Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
ஈராக்கிற்கு வான்வழியாக சென்று பாதுகாப்பு வாகனத்தில் பயணித்த
பொழுது ஈரானிய இரண்டாம் நிலை தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டார்
அவர் அங்கம் வகித்த புரட்சி காவல் படையின் தற்கால தளபதியான Ismail Ghaani திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
எனினும் இவர் பாது காப்பக நாடு திரும்பியுள்ளார் ,சொலைமானி விட்ட பணியை
இவர் ஆரம்பித்துள்ளார் ,இதனையே அடுத்து இஸ்ரேலின் இலக்கில் இவர் தற்போது இடம்பிடித்துள்ளார் ,
விரைவில் இவரும் கொலை செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
சிரியா நிலைகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்
சிரியா நிலைகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்
துருக்கிய இராணுவத்தினர் சிரியா இராணுவம் மற்றும் அவர் தம் ஆதரவு
படைகள் நிலைகள் மீது இலக்கு வைத்து கடும் எறிகணை தாக்குதலை மேற்கொண்டனர்
இந்த தாக்குதலில் சிரியா இராணுவத்தினர் மற்றும் ஆதரவு
படைகள் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது
இவ்விதம் இரு தரப்பு இராணுவத்தினர் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
திருமண வீடுகளில் திருடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்
திருமண வீடுகளில் திருடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்
திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து சிறுவர்களை குத்தகைக்கு எடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.12 லட்சம் வரை குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்
டெல்லி மற்றும் வடமாநிலங்களில் தற்போது திருமண காலம் ஆகும். சமீபத்தில் திருமணம் நடைபெற்ற சில மண்டபங்களில் விலையுயர்ந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடு போனதாக
டெல்லி போலீசுக்கு புகார்கள் வந்தன. அவை தொடர்பாக விசாரித்ததில், ரூ.1 கோடி மதிப்புக்கு மேல் பணம், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முக்கியமான
திருமணங்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். பின்னர் அங்கு பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது ஒரே நபர்கள் பல திருமணங்களில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 5 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது
தெரியவந்தது. இந்த கும்பலில் உள்ள சிறுவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட அவர்களுக்கு நூதன திருட்டுகள் பற்றி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்த கும்பலில் இன்னும் பலபேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர்
இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை கனடா
எப்போதும் ஆதரிக்கும் என்று கூறினார். விவசாயிகள் நிலை குறித்து கவலை தெரிவித்தார். சில கனடா மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது.
அவரை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தது. அவரிடம் கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கனடா பிரதமரும், அந்நாட்டு அரசியல் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளை, இந்தியாவின் உள்விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாக கருதுவதாக மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சகம் தெரிவித்தது. இதேநிலை நீடித்தால், இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினர்.
இக்கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா
துணை நிற்கும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.
இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பாவுடன் பிரிந்ததன் பின்னர் -அதிகரித்த பிரிட்டன் நாணய பெறுமதி
ஐரோப்பாவுடன்பிரிந்ததன் பின்னர் -அதிகரித்த பிரிட்டன் நாணய பெறுமதி
பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிந்த இரண்டு ஆண்டுகளின் வெள்ளிக்கிழமை நாணய மாற்றும் பண மதிப்பு அதி
உச்சத்தை எட்டி பிடித்தது
1.35 ஐந் தாக இதன் பெறுமதி காண பட்டது
இதனால் தமிழர்கள் குஷியில் உறைந்துள்ளனர்
எதிர்வரும் இரு நாட்களுக்குள் ஒடி சென்று பணத்தை இலங்கைக்கு அனுப்பி விடுங்கள் ,இதுவே திங்கட்கிழமை வழமை போன்று
உலகான பங்கு சந்தையில் ,பிரிட்டன் நாணய மாற்று அதிக சரிவை நோக்கி செல்லும் ,சாட் தெளிவாக காண்பிக்கிறது
இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம் – மிரட்டும் இஸ்ரேல்
இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம் – மிரட்டும் இஸ்ரேல்
இஸ்ரேல் உளவுத்துறையால் ஈரானின் இராணுவ தளபதி மற்றும் அணுகுண்டு
தயாரிப்பு விஞ்ஞானி ஆக்கிரோயர் மூன்று நாளுக்குள் மிக கோரமாக படுகொலை செய்ய பட்டனர்
இதனை அடுத்து இஸ்ரேலை அமைத்துள்ள பகுதியில் ஈரானின் ஆதரவு தீவிவாத குழுக்கள் ஒன்று கூடி வருவதாகவும் விரைவில்
இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டம் இட்டு வருவதாக இஸ்ரேலும் குற்றம் சுமத்தியுள்ளது
ஈராக்கில் உள்ள அமெரிக்காச இராணுவ தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஓப்பான தாக்குதல்களை ஈரானின் ஆதரவு படைகள்
இஸ்ரேல் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதனை அடுத்து ஹிஸ்புல்லா இராணுவ தலைவர் மற்றும் ,முக்கிய தளபதிகளை போட்டு தள்ளும் விரிவான நகர்வுகளில் இஸ்ரேல் ஈடுபட கூடும் என அடித்து கூறலாம்
14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்
14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்
பலஸ்தீனம் வடக்கு ரமல்லா பகுதியில் உள்ள Mughayer கிராமத்தி சேர்ந்த பதின் நான்கு வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேல்
இராணுவத்தால் வயிற்றில் சுட பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளான்
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
எனினும் இவர்கள் புரிந்த போர் குற்றங்களை தட்டி கேட்க மறுத்து ஐநா உறக்கத்தில் உள்ளமைக்கு குறிப்பிட தக்கது
சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
சோமாலிய நாட்டில் ,அந்த நாட்டுக்கு ஆதரவாக அமரிக்கா இராணுவம்
கடமையில் ஈடுபட்டு வந்தது ,தற்போது அந்த நாட்டில் இருந்து எதிர்வரும்
தைமாதம் பதின் ஐந்தாம் திகதி பலநூறு இராணுவத்தினர் மீள
நாட்டுக்கு திருப்பி அழைக்க படவுள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது
டிரம்ப் தனது ஆட்சி காலம் முடிவதற்குள் ,அவசர அவசரமாக இந்த படைவிலக்களை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஒரேநாளில் 504 பேர் பலி – 16,298 பேர் பாதிப்பு
பிரிட்டனில் ஒரேநாளில் 504 பேர் பலி – 16,298 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி சுமார்
504 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1,261 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,அது தவிர 16,298 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் குளிர் காலம் ஆரம்பித்துள்ளதால் மெயின் பாதிப்பு பலமடங்கு
அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மேலும் லொக் தற்போது நீக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது
இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்
இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி inner-west பகுதியில் ஆண் மற்றும்
பெண் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்
இதில் பலத்த காயமடைந்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்
விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்
ஈரானின் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை புரிந்தது
இதனை அடுத்து தற்பொழுது குறித்த குற்றாவளிகள் மீது தகுந்த பதிலடி
தாக்குதல் வழங்க படும் எனவும் ,எமது பழிவாங்கும் தகத்தல்கள் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது
லெபனானின் பாரிய குண்டு வெடிப்பை நடத்திய சில மாதங்களில் ஈரானில்
இரு முக்கியஸ்தர்கள் மூன்று நாள் இடைவெளியில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்
இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,எங்கும் எப்போதும்
யாரையும் நாம் கொலை செய்வோம் என இஸ்ரேல் மிரட்டுகிறது ,இந்த
மிரட்டல்களுக்கு ஈரான் அஞ்சுமா..? தொடரும் இவ்வாறான கொலைகளுக்கு பதிலடி வழங்காது உறங்குமா ..? வரும் காலங்கள் இதற்கு உரிய பதில் கிடைக்கும் என நம்பலாம்
அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை
அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை
அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5
ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு பற்றி உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடினார்கள். அங்கு
பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாம். இந்த
தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம்
பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3.
இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாம். இதன்மூலம் கடந்த
அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்தக் குழந்தைக்கு அவரும், அவரது கணவர் டினாவும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.
அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
இதுபற்றி பென் கிப்சன் கூறும்போது, “நாங்கள் நிலாவுக்கு மேலே இருப்பது
போல மகிழ்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்” என்று குறிப்பிட்டார்.
பென் கிப்சன் ஒரு ஆசிரியை. இவரது கணவர் டினா சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஆவார்.
அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு
அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல்
கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக
இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்
இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி
பிருத்தானில் புதிதாக கண்டு பிடிக்க பட்ட கொரனோ வைரஸ் நோயின்
தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடப்பட உள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
பிரிட்டன் அரசு அனுமதி அளித்த நிலையில் மேற்படி மருந்தானது மக்களுக்கு
போடப்பட உள்ளது
இது மிகவும் திறனுடன் வேலை செய்வதாக தெரிவிக்க பட்டுள்ளது
எவ்வித பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படவிலை என சுட்டி காட்ட பட்டுள்ளது
மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் காணப்பட்டதைப் போன்ற மர்மமான உலோக பொருள் ருமேனியாவில் ஒரு மலைப்பாதையில்
கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஉலோக பொருள்புக்கரெஸ்ட்:
கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள யூட்டா பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம்
எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.அந்த தூணை
அங்கே நிறுவியது யார், வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகள் எழும்பி அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அதை அகற்றியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னொருபக்கம், அந்த தூண் 2015, 2016 வாக்கிலேயே அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ருமேனியா நாட்டில்
அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியுள்ளது. அதன் உயரம் 13 அடி.இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில்
வீசினார்களா…? அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடத்திலும் அமைந்துள்ளது.யாராவது அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை
அமைக்கவேண்டுமானால், அவர்கள் அரசின் கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பதால், அந்த தூண் குறித்த விஷயம் மர்மமாகவே உள்ளது
2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்
2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப்
அமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.
2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி – டிரம்ப் சூசகம்
அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது.
இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டார்.
கொரோனா பரவல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகள் இந்த
தேர்தலில் பதிவானதால் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நீடித்தது.
இதில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே இழுபறி நீடித்தது. எனினும் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த ஜோ
பைடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வாக்குகளை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். ஆனால் டிரம்ப் தனது
தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார்.
அது மட்டுமின்றி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். ஆனாலும் இந்த சட்ட போராட்டத்தில்
அவர் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறார். எனவே டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார். டிரம்ப்
மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகையில் கொண்டாடும் கடைசி கிறிஸ்துமஸ் இதுவாகும்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டிரம்ப், 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை சூசகமாக தெரிவித்தார்.
இதுபற்றி அவர் பேசுகையில் “இந்த 4 ஆண்டுகள் ஆச்சரியமானவையாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்க முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் நான் உங்களை பார்ப்பேன்” எனக் கூறினார்.
டிரம்பின் இந்த பேச்சு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவரின் விருப்பத்தை காட்டுவதோடு, தற்போதைய தேர்தலில்
தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் தயாராகி விட்டார் என்பதையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே ஜனாதிபதி தேர்தலின் முடிவை மாற்றக்கூடிய அளவுக்கு மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரமும் அமெரிக்க நீதித்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை என அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “தேர்தல் மோசடி தொடர்பாக அமெரிக்க வக்கீல்கள் மற்றும் மத்திய புலனாய்வு போலீசார் தங்களுக்கு கிடைத்த குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்றுவரை தேர்தலில் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்த கூடிய அளவில் மோசடியை நாங்கள் காணவில்லை” எனக் கூறினார்.
டிரம்பின் தீவிர விசுவாசியான வில்லியம் பார் தேர்தல் குறித்து டிரம்பின் குற்றச்சாட்டுக்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரபிரதேசத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். அவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசம்: 60 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் – மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பஹிரத் குஷ்வாஹா. இவருக்கு இரண்டு மகள்களும், 4 வயதில் கணேந்திரா என்ற மகன் உள்ளனர்.
பஹிரத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது கோதுமை வயலுக்கு நேற்று சென்றிருந்தார். அங்கு தனது மகனை விளையாட
விட்டுவிட்டு குடும்பத்தினர் அனைவரும் கோதுமை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர்.
வேலையை முடித்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் மதியம் 12 மணியளவில் கோதுமை வயலில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது வயலில் விளையாடிக்கொண்டிருந்த கணேந்திராவை காணவில்லை என்பதை உணர்ந்த குடும்பத்தினர் குழந்தையை தேடினர்.
அப்போது கோதுமை வயலில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை கணேந்திரா தவறி விழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு பஹிரத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற
போலீசார் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
ஆழ்துளை கிணறு 60 அடி ஆழம் கொண்டது எனவும், தற்போது குழந்தை 30 அடி ஆழத்தில் உள்ளது எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
8 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் குழந்தை மூச்சுவிட ஏதுவாக ஆக்சிஜன் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிஸ்கட் மற்றும் பால் போன்ற
உணவு பொருட்களும் குழந்தைக்கு கயிறு மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது வரை குழந்தை நலமுடன் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், போலீசார், தீயணைப்பு படை வீரர்கள்
மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒயில் திருடிய 17 -போலீசார் – மடக்கி பிடித்த உளவுத்துறை
ஒயில் திருடிய 17 -போலீசார் – மடக்கி பிடித்த உளவுத்துறை
பாகிஸ்தானில் உள்ள முக்கிய முதுநிலை உயர் ரக அதிகாரி உள்ளிட்ட
17 பொலிசார் இணைந்து நிறுவனம் ஒன்றின் ஒயில் பைப் லைனில் ஒயில் திருடி விற்று வந்தது கண்டு பிடிக்க பட்டுள்ளது
நீண்டகாலமாக இந்த கூட்டு கொள்ளியில் ஈடுபட்டு வந்ததும் ,அதனை
குறித்த நிறுவன அதிகாரிகள் உளவுத்துறையின் கவனத்திற்கு
கொண்டு சென்ற நிலையில் மேற்படி போலீசார் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் 350 பொலிஸாருக்கு கொரனோ
பிரிட்டனில் 350 பொலிஸாருக்கு கொரனோ
பிரித்தானியாவில் 350 பொலிஸாருக்கு கொரனோ நோயின் தொற்றால் அவதிப்படுகின்றனர்
இவர்களில் ஐம்பத்தி ஒரு பேருக்கு நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் 301 பேர் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளதாக முக்கிய மந்திரி ஒருவர் தெரிவித்து பர
பரப்பை கிளப்பியுள்ள்ளார்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்
பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்
சிங்கப்பூரில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்
:
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் கர்ப்பமுற்றிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில்
, மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யும்போது, குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், அந்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. காரணம், கொரோனா தொற்றிய ஒரு
கர்ப்பிணிப்பெண், தான் கர்ப்பமுற்றிருக்கும்போதோ அல்லது பிரசவிக்கும்போதோ தன் கருவிலிருக்கும் குழந்தைக்கு
கொரோனாவை பரப்ப முடியுமா என்பது இதுவரை தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று வரை, ஒரு கர்ப்பிணியின் கருவிலிருக்கும் குழந்தையைச் சுற்றியிருக்கும் திரவத்திலோ அல்லது அவரது தாய்ப்பாலிலோ கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் ஒரு அபூர்வ சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள்,
அவர்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அவர்களது உடல் கொரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கியிருந்தது.
அவர்களது பெற்றோர் ஒரு திருமணத்திற்கு சென்றபோது அவர்களுக்கு கொரோனா தொற்றியது, ஆனால், அந்த குழந்தைகள்
அந்த திருமணத்துக்கு செல்லவில்லை. அந்த குழந்தைகள் மூவரும், தங்கள் பெற்றோருக்கு கொரோனா இருந்தாலும், அவர்களுடன் நெருக்கமாகவே இருந்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை, அதே நேரத்தில் அவர்களுக்கு கொரோனா ஆன்டிபாடிகள் மட்டும் இருந்துள்ளன.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்த குடும்பத்திலுள்ள அனைவரது எச்சிலும் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது தெரியவந்துள்ளது.







