – மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசின் உருவாக்கம் என்பது, அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால், அனைத்துலக அரங்கில் வாய்ப்புக்கள் எவ்வாறு
உள்ளன என்பது குறித்து இத்தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
வி.உருத்திரகுமாரன், இன்றைய மாவீரர் நாளில் மாவீரர் கனவுளை நனவாக்குவது குறித்த சிந்தனையை நாம் கூர்மைப்படுத்த வேண்டும் கோரியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு என ஓர் அரசு இவ்வுலகில் அமைய வேண்டும் என்பது விருப்பினால் மட்டும் தோன்றியதொன்றல்ல. மாறாக சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழீழ மக்களுக்காக ஒரு தனியரசு
அமைக்கப்படுவதனைத் தவிர வழியேதுமில்லை எனப்பதனை வரலாறு காட்டி நிற்கின்றது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழீழம் சாத்தியமில்லை எனக் கூறுபவர்கள் எவராலும் இன்றும் தொடர்ந்து
கொண்டிருக்கும் சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியையோ தீர்வையோ காட்ட முடியவில்லை என்பதனையும் இடித்துரைத்துள்ளார்.
ரஸ்யா – உக்;ரேய்ன் போரின் தொடர்ச்சியாக ஒற்றை அதிகார மையம் கொண்ட அரசியல் ஒழுங்கில் இருந்து தற்போதைய உலகம் விடுபட்டு இரட்டை அதிகார மையம் நோக்கியோ அல்லது பல அதிகார மையம் நோக்கியோ திரளும் அரசியல் போக்கு உருவாகியுள்ள நிலையில், பலமிக்க
அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போராடும் தேசங்களுக்குப் புதிய அரசியல் வெளிகளை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவையாக அமையும் என்பதோடு, இத்தகையதொரு சூழல் தமிழீழ தேசத்துக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும் என நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ள
பிரததமர் வி.உருத்திரகுமாரன், இவ் வாய்ப்புக்களைச் சரிவரக் கையாள்வதற்குத் தமிழீழ தேசத்திடம் ஒன்றுபட்ட வலுவான அரசியல் தலைமை இருத்தல் அவசியமானதாகும் என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவின் சமகால அரசியல், உலக அரசியல், தமிழர்களின் அரசியல் செயல்வழிப்பாதை என பல்வேறு விடயங்களை எடுத்துரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் அறிக்கையின் முழுவிபரம் :
இன்று தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.
தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காய் தமதுயிரை ஈகம் செய்த நமது வீரமறவர்களின் நினைவுகளை நாம் நமது இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கும் நாள்.
தமிழீழ மக்கள் தேசிய விடுலையையும் சமூக விடுதலையையும் அடைந்தவர்களாய், தமது தாயகப்பூமியில் சிங்களத்தின் இனவழிப்புக் குறித்த
அச்சம் அற்றவர்களாக, சமூகநீதி நிலவும் சமுதாயமொன்றில் இன்புற வாழவேண்டும் என்ற கனவுடன் களமாடி வீரச்சாவடைந்த நமது தேசப்புதல்வர்களின் நினைவு நாள்.
நமது சிறிய தமிழீழத் தேசத்தினை உலகவரைபடத்தில் நிலைநிறுத்தி, நமது தேசத்தின் சுதந்திர வேட்கையை தமது வீரத்தாலும், ஈகத்தாலும் வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற உத்தமர்களின் திருநாள்.
மாவீர்கள் தமிழீழ மக்களின் மூச்செங்கிலும் நிறைந்துள்ளார்கள்.
தமிழீழ மண்ணெங்கும் விதைந்துள்ளார்கள்.
தமிழீழ கடலெங்கும், வான்பரப்பெங்கும் நீக்கமறப் பரந்துள்ளார்கள்.
தமிழீழ தேசத்தின் காவல் வீரர்களாய், நமது தேசத்தினை எதிரிகள் எவரும் அடிமை கொண்டு விடாதவாறு சுதந்திரக் கனலை மூட்டி விட்டவர்களாய் எம்முடன் அவர்கள் இறுகப் பிணைந்துள்ளார்கள்.
தமது வீரர்களை வழிபடும் மரபினைக் கொண்ட தமிழ் மக்கள் இன்று நமது வீரர்களைத் தாம் தமது வாழ்வில் கண்ட தெய்வங்களாக உருவகித்து வழிபடுகின்றனர்.
