Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
எதிர்வரும் தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்களிக்க முன், உங்கள் சுய சுந்தனைக்கு
எதிர்வரும் தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்களிக்க முன், உங்கள் சுய சுந்தனைக்கு
மறந்து விடக்கூடாது கூடாது!
இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே சுமந்திரன் அவர்களுக்கு வாக்களிக்க முடியும்.
இலங்கையை ஆண்ட தமிழனை அடிமைப் படுத்தி, அடக்கி, ஆளத் துடித்த சிங்கள இன வெறியர்களிடமிருந்து தமிழர்களைப்
பாதுகாத்து, மீண்டும் ஆளவைக்கப் போராடி, ஈழ விருட்சத்தின் மலர்வுக்காக, மண்ணில் விதைகளாகப் புதைந்து கிடக்கும்
மாவீர்களினதும், மக்களினதும், தியாகங்களின் மேல் நின்று, அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில்
கருத்துரைத்துக் கொண்டு, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, சிங்கள அரசிற்கு ஆதரவாக, அரசியல்
ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் தமிழர்களின் அரசியல் களத்திற்கு தேவையா.
சிங்கள அரசபடைகளாலும், தமிழ் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டுக் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், இராணுவ விதி முறைகளுக்கு அமைவாக, பெற்றோர்களால், அரச
படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட பொது மக்களையும், போராளிகளையும் தேடி அலைந்து
கொண்டிருக்கும் பெற்றோர்களைக் கேவலப்படுத்தும் வகையில் கருத்துக் கூறிய ஒருவரால், தமிழர்களின் உரிமைகளுக்காக
செயற்பட முடியுமா? என்று சிந்திக்கத் தெரியாதவர்களால் மட்டுமே சுமந்திரன் போன்றவர்களுக்கு வாக்களிக்க முடியும்.
“தமிழர் தாயகத்தில் நடந்தது இனப் படுகொலை அல்ல, அது சாதாரண போர்க்குற்றமே” என்று கூறிய ஒருவரால், எந்த வகையில் தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்பட முடியும்?
“போர்க் குற்ற விசாரணையில் புலிகள் செய்த இனச் சுத்திகரிப்பு, மற்றும் படுகொலைகள் தொடர்பாகவும். விசாரிக்கப்பட வேண்டும்”
என்ற நிலைப்பாட்டில் சிங்கள அரசிற்கு ஆதரவாக செயற்படும் ஒருவரால், எப்படி தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செயற்பட்ட முடியும்?
“விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு, ஆயுதப் போராட்டம் ஒரு வன்முறை, அதனை செய்தவர்களை நான்
ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய ஒருவர் தமிழர்களின் பிரதிநிதியாக எப்படி செயற்பட முடியும்?
இன அழிப்பு செய்த “சிங்களவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது பெரும் பாக்கியம்” என்று கூறி, தமிழர்களை
இழிவுபடுத்தும் வகையில் கருத்துரைத்து, கீழ்த்தரமான சிந்தனையுடன் செயற்படும் ஒருவர் தமிழர்களுக்கு தேவைதானா??
சிங்கள பொலிஸ், விசேட அதிரடிப் படையின் பாதுகாப்புடன், தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில்
கலந்துகொண்டு தமிழர்களை, தன் எதிரிகளாகவும், தமிழர்களால் தனக்கு உயிர் ஆபத்து எனவும் வெளிக்காட்டிய, சுமந்திரனால் எப்படி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்?
தமிழர்களுக்காக எதையுமே செய்திராத அம்பிகா அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக் கொடுக்க முனையும்
சுமந்திரனின் சுயநல குறுக்குப் புத்தியால் தமிழர்களுக்கு எந்த தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும். என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??
விதண்டாவாதக் கருத்துக்களைக் கூறி, தமிழர்களின் விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் சுமந்திரன் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும், இனப்பற்றற்ற,
தன்மானத்தை இழந்தவர்களால் மட்டுமே, சுமந்திரன் போன்றவர்களை ஏற்று, வாக்களிக்க முடியும்.
யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களின் உரிமை, இருப்பினும் யாருக்கு? ஏன்? வாக்களிக்க வேண்டும் என்பதையும் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டியதும், அதே மக்களின் கடமை!
தி.தமிழரசன்
இலங்கையில் பற்றி எரிந்த 50 ஏக்கர் காடு – மகிந்தா,கோட்டா அரசில் நடக்கும் பயங்கரம்
இலங்கையில் பற்றி எரிந்த 50 ஏக்கர் காடு – மகிந்தா,கோட்டா அரசில் நடக்கும் பயங்கரம்
இலங்கை பண்டாரவல பகுதியில் திடீரென காடு ஒன்று தீப்பிடித்து இருந்துள்ளது ,இதன் போது சுமார் ஐம்பது ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மகிந்தா ,
கோட்டபாய அரசுகளின் ஆட்சி காலத்தில் இந்த காடுகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது ,இது நிலங்களை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் அரசியல் பின்புலத்தில் அடிப்படையின் இந்த காடுகளுக்கு தீ வைக்க படுவதாக உள்ளக கசிவுகள் விசிறி செல்கின்றன

யாழில் சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் திடீர் இடமாற்றம் – சத்தீய மூர்த்தி அடாவடி
யாழில் சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் திடீர் இடமாற்றம் – சத்தீய மூர்த்தி அடாவடி
தமிழர் தாயகத்தின் முதன்மை வைத்திய சாலையாக விளங்கி வரும் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்
நாயகமாக விளங்கும் திருவாளர் சத்திய மூர்த்தி ,பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக வழங்க பட்ட அறிக்கை மற்றும்
பாதிப்பு இழப்புக்களை ஆளும் கோட்டபாய அரசுக்கு சார்பாக மாற்றியமைத்து ,உண்மை எண்ணிக்கையை மூடி மறைத்து வெளியிட்டார்
தமிழ் கட்சிகளை சேர்ந்தத நான்கு எம்பிக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்ட பொழுதும் அவையும் மூடி மறைக்க பட்டது
இந்த மருத்துவ மனையில் நிகழும் பல்வேறு பட்ட சம்பவங்களை நாம் உள்ளிருந்து தர பட்ட தகவல் அடிப்படியில் வெளியிட்டோம்
,அதன் விளைவு அப்பாவி மருத்துவர் முகுந்தன் ஒருவர் திடீரென சத்திய மூர்த்தியினால் இடமாற்றம் செய்ய பட்டுள்ளார்
தனி கட்டு ராஜாவாக வலம் வரும் சத்தியமூர்த்தியின் தொடர் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
,வரணி மருத்துவமனை ,மற்றும் சாவ கச்சேரி மருத்துவ மனைகளில் நோயாளர்கள் பராமரிப்பு நேர அட்டவணையில் உள்ளது போல செயல் படுவதில்லை
அங்கு நோயாளர்கள் திட்டி அனுப்ப படும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதற்கு வடமாகாண சுகாதார பணிப்பாளர் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை
தற்போது ஊழல் லஞ்சத்தில் பெருத்து ஊதிய சத்தியமூர்த்தி ,மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர்கள் நடவடிக்கை மக்கள் மத்தியில் அருவருக்க தக்க ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
தமக்கு எதிராக செயல் படுவதான தோற்ற பாட்டை ஏற்படுத்தி சிறந்த மருத்துவர் முகுந்தனை , சத்திய மூர்த்தியின் நேரடி
சிபாரிசின் அடிப்படையில் திடிரென வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பட்டுள்ளார்
அவ்வாறே சிறந்த மருத்துவராக விளங்கிய மருத்துவர் முகுந்தன் இடம் மற்றம் செய்ய பட்டுளளார் ,
இது ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக யாழ்ப்பாண போதான வைத்தியசாலை வெளியிடாது மறைத்து வருகிறது
மேலும் விரைவில் சத்தியமூர்த்தி மற்றும் ,வடமாகாண சுகாதார பணிப்பாளர்கள் மோசடிகள் அம்பல படுத்த படும் ,இவர்கள்
பின்புலத்தில் இயங்கும் மாபியா கும்பல்கள் ,மரண சான்றிதழ்கள் மாற்றி வழங்குவது தொடர்பிலான அணைத்து விடயங்களும் தொடரான வெளி கொண்டுவரப்படும்
மக்களே உசார் ,யாழ் மருத்துவ மனை வழிமாறி செல்கிறது ,இதற்கு உடந்தையாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் உள்ளது அம் பலமாகியுள்ளது
நவீன் திசாநாயக்கவை, தொழிற்சங்க தலைவராக நியமித்து ரணில் தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்
நவீன் திசாநாயக்கவை, தொழிற்சங்க தலைவராக நியமித்து ரணில் தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
நாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தமிழ் தோட்டத்தொழிலாளரின் ஆயிரம் ரூபா
சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர், நவீன் திசாநாயக்கா. இது நாடறிந்த விஷயம்.
இன்று இவருக்கு தனது கட்சியின் தோட்டத்துறை தொழிற்சங்கத்தில் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில்
நவீனுக்கு உடந்தையாக தானும் இருந்துள்ளதை வெட்கமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் தனது முன்னாள் பிரதமர் பதவிக்கு உத்தரவாதம் வழங்கி, ஆட்சியமைக்க பெருவாரியாக
வாக்களித்த மலையக மக்களை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்மூலம் இன்று அவமானப்படுத்தியும் உள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய
ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
யூஎன்பியின் கட்சி நியமனங்கள் எங்களுக்கு தேவையற்ற விடயம். அதையிட்டு அக்கறை கொள்ள எங்களுக்கு நேரமும் கிடையாது. ஆனால், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆட்சி அமைக்க அதிகம்
வாக்களித்தது, தமிழ் மக்கள் என்பதை அவர் மறக்க கூடாது. அதிலும் அதிகபட்ச வாக்குகளை தந்த மாவட்டம், நுவரெலியா
மாவட்டம் என்பதையும் அவர் மறக்க கூடாது. அவர் மறந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நவீன் திசாநாயக்கா மறக்க கூடாது.
பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தோட்ட கம்பனிகளின் ஏஜண்டாக செயற்பட்டு, தமிழ் தோட்டத்தொழிலாளர் சம்பள
விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன் என்பது நாடறிந்த விஷயம்.
இது மட்டுமல்ல. தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடமைக்க, காணி தருவதிலும் நவீன் திசாநாயக்க பெரும் தடைகளை
ஏற்படுத்தினார். அரசாங்கத்துக்குள் சண்டையிட்டே இந்த காணிகளை நாம் பெற்று வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தோம்.
இந்நிலையில், இந்த நவீன் திசாநாயக்கா எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க
தலைவராக அதே நவீன் திசாநாயக்காவையே வெட்கமில்லாமல், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது. நடப்பது
என்னவோ, தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக இழக்கிறார்.
ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்
ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்
இலங்கை வெலிமட பகுதியில் நபர் ஒருவர் சமையலறை கத்தியால் படு கோரமாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை
செய்ய பட்டுளளார்
இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது
மேற்படி கொலை தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது
ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
இலங்கை எலமலவல பகுதியில் ஆட்டோ ஒன்றின் மீது நடத்த பட்ட திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் சிக்கி ஒருவர் பலியானர் .
இந்த சூட்டு படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த மரணம் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை
தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திணைக்களத்தில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள அதிகம் பேர் கூடுவதை தடுக்க
வரையறுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக பத்தரமுல்ல காரியாலயத்தில் 250 பேருக்கு மத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் காலியில் உள்ள தென்மாகாண காரியாலயத்தில் 50 பேருக்கு மாத்திரமே அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
அவ்வாறு அடையாள அட்டையை பெற விரும்புவோர் தமது கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சி கடிதத்தை தமது பிரதேச செயலாளர்
காரியாலயத்தில் உள்ள அடையாள அடடை கிளை காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்
பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள்
பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணி அளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, பொதுமக்களால் வழங்கப்பட்ட
தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிசு புதைக்கப்பட்ட சிசுவை மீட்க, ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டதோடு, நீதவான்
தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு சிசுவின் சடலம் மீட்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, 26 வயதுடைய பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், திருமணமாகாதவர் எனவும், இரண்டாவது முறையாக குழந்தையை
பிரவசித்து கொன்றமைக்கான தடயங்களும் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 271 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 271 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்
முப்படைகளின் கண்காணிப்பின் கீழுள்ள 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்போது நான்காயிரத்து 874 பேர் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வரையில் 12 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை
இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும், 271 பேர் பி.சி.ஆர்
பரிசோதனையை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக
அடையாளம் காணப்பட்டவர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்தவர் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம், நாட்டில் எட்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், 28 பேர்
குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது
அடையாளம் காணப்பட்டுள்ள 1,877 பேரில், 716 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை ஆயிரத்து 150 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு
ஆர்பாட்டக்காரர்களை கலைக்க நீதிமன்ற உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட கண்டிப்பான தனிமைப்படுதல்
சட்டவிதிகளுக்கு அமைவாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலுமே முன்னணி சோசலிஸ கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்களை
கலைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொலிசாரினால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணம் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணி சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்களை கைது
செய்தமைதொடர்பாக கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அரசாங்கம், பொது மக்களின் உயிரை மீண்டும் ஆபத்துக்கு உட்படுத்த ஒருபோதும் இடமளிக்காது என தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் அளப்பரிய அர்ப்பணிப்புடன் தமது பணிகளை முன்னெடுத்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக முடக்க நிலையில் காணப்பட்ட மக்களின் நடமாட்டம் சில கட்டுப்பாடுகளுடன் அண்மையில் திறக்கப்பட்டது.
எனவே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த முறையை சீர்குலைக்க யாரையும் நாம் அனுமதிக்க முடியாது, ”என அவர் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தினால் கிருமி தொற்று நீக்கல் திரவத்தை பாதுகாப்பு அமைச்சிற்கு நன்கொடையளிக்கும் நிகழ்வில்
உரையாற்றிய மேஜர் ஜெனரல் குணரத்ன, தொற்றுநோயாக அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள
சட்டங்களை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது நியாயமற்ற ஒரு செயல் என அவர் தெரிவித்தார்.
“முழு நாடும் பாரிய சவாலுக்கு முக்ம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது, இதன்போது சமூகத்தில் உள்ள அனைவருமே தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளில்
அவரவருக்கு சாத்தியமான வழிகளில் பங்களிப்பு செய்தனர், ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய சில நாட்களிலேயே, அவர்கள்
இவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த முயன்றுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ்
மொஹமட்டினால் 50,000 லீட்டர் கிருமி தொற்று நீக்கும் திரவத்தை பாதுகாப்பு செயலாளரிடம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கும்
நிகழ்வு அந்நிறுவனத்தின் கொலனாவ தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கிருமி தொற்று நீக்கும் திரவம் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கக்கப்பட்டது.
தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முப்படை, பொலிஸ் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு
ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அன்பளிப்பு வழங்கிய முதற்தா நிறுவனமான வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“தேசிய பாதுகாப்பு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய முன்னுரிமை மற்றும் இது ஜனாதிபதியின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டது. தேசிய பாதுகாப்பு இல்லாமல்
பொருளாதார மறுமலர்ச்சி, கல்வியில் வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பற்றிய எந்த எண்ணமும்
பயனற்றதாகவே அமையும் ”என் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அடைந்த சாதனைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சிறப்பான தலைமை
மற்றும் தூரநோக்கு என்பனவே காரணமாகும் என அவர் வலியுறுத்தினார்.
“இந்த ஆட்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன்னர் பயன்படுத்தப்பட்ட வழக்கமான கட்டாய நடவடிக்கைகளுக்கு மாறாக பல்வேறு குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்பட்ட
போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் சாதகமாகப் பெறப்பட்டன. இன்றுவரை, அத்தகைய குழு எதுவும் தாக்கப்படவில்லை, இழுத்துச் செல்லப்படவில்லை அல்லது அவர்களுக்கு எதிராக தடியடி, நீர்
பீரங்கிகள் அல்லது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படவில்லை. இதன் மூலம் சிவில் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி
செய்வதில் அரசு சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ”என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, பிரதி நிர்வாக பணிப்பாளர்கள், சிரேஷ்ட
அதிகாரிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
4874 தொடர்ந்து தனிமை படுத்தல் – அதிகரித்த கொரனோ
4874 தொடர்ந்து தனிமை படுத்தல் – அதிகரித்த கொரனோ
முப்படைகளின் கண்காணிப்பில் உள்ள 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4874 பேர் தொடர்ந்தும்
,தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று (12) காலை வரையில் 12,856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை
இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 271 பேர் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய தினம் வீடு திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வீதியில் மனித சடலம்
கொழும்பு வீதியில் மனித சடலம்
கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் கடல் கரையில் தொலை தொடர்பு சாதனங்கள் மீட்பு
மன்னார் கடல் கரையில் தொலை தொடர்பு சாதனங்கள் மீட்பு
மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு
சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11) மாலை மீட்டுள்ளனர்.
பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப
பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தின் உத்தரவினைப் பெற்ற பேசாலைப் பொலிஸார், படைத்தரப்பினர் மற்றும் விசேட அதிரடிப் படைப்பிரிவு நேற்று
மாலை மேற்கொண்ட அகழ்வுப் பணியில் மீட்கப்பட்ட சந்தேகப் பொதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பொதியில்
காணப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு பேசாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் 2007 ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டது என பேசாலை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மட்டக்களப்பில் வழிபாட்டுத் தலங்கள்
அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மட்டக்களப்பில் வழிபாட்டுத் தலங்கள்
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல மத ஸ்தலங்களிலும் கொரோனா தடுப்பு
வழிமுறைகளுக்கமைய இன்று முதல் சமய வழிபாடுகளில் ஈடுபட இம்மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்குழு அனுமதித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் 10 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி
பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது இத்தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச ஊடகப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
இச்செயலணிக் கூட்டத்தில் தேசிய கொரோனா தடுப்பு செயலணி வழிகாட்டல்களுக்கமைய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியில், பொலிசார், மற்றும் உள்ளுராட்சி சபைகளின்
உத்தியோகத்தர்களது மேற்பார்வையில் பிரத்தியேக வகுப்புகளை அதிகபட்சம் 100 மாணவர்களைக் கொண்டு நடாத்த அனுமதி வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பொதுப் போக்குவரத்தின்போது மாவட்டத்தில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிப்பதில்லை எனவும், அவற்றைப் பொலிசார் பரிசோதனை
செய்வதெனவும், உள்ளுராட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கமைய கொரோனா தடுப்பு சுகாதாரச் சட்டங்களை மீறாதவாறு பொதுச் சந்தைகளை வழமையான
சந்தைக் கட்டிடங்களுக்குக் கொண்டு செல்லலாம் எனவும் இந்த விசேட செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், கொரோனா தொற்று காரணமாக பிற்பகல்
4 மணிவரை இயங்கி வந்த இப்பிரிவு தற்பொழுது மாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வரும் காத்தான்குடி தளவைத்தியசாலையில் 130 கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அங்கு 68 ஆண்களும், 27 பெண்களுமாக 95 கொரோனா நோயளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவ்வைத்தியசாலையில் காணப்பட்ட கழிவுநீர்
அமைப்பு, மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இயந்திரம் போன்றவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். எம். அச்சுதன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தவிர மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேகர கருத்து தெரிவிக்கையில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கப்படுமாயின் வகுப்பறைகள் தொற்று நீக்கி
விசிறப்படல்வேண்டும், நிலையான நிருவாக சபையொன்று செயல்பட்டு கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளைப்
பின்பற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டுமெனவும், இதனை மீறுவோறுக்கெதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வர் எனவும் தெரிவித்தார்.
