Posted in இலங்கை செய்திகள்

2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்

2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும்

நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில்,

ஓஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை தேசிய

நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட ஏற்பாடகியுள்ளது.

இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர்

பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் தற்போதய அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியா தமிழர்

ஒருங்கிணைப்புக் குழுவின் விக்டோரிய பணிமனையின் உத்தியோகபூர்வமான அறிவித்தலும் இத்துடன் உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

தயவுகூர்ந்து இவ்வறிவித்தல்களை உங்கள் ஊடகங்களினுடாக தொடர்ச்சியாக வெளியீட்டு, அவுஸ்திரேலியா மெல்பேர்ண் வாழ் மக்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவும். இதற்கு

உங்களாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள், உங்களிற்கு தெரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும்

இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்

இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்

கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய் இன்று (14) முதல் நீர்கொழும்பு மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதன்படி 38 ஆயிரத்து 458 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த

சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி :

இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய

ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை

பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மிக நீண்டகாலமாக எமது

மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக்

கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது

. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும்

பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும்

எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Posted in இலங்கை செய்திகள்

ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு

ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு

கடற்படையின் துணையுடன், ஹெலிக்கொப்டர்கள், ஆளில்லா

ட்ரோன் கமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்களை பொலிசார் இன்று கண்காணித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில் இந்தக் கண்காணிப்பில்,

கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் அவதானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தத்தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

லயன் எயார் விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நிலைமை மோசமாக உள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்தில் பயணித்த நிலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் இன்று (13) காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமானம் அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட திடீர்

சுகயீனத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பயணிகள் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாட வேண்டுதல்

வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாட வேண்டுதல்

வடக்கு மக்கள் வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாவேண்டும் என்று அந்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி தீபாவளி தினத்தில்

இறைவனைப் பிரார்த்திக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும். அத்துடன் தற்போது இந்து

கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.இந்து கலாச்சார திணைக்களத்தினரால்

ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா

தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.


குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள்

தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

16 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்

16 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்

இனிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16

பொலிஸார் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக

நபர்கள் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள

நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த

பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு ஊரடங்கு இல்லை

தீபாவளியை முன்னிட்டு ஊரடங்கு இல்லை

நாட்டில் தற்பொழுது பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகும்.

இவர்களுள் நேரடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்று கொவிட் – 19 வைரஸ் தொற்று

பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மரணங்கள் ஏற்பட்டுள்ளமை தொற்றா நோய் நிலைமை அதிகரித்தமையே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில்

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்; அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும்

இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய

நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முடக்கல் நிலையில் இருக்கும்போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள்

நிறுவியுள்ளோம். நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவசிகிச்சை பெற வேண்டும்

உலக நாடுகளில் தற்போதைய வைரஸ் காரணமாக பலர் தொற்றக்குள்ளாகியதுடன் பலர் உயிரிழந்தும் உள்ளனர். நமது நாட்டில் இடம் பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பாக சுகாதார

சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்ட வகையில் நேரடியான பாதிப்பில் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாம் பொதுமக்களிடம் வேண்டிக்கொள்வது என்னவெனில், வரலாற்றிலிருந்து இலங்கையில் உன்னதமான சுகாதார சேவை இருந்து வருகிறது. தற்பொழுது இந்த சுகாதாரதுறை அதிலிருந்து

மிகவும் மேம்பட்ட நிலையில் செயற்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றை வெற்றிக்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 4 தினங்களுக்கு மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். விசேடமாக மேல் மாகாணத்தில் உள்ள

மக்கள் முடிந்தவரையில் பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்திற்குள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதே போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும்; உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். அந்த பகுதிக்குள் மாத்திரம் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இன்று மேலும் இருவர் மரணமாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரகள்; என்ற ரீதியில் இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரிய வைத்தியசாலையில்

சிகிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

  1. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபராவார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமை என
  2. தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. மீகொட பிரதேசத்தைச்சேர்ந்த 45 வயதான ஆண் நபராவார் மரணத்திற்கான காரணம் கொவிட்19 வைரசு தொற்று
  4. நிமோனியாயுடன் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுக்குள்ளானமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணமடைந்தோரின்

எண்ணிக்கை 48 ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன உறுதி செய்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையானின் செயலாளர் கைது

பிள்ளையானின் செயலாளர் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசது​றை

சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள

காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது காரியாலயத்துக்கு இன்று (12) காலை சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

5,000 குளங்கள் அபிவிருத்தி

5,000 குளங்கள் அபிவிருத்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் எண்ணக்கருவில் 5000 குளங்களை புனரமைக்கும் செயல்திட்டத்தினை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய

அபிவிருத்திகுழுவின் விசேட கூட்டமும் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக

அபிவிருத்திசெய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், தூர்ந்து போன குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்திசெய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 17 கமநல சேவை நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வரு கமநல

சேவை நிலைய பிரிவுகளிலும் மூன்று முதல் ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வேலைத்திட்டமானது ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக விவசாய அமைப்பினர் பொது மக்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் தொண்டர்கள் மூலமாகவே

இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன். மத்திய மாகாண அரசாங்கத்தின் கீழ்வருகின்ற 87குளங்கள் மட்டக்களப்பில் அவிவிருத்தி செய்யப்படவுள்ளன.

Posted in இலங்கை செய்திகள்

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை அதே இடத்தில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை அதே இடத்தில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுதல் தடை செய்யப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கு

சென்றவர்கள் அதே இடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், இவ்வாறான

நபர்கள் தொடர்பில் தகவல்களை கண்டறியுமாறு அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோன்று இவ்வாறு வந்திருப்பார்களாயின் இவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு அல்லது சுகாதார பிரிவுக்கு அறிவிக்குமாறு மேல்

மாகாணத்திற்கு அப்பால் உள்ள ஹோட்டல் மற்றும் தங்குமிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கண்டறிவதற்காக மேலதிகமாக புலனாய்வு பிரிவும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவை, எரிபொருள், உணவு, எரி சக்தி, மின்சாரம், நீர், மருந்து போன்ற அத்தியாவசிய சேவையை வழங்குவோருக்கு மாத்திரம் கடமைக்காக வாகனங்களின் மூலம் மேல் மாகாணத்திற்கு அப்பால் செல்வதற்கு அனுமதி உண்டு.

இதற்கு மேலதிகமாக கடமைக்கான அலுவலக அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட 112 சேவை ஊழியர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்

இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்

இலங்கையில் இன்று இரவு 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம் இடம்பெற்றுள்ளது.

இம்புல்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் நபர் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நோயாளி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைக்குப் பின்னர் இவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் வெள்ளணுப் புற்று நிலை அதிகரித்தல் மற்றும் மூச்சுமண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சினையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொவிட் தொற்றினால் எற்பட்ட மரணமட என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். அத்தோடு இதற்கமைவாக இது இலங்கையில் பதிவான 46 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளியின் மரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைப்பு

வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைப்பு

மத்திய கிழக்கைச் சேர்ந்த 17 ஆயிரத்து 861 பேர் அடங்கலாக, 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைத்து

வரப்பட்டுள்ளார் என்று; வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்விற்கான வலைப்பின்னலை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர்


ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினதும், குடும்பத்தவர்களினதும்

நலன்களை மேம்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கொவிட்-19 தொற்றுநோய்ப் பரம்பலை அடுத்து,

இவர்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறினார்.

கொவிட் 19 தொற்றுநோயின் முதலாம் அலை தாக்கிய சமயம், பிரத்தியேக இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களின் தகவல்கள்

திரட்டப்பட்டன. தற்போது, வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விமானம் மூலம் உலருணவு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கும், தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும்

ஏற்பாடுகள்; மேற்கொள்ளப்பட்டன. ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளில், கொவிட்-19 நெருக்கடியால் வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்

கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

612 பொலிஸாருக்கு கொரோனா

612 பொலிஸாருக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 612 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பொலிஸ் விசேட படையினர்

145 பேர் அடங்குவதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினம் 91 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரென்றும் இதில் கோட்டை பொலிஸ்

நிலையத்தில் 82 பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தில் 6 பேர், கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம்,1 பொலிஸ் விசேட பிரிவு-1,

பொலிஸ் விளையாட்டுப் பிரிவு-1 என 91 பொலிஸார் நேற்று

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

600 மில்லியன் மதிப்பிலான இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம்

600 மில்லியன் மதிப்பிலான இந்திய-இலங்கை சமூக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம்

இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி

திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே (2020.11.10 செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இவ் ஒப்பந்தமானது 2005ஆம் ஆண்டு தற்போதைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக

சேவையாற்றிய காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் என்பதுடன் அது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

அவர்களின் பங்கேற்புடன் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக விசேட அபிவிருத்தி திட்டத்திற்கான செலவு ரூபாய் 300 மில்லியனுக்கும் அதிகமாவதுடன் அவசரகால அம்பியூலன்ஸ் சேவை, வீடமைப்பு

திட்டம், புதிய யாழ். கலாசார மத்திய நிலைய செயற்பாடுகள் என்பன இதனூடாக செயற்படுத்தப்படும்.

சிறு அபிவிருத்தி திட்டத்திற்காக அதிகபட்சமாக ரூபாய் 300 மில்லியன் செலவிடப்படுவதுடன், மீள்குடியேற்றம், தங்குமிடம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளிக்கும்

தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலாசார நடவடிக்கை, விளையாட்டு, தொழிற்துறை மேம்பாடு, மருத்துவ நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை

மேம்படுத்துதல் மற்றும் வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் என்பனவும் இதன் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

தற்போது செயற்பாட்டிலுள்ள இந்த திட்டம் புதிய ஒப்பந்தத்திற்கமைய தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் 430 கொவிட் தொற்றாளர்கள்

இலங்கையில் மேலும் 430 கொவிட் தொற்றாளர்கள்

இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 430 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய கொவிட் கொத்துடன் சம்பந்தப்பட்டவர்களாவர்.

மினுவங்கொட மற்றும் திவுப்பிட்டிய கொவிட் கொத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 11

ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 என சுகாதார

ஊக்குவிப்ப் பணியகம் அறிவித்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஐயாயிரத்து 137 பேர்

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 493 பேர் வைத்தியசாலைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக நேற்று இரவு வரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 18ம் திகதி முதல் நவம்பர் 08ம் திகதி வரை ஆறு இலட்சத்து ஆறாயிரத்து 693 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-11-11 06:14:56
14715
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

5137
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

9537
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

41
இறப்பு எண்ணிக்கை

Posted in இலங்கை செய்திகள்

பெரிய கப்பல் தயாரிப்பில் இலங்கை சாதனை

பெரிய கப்பல் தயாரிப்பில் இலங்கை சாதனை

நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது..

ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் பங்களிப்பு இலங்கையின் அரச நிறுவனமொன்றுக்கும் உரித்தாகும்.

113 தசம் 1 மீற்றர் நீளமான இந்தக் கப்பலின் அகலம் 21 தசம் 5 மீற்றர்களும், ஆழம் 8 தசம் 8 மீற்றர்களும் ஆகும். மணிக்கு 14 தசம் 5 மைல் வேகத்தில் இந்தக் கப்பலால் பயணிக்க முடியும

முழுமையாக உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கப்பல் 21 மாதங்களில் தயாரிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரனோ

கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரனோ

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்தமாக கொழும்பில் 251 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்

காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் புளுமென்டல்-4, பொரலை-5, தெமட்டகொட-17, கிரான்பாஸ்-32, கெசல்வத்த-25, கிருலப்பனை-4, கொள்ளுப்பிட்டிய-55, வெல்லம்பிட்டிய-1, மாளிகாவத்த-20,

தெஹிவளை-1, கொட்டாஞ்சேனை-11, மருதானை-20,மட்டக்குளிய-8, மிரிஹான-1, கொலன்னாவை-7, முகத்துவாரம்-4, கல்கிஸை-7

மற்றும் கோட்டை பிரதேசத்தில் 28 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹாவில் 118 தொற்றாளர்களும் களுத்துறை-16, புத்தளம்-6, இரத்தினபுரி-8, கண்டி-4, கேகாலை-4, மட்டக்களப்பு-1,

காலி-2, திருகோணமலை-1, நுவரெலியா-1, போகம்பறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் 24 பேரும் பொலிஸ்

திணைக்களத்தில் 91 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று

12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று

மஸ்கெலியா பிரதேசத்தில், 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில், 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலே, மேற்படி மாணவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

மாணவியின் குடும்பத்தில், வேறு எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

பேலியாகொட மீன்சந்தையில் பணிப்புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவின் வீட்டில், அண்மையில் நடந்த நிகழ்வுக்கு,

மேற்படி சிறுமி உட்பட அவரது குடும்பத்தினர் சென்றுவந்துள்ளனர் என்றும் இதனூடாகவே, சிறுமி தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிறுமி அவரது தாயாருடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.