Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை வருகிறார் சீனா வெளியுறவு மந்திரி
இலங்கை வருகிறார் சீனா வெளியுறவு மந்திரி
இலங்கைக்கு சீனாவின் பாதுகாப்பு மந்திரி வந்து சென்றதன் பின்னர் தற்போது எதிர்வரும் வாரம் அளவில்
சீனாவின் வெளியுறவு மந்திரி வருகை தரவுள்ளார்
தொடராக முக்கிய அதிகாரிகள் வருகை இலங்கையை சீனாவுக்கு ஆளும் சகோதர ஆட்சி விற்பதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
இவர்கள் செயல் பாடுகள் இந்தியாவை கொதிப்பில் ஆழத்தியுள்ளது
புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சமூக வலைத்தளம் ஊடக புலிகளை வளர்த்தார் என்ற குற்ற
சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவரது சமூக வலைத்தள பதிவுகளில் புலிகள் தொடர்பான விடயங்கள் காணப்பட்டதாகவும் அதன்
ஊடாக புலிகளை மீள் உருவாக்கும் நிலையில் செயல் பட்டார் என சிங்கள படைகள் தெரிவித்துள்ளன
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 4857 பேர் இதுவரை கைது செய்ய
பட்டுள்ளனர்
இவர்களில் கடந்த தினம் மட்டும் 215 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர்
தெரிவித்துள்ளார்
தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ
தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ
தமிழகத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாம் தமிழர் காட்சி ஆசனங்களை பெறாது போதும் ,வாக்கு
வீதத்தில் அந்த கட்சி மூன்றாவது இடத்தை நோக்கி வளர்ந்துள்ளது
இது அடுத்து வரும் தேர்தலில் சீமானுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை தேடி தரும் என எதிர்பார்க்க படுவதால்
,நாம் தமிழர் காட்சிக்குள் உடைவுகளை ஏற்படுத்தும் நகர்வுகள் ,கைதுகள் என்பன எதிர் காலத்தில்
ஆளும் புதிய முதல்வரினால் தொடுக்க பட கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன
தமிழ புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் வாழ்த்தி வரவேற்போம்-மனோ கணேசன்
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
தமிழகத்தின் ஆளும் கட்சியாக பொறுப்பேற்க உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தையும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள தளபதி மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம்
என்று கூறியுள்ள, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ள டுவீட்டர் செய்தியில், “திமுக கூட்டணியை வழிநடத்தி
நீங்கள் பெற்றுள்ள மகத்தான வெற்றி உலகத்தமிழர்களின் பார்வையை உங்கள் மீது திருப்பியுள்ள நிலையில், எம் தந்தையர் நாடு தமிழகத்தின் முதல்வராக பொறுப்புகளை ஏற்கும் உங்களை
இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மனமாற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்திய தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.
அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்ட திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன்
உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்து விட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி. ஏனைய அனைத்து கட்சிகளும் துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.
தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது
உடன்பிறப்புகள். அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல.
அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல. ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்போம்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது
- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தனை பாரட்டுவதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள்,
புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள்.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க அரசு ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்திருப்பது எப்போதோ நடந்திருக்க
வேண்டிய ஒன்று. இந்த அங்கீகாரத்திற்கு பெரிதும் காரணம் புலம்பெயர் ஆர்மேனியர்களது அயராச் செயல்முனைப்புதான். புவிசார் அரசியல் பின்விளைவுகள் பாதகமாக இருந்த போதிலும் அதிபர் பைடன் அரசினர் தமது வெளியுறவுக் கொள்கையில், மனித உரிமைகளை
மையப்படுத்தியுள்ள அறத் துணிவை நாம் பாராட்டுகிறோம்.
முதலாம் உலகப் போரில் ஆர்மேனியர்கள் றஸ்யாவின் பக்கம் சேர்ந்து கொள்ளக் கூடும் என்று ஓட்டமன் பேரரசு கற்பித்த ‘நியாயம்’ ஆர்மேனியரகளைத் துடைத்தொழிக்கும் குறிப்பான
கொடுநோக்கைத் தணித்து விடவில்லை. ஓட்டமன் துருக்கியர் தாம் நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற படுகொலையை ஆர்மேனியப் பிரிவினைக் கொள்கையை எதிர்க்கத் ‘தேவையான
நடவடிக்கை’ என்று நியாயப்படுத்தியமை இனவழிப்புக் குற்றத்தின் கொடுமையையும் காட்டுவிலங்காண்டித் தனத்தையும் குறைத்து விடாது.
இனவழிப்பை அங்கீகரிப்பதன் முதன்மையான நோக்கம் தீமை செய்தவர் மீது பழி சுமத்தி விட்டுப் போவது மட்டுமே அல்ல, உலகில் எங்கும் அது நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதும்தான்.
அது செயல்துடிப்பான முன்னகர்வு ஆகும். இனவழிப்புக்கு இரையாகி மடிந்தோரின் உயிர்களை மறவாமலிருப்பது அச்செயல் மீண்டும் என்றேனும் நிகழ்ந்து விடாமல் தடுத்திட மீளுறுதி கொள்வதாகும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.
‘நாம் இதைச் செய்வது… எது நடந்ததோ அது மீண்டும் ஒருபோதும் நடவாதிருப்பதை உறுதி செய்வதற்காகவே. தவிர பழி சுமத்துவதற்காக அல்ல,’ ஓம், இனவழிப்பு ஒப்பந்தத்தின் தலைப்பே காட்டுவது போல், ஒப்பந்தம் இவ்வடிவில் வரையப்பட்டதன் நோக்கம் இனவழிப்புக் குற்றத்தைத்
தண்டிப்பது மட்டுமன்று, அக்குற்றம் புரிவதைத் தடுப்பதுமாகும். இனவழிப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ள அரசுத் தரப்புகளுக்கு இனவழிப்பைத் தடுக்கும் கடமை போர்காலத்திலும்,
சமாதான காலத்திலு; உள்ளது என்று ஒப்பந்தத்தின் முதல் உறுப்பு சொல்கிறது. போஸ்னிய இனவழிப்பு வழக்கில் பன்னாட்டு நீதிமன்றம் (ஐஊது) இந்த சட்டக் கடப்பாட்டை உறுதிசெய்தது என அதிபர் பைடன் அறுதியிட்டுரைக்கின்றார்.
இனவழிப்பு இல்லாத உலகம் செய்ய நாம் சேர்ந்து முயற்சி செய்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு (01) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
வேன் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
இலங்கையில் நபர் ஒருவரிடம் இருந்து பேனை துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்ய பட்டுளளார்
வெளிநாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கி இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது
தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே
யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே
யாழ்ப்பாணம் நாவற்குழி மாற்று திருநெல்வேலி பகுதிகளில் இராணுவம் கனரக வாகனங்கள்
உதவியுடன் வீதிகளை சுத்த செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
மேற்படி உதவிக்கு அங்கு வாழும் மக்களும் உதவி வருகின்றனர் என இராணுவம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது
சுற்று புறத்தை சுத்தமாக வைத்துருப்பின் நோயில் இருந்து மனிதர்கள் தப்பித்து உயிர் வாழும்
காலம் நீடிக்கும் என்பது சுகாதார விதிகள் என்பது இங்கே குறிப்பிட தக்காது

சிங்கள இராணுவம்


இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo
இராணுவ முற்றுகையில் -யாழ் கடலநீரேரியில் 72 மில்லியன் கஞ்சா மீட்பு photo
யாழ்ப்பாணம் கடல் ஏரி பகுதியில் கேரளாவில் இருந்து படகு மூல கடத்தி வரப்பட்ட சுமார் 240
கிலோ எடையுள்ள 72 மில்லியன் பெறுமதியான கஞ்ச பறிமுதல் செய்ய பட்டுள்ளது
இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது
இதன் பொழுதே மேற்படி கஞ்சா பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,மகிந்த ஆட்சி காலத்தில் இலங்கையில்
போதை பொருள் பாவனை தலைவிரி த்தாடுவதும் இதனை சட்டமாக்க கோரி பாராளுமன்றில் எம்பிக்கள் சிலர் பேசி இருந்தமையும் இங்கே குறிப்பிட தக்கது

கஞ்சா

இலங்கைக்கு சீனா அனுப்பும் கொரனோ ஊசிகள் போலியானவையா ..?
இலங்கைக்கு சீனா அனுப்பும் கொரனோ ஊசிகள் போலியானவையா ..?
இலங்கையில் பரவி வரவும் கொரனோ நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்
நோக்குடன் சீனா கொரனோ தடுப்பூசிகளை அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது
கடந்த முறை பல மில்லியன் கொரனோ சோதனை கருவிகள் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது
அதுபோல இம்முறை அனுப்பி வைக்க படும் இந்த மருந்துகளும் உண்மையில் கொரனோ தடுப்பூசி
தானா என்பதை எவ்வாறு நம்புவது என்ற கேள்வி எழுப்ப படுகிறது
இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் அணைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் நோயின் தாக்குதல் எதிரொலியால் இந்த அடித்து பூட்டு நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது
மேலும் இவை தொடந்து திறப்பதா இல்லையா என்பது தொடர்பாக விரைவில் அறியத் தரப்படும்
என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது
முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது
இலங்கையில் கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய 264 பேர் பொலிஸாரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவர்களில் அதிகமானவர்கள் முக கவசம் அணிய மறுத்துள்ளதும் ,அதிகமாக ஒன்று கூடியதுமாகும்
மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,மக்கள் அதனை பின்பற்றாது
செல்வதால் நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது
அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை
அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை
பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை- இராணுவம்
இலங்கையில் முழு அடித்து பூட்டும் நிகழ்வு எவ்வேளையும் இடம் பெறலாம் என்ற நிலை உள்ளதாக
வெளியான செய்திகளில் எவ்வித உமையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
மேலும் மக்கள் அவசர பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை
எனவும் ,நாடு முழுவதுமாக அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்லாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் 4,000 பேர் கைது
இலங்கையில் 4,000 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கோவிட வைரஸ் நோயின் தாக்குதல் நிகழ்கால விதிகளை கடைப் பிடிக்க
மறுத்த 4,000 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளதாகவும்மேலும் 110 போலீஸ் பிரிவுகளில் சிவில் உடையில் போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
முக கவசம் அணியாது செல்கின்ற மக்கள் கைது செய்ய படுவதுடன் அவர்களுக்கு தண்டமும்
வழங்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இராணுவத்தினருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு
இராணுவத்தினருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு
நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் பணியாற்றும் இராணுவத்தினருக்கான
‘அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்’ தடுப்பூசியின் இரண்டாம் சொட்டு வழங்கும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று (28) காலை தொடங்கியது.
இலங்கை இராணுவ வீரர்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் கொவிட் பாதிப்பாளர்களை குணப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர்.
அதே வேளையில் அதன் பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பங்களிப்பு செய்கிறார்கள், அதன்படி நாட்டின் 15 இராணுவ மருத்துவமனைகளில் ஊடாக இறுதி 2 வது கொவிட் 19 தடுப்பூசி
வழங்கப்படுகின்றது. கொவிட் பரவலைத் தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் செயற்பட்ட
இராணுவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரியில் இராணுவத் தளபதியின் முயற்சிகளினால் தொடங்கப்பட்டது.
இதேபோல், அனைத்து நாடு முழுவதும் உள்ள இடைநிலை பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் முன்னணி சுகாதார
ஊழியர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவ மருத்துவ குழுக்கள் இரண்டாவது கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நேற்று (28) கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மைத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது.
புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo
புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo
புஸ்ஸல்லாவ நகரத்தின் கழிவுகள் அனைத்தும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டு நகரத்துடன் இணைந்ததாக காணப்படும் ஜயரத்ன மாவத்த வட்டகொடபத்தன
கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
நகரத்தின் கழிவுநீர் செல்லும் பிராதான ஓடையின் சிறிய பாலம் ஒன்று குப்பைகளினால் மூடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஓடையில் செல்லாமல் பாதையில் செல்வதால் இன் நிலை
தோன்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடபளாத்த பிரதேச சபைக்கு பலமுறை மக்கள் முறைபாடுகள் செய்த போதும் இது வரைக்கும் உரிய நடவடிக்கை மேற்க் கொள்ளபடவில்லை.
நகரத்தில் காணப்படும் கழிவு நீர் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் அனைத்தும் குப்பைகளும் கிராமத்தை சுற்றி காணக் கூடியதாக இருப்பதுடன் டெங்கு போன்ற நோய்கள் பரவு வாய்ப்புகளும் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சத்தில் இருக்கும் இந்த மக்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் தோன்றுவது அவர்களை மேலும் மன உலைச்சளுக்கு உள்ளாக்கி உள்ளது.
இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் சமபந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
நுவரெலியாவில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின்
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைகீழாக வீழ்ந்ததில் அதில் பயணித்த இருபது பேர் படு காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,குறித்த
விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்

திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை
திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை
இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வரும் நிலையில் இன்று திருகோணமலையில் உள்ள
ஆறு கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன
அதே போல மேலு பல கிராமங்கள் முடக்க படும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது
,மக்கள் நடமாட்டம் முழுவதுமாக முடக்க படும் அபய நிலை எழக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது
மீளவும் முன் அறிவித்தல் இன்றி கிராமங்கள் முடக்க படலாம் எனவும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்
போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
சமூக வலைத்தளம் ஊடக போலியான தகவலை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் கம்போல
பகுதியில் வைத்து வாலிபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்















