Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கோட்டா அரசில் பெண்களின் மாதவிடாய்க்கு வரி
கோட்டா அரசில் பெண்களின் மாதவிடாய்க்கு வரி
அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவுத் திட்டம் மீதான இன்றைய (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பிரித்தானியர்கள் உடலுக்கு வரி அறிவிட்டனர். தற்போது, மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது. அதனூடாக
பெண்களின் மாத சுழற்சியில் வருமானத்தை திரட்டுவதற்கு முயலுகின்றனர்” என்றார்.
“பிரித்தானியாவின் டொரின்டன் ஆளுநர், உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட மிகமோசமான ஏழு வரிகளை 1848 ஆம் ஆண்டு
விதித்தார். இந்த அரசாங்கம், பெண்களின் மாத சுழற்சிக்கு வரி அறவிட்டது என வரலாற்றில் பதிவாகும்” என்றார்
“உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள்,பாடசாலை மாணவிகள், ஏழ்மையானவர்களுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்கப்படுகிறது. நிவாரண விலையில்
வழங்கப்படுகின்றது. சௌபாக்கிய அரசாங்கம், செல்வந்தர்களிடம் வரியை நீக்கிவிட்டு, அன்றாட தேவையான பொருட்களுக்கு வரியை அறவிடுகின்றது” என்றார்.
நல்லாட்சி அரசாங்கத்தில், அணையடை ஆடைக்கான (Sanitary towels)வரியை 40 சதவீதம் குறைத்தது. அதற்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது எனத் தெரிவித்த அவர், இந்த
அரசாங்கம் அணையடை ஆடைக்கு 15 சதவீதமான வரியை அதிகரித்துள்ளது. மாதவிடாய் வரியின் மூலமாக பெண்கள் மட்டும் பாதிக்கப்படமாட்டார் என்றார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் சிலர் இருக்கின்றனர். “அணையடை ஆடையை வாங்கமுடியாத காரணத்தால் பாடசாலைக்குச் செல்லமுடியாத மாணவிகள் பலர் இருக்கின்றனர்.
ஏழ்மையின் காரணமாக ஒவ்வொரு மாதமும் 50 சதவீதமான மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அகையால், அந்த வரியை நீக்குமாறு, ரோஹினி கவிரத்ன கோரிக்கை விடுத்தார்.
பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது
பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது
நிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்
உடுகம்பொல அலுவலகத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர்
தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
யாழ்ப்பாண உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று
தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு,
பொலிஸாரின் தீவிர கண்கானிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில், மாதிரிகள்
எடுக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டு துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சடலம்- கடித்து தின்ற முதலை
இரண்டு துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சடலம்- கடித்து தின்ற முதலை
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர் முதலை
கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம்- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் (55 வயது) என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
தம்பலகாமம்-வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு நேற்று (23) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற நபர் வீட்டுக்கு வரவில்லை என தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காணாமல் போன நபரின் உறவினர்கள் குறித்த கலப்பு பகுதியில் தேடுதல் நடாத்திய போது முதலை கடித்த
நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டம்- டக்கிளஸ்
தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டம்- டக்கிளஸ்
கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட கொறோனா பரவலினால் போக்குவரத்து தடங்கல்
காரணமாக சுமார் 1500 பேர் வரையில் தமிழகத்தில் அவதிப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு
வரப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறுகிய காலத் திட்டமிடலுடன் சென்றவர்கள் திட்டமிட்டவாறு நாட்டுக்கு திரும்ப முடியாமையினால், கடந்த பல மாதங்களாக எதிர்கொள்ளக் கூடிய இன்னல்களை தன்னால் உணர்ந்து கொள்ளக்
கூடியதாக இருக்கின்றது என்று குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த
இன்னல்களில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களை மீட்க வேண்டியது தன்னுடைய தார்மீகக் கடமை எனவும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபஷவுடன் கலந்துரையாடி, பாதுகாப்பான முறையில் உங்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான
ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், நாட்டிற்கு வருவதற்கு ஆவலாக இருப்போர் +94760225167, +94769122831, +919003067621 ஆகிய இலக்கங்களில் ஒன்றிற்கு தொலைபேசி
ஊடாகவோக அல்லது வட்ஸ்அப் செயலி ஊடாகவோ தொடர்பு கொண்டு தங்களில் விபரங்களை வழங்கினால் அழைத்து
வருவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர்நாள் – மெல்பேர்ண் – 2020 அறிவித்தல்
மாவீரர்நாள் – மெல்பேர்ண் – 2020 அறிவித்தல்
அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும்
தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2020ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்றது.
கடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறை-யிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில்
மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 27ம் நாள் மதியம் 1.30 மணியிலிருந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துவதற்கு
மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரைமணிநேர இடைவெளிக்கும் அதிகபட்சம் 50 பேர்வரை சமூக இடைவெளியுட்பட, ஏனைய சுகாதார நடைமுறைகளைக்
கடைப்பிடித்து மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்திச் செல்லலாம்.
மதியம் 1.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு
, அரைமணிநேர இடைவெளிக்கு அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு-வார்கள். ஒரேநேரத்தில் அதிகமானவர்கள் வருகைதந்து சுகாதார நடைமுறைகளை மீறாமலிருப்பதை
உறுதிசெய்யும் முகமாக முற்கூட்டியே தங்கள் வருகையையும், நேரத்தையும் பதிவு செய்யும்வண்ணம் அன்புடன்
வேண்டப்படுகிறீர்கள். பதிவு செய்து நிகழ்விடத்திற்கு வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
மதியம் 1.30 தொடக்கம் 2 வரை, பின்பு 2 தொடக்கம் 2.30 வரை என்று ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளிக்கும் முன்பதிவை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் வரவை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0433002619 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ (SMS) அனுப்பி வைக்கவும்.
பெயர் –
தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –
வதிவிட முகவரி-
வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –
வரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)
என்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதிவு (வருகின்ற நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு) போதுமானது. 50 பேர்வரை ஒரு நேர இடைவெளிக்குள் பதிவு செய்யப்பட்டால் அதன்பின்னர் பதிவுக்கு வருவோர் வேறு நேரத்தைத் தெரிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.
முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல், தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.
நிகழ்வு நடைபெறும் இடம் :– BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – Victoria 3151 (Melway Ref: 62 B 7). நேரம்:– 1.30 – 8PM, Friday, 27th November 2020.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா
===============================
—
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !
மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !
தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு
ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர்.
பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர்,
உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரத்தினை இணைவழிமூலம் தொடங்கினர்.நொவெம்பர் 21-27 ஆகிய நாட்கள் மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமது உரிமைகளுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த முடியாத சவாலான நிலையினை தாயக தமிழர்கள் சிறிலங்கா ஆட்சியாளாகளினால் எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொதுஇடங்களில் ஒன்றுகூடமுடியாத அவசரகால சுகாதார நெருக்கடி நிலை புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக இணையவழி தொழில்நுட்ப மூலமாக மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் தொடங்கினர்.
தியாகம், ஒழுக்கம், வீரம், அர்ப்பணிப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இளந்தலைமுறையினரின் மாவீரர் வார நிகழ்வுகளை ஐரோப்பிய நேரம் இரவு 11 மணிக்கு நேரஞ்சலாக காணமுடியும். ( live on : https://tgte.tv/ , https://www.facebook.com/tgteofficial
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்ததலைமுறையாக விளங்கும் ‘அலைகள்’ இதனை முன்னெடுத்து வருவதோடு, பெண்களே முன்னின்று இதனை செயலாற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது..
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை
தனமல்வில பொலிஸ் பிரிவின் ஊவ குடாஒய பிரதேசத்தில் இரு
தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (22) 7.30 மணியளவில் குறித்த நபருக்கு பொல்லு ஒன்றால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய ஊவ குடாஒய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன.
சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி
குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு
தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இருட்டு மடுவினை சேர்ந்த 36 அகவையுடைய இராமசாமி மோகன்றாச் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் தொட்டில் கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- எச்சரிக்கை
24 மணி நேரத்தில் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் நிலை
கொண்டுள்ளதாகவும் இதன் நகர்வை சென்னை வானிலை ஆய்வு நிலையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த
புயலானது நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கலாம் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றும், கடல்
பகுதியில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் காரணமாக அதிக சேதம் ஏற்படும்
பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்களைச் சேர்ந்த 120 வீரர்கள் புறப்பட்டுச்
சென்றிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் கடலோர கிராம மக்கள்
பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். சேதம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டால், அப்பகுதி மக்களை
பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால் 26 ஆம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்
மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23) காலை ஆரம்பமானது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்,
மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதார இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் வகுப்பறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அட்டன் கல்வி வலயத்தில் உள்ள, அட்டன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இன்று திறக்கப்படவில்லை.
இப்பகுதிகளில் நேற்று (22) கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொவிட் 19: உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19: உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களின் உயிரிழப்பு 87 ஆக அதிகரித்துள்ளது.
கீழ் குறிப்பிட்ட விபரங்களுக்கு அமைவாக கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நால்வரின் (04) மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர்
உறுதிசெய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 87 ஆகும்.
- கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம்
- 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் நபர்
- ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் 2020 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
- மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு
- தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமை ஆகும்.
- கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட
- பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்
- பெற்று வந்த வேளையில் 2020 நவம்பர் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19
- தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா நிலை அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்
தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்
இலங்கையில் தாயக விடுதலைக்கு போராடி காவியமான மாவீரர்களை நினைவு கூறும் நாள் இன்று
இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர் நாள்கள் சிறப்பாகக நினைவு கூற படும்
அவ்விதம் தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகிறது
அதேபோலவே புலம் பெயர் நாடுகளில் இம் முறை மக்கள் வீடுகளில் நினைவுகூற தயராகி வருகின்றனர்
இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்
இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்
நேற்றைய தினம் 491 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை
அடுத்து இலங்கையில் 19,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றை தினம் இனங்காணப்பட்டவர்களுள் 487 பேர் மினுவங்கொட
மற்றும் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையவர்களுள் இத்தாலியில் இருந்தும் மூவரும் துருக்கியில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது
காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார்.
உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி
யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி
யாழ்ப்பாணம் மண்டை தீவு பகுதியில் ஏழு வயது மற்றும் ஐந்து
வயதுடைய இரு சிறுவர்கள் குளம் ஒன்றில் மூழ்கி பலியான சம்பவம் இடம் பெற்றுள்ளது
குறித்த இருவர் சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது
ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்
ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்
ஐ.தே.கவின் உபதலைவராக இருக்கும் ருவான் விஜேவர்த்தனவே என்று ஐக்கிய
தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தான்
உறுதியாக நம்புவதாக, ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (21), ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ருவான் விஜேவர்தனவே
கட்சித் தலைவராக வருவார் என்பதில், எந்தவொரு வாதமும்
முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்
பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு
தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு
செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு வயது குழந்தையுடன் குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
குறித்த குழந்தை உறவினர் வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த 25 வயதுடைய பெண் தொடர்ந்தும் தலைமறைவாகவெ இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த பெண் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி கிரிஎல்ல நகரில் உள்ள காட்டுப்பகுதியில் தலைமறைவாக #
இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குள்; மூடக்கம்
8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குள்; மூடக்கம்
பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம
பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்
அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை
என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.








