அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை

Spread the love

அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை

அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5

ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு பற்றி உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடினார்கள். அங்கு

பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாம். இந்த

தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம்

பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3.

இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாம். இதன்மூலம் கடந்த

அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்தக் குழந்தைக்கு அவரும், அவரது கணவர் டினாவும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

இதுபற்றி பென் கிப்சன் கூறும்போது, “நாங்கள் நிலாவுக்கு மேலே இருப்பது

போல மகிழ்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்” என்று குறிப்பிட்டார்.

பென் கிப்சன் ஒரு ஆசிரியை. இவரது கணவர் டினா சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஆவார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply