Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை கட்டுப்படுத்த முடியவில்லை என அவரது பெற்றோர் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுமி, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இருந்த போதிலும், நன்னடத்தை அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீண்டும் ஒருமுறை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாா்.
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
இருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவரிடம் ஆஜர்படுத்தியபோது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இதையும் மீறி, ஜூன் மாதம் 18ம் திகதி, சிறுமி மீண்டும் நகாில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னா் இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த தாயும், தந்தையும் பொலிஸ் நிலையத்தினுள் உள்ள பொது மலசலகூடத்தில் விஷத்தினை குடித்துள்ளனா்.
இதனையடுத்து அவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
12 வயது சிறுமியுடன் ஓடிய 28 வயது காதலன்
எனினும் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை சிகிச்சை முடியும் முன்னரே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதும் உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக தொிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பில் சந்தேகத்தில் 28 வயதான நபரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
குறித்த நபர் எதிா்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும், தமது பேரவையின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு விஜயம் செய்து தொடர்புகளை பேணி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த தசாப்தத்தில் பேரவையின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளை ஊக்குவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து கவலை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நேற்று (19) ஆரம்பமான இந்த அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பான உலகளாவிய காலமுறை மீளாய்வு தொடர்பான செயற்குழுவின் அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து
விபத்தின் போது, வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் காயமடைந்து வத்துப்பிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னா், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
பொல்ஹேன்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிரிதலே முகாமிற்கு கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடா்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாணவி சாதனை
கிளிநொச்சி மாணவி சாதனை
கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி சனுஜா, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் -2023 போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்தப் போட்டி, ஜூன் 17/18 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து விலை அதிகரிப்பு
சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ள நிலையில், ஜூன் 17ஆம் திகதி முதல் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி, 1 கிலோ கிராம் செயற்கை வண்ணமூட்டப்பட்ட மற்றும் நிறமற்ற சீமெந்துக்கு விதிக்கப்பட்ட CESS வரியானது 3 ரூபாயிலிருந்து ரூ. 5.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து விலை அதிகரிப்பு
50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் மற்ற போர்ட்லேண்ட் சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 5 இலிருந்து ரூ. 8.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை 50 கிலோவுக்கு மேலான சீமெந்துக்கான செஸ் வரி ரூ. 3.00 முதல் ரூ. 5 வரை உயர்த்தப்பட்டுள்ளது
258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு
258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு
இலங்கையில் 1983-ல் ஏற்பட்ட உள்நாட்டு போரால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி அகதிகளாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தனர். தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்திருந்தனர்.
இதில் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் 108 மறுவாழ்வு முகாம்களிலும், வெளியிலும் தங்கியுள்ளனர்.
2012-ம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் இருந்து அகதிகளாக வருவோர், கைதுசெய்யப்பட்டு கடவுச்சீட்டு ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாகவும் வழக்குப் பதிந்து சிறைகளிலும், சிறப்பு முகாம்களிலும் அடைக்கப்பட்டு வந்தனர்.
258 இலங்கை தமிழர் நிலை என்ன? : காத்திருக்கும் தமிழக அரசு
2022-ல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து இதுவரை சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த 258 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
இவர்களை கைது செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது. மேலும் இவர்களுக்கு தங்குமிடமும் 3 வேளை உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக வந்துள்ளவர்களை எப்படிக் கருதலாம் என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக கடந்த 15 மாதங்களாக தமிழக அரசு காத்திருக்கிறது.
தமிழக முகாம்களில் வசிப்போருக்கு ஏற்கெனவே வழங்கப்படும் சலுகைகளைப் போன்று, 258 பேருக்கும் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா
ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டது
இந்தியா இல்லாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன்
இந்தியா இல்லாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன்
இந்தியா இல்லாமல் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது என வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
பத்மநாபாவின் 33 ஆவது நினைவுதினம் இன்று (19.06) வவுனியா நகர மத்தியில் உள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் வவுனியா அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தீர்வொன்றினையோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஏனைய பிரச்சனைகளோ தீர்க்கமுடியாத நிலையிலேயே தமிழ் மக்களின் நிலை உள்ளது.
இதற்கு அப்பால் ஒரு சில கட்சிகளை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும் இந்தியாவை நாடி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா இல்லாமல் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது என சொல்லியே நாடியிருக்கின்றது.
இந்தியா இல்லாமல் பிரச்சனையை தீர்க்க முடியாது என்கிறார் சிவசக்தி ஆனந்தன்
இந்திய பிரதமர் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகம் கூடியபோதும் முக்கியமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, 21 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காணவேண்டும் அதற்கும் அப்பால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைக்குள்ள முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும், போரினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளான நில ஆக்கிரமிப்பு, பெளத்த மயமாக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளும் இணைந்து குறித்த சந்திப்புக்கு முன்னதாக இந்திய பிரதமருக்கு ஒரு கடிதத்தை கையெழுத்திட்டு அனுப்பவேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்
யாழ் இந்துக்கல்லூரி மாணவனை அடித்த வாத்தியார் கொடூர செயல்
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியல் கல்வி பயின்ற மாணவன் , ஒருவரை அந்த பாடசாலை ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில் ,யாழ்ப்பாணம் வைத்தியசலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
ஆசிரியரின் கொடூர தாக்குதல் சம்பவத்தால் , பாதிக்க பட்ட மாணவன் யாழ்போதன வைத்தியசாலையில் ,அனுமதிக்க பட்ட பொழுதும் ,அதிபரின் சிபாரிசின் பேரில் , மருத்துவர் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் .
இதுவே தற்போது சர்ச்சியை கிளப்பியுள்ளது ,பாடசாலைகளில் ரவுடிகளாக செயல் படும் ஆசிரியர்கள் .
இலங்கை பேரூந்து டிப்போக்கள் மூட நடவடிக்கை
இலங்கை பேரூந்து டிப்போகள் மூட நடவடிக்கை
இலங்கையில் அரச பேரூந்து டிப்போக்கள் நாற்பது அடித்து மூட பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
முன்னாள் ராஜபக்ச ஆட்சியாளர்களினால் ,கொள்ளையடிக்க பட்ட நிலையியல் ,பலத்த பொருளாதாரத்தில் சரிவை சந்தித்த இலங்கையால் ,மீளவும் எழுந்திட முடியா நிலையில் தத்தளித்து வருகிறது .
அதனால் தற்போது இந்த பேரவலம் ஏற்பட்டுள்ளது .
இலங்கையில் உள்ள 130 டிப்போக்களில் நாற்பது மூடும் நிலையில் உள்ளதான தகவல் ,இலங்கையன் எதிர்காலம் சோமாலியாவாக மாற போவதை கட்டியம் இடுகிறது .
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை
இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘உலகளாவிய பெருங்கடல் வலயம்’ என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச யோகா தினத்தின் 9 ஆவது பதிப்பை நினைவுகூரும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
பசறை – அமுனுமுல்ல பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான 3 துப்பாக்கிகளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 50 மற்றும் 38 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து சனிக்கிழமை(17) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்ததாகவும், இவர் ஏற்கனவே
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவர் தனது உறவினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
விமல்வீரவன்சாவை கைது செய்ய உத்தரவு
விமல்வீரவன்சாவை கைது செய்ய உத்தரவு
விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது
சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது
களுத்துறை மாகாணத்தின் கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியில் வைத்து நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உயிரிழந்தவரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (17) இரவு களுத்துறை, கல்லஸ்ஷேன பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது
சந்தேகநபர் இன்று (18) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு களுத்துறை, கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
களுத்துறை, பலாதொட, கொடபரகாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமாகாத சுஜித் தர்மசேன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது தலை மற்றும் கழுத்து பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
மாத்தறை, நெடொல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில், வீடொன்றில் இருந்த சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
பாதி கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்தில் இரண்டு சீமெந்து தூண்களுக்கு இடையில் ஊஞ்சல் போன்ற தொட்டிலை தந்தையும் மகளும் தயார் செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் மேல் தளத்தில் குறித்த சீமெந்து தூண் கம்பிகளை பயன்படுத்தி முறையான வகையில் நிர்மாணிக்கப்படாமல் நான்கு ஆணிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (18.06) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது.
இதன்போது, கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த (புளொட் ) ஆர். ஆர். எனப்படும் ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா எனப்படும் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு
இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க. சுரேஸ் பிறேமச்சந்திரன், என். சிறிகாந்தா, வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.
இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டனிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா, இராண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.06) இடம்பெற்றது.
இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு
குறித்த கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அங்கு வருகை தந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் யோசனையை முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்ந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும் இணைத்தலைவர்களாக தொழிற்பட வேண்டும் என வாதிட்டு தனது கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இறுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் இணைத்தலைவர்களாக செயற்படுவர் எனவும் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக செயற்படுவர் என முடிவு எட்டப்பட்டுள்ளது.
யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்
யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்
நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.
யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

இந்த அதிசய நிகழ்வை அங்கிருந்த பக்தர்கள் பார்வையிட்டதுடன், தமது தொலைபேசிகளிலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

நாகபூஷணி அம்மனே வந்து காட்சி கொடுத்ததாகவும், திருவிழாவை முன்னிட்டு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும் பக்த அடியார்கள் தெரிவிக்கின்றனர்.
ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்
ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்
புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது எல்லாம் புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குருந்தூர் மலை காணி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கூட்டங்களிலும், ஜனாதிபதி வவுனியா வந்த போதும் நாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று 400 ஏக்கர் விவசாய நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.
ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்
தற்போது பௌத்த பிக்குகள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள். எங்களது பிரதேசத்தில் எங்களுக்கு சொந்தமான வயல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்ட பின்பு பௌத்த பிக்குகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
மூளைக்கு மூளை புத்த கோவில்களை கட்ட முனைகிறார்கள். அதை ஒரு பிரச்சனையாக தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க முயல்கிறார்கள். இனப்பிரச்சனையில் கூட புத்த பிக்குகளின் இனத் துவேசத்தை கக்குபவர்களாக தான் இருக்கிறார்கள்.
புத்தர் அந்தப் போதனையை செய்யவில்லை. ஆனால் இங்கு ரவுடித் தனம் செய்வதெல்லாம் புத்த பிக்குகள். என்னைப் பொறுத்தவரை இந்த காணி விடயத்தில் புத்த பிக்குகள் தலையிடக் கூடாது. ஜனாதிபதி உத்ததரவிட்ட விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அது தான் எமது கோரிக்கை. இந்த புத்த பிக்குகளின் குரல்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்வது எங்களை மலினப்படுத்தும் என்பது தான் எனது கருத்தாகும் எனத் தெரிவித்தார்.



























