தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 271 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்

Spread the love

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 271 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்

முப்படைகளின் கண்காணிப்பின் கீழுள்ள 44 தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்போது நான்காயிரத்து 874 பேர் தொடர்ந்தும்

தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வரையில் 12 ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை

இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும், 271 பேர் பி.சி.ஆர்

பரிசோதனையை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக

அடையாளம் காணப்பட்டவர், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்தவர் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம், நாட்டில் எட்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், 28 பேர்

குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது

அடையாளம் காணப்பட்டுள்ள 1,877 பேரில், 716 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை ஆயிரத்து 150 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

      Leave a Reply