Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவு – ஏன் இந்த மாற்றம் ..?
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவு – ஏன் இந்த மாற்றம் ..?
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது நடத்த
பட்டு வந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்
சொலைமானி படுகொலையை அடுத்து தமது தாக்குதல்களை
இடைவிடாது நடத்தி வந்த ஈரான் இப்பொழுது இந்த தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
மனித குண்டு தாக்குதலில் 30 இராணுவம் பலி -29 பேர் காயம்
மனித குண்டு தாக்குதலில் 30 இராணுவம் பலி -29 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் மத்திய பகுதியில் இராணுவத்தினரை இலக்கு வைத்து
தலிபான்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி
முப்பது இராணுவத்தினர் பலியாகியும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் குறித்த பகுதியில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன ,
மீளவும் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்படும் தாலிபான்கள் தமது தாக்குதல்களை தீவிர படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
டெல்லியில் மக்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
டெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பரிசோதனைகளும்
அதிகரிக்கப்படுகின்றன.நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிகம் செலவு ஆவதால் பரிசோதனை
செய்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில், நேற்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக
கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு முன், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரத்து 400-க்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதல்-மந்திரி உத்தரவின்படி
இனிமேல் ரூ.800-க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் ஆஸ்பத்திரிகள்
மற்றும் ஆய்வகங்களின் முன் விளம்பர பலகை வைக்கவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்
மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து – 3 டாக்டர்கள் கைது
கைது செய்யப்பட்ட டாக்டர்கள்
:
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 27-ம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார்.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட
தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு
மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், புதிய யூடியூப் சேனல் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்குவது போல யூடியூப் சேனலும்
தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உதயமாகவுள்ளது நடிகர் விஜயின் யூடியூப் சேனல்.
விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் தொடர்பான அறிவிப்புகள்
அனைத்தும் இனி அந்த சேனலில்தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிட்டு பரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்
110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்
கொல்லப்பட்ட விவசாய தொழிலாளர்கள்
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.
இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவமும், அரசு ஆதரவு பெற்ற குழுக்களும்
ஈடுபட்டு வருகின்றன. இதனால் அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அரசுப்படையினருக்கு ஆதரவாக இருப்பதாவும், ரகசிய தகவல்கள் அனுப்புவதாகவும் கூறி அப்பாவி பொதுமக்கள் மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மைடுரூகி மாகாணத்தில் கோஷோபி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று 110-க்கும்
அதிகமான தொழிலாளர்கள் விவசாய வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்குவந்த போகோ ஹாரம் பயங்கரவாதிகள் விவசாய வேலை செய்துகொண்டுருந்த தொழிலாளர்களை சிறைபிடித்தனர்.
மேலும், அவர்களின் 110 பேரின் கைகால்களை கட்டிய பயங்கரவாதிகள் அவர்களை கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்தனர். மேலும், சிலரை கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அரசு ஆதரவு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் இந்த கொடூர
கொலைகளுக்கு நைஜீரிய அதிபர் முகமது புஹாரி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்
தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள் உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் நெகிழ்ச்சி – தடியடி நடத்திய போலீசாருக்கு உணவளித்த சீக்கியர்கள்
போலீசாருக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும்
விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு, அரியானா மாநில சீக்கியர்கள்
உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அரியானா மாநில எல்லைகளில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு பெரும் பதற்றம்
நிலவியது. பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் உணவு, தண்ணீர் கிடைப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சீக்கியர்கள்
சிலர் போலீசாருக்கு உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் கர்னல் என்ற இடத்தில் ஏராளமான போலீசார் இருபுறமும் வரிசையாக அமர்ந்திருக்க, சீக்கிய குருத்வாரா
தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். மேலும் ஏராளமான போலீசார் அங்கு லத்தி, தடுப்புகளுடன் வந்து அமர்ந்து
உணவு சாப்பிட்டு செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினாலும், அதை நினைக்காமல் தன்னார்வலர்கள்
போலீசாருக்கு உணவு வழங்கியதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர்
மனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர்
மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குரேஷியா பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மனைவிக்கு கொரோனா பாதிப்பு : தனிமைப்படுத்திக்கொண்டார், குரேஷியா பிரதமர்
ஐரோப்பிய நாடானா குரேஷியாவில் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (வயது 50) பிரதமராக உள்ளார்.