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை- கோட்டா அரசு கெடுபிடி
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை- கோட்டா அரசு கெடுபிடி
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
- சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக
- ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்
2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை
பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ்
குறிப்பிபடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைய கிடைக்க
வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தம்
ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.
- 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள
- முறைப்படுத்துதல்) சட்டம்;;:
- 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும்
- சட்டம்
- (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை
- மேற்கொள்வதற்கான சட்டம் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act
- 1942ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்
- 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று
- அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை
சுத்து மாத்து சுமந்திரனுக்கு – தவராசா நெத்தியடி
சுத்து மாத்து சுமந்திரனுக்கு – தவராசா நெத்தியடி
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நபராகவும் தமிழ் தேசிய மக்களை இழிவு படுத்தும் நயவஞ்சக
செயலில் ஈடுபட்டு வரும் சுமந்திரனுக்கு ,பிரபல சட்டத்தரணியும் ,வித்தியா கொலையில் சிக்கி தன்னை அவமதித்து கொண்ட திரு தவராசா அவர்கள் தற்பொழுது நெத்தியடி வழங்கியுள்ளார்
சுமந்திரனை தான் ஒரு சட்டதரணி என்ற நிலையில் அரசியல் கட்சிகள் ,மக்களை மிரட்டி வருகிறார் ,இவருக்கு எங்கே எப்படி
பல்லு பிடுங்க வேண்டும் என்பதை இலங்கையில் செய்து கொள்ள முடியாது ,
ஆதலால் இந்த ஆட்டத்தை இவர் ஆரம்பிக்க அதற்கு இவரே மருந்து என கண்டு பிடித்து தவராசா மூலம் நெத்தியடி வழங்க பட்டுள்ளது
மாவையின் தமிழரசு கட்சியில் இணைந்து கொள்ள தவராச முன் வந்திருந்தார் ,அவ்வேளை புலிக்குட்டிக்கு ஆதரவாக களம் இறங்கிய
தவராசா வித்தியா கொலையில் சிக்கி தனது அரசியல் பயணத்திற்கு புதைகுழி வெட்டி கொண்டார் .
அன்று அவர் அந்த வழக்கில் ஆயராகி இருக்க விட்டால் தவராசா இலங்கை அரசியலில் பேச படும் நபராக மாற்றம் பெற்று இருப்பார்
என்னுடன் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அங்கிருந்து கைபேசியில் பேசி தனது நிலை பாட்டை தெளிவு படுத்திய சாமானியர் .ஆதல் இன்றுவரை அவரை மதிக்கிறேன்
ஆனால் ஆளுமையுள்ள ஒருவர் ஒரு கற்பழிப்பு வழக்கால் திசை மாறி போனது ,கவலையே .எனினும் சுமந்திரனுக்கு தக்க
வேளையில் தகுந்த பதிலடி வழங்கிய அவருக்கு எதிரியின் பாராட்டுக்கள்
ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்
ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்
ஐக்கிய தேசிய கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி கொடுப்பார்கள் என்பது பகல் கனவு. தொழிலாளர்கள்சார் அங்கத்தினர்களிடம் அவர்கள்சார்
பிரச்சனைகளை பேச முடியாதவர்கள் எங்க மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொடுக்க போகின்றார்கள். ஆரம்ப காலம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கும்
அரசாங்கத்தின் கொடுப்பனவு ஐம்பது ரூபாயையும் இல்லாமல் ஆக்கியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே இவர்களை வருகின்ற பொது தேர்தலில் ஓரம் கட்ட வேண்டும் என கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று நுவரெலியாவில் இன்று நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வேட்பாளர்
ஐக்கிய தேசிய கட்சியின் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அமளிதுமளி ஏற்பட்டு
தொழிலாளர் பிரதிநிதிகள் சிரிகொத்தவையில் இருந்து வெளியேரிய சம்பவம் பாபரும் அறிந்த விடயம். இவர்களுக்கே
இப்படி என்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான்.
பொதுவாக ஐ.தே.க தொழிலாளர்சார் கட்சியல்ல. முதலாளிமார்சார் கட்சி என்பது யாபருக்கும் தெரியும். இவர்கள் முடிந்தளவு முதலாளிமார்களின் நலன் குறித்தே செயற்படுவர். மலையக
பெருந்தோட்டங்களை எடுத்துக் கொண்டால். 95 வீதமான தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களுக்கே சொந்தமானது. இந் நிலையில் இவர்கள் எப்படி பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம்
ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வருவார்கள். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்தையின் பொழுது
அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தவர் ஐ.தே.கட்சியின் அமைச்சர் நவீன் திசாநாயக்க இவரே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக
இருந்தவர். இவர் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிடுகின்றார். இவருக்கு பெருந்தோட்ட மக்கள் நல்ல பாடம் ஒன்றினை கற்பிப்பர் என நினைக்கின்றேன்.
தற்போது பொது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் முடிந்தவுடன் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குதல் குறித்து பேச்சுவார்தை நடாத்த வேண்டும். அதற்கு ஒரு
திடமான அரசாங்கம் வேண்டும். அதுவும் தொழிலாளர்கள் சார்பில் அக்கரை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதற்கு
பொருத்தமானது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்று நினைக்கின்றேன். இதற்கு முன்னர் அனைத்து கட்சிகளுடனும் அந்ததந்த கட்சிகள் சார்பான
அரசாங்களிடமும் பேசி இருக்கின்றோம் ஆனால் இது வரைக்கும் கிடைக்கவில்லை. என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
கடற்கரைகளை சுத்தம் செய்யும் சிங்கள கடற்படை
கடற்கரைகளை சுத்தம் செய்யும் சிங்கள கடற்படை
தீவின் அழகிய கடற்கரைகளை பாதுகாக்கும் நோக்கில், காலி முகத்திடம்
கடற்கரை மையமாகக் கொண்டு 2020 ஜூன் 09 ஆம் திகதி மற்றொரு
கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை கடற்படை மேற்கொண்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘நீல பசுமை
சுற்றுச்சூழல் திட்டத்தின்‘ கீழ் தீவைச் சுற்றியுள்ள அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றுள்ளது.
இவ்வாரான திட்டங்கள் மூலம் எதிர்காலத்திலும், தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளின் அழகை மேம்படுத்த கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆட்டோ சங்கத்தின் தலைவர் அடித்து கொலை
ஆட்டோ சங்கத்தின் தலைவர் அடித்து கொலை
கடந்த இரவு ,இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி
சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன குழு ஒன்றினால் பலமாக தக்க பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்
காவல்துரையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் தொடரும் இவ்விதமான படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376 மில்லியனாக அதிகரிப்பு
இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376 மில்லியனாக அதிகரிப்பு
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,376 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 1,813,688 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான
காசோலை நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம்
கையளிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
தேசிய நூலகம், ஆவணவாக்கல் சேவைகள் சபை 250,000 ரூபாவையும் இலங்கை செஸ் சம்மேளனம் 1,000,000 ரூபாவையும்
நிதியத்திற்காக ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர். அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
திரு ஹசன்த குருகே 100,000 ரூபாவையும் பஸ்னாகொட நீர்த்தேக்க திட்டம் 28,739.17 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர். தற்போது
இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376,767,920.06 ரூபாவாகும்.
உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர்.