சங்ககால மரபு கண்ட நடுகல் வழிபாட்டுக்கு சமகால எடுத்துக்காட்டாக நமது தமிழ் மக்கள் மேற்கொள்ளும் மாவீரர் வழிபாடு அமைகிறது.
மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய நாளில் நாம் மாவீரர்களின் கனவுகளை நம் மனதில் இருத்தி, அவர்தம் கனவுகளை நனவாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நம் மனதிலிருத்த வேண்டியது மிக அவசியமானதாகும்.
நமது தேசத்துக்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களை இன்றைய மாவீரர் நாளில் வணங்கி அவர்கள் நம் தேசத்துக்காக செய்த பணிக்கு, ஈகத்துக்கு வணக்கமும் நன்றியும் தெரிவிக்கும் நாளாக மட்டும் இன்றைய நாளை நாம் அணுகக்கூடாது.
மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு செய்யும் வணக்கத்துடன் நமது தேசத்துக்கான, நமது மாவீரர்களுக்கான கடமைகளை நாம் ஆற்றி விட்டோம் எனத் திருப்தி அடையவும் முடியாது.
ஆடி அமாவாசை நாளில் தந்தையினையும், சித்திரை பௌர்ணமியில் அம்மாவையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பதுபோல், மாவீரர் நாளில் மாவீரர்களை நினiவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டும் நாம் இந்நாளைக் கருதி விடக்கூடாது.
நாம் மாவீரர்களை வணங்குவது, போற்றுவது ஒரு சடங்கு வழிப்பட்ட நடைமுறையாக மட்டும் குறுகி விடக்கூடாது.
மாறாக மாவீரர் கனவுகளை நனவாக்குவது குறித்த சிந்தனையையும் செயற்பாட்டையும் கூர்மையடைச் செய்யும் நாளாக மாவீரர் நாளை நாம் நமக்குள் வரித்துக் கொள்ள வேண்டும்.
மாவீரர் கனவுகளை நனவாக்கும் பொறுப்பை நமது மாவீரர்;கள் நமது தலைமுறையிடம் விட்டுச் சென்றுள்ளார்கள் என்ற பொறுப்புணர்வுடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என்ற உள்ளுணர்வை மாவீரர் நாள் நமக்குள் ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய நாளில் நாம் மாவீரர்களுக்கான சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தும் போது மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றுவோம் என நமக்குள் நாமே உறுதி பூண்டு கொள்வோம்.
இந்த உறுதியுடன், உலகில் தமிழ் மக்கள் வாழும் இடமெங்கும் நமது மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மக்களுடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தலைசாய்த்து நமது மாவீரர்களுக்கு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்பான மக்களே,
இன்றைய மாவீரர் நாளில் மாவீரர் கனவுளை நனவாக்குவது குறித்த சிந்தனையை நாம் கூர்மைப்படுத்த வேண்டும்.
மாவீரர்களின் கனவு என்பது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை தமிழீழத் தாயகப்பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என்பதே.
இக் கனவு உலகில் தமிழ் மக்களுக்கு என ஓர் அரசு அமைய வேண்டும் என்ற விருப்பினால் மட்டும் தோன்றியதொன்றல்ல.
சிங்கள தேசத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத் தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழீழ மக்களுக்காக ஒரு தனியரசு அமைக்கப்படுவதனைத் தவிர வழியேதுமில்லை என வரலாறு காட்டி நின்ற வழியே தமிழீழத் தனியரசினை அமைப்பதற்காக 60,000 க்கும் மேற்பட்ட மாவீரர்கள் தம்முயிரை ஈகம் செய்வதற்குக் காரணமாக அமைந்தது.
இன்றைய சூழலிலும் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தமிழீழத் தனியரசைத் தவிர வழியேதுமில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.
தமிழீழம் சாத்தியமில்லை எனக் கூறுபவர்கள் எவராலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்களத்தின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியையோ தீர்வையோ காட்ட முடியவில்லை.
தமிழீழ மக்களின் தாயகப்பிரதேசத்தைக் கபளீகரம் செய்து, தமிழீழ மக்களின் தேசிய தனித்துவத்தை சிதைத்து, தமிழீழ தேசத்தை இனவழிப்புக்கு உள்ளாக்கும் தனது திட்டத்தை தடுக்கக் கூடிய எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் சிங்கள பௌத்த இனவாதம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
இதனால், ஈழத் தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கானதொரு ஏற்பாட்டை சிங்கள சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடாத்தி, அதன் சம்மதத்துடன் அடைந்து விடலாம் என எவரும் எதிர்பார்ப்பின் அது இலகு காத்த கிளியின் கதையையே நமக்கு நினைவூட்டும்.
தமிழீழ மக்கள் சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடான தமிழீழத் தனியரசானது உள்ளுர் நிலைமைகளில் இருந்து மட்டும் உருவாகக் கூடியதல்ல.
மாறாக, இது அனைத்துலக அரசியற்சூழல், மற்றும் இந்து மகாசமுத்திரத்தினதும், தென்னாசியப்பிராந்தியத்தினதும் புவிசார் அரசியற்சூழலிருந்து ஊற்றெடுக்க வேண்டியது.
தற்போது நம் முன்னால் உள்ள கடமையானது புவிசார் அரசியல் சூழல் எவ்வாறு எமது அரசியல் நலன்களுக்கு இசைவாக அமைவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதும் அனைத்துலகச்சூழல் உருவாகும் போது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கக்கூடிய சூழலை பேணுவதும் அதனைத் தக்க வைப்பதுமாகும்.
இதற்கு, தமிழீழ தேசம் தனது தேசத்தகமையைப் பாதுகாப்பது மிகவும் அடிப்படையானதாகும்.
தமிழீழத் தாயகத்தை கபளீகரம் செய்தும், அதனைத் துண்டாடியும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டும் தமிழர் தாயகத்தின் தொடர்ச்சியை இல்லாதொழிப்தற்குச் சிங்கள இனவாதப்பூதம் பகீரத முயற்சிகளைச் செய்து வருகிறது.
குறிப்பாக, தமிழர் தாயகத்தின் வடக்கு, தெற்குப் (தென் தமிழீழம் – கிழக்கு மாகாணம்) பகுதிகளை இரு கூறாக்குவதில் சிங்களம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
1948 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு பிரித்தானியரிடமிருந்து ‘சுதந்திரம்’ அடைந்த போது கிழக்கு மாகாணத்தில் 1 வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை இன்று 30 வீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தை நிலரீதியாக மட்டுமன்றி அரசியல்ரீதியாகவும் ஆக்கிரமிப்பதற்கும் சிங்களம் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் திட்டமிட்ட முறையில் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது.
தமிழ் – முஸ்லீம் முரண்பாட்டைத் தூண்டி விடுவதன் ஊடாக சிங்கள அரசுடன் இணைந்து மற்றத் தரப்பை வெற்றி கொள்ள முடியும் என்றதொரு மாiயையை இரண்டு தரப்பின் மத்தியிலும் ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஊடாக, தமிழத் தேசிய அரசியலை கிழக்கு மாகாணத்தில் பலவீனப்படுத்தி, சிங்கள தேசியக் கட்சிகளின் கீழ் தமிழ் . முஸ்லீம் மக்களைக் கொண்டு வரும் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.
இதேபோல, வடக்கு மாகாணத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கள பௌத்த இனவாதம் செயற்பட்டு வருகிறது.
தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சிங்கள அரசின் சூழ்ச்சி குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். குரங்கு அப்பம் பிரித்த கதையில் வரும் குரங்கு போலத்தான் சிங்கள அரசு செயற்படும் என்ற விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
தமிழீழ மக்கள் ஒரு தேசமாக நன்கு வலுப்பட்டு, உருத்திரண்டு நின்று தமிழீழ மக்களின் அரசியற்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமையும் என்பதனை வலியுறுத்தி நிற்பதே அனைத்துலகச்சூழல் எமக்குச் சாதகமாக அமையும் காலத்தில் நமது விடுதலையை வென்றெடுக்கத் துணை நிற்கும்.
அன்பான மக்களே,
தமிழீழத் தனியரசின் உருவாக்கம் அனைத்துலக நிலைமைகளுடன் தொடர்புபட்டது என்பதனால் அனைத்துலக அரங்கில் நமக்கான வாய்ப்புக்கள் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும் நாம் இத் தருணத்தில் சிந்தித்தல் பொருத்தமாக அமையும்.
2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால்; தமிழினவழிப்பின் ஊடாகத் தமிழீழ மண் சிங்களத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளான காலத்தில் உலகம் ஒற்றை அதிகாரமைய உலக ஒழுங்கின் கீழ் இருந்தது.
ஓற்றை அதிகாரமைய அரசியல் ஒழுங்கில் அரசற்ற தேசங்களுக்கான அனைத்துலக அரசியல் வெளி மிகவும் மட்டுப்பட்டதாகவே பொதுவாக இருக்கும்.
அரசியல் ஒழுங்கைத் தலைமை தாங்கும் வல்லரசுகளோடு அரசற்ற தேசங்களது நலன்கள் ஒத்துப் போகாதுவிடின் அத் தேசங்களின் போராட்டங்கள் தோற்கடிக்கப்படுவது இயல்பானதொன்றாக அமைந்து விடும்.
1991 ஆம் ஆண்டின் முன்னே உலகம் இரட்டை அதிகார மையம் கொண்டதாக இருந்த காலத்தில் போராடும் சிறிய தேசங்களுக்கு பல்வேறுவகையான வாய்ப்புகள் இருந்தன.
வலுவிழக்கும் உலக ஒற்றை அதிகார அரசியல் சூழலும் தமிழீழத்துக்கான வாய்ப்புக்களும் ! – மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
அனைத்துலக அரசுகள் தமது அதிகாரத்துக்காக இரட்டை மையமயப்பட்டு போகும்போது இவற்றுக்கிடையே கிடைக்கும் சில வெளிகளைப் போராடும் தேசங்கள் பயன்படுத்தும் வாய்புகள் இருந்தன.
தற்போது உலகம் ஒற்றை அதிகார மையம் கொண்ட அரசியல் ஒழுங்கில் இருந்து விடுபட்டு இரட்டை அதிகார மையம் நோக்கியோ அல்லது பல அதிகார மையம் நோக்கியோ திரளும் அரசியல் போக்கு உருவாகியுள்ளது.
ரஸ்யா – உக்ரேய்ன் போரின் தொடர்ச்சி இப் போக்கை மேலும் வளர்த்து விடக்கூடிய நிலைமைகளைக் கொண்டுள்ளது.
அனைத்துலகரீதியாகவும், பிராந்தியரீதியாகவும் உருவாகி வரும் இரட்டைமைய வலுப்பரீட்சைக்கான உதாரணங்களாக இலங்கையில் அமெரிக்கா- இந்தியா எதிர் அணியிலும் சீனா, உக்ரெய்ன் யுத்தத்தில் ரஸ்யா எதிர் மேற்குலகம், தென்சீனக்கடலில் அமெரிக்கா எதிர் சீனா போன்றவற்றைக் கூறமுடியும்.
ஒற்றை அதிகார மையம் வலுவிழந்து இரட்டை அதிகார மையம் ஏற்படும்போது பலமிக்க அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போராடும் தேசங்களுக்குப் புதிய அரசியல் வெளிகளை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டவையாக அமையும்.
இத்தகையதொரு சூழல் தமிழீழ தேசத்துக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும்.
இவ் வாய்ப்புக்களைச் சரிவரக் கையாள்வதற்குத் தமிழீழ தேசத்திடம் ஒன்றுபட்ட வலுவான அரசியல் தலைமை இருத்தல் அவசியமானதாகும்.
தற்போதைய சூழலில் தாயகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி ஒன்றுபட்ட அரசியல் தலைமை இல்லாதுள்ளமை தமிழீழ மக்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்துலக நாடுகளை தமிழர் நலன் சார்ந்து கையாள்வதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின்பாற்பட்டு தாயகத்திலும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும்; செயற்பட்டு வரும் அமைப்புகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் வழிநின்று ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான வழிவகைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் செயற்படும் அரசியல் அமைப்புகள் அரசியல் முடிவுகளை ஒன்றுபட்டு எடுப்பதற்காக ஒன்றுபட்ட உயர் தேசிய அரசியல்பீடமொன்றை அமைத்தல் பயன் தரும்.
தாயகத்தின் அரசியற் சூழலும் புலம் பெயர் அரசியற்சூழலும் அரசியல் வெளி சார்ந்து வேறுபட்டதாக உள்ளமையால் இத் தேசிய அரசியல் உயர்பீடம் தாயகத்துக்கும் புலம் பெயர் நாடுகளுக்கும் தனித்தனியாக அமையலாம்.
இவ்விரு அரசியல்பீடங்களும் தமக்குள் புரிந்துணர்வான உறவைப் பேணித் தமிழ் மக்கள் சார்பில் அரசியல் முடிவுகளை எடுக்கலாம்.
தாயகத்தில் தனித் தமிழீழம் கோருவதற்கான அரசியல்வெளி சிங்களத்தால் மறுக்கப்படுவதால் திம்புக் கோட்பாடுகளையும், விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் அரசியல் வழிபாட்டுக் கோட்பாடுகளாகக் கொள்ளலாம்.
இத்தகைய ஒற்றுபட்ட தேசிய உயர் அரசியல்பீடம் அமைக்கப்படுவது குறித்து தமிழ் அரசியல் அமைப்புகள் தமக்குள் உரையாடலை காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுதலை இன்றைய மாவீரர் நாளில் முன்வைக்கிறோம்.
மேலும், தமிழர் தேசத்தை வலுவாக்கும் பொருட்டு தமிழர் தேசிய நிதியம் ஒன்றை நம்பகத் தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆரம்பித்துச் செயற்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது.
சிறிலங்கா அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதன் விளைவாக ராஜபக்ச சகோததர்கள் உத்தியோகபூர்வமாக ஆட்சிப்பீடத்தில் இருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் நடைமுறையில் அவர்களது ஆட்சியே நடைபெற்று வருகிறது.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி இப்போது சற்றுத் தணிந்தது போலத் தோன்றினாலும் இந் நெருக்கடி ஆழப் புரையோடியுள்ளது என்பதும் அது நீண்டகாலம் தொடரும் என்பதும் பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.
இந் நெருக்கடிக்கு தமிழின அழிப்புப் போரின் போதும் அதன் பின்னரும் மேற்கோள்ளப்பட்ட இராணுவச் செலவுகள் முக்கிய பங்கு வகித்தன என்பதனை சிறிலங்கா அரசு மறைத்தே வருகிறது.
இதனை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமானதாகும் .
இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அனைத்துலகப்பொறிமுறையொன்றின் ஊடாக அவற்றை நேரடியாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும் அவசியமாக உள்ளது.
அன்பானவர்களே,
நமது மாவீரர்களை நினைவு கூரும் இந்நாளில் நமது மாவீரர்களை ஈன்ற பெற்றோர்களையும் நாம் ஆரத் தழுவிக் கொள்வோம்.
மாவீரர்களின் பெற்றோர்களே!
உங்கள் பிள்ளைகள் வீரத்தாலும் ஈகத்தாலும் தமிழீழ மண்ணை பெருமையடையச் செய்துள்ளனர்.
அவர்களது ஈகம் என்றும் வீண் போகாது.
இவர்கள் ஏற்றி வைத்த விடுதலைத் தீ எமது தேசத்தை விடுவிக்கும்.
ஈழமணித் திருநாடு சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இவ்வாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்
அவர்களது மாவீரர் நாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கார்த்திகை 27,
விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர்
ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழீழத்தேசிய செயற்பாட்டில் 1982 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவரும் பிரித்தானிய தமிழீழ
ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளராகவும் இருக்கும் திரு.சின்னவன் சிவலிங்கம் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம் லண்டன் எக்ஸல்
பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாற்பரா ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழ தேசியக் கொடியினை ராமச்சந்திரன் விஜயகுமார் எனும் இயற் பெயர் கொண்ட 1992 ஆம் ஆண்டு தாயக விடுதலை போரில் தன்னை இணைத்து
மணலாறு மாவட்ட தளபதியாகவும், காவல் துறை ஆணையக பொறுப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்துணைப்படை பொறுப்பாளராகவும் பல பொறுப்புகளை வகித்து இறுதி வரைகளத்தில் நின்ற திரு.தமிழவன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றும் நேரத்திற்க்காக காத்திருங்கள்.




நேரலை: 27-11-2022 #மாவீரர்நாள் ஈகியர் நினைவேந்தல் – சீமான் நினைவுரை
நேரலை: 27-11-2022 #மாவீரர்நாள் ஈகியர் நினைவேந்தல் – சீமான் நினைவுரை
செந்தமிழன் சீமான் தலைமையில் இடம்பெறும் சேலம் மாவீரர் நாள் நேரலை நிகழ்வுகள்
கனகபுரம் துயிலும் இல்லம் -மாவீரர் நாள் 2022 -நேரலை
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி
புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர்.
ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்.
அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர்.
பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது. இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது.
-பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய நூலான நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலில் அவர் குறிப்பிட்டது.




