இவரது மனைவி அனா மஸ்லேக் பிளென்கோவிக்கிற்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இருந்தபோதும், அவர் தன்னை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்வதாக அரசு செய்தி தொடர்பாளர் மார்கோ மிலிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குரேஷியாவில் 1.23 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,655 பேர் பலியாகி இருக்கின்றனர்.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் -நின்று போன திருமணம்
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் -நின்று போன திருமணம்
நாகர்கோவிலில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த
நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் 26-ந் தேதி (அதாவது நேற்று) இருவருக்கும்
திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. பத்திரிகை அச்சிட்டு தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்தனர்.
மணமகளும், வருங்கால வாழ்க்கையை நினைத்து பூரிப்பில் இருந்தார். திருமண தேதியும் நெருங்கியது. நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன.
மணமகளின் பெற்றோர், திருமணம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று உற்சாகமாக விருந்தோம்பல் பணியில்
ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார். இவர் தான், தனக்கு கணவராக வரப்போகிறார் என்ற நினைவலையில்,
மனதுக்குள் பல ஆசைகளை வைத்தபடி மணமகளும், உற்சாகமாக உறவினர்களை வரவேற்றபடி இருந்தார்.
அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்திதான் அது.
வெகுநேரமாகியும் அவர் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரும், என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினர்.
அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் பல கனவுகளில் இருந்த
மணப்பெண், உடைந்து போனார். அதே சமயத்தில் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி
போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை.
மணமகன் ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், பெற்றோர் பார்த்த பெண்ணை தவிக்க விட்டபடி பாதியிலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை- இந்தியாவில் புதிய சட்டம்
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை- இந்தியாவில் புதிய சட்டம்
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற பதாகைகள் வைக்கும்படி பெட்ரோல் பங்க்குகளுக்கு போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை – பதாகைகள் வைக்க பங்க்குகளுக்கு உத்தரவு
ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை சென்னையில் உள்ள அனைத்து
பெட்ரோல் பங்க்குகளிலும் காட்சிப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாசகங்களை காட்சிப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறை ஆணையர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தற்போது சென்னையில் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளார்
இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி
இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி
இந்தோனோசியாவில் அவர்கள் மதம் சார்ந்த சட்ட பிரகாரம் நபர்கள்
சிறுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்ற குற்ற
சாட்டில் அவருக்கு மக்கள் வேடிக்கை பார்க்க 150 சவுக்கடிகள் வழங்க பட்டன
இவ்வாறான மூட தன நிகழ்வுகள் நிறைவேற்ற படுகின்ற பொழுதும் பெருகி
வரும் இந்த குற்றங்களை அந்த மண்ணில் தடுக்க முடியவில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்
பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்
நேற்று சனிக்கிழமை பிரான்சில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கலக
காரர்கள் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்தினர்
இதன் பொழுது கார்கள் மற்றும் வங்கிகளை தீ வைத்து எரித்தனர்
இதனால பொலிசாருக்கும் கலக காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது
பலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி
அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி
அமெரிக்காவில் black friday தினத்திற்கு நிகழ்ந்த சம்பவத்தில்
மக்கள் மீது போலீசார் திடீர் துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்தினர்
அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டாம் நபரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்
டிரம்பின் ஆட்சியில் இடம் பெற்ற பத்தாவது சம்பவம் இது என கூற படுகிறது
ஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் அணு சக்தி விஞ்ஞானி – இஸ்ரேலினால் படுகொலை
ஈரான் நாட்டின் அணு சக்தி விஞ்ஞானி இஸ்ரல் இராணுவ
உளவுதிரையின் திட்டமிட்ட தாக்குதலில் மூலம் படு கொலை செய்ய பட்டுள்ளார்
யுரேனியம் செறிவூட்டும் நிலையில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில் ,
ஈரான் அணுகுண்டு தொழில் நுப்டத்தை எட்டிவிட கூடாது என்பதர்காக
அதற்கு மொழியாக செய்யப்பட்ட இந்த முக்கிய நிபுணரை திட்டமிட்டு படுகொலை செய்துளளது
ஈரானின் முக்கிய தலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொஸாட் தொடர்
தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
ஈரான் எப்பொழுதும் தமீது உக்கிர தாக்குதல்களை தொடுக்கலாம்
என்ற நிலையில் இஸ்ரேல் ,ஈரானின் முக்கியஸ்தர்களை திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறன்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு
பிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு
பிரிட்டன் ,வேல்ஸ் பகுதியில் எதிர்வரும் வெள்ளி முதல்
பார்கள்,உணவகங்களுக்கு மேலும் புதியப இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்க படவுள்ளது ,
அவை தொடர்பான விதிகளின் ,விதிமுறைகள் தொடர்பாக அன்று அறிவிக்க
படும் என தெரிவிக்க பட்டுள்ளது ,மக்கள் பாதுகாப்பாகவும் ,நோயின் தாக்குதலை கட்டு படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கும்
நோக்குடன் இந்த புதிய திட்டங்கள் அறிமுக படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதுபோலவே லண்டனிலும் அமூல் படுத்த\பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்
பெற்ற வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 521 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 57,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,ஆயிரத்துக்கு
மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் பாடசாலைகள்
அடித்து பூட்ட படாமல் உள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
உணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது
உணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது
ரொரண்டோ பகுதியில் உள்ள பாபுக்கி உணவகம் ஒன்றுக்குள் பரவி வரும் கொரனோ வைரஸ் விதிமுறைகளை பின்பற்ற தவறி
மக்களை கூட்டமாக நிற்க வைத்து உணவு வழங்கிய கடை உரிமையாளர் கைது செய்யப் பட்டார்
மேலும் அங்கு பணி புரிந்த பணியாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ஆறு பேருக்கு மேல் கடைக்குள் நுழைய கூடாது
மேலும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்
,அவ்விதம் அல்லாது ,மக்கள் ஒன்று கூடியதை கண்ணுற்ற போலீசார் அந்த கடைக்குள் பாய்ந்தனர் ,
உரிமையாளர் கைது செய்ய பட்டதுடன் கடையின் பூட்டையும் மாற்றி சென்றனர் ,
தமிழர்களே யாக்கிரதை ,இன்று அவருக்கு நாளை உங்களுக்கு
அரசு கூறும் விதிகளை பின்பற்றுங்கள் ,தண்டம் செலுத்துவதுடன்,உங்கள் லைசன்ஸ் பறி கொடுக்கும்நிலையும் ஏற்பட கூடும்

இந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்
இந்தியா விமானம் வீழ்ந்து நொறுங்கியது – விமானி மாயம்
இந்திய விமானப் படையின் மிகையொலி விமானம் ஒன்று கடற்படை
விமான தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து பறப்பில் ஈடுபட்ட பொழுது விமானம் விபத்தில் சிக்கி நீரில் வீழந்து மூழ்கியது
இதன் பொழுது விமானி ஒருவர் மீட்க பட்டுளளார் ,மேலும் காணாமல்
போன விமானியை தேடும் பணியில் இந்தியா இராணுவம் ஈடுபட்டுள்ளது
இந்தியாவின் குறித்த போர் விமானங்கள் தொடராக விபத்தில் சிக்கிய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது
பிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்
பிரான்சில் -இனவெறியில் கறுப்பினத்தவரை தாக்கிய 3 போலீசார் – பணி நீக்கம்
பிரான்சில் கடந்த வரம் இடம் பெற்ற போலீசார் மற்றும் மக்களுக்கு இடையில்
இடம் பெற்ற மோதல்களில் கறுப்பினத்தவர்களை இன வெறியுடன் தாக்கிய
மூன்று காவல்துறையினர் அதே போலீஸ் தலைமையகத்தால் பணி நீக்கம் செய்ய பட்டுள்ளனர்
மேலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் இடம்பெற்று வருகிறது
அமெரிக்கா,பிரிட்டனை தொடர்ந்து தற்பொழுது பிரான்சில் கறுப்பின
மக்களுக்கு எதிரான இனவெறி தலை தூக்கியுள்ளமை இந்த செயல்கள் மூலம் தெரிய வந்துள்ளது
இந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி
இந்தியா பாகிஸ்தான் இராணுவம் மோதல் – 2 இந்தியா இராணுவம் பலி
இந்தியா கஸ்மீர் ர பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் இந்தியா
படைகளுக்கு இடையில் இடம் பெற்ற மோதல்களில் சிக்கி இரண்டு இந்தியா சிப்பாய்கள் பலியாகியுள்ளனர்
இந்திய இராணுவத்திற்கு எதிராக சீனா பாக்கிஸ்தான் முறுகல் நிலையில்
உள்ளதும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்ற செயல்கள் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது







