Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா

இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ,தீர்வு காண அமெரிக்கா உதவிட முனைகிறது.

அமெரிக்கா முன் வைக்கும் இந்த உதவி திட்டத்தின் கீழ் ,முக்கிய நிபந்தனைகள் அடங்கிய வற்றுடன் ,இந்த பேரம் பேச்சு உதவி வழங்குதல் இடம் பெறுகிறது.

அமெரிக்காவுக்கு இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் உத்தரவாதத்தீன் அடிப்படையில் ,இரு நாடுகளுக்கு இடையிலான கொள்கை இணக்கப்பாட்டுடன் கூடிய செயல்,பாடு இலங்கையில் நிலை நிறுத்த படுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது .

இலங்கை வரும் கோட்டபாயா ஏற்படுத்த படவுள்ள சர்ச்சைகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மீளவும் கீழ் நோக்கி செல்லும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு

    வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு

    இலங்கையில் இருந்து வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ,இலங்கை வங்கிக்கு மாதம் தோறும் ,நூறுக்கு மேற்பட்ட டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும் என ,நிதி அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது.

    வெளிநாடுகளில் வசிக்கும் பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்களில் அரைவாசி பேர் ,இலங்கைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர் .

    இதனால் இலங்கை பெற்றுக்கொண்ட அண்ணிய செலாவணி தீர்ந்துள்ளது .

    இதனால் தமிழர்களுக்கு கட்டாய நெருக்கடியை ,வழங்கும் விதமாக இலங்கை அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .

    தமிழர் தேசிய அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண மறுக்கும் ,இலங்கை அரசு ,வெளி நாடுகளில் உள்ள தமிழர்களை குறிவைத்து, செயல் படுவது கேலிக்குரியது என தமிழர்கள் தெரிவிக்கின்றனர் .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையின் பிரதமராக கோட்டபாய

      இலங்கையின் பிரதமராக கோட்டபாய

      இலங்கையின் பிரதமராக கோட்டபாய ராஜபக்ச நியமிக்க படவுள்ளார் .

      எதிர்வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாய ,பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.

      பசிலுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயமும் ,பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

      கோட்டபாய இலங்கை வந்தடைந்தால் , மீளவும் மக்களினால் விரட்டியடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

      ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

      நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி

      பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.

      வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

      ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

      2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு

      எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

      ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

      இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

      தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர்

      அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

      தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத்

      தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்
      ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

        யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

        நல்லூர் உட்பட யாழ்ப்பாண நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய

        விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

        அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

        அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

        நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

        யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

        அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்திற்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டனர்.

        இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

        விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள

        விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

        அந்நிலையில் புதன்கிழமை இரவு யாழ்ப்பாண பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

        அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை

        வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர்
        ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு

          எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு

          இலங்கையில் ஏற்பட்டுள்ள, எரிபொருள் தட்டு பாடு காரணமாக, தற்போது பேரூந்து போக்குவரத்து சேவைகள் குறைக்க பட்டுள்ளன.

          தனியார் பேரூந்துகள், எரிபொருள் பெற்று கொள்வதில் ,ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, ஐம்பது வீதமான போக்குவரத்து குறைக்க பட்டுள்ளதாக, தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.

          ஐம்பது வீதமான எரிபொருள் நிலையங்கள் , அடித்து மூட் பட்டுள்ள நிலையில் ,இந்த போக்குவரத்து சேவையும் முடக்க படுவதால் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

          தொடர்ந்து எரிபொருள் ,பற்றாக்குறை நீடித்து செல்லும் என்றால், மக்கள் போராட்டம் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

            விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

            ( ராஜு அண்ணை பற்றி களமருந்துவ போராளி சுஐந்தன் அவர்கள் எழுதியது)

            திரும்பிப்பார்க்கிறேன்,
            ராஜு அண்ணை,அண்ணையின் விஞ்ஞான எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்

            .ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.
            ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன்.

            எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது.

            இவர் ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும் ஐ சே போட்டு கதைக்கிறவர்.

            விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

            தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.

            அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் சாப்பிட்டோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது.

            பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.


            ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை ).

            ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.


            ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி, இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.

            ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.

            அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.

            நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில் ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.

            ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை தாங்கோ, கங்கா (அவரது மனைவி) சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கு.


            நான் சோலை, வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.
            ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.


            எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து


            மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.


            விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.


            நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.


            நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார். பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும்(net) தேவையில்லை என்றார்.


            கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.


            மிச்ச மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார்.

            அவரது மூளை எதைப்பார்த்தாலும் இதை எங்களால் செய்யமுடியுமா?
            என்றே சிந்திக்கும்.

              Posted in இலங்கை செய்திகள்

              தள்ளாடும் ரூபவாஹினி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டம்

              தள்ளாடும் ரூபவாஹினி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டம்

              இலங்கையில் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி ஊழியர்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர் .

              அரசு பணம் இன்றி தள்ளாடி வரும் நிலையில் , ரூபவாஹினி ஊழியர்க்ளுக்கு சம்பளம் வழங்குவதில் ,நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .

              இதனால் ரூபவாஹினி ஊழியர்கள் ,சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

              இந்த போராட்டம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .மேலும்
              இதே நிலை நீடித்தால் ரூபவாஹினி, அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

                இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

                இலங்கையில் வசிக்கும் இந்தியா மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

                இலங்கையில் கோட்டபாய மீள நாடு செல்ல உள்ள ,நிலையில் அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்கும் ,இந்திய இவ்வேளை இந்தியர்கள் குறிவைத்து தாக்க பாடலாம் என எதிர் பார்க்கிறது.

                அதனால் இலங்கை வாழ் இந்தியா மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை பட்டுள்ளனர் .

                இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பின் பின்னால் ஏதோ இலங்கையில் நடக்க போவதை காண்பிக்கிறது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம்
                  சத்தியத்திற்கு வந்த சவால்

                  யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம்
                  சத்தியத்திற்கு வந்த சவால்

                  யாழ் ஆஸ்பத்திரி பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறிய காலங்களில்
                  அரசமருத்துவ சங்கம் என்னும் மருத்துவர்கள் அமைப்பு பல அதிரடியான திறன்


                  மிகு திட்டங்களை மாஸ்டர் பிளானுடன் நகர்த்திவந்தது குறித்த காலத்தில் கடமையாற்றி ய


                  பதில் பணிப்பாளரின் நேர்மை யும் மக்களிற்காக அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்களின்

                  யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம் சத்தியத்திற்கு வந்த சவால்


                  சிந்தனையும் ஒருமித்த செயல் வடிவமே இதுவாகும் குறித்த காலப் பகுதியில் நிகழ்ந்த அபிவிருத்திகள்


                  யாவுமே முன்னுதாரணமானவை என்றே கூறவேண்டும் இங்கு கட்டிடங்களை இடிப்பதும் விற்பதும் பின் புதிய


                  கட்டிடம் கட்டுவதும் என்று ஒரு கட்டமைக்கப்பட்ட நிதித்திருட்டை ஒரு வழிப்பண்ணுமுகமாகவும் மக்களின் தேவைக்கான


                  அபிவிருத்தி என்னும் புதிய தொணிப்பொருளுடன் சத்தியத்திற்கு வந்த சவால் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமேயாகும்

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு

                    இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் தட்டுப்பாடு

                    இலங்கையில் மீளவும் எரிபொருள் ,டீசல் மற்றும் ,பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய கூட்டு தாபனம் அறிவித்துள்ளது.

                    எதிர்வரும் நாட்களில், எரிபொருள் மீள மோசனமான நிலைக்கு , செல்லும் எனவும் இவ்வேளை மக்கள் ,கொந்தளிப்புக்கு உள்ளாவார்கள் என எதிர் பார்க்க படுகிறது.

                    பல எரிபொருள் நிலையங்கள் அடித்து மூட பட்டுள்ள நிலையில் ,,வெளியாகியுள்ள இந்த எரிபொருள் அறிவிப்பு , மக்களை மீளவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

                    கோட்டபாய எதிர்வரும் வாரம் , இலங்கை வரவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த எரிபொருள் அறிவிப்பு ,மீளவும் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாகும் என எதிர் பார்க்க படுகிறது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை

                      உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை

                      இலங்கை கந்தனை பகுதியில் பெண் ஒருவர், நடத்தி வரும் கொட்டலுக்கு ,வருகை தந்த நபர் ஒருவர் அங்கு பணி புரிந்த நபர் ,ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார் .

                      உணவை வாங்கி விட்டு, பணத்தினை கொடுக்க தகராறு செய்த பொழுதே, மேற்படி வாக்குவாதம் முற்றியதில் ,அங்கு பணி புரிந்த உணவகத்தின் ,தந்தையை தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்துள்ளார்.

                      அடி காயங்களுக்கு உள்ளான, அவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

                      மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து வாலிபன் சடலமாக மீட்பு

                        நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து வாலிபன் சடலமாக மீட்பு

                        இலங்கை வவுனியா நெடு நெடுங்கேணி பகுதியில் ,கிணற்றில் இருந்து வாலிபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

                        வீட்டு கிணற்றில் இருந்து ,மீட்க பட்ட வாலிபர் , சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

                        இருபத்தி ஆறு வயதுடைய வாலிபன், தற்கொலை செய்தாரா , அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                        இலங்கையில் சமீப காலங்களாக கிணறு ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் ,மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

                          சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

                          கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும்

                          பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

                          அத்துடன், மண்ணெண்ணை விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும்

                          மண்ணெண்ணை கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

                          சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

                          அதேவேளை கடலட்டை வளர்ப்பு தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால்,

                          அவர்களைப் பயன்டுத்தி, உடனடித் தேவையாக எமக்கு இருக்கின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும எனவும கற்றொழல் அமைச்சர் தெரிவித்தார்.

                          கடற்றொழில் அமைச்சில் 24.08.2022 நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,


                          கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

                            பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

                            கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

                            அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே

                            தெரிவிக்கையில், கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

                            Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர்
                            டோஸ் பெறுவது மிக அவசியமானது எனவும் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்தார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

                              உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

                              2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘மெஜிக் லொஸ் வேகாஸ்’ ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன.

                              அமெரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்க சந்தைகளை அணுகும் நிகழ்வில் உருவாக்கப்பட்ட ஏராளமான வணிக வாய்ப்புகளை நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தின. இது பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

                              பெறுமதியான நேரடியான சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு வழிவகுத்ததுடன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள நிறுவனங்களுடன் பெருமளவிலான

                              வர்த்தகத் தொடர்புகளை நிறுவி ஒருங்கிணைத்து, இலங்கையை முக்கிய ஆடை ஏற்றுமதி இடமாக மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டது.

                              லக்கி இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே. கார்மென்ட்ஸ், ஸ்க்ரீன்லைன், காஷ் கார்மென்ட்ஸ், கோல்மன்ஸ் கார்மென்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சரசவி எக்ஸ்போர்ட்ஸ், குயின்ஸ் வேர்க் வெயார், ஜியா மொடா மற்றும் ஹவார்ட்

                              உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

                              ஃபெஷன் ஆகிய இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இலங்கைக் கூடம் 90 சதுர மீட்டர் இடத்தை ஆக்கிரமித்திருந்ததுடன்,

                              பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் உடைகள் மற்றும் காலுறைகள், லேபிள் அச்சிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் பத்து தனிப்பட்ட கண்காட்சி அரங்குகளைக் கொண்டிருந்தது.

                              அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நெவாடாவில் (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) ஆண்டுக்கு இரண்டு முறை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடைகள், பாதணிகள், அணிகலன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆதார

                              வளங்களைக் காண்பிக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஃபெஷன் சந்தையாக மெஜிக் லாஸ் வேகாஸ் கருதப்படுகிறது. சில்லறை வரவேற்பு, பொருத்தமான தெரிவுத் திட்டங்கள் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல் போன்ற சிறந்த சேவைகளுடன் வாங்குபவர்களுக்கும் தரநாமங்களுக்கும் இடையே இணைப்புக்களை எளிதாக்குவதன் மூலம் இது ஃபெஷன் வணிகத்தை எரிபொருளாக்குகின்றது.

                              மேலும், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் புதிய மற்றும் திரும்பும் கண்காட்சி தரநாமங்களுடன் கற்றுக் கொள்ளவும், வலையமைப்பு செய்யவும், வணிகத்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு கோவிட்-19

                              பரவலில் இருந்து மீண்ட பிறகு வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள 13,500 க்கும் மேற்பட்ட

                              வாங்குபவர்களின் பங்கேற்புடன் உலகெங்கிலும் உள்ள 65 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வாங்குபவர்கள் மற்றும் கண்காட்சியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

                              வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், வணிகச் சட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தில் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின்

                              உலகளாவிய ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமான ஏற்றுமதியை உள்வாங்கும் இலங்கையின் முதன்மையான ஏற்றுமதி இலக்கான மற்றும் இலங்கையின் ஏனைய முக்கிய ஏற்றுமதி இடங்களிலும் உள்ள இந்தத் திட்டம், நாட்டின்

                              வர்த்தகம் தொடர்பான சட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அமெரிக்க சந்தையில் நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா

                              வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குகிறது.

                              இலங்கை துணைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) லாஸ் ஏஞ்சல்ஸ் அனில் சிறிமான்னவின் உதவியால், வொஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் (வணிகம்) சரித

                              யத்தோகொட, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை வர்த்தகத் திணைக்களம் மற்றும் கூட்டு ஆடைகள் சங்க மன்றத்துடன் இணைந்து

                              அமெரிக்க சந்தையில் இலங்கையின் வர்த்தக நலன்களை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் ‘மெஜிக் லாஸ் வேகாஸில் இணைதல்’ இல்

                              இலங்கையின் பங்கேற்பை ஒழுங்கமைக்க முன்முயற்சிகளை மேற்கொண்டனர்.

                              கண்காட்சியாளர் இடம், அரங்குகளின் கட்டுமானங்கள் மற்றும் தளபