Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 1451 பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,மேலும் இந்த நோயாளர்கள் தொற்றுக்கு உள்ளன கிராம புரங்கள் தொடர்ந்து தனிமை படுத்த
பட்டு இராணுவம் ,போலீசார் காவல்புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து இந்த நோயானது அதிகரித்து செல்கின்ற காரணத்தினால் அவசரகால சட்டத்தின்
பிரகாரம் நாடு முடக்க படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
நாடு முடக்க படும் அபாயம் – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – பீதியில் மக்கள்
நாடு முடக்க படும் அபாயம் – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – பீதியில் மக்கள்
இலங்கையில் பரவி வரும் நோயின் அதிகரிப்பால் நாடு முற்றுமுழுதாக முடக்க படும் நிலைக்கு
செல்லும் அபாயம் உள்ளதாக இராணுவம் எச்சரித்துள்ளது
இதனால் மக்களை முன் கூட்டியே பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுமாறு வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளது
மக்களே எச்சரிக்கை முந்தி கொள்ளுங்கள்எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பது களநிலவரம்
கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
இலங்கைக்கு சீனா பாதுகாப்பு அமைச்சர் தனது சிறப்பு தூது குழுவுடன் பயணம் செய்துள்ளார்
,இவரது இந்த பயணம் இலங்கை வரலாற்றில் அதி முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளதுடன் ,மிக முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பட்டுள்ளது
இலங்கையை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள விடயம் அங்கு இடம் பெறும் பல்வேறு பட்ட நகர்வுகள் மூலம் சமீப காலங்களில் அவதானிக்க முடிகிறது ,
சீனா ,இலங்கை நெருக்கம் அமெரிக்கா ,இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு விருப்பற்று நகர்கிறது
,இதுவே இலங்கை எதிர்காலத்தில் மிக பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் நிலைய இலங்கையில் மாறுபட்ட
அரசியல்,மாற்று ஆயுத கிளர்ச்சிகள் ஏற்படும் நிலையை தோற்றுவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது


இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம். நம்மையும் பாதுகாத்து கொள்வோம்-மனோ கணேசன்
இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம். நம்மையும் பாதுகாத்து கொள்வோம்.
- மனோ கணேசன் எம்பி
எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
சுமார் 130 கோடி ஜனத்தொகை கொண்ட பாரத தேசம், இன்று கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறுகின்றது. இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களின் கண்ணீர் எமக்கு தெரிகிறது. இது கொரோனா சுனாமி அவலம் என கூறப்படுகின்றது.
எமது நாட்டிலும் இந்த கொரோனா கொடுமை புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது. நாட்டின் சுகாதார துறையினருக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலம் இதை நாம் எதிர் கொள்ள
வேண்டும். அரசாங்கத்தை பொறுப்புடன் செயற்படுமாறு கூறும், அதேவேளை பொதுமக்களாகிய நாமும் பொறுப்புடன் நடந்து இந்த பேரழிவை எதிர்கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய ஜனத்தொகையை கொண்டுள்ள எமது மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவில், ஒட்டு மொத்த ஜனத்திரளின் மத்தியில் வீரியமுள்ள கொரோனா கிருமிகள் வேகமாக பரவி
வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாரதம் இந்த கொடுமையிலிருந்து விரைவில் மீள வேண்டும் என்ற நோக்கில் நாம் நமது வீடுகளில் இருந்தபடி பூஜை, நமாஸ், பிரார்த்தணைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையில் கோர தாண்டவம் ஆடும் பிரிட்டன் கொரனோ
இலங்கையில் கோர தாண்டவம் ஆடும் பிரிட்டன் கொரனோ
இலங்கையில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயானது பிரிட்டனில் பரவிய
கொரனோ என மருத்துவ ஆர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
மிகவும் வீரியமான இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன
,மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வந்த கொடிய நோயில் இருந்து
உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
ஆபிரிக்க நாடுகளில் பரவிய உடல் அழுகி ஊற்றும் நோயானதும் பிரிட்டனில் பரவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
போலி நகை தயாரிப்பு கம்பெனி சுற்றிவளைப்பு
போலி நகை தயாரிப்பு கம்பெனி சுற்றிவளைப்பு
இலங்கை பியகம பகுதியில் போலி நகை தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனம் ஒன்றினை
காவல்துறையின் சுற்றிவளைத்தனர்
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
ரிசார்த் பதியூனுக்கு மூன்று மாதம் தடுப்பு
ரிசார்த் பதியூனுக்கு மூன்று மாதம் தடுப்பு
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் மகிந்த விசுவாசியுமாக விளங்கிய ரிச்சர்டு பதியுதீனுக்கு
மூன்று மாதம் விளக்கமறியலில் வைக்க பட்டுளளார்
தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு இவரே முக்கிய காரணி என்ற அடிப்படையில் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்-மனோ கணேசன்
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
ரிஷாத் பதுர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு,
எதிர்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயல்கிறது.
இவை தொடர்பில் ஆராய நாளை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என தமிழ் முற்போக்கு
கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்.
நண்பர் ரிஷாத் பதுர்டீன், மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் 20ம் திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த “அரசியல் சூழல்”
தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது. ஆனால், இவற்றை காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசின் அராஜக போக்குக்கு ஒரு சாட்டு தேடி தரவோ
கூடாது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், அவரது கைதை, அவர் கைது செய்யப்பட்ட முறைமையை நமது கட்சி கண்டிக்கின்றது.
கைது அச்சுறுத்தல் எனக்கு புதிதல்ல. இதைவிட மிக பயங்கரமான 2007ம் ஆண்டு, இன்றைய ஜனாதிபதி பலமிக்க பாதுகாப்பு செயலாளாராக பணியாற்றியபோது, கோர யுத்தம் வடகிழக்கில் நடக்கிறது.
அப்போது, எனது தொகுதி கொழும்பில் அடைக்கலம் புகுந்த வடகிழக்கு தமிழர்கள் வகைதொகை இல்லாமல் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் புறநகர் பகுதிகளில்
வீசப்பட்டிருந்த வேளை, அந்த அரச பயங்கரவாத அராஜகத்துக்கு எதிராக தெருவில் இறங்கி போராடினேன் என்பதற்காக, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து, கொடுமையாக விசாரித்து, பயமுறுத்தினார்கள்.
அப்போது எனக்கு ஆதரவாக எந்த ஒரு தமிழ், முஸ்லிம் எம்பீயும் வாயை திறக்கவில்லை. அரசுடன்
சேர்ந்து பலர் அமைதி காத்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எம்பீகள் அல்லாத சில சிங்கள முற்போக்காளர்கள் மட்டுமே எனக்காக குரல் கொடுத்தார்கள்.
ஆனால், அந்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு இன்று எனது நிலைபாடுகளை நான் தீர்மானிக்க முடியாது. அந்தளவு “சிறுமனதாளன்” அல்ல, நான்.
இப்போது, பகிரங்கமாக கொழும்பில் குடும்பத்துடன் வாழும் ரிசாத் பதுர்தீன் எம்பீயை, அதிகாலை அமைதியை ஊடறுத்து, அவரது வீட்டை சுற்றி வளைத்து, ஒரு பாதாள உலக கேடியை இழுத்து
செய்வதை போல் கொண்டு சென்றதன் மூலம் இந்த அரசு எமக்கு சொல்கின்ற செய்தி என்ன?
“தன் மீது குற்றம் சாட்ட சாட்சியங்கள் இருந்தால், தன்னை விசாரியுங்கள்” என அவரே பலமுறை கூறியுள்ளார். ஆனால், எதிர்கட்சியில் இருக்கும்போது, தினசரி வரிசையாக வந்து, அவர் மீது
சீஐடியில் புகார் செய்து விட்டு, பின் ஊடகங்களில் வசை பாடி விட்டு, சாட்சியங்கள் இருப்பதாக கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளை தூக்கில் போடுவோம் எனவும் கூவி
விட்டு, ஆளும்கட்சியாக மாறிய பின், சுமார் இரண்டு வருடங்கள் சும்மா இருந்து விட்டு, இப்போது நௌபர் மௌலவி என்பவரே சூத்திரதாரி எனவும் அறிவித்து விட்டு, இப்போது ரிஷாடை இந்த அரசு கைது செய்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நௌபர் மௌலவியை “சூத்திரதாரியாக” ஒப்புக்கொள்ளாததால், அவரை சமாளிக்க இவரை இந்த அரசு கைது செய்கிறது என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல்தான், நண்பர்கள் ஹரின், மனுஷ ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. நாளை இது இன்னும் மேலும் பலரையும் சுற்றி வளைக்கும். ஆகவே நாம் இந்த பின்னணியை புரிந்துக்கொள்ள வேண்டும்.
ரிசாத் கைது பற்றி, சனிக்கிழமை காலையிலேயே எதிர்கட்சி தலைவர் சஜித்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக நான் பேசினேன். தற்போது நாளை ஐக்கிய மக்கள் சக்தியின்
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என நம்புகிறேன்.
பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது
பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து தம்மை காப்பற்றி கொள்ள
விதிக்க பட்ட நிகழ்கால விதிகளை கடைபிடிக்க மறுத்த சுமார் 149 பேர் காவல்துரையினரால்
கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது என தெறிவிக்க பட்டுள்ளது
மாணவர்களுடன் போதை அருந்தி உல்லாசத்தில் ஈடுபட்ட டீச்சர் -சுற்றிவளைத்த போலிஸ்
மாணவர்களுடன் போதை அருந்தி உல்லாசத்தில் ஈடுபட்ட டீச்சர் -சுற்றிவளைத்த போலிஸ்
இலங்கையில் தன்னுடைய மகனின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொணட டசினுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் ,
மாணவர்களுடன் போதை பொருள் பாவித்து கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்த டீச்சர் மற்றும் அதில்
கலந்து கொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
இந்த நிகழ்வை நடத்தியவர் சர்வதேச பாடசாலை ஒன்றின் முக்கிய டீச்சர் என தெரிவிக்க பட்டுள்ளது
பாடசாலைகள் அடித்து பூட்டு – குஷியில் மாணவர்கள்
பாடசாலைகள் அடித்து பூட்டு – குஷியில் மாணவர்கள்
திருமலையில் உள்ள அணைத்து பாடசாலைகளும் அடித்து மூட படுகிறது ,கொரனோவின்
பரவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிட பட்டுளள்து
இதனால் மாணவர் குஷியில் உறைந்துள்ளனர்
மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை
மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்காது – புதிய மெனிங் சந்தை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும், மரக்கறி
வகைகளின் விலை அதிகரிக்க மாட்டாது என்று பேலியகொட புதிய மெனிங் சந்தை சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை எடுத்துச் செல்லும் விவசாயிகள் தமது உற்பத்திகளை மெனிங் சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
,தனால், மெனிங் சந்தையில் மரக்கறி வகைகள் அதிகரித்து விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றாளர்கள் பதிவானதை அடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை 3
நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5,000 ரூபா பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வழங்க திட்டம்
5,000 ரூபா கொடுப்பனவு : இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வழங்க திட்டம்
5000 ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனைப் பெற தகுதி பெற்றும் இதுவரை அதனைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு
முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் தினங்களில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
ஐயாயிரம் ரூபா சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு 25 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், வயோதிபர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்
உள்ள குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் இவ்வேளையில் வெளி நாடுகளில்
இருந்து உல்லாச பாயணிகள் அதிகம் நுழைந்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது
பல நாடுகள் இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான் நாட்டவர்களை தமது நாடுகளுக்குள் நுழைவதற்கு
தடை விதித்துள்ளன
அவ்விதம் இருந்தும் இலங்கைக்கு இவ்விதம் உல்லாச பாயணிகள் வருகை வழமை போன்ற
நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்க படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு
டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6,389 ஆக உயந்துள்ளது
நிகழ் காலத்தில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்களையு இந்த கணக்கில் இலங்கை அரசு இனைத்துள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது
இவ்விதம் யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களை டெங்கு நோயின் தாக்குதலில் இறந்தார்கள் என
சடலங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்
யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற இளம் கர்ப்பிணி தன்னை
தானே தீமூட்டி கொண்டார் என தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்
எனினும் இவரது மரணத்தில் சநதேகம் இருப்பதால் அவரது கணவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இவரே மனைவியை எரியூட்டி இருக்லகலாம் என சந்தேகிக்க படுவதால் போலீசாரை தொடர்ந்து
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா
பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி
நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.
விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, மனித
உரிமைகள் அமைப்பின் ஆளுநர் எ.ஜே. மொஹமட் பாய்ஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ். சந்திரசேகரம் ஆகியோருடன் பல உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும் போது,
எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிலை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்குப் புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.
இதனை அரசாங்கத்தினால் மற்றும் செய்துவிட முடியாது எனவும் இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையினரே வழங்கி வருகின்றனர் என்றும் அந்த வகையில் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile
Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி கல்வி அறிவாகும். எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்தத் துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இந்த
அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி, பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெறும் புத்தகக் கல்வியை மட்டும் மையமாகக் கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே
சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன்
ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புவது விசேட அம்சமாகும்.
இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 140 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இவற்றில் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி,
தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், இதுபோன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
நிகழ்வில் பங்கேற்ற அனைத்து அதிதிகளுக்கும், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் சிறந்த விரிவுரையாளர்களுக்கும் , இணை நிறுவனங்களுக்கும் விசேட
நினைவுச்சின்னங்கள் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்காரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அமேசன் உயர் கல்வி

கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இம்ரான்
கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் – இம்ரான்
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன் சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது
செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
அவரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்பு வாய்ந்த
பாதுகாப்புத் துறை நடந்து கொள்வது இந்த துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னைய ராஜபக்ஷ அராஜக ஆட்சியின் இரண்டாம் கட்டம் கோவிட் வைரஸை விட மோசமாக கோரத்தாண்டவமாடுவதை இது உறுதிப்படுத்துகின்றது. கைது
செய்துவிட்டு காரணம் தேடுகின்ற காட்டு நீதி தான் 69 இலட்சம் மக்களது எதிர் பார்க்கை என்பது போல அரசாங்கம் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். தமது ஆதரவாளர்கள் என்பதற்காக
குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு தமக்கு வேண்டாதவர்களை கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது
இலங்கையில் கொரனோ பாதிப்பு ஒருலட்சத்தை கடந்தது
இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள்; எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது ,
மேலும் இந்த நோயினால் பலர் மரணமாகியுள்ள நிலையில் ,அந்த கிராமங்கள் தனிமை படுத்த பட்டு மக்கள் போக்குவரத்துக்கள் முடக்க பட்டுள்ளன
இதே நாளில் 880 பேருக்கு மேல புதிய நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் ,எமது நாட்டில் நோயின்
தாக்குதல் பாதிப்புஇல்லை என கூறி வந்த சிங்கள ஆளும் அரசு இப்பொழுது நோயானது
அதிகரித்து வருவதாக தெரிவித்து வருவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு
ஆறுகளில் பறக்கும் கடற்படை – ரோந்து கண்காணிப்பு
இலங்கை கம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள மிக பெரும் ஆறுகளை சுற்றி பறக்கும் கடற்படை
அணி ஒன்று உருவாக்க பட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடு படுத்த பட்டுள்ளது
இலங்கை கடல் படையின் புதிய பிரிவினரின் தயாரிப்பில் வடிவமைக்க பட்ட பறக்கும் படகுகள்
மூலம் இந்த கண்காணிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன
கம்பந்தோட்டை பகுதி சீனாவுக்கு தாரை வார்க்க பட்டதன் பின்னர் இந்த புதிய படையணி
உருவாக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது












