தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா சிறிதரன் காட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்

தமிழர்களை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஏமாற்றி வருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

திறந்த மனதோடு சிங்கள ஆட்சியாளார்கள் பேச தயாராக இல்லை என சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் புரையோடி போயுள்ள தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வினை கண்டு ,ஐக்கிய பட்ட இலங்கையை கட்டி எழுப்ப வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட யாரும் தயாராக இல்லை .

லஞ்சம் ஊழல் மோசடி ஏமாற்றில் ஊறிபோயுள்ள இலங்கை இதில் இருந்து விடுபட முடியாது உள்ளது என்பது அவரது கருத்தாக உள்ளது .

வீடியோ

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்

இந்தியயாவினால் மேற்கொள்ள பட்ட 13 வாது சட்ட சீர் திருத்தும் மேற்கொள்ள பட்டு அதில் மேலதிக சில அதிகாரங்கள் இணைக்க பட்டு ,மாகாணங்களுக்கு தீர்வு வழங்க படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் ஆண்டு தேர்தல் இடம் பெற்று அதன் பின்னர் அமைக்க படும் எமது ஆட்சியில் இந்த தீர்வு முன் வைக்க படும் என, ரணில் தெரிவித்துள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

தேர்தலில் வெல்ல இவ்வாறான ஒரு கபட நாடாகத்தை ரணில் ஆட ஆரம்பிட்டுள்ளதன் வெளிப்பாடாக இதனை பார்க்க முடிகிறது .

ரணில் விக்கிரமசிங்க நரி என்பது இதன் மூலம் மீளவும் அம்பலமாகியுள்ளது

வீடியோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற

தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக

கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.

தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும்.

அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட

கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி

மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது

இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது

இலங்கையில் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதற்காக முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய பிரஜையான 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி தோட்டாக்கள், “ரம்போ” வகையைச் சேர்ந்த கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது

இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வதாக இருந்தால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டரீதியான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த வெளிநாட்டு பிரஜை எவ்விதமான அனுமதியையும் பெறாமல் கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) பிற்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கேன் செய்த போது, இந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பயணப் பொதியை எடுத்து வந்த பிரித்தானிய பிரஜை விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பயணியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். குறித்த கைத்துப்பாக்கியை தனது பாட்டி தனக்கு ஒரு கலைப்பொருளாக பரிசளித்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய பெருமளவு போதைப்பொருள்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய பெருமளவு போதைப்பொருள்

சிக்கிய பெருமளவு போதைப்பொருள்

மியன்மாரில் இருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நேற்று மாலை தமிழகத்தில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இரண்டு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

56 கிலோகிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், மியன்மாரில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்குக் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து

தமிழ்நாடு – சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னையின் ஊடாகக் கடல் கரைக் கிராமத்தின் ஊடாக இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதே கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடியோ

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடியோ

மனநோய் அல்ல
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறை சிறைச்சாலையில் பரவும் நோய்

மாத்தறை சிறைச்சாலையில் பரவும் நோய்

மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு

தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வீடியோ

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர். இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ

தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்களாக ஏனைய நகைகளை ஒரு மண் சட்டியில் இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை வேண்டியுள்ளனர்.

உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை

தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார். இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் பிணையில் செவ்வாய்க்கிழமை (19) விடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்

அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு


ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த முறைப்பாட்டையடுத்து KFC இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் தரிந்து, தாங்கள் உட்கொள்ளும் KFC கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு வந்ததாகக் கூறினார்.

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு

“இதையடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தினர்,” என்று PHI அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் என PHI அதிகாரிகள் தெரிவித்தன

வீடியோ

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்
Posted in இலங்கை செய்திகள்

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்

இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்,

“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .

இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .

இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .

யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

வீடியோ

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் திறப்பு

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை 50 குளங்கள் வான் கதவுகள் திறப்பு .

பருவகால மலை காரணமாக குங்கள் நிரம்பி வழிவதால் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கின்றன .

இந்த வெள்ளம் காரணமாக பல்லாயிரம் மக்கள் அகதிகளாக பாடசலைகள் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவிகளை வழங்கி வருகிறது .

வீடியோ

விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் பசில் ராஜபக்ஸ்சா

நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் பசில் ராஜபக்ஸ்சா

இலங்கை நாட்டை விட்டு பசில் ராஜபக்ஸ்சா ஓட்டம் பிடித்தார் .

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி நானே என கொக்கரித்து பசில் நாட்டை விட்டு ஓடியுள்ளது ஏன் .

டுபாய் ஊடக அமெரிக்கா பறந்துள்ளார் .

கமிஷன் டீல் மன்னராக பெயர் பற்ற பசில் ,இலங்கை ஜனாதிபதியாக மாறினால் ,இலங்கையை நல்ல விலைக்கு விற்று விடுவார் .

அதற்கு இலங்கை பெரும்பாண்மை இனம் இடம் கொடுக்குமா …?

பொறுத்திருந்து பார்க்கலாம் .

அடிவாங்கி நொந்தவர்கள் தமிழர்கள் .இனி அதே போல அடியை வாங்க நோக வேண்டிய நிலைக்குசிங்கள மக்கள் செல்ல போகின்றனர் போல நகர்வுகள் காண்ப்பிக்கின்றன .

வீடியோ

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் .

இன்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

எல்லாம் அரசியல் நாடகமாக இருக்குமோ என தமிழர்கள் பேசி கொள்கின்றனர் .

வீடியோ

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்
Posted in இலங்கை செய்திகள்

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துனர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறி கொடகம வரை பஸ்ஸிற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார்.

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

அப்போது, ​​பேருந்தின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, ​​நடத்துனர் பயணியை தாக்கி காதைக் கடித்து விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோமாகம நகரை அண்மித்த போது குறித்த பயணியின் காது பகுதி காணவில்லை என குறித்த இளைஞருக்கு மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.

அப்போது, ​​குறித்த பயணி, மெகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தி, காதின் ஒரு பகுதி காணாமல் போயிருப்பதை அறிந்து, மெகொட பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

அதேநேரம் பஸ்ஸில் மறைந்திருந்த நடத்துனர் மெகொட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காயமடைந்த பயணியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாக மெகொட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு, அவிசாவளையில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

வீடியோ

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு

தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு

இவ்விடயம் தொடர்பில் உடன் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ்

மாவட்டத்தில் காணப்படும் அனுமதி அற்ற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றுமாறும் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடியோ

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது
Posted in இலங்கை செய்திகள்

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துவாக்கத்தில் உள்ள இந்த இரண்டு கிராமங்களில் தலித் மக்களை தாழ்வாக நடத்தும் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. தேநீர் கடைகளில் தலித் மக்களுக்கு மட்டும் பேப்பர்

கப்புகளைப் பயன்படுத்துவது, ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களுக்கு காலணிகள் அணிய தலித் மக்களுக்கு தடை விதிப்பது போன்ற தீண்டாமைக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

தலித்துக்கள் காலணிகள் அணியக்கூடாது

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் ​பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ஒடுக்குமுறைகள் பல ஆண்டுகளாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் மீறுபவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறும்

எனவும் மக்கள் தெரிவிப்பதாக சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வீடியோ

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

வீடியோ