தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை

Spread the love

தேசிய அடையாள அட்டை வழங்க மீள நடவடிக்கை

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திணைக்களத்தில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள அதிகம் பேர் கூடுவதை தடுக்க

வரையறுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக பத்தரமுல்ல காரியாலயத்தில் 250 பேருக்கு மத்திரமே ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் காலியில் உள்ள தென்மாகாண காரியாலயத்தில் 50 பேருக்கு மாத்திரமே அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

அவ்வாறு அடையாள அட்டையை பெற விரும்புவோர் தமது கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சி கடிதத்தை தமது பிரதேச செயலாளர்

காரியாலயத்தில் உள்ள அடையாள அடடை கிளை காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply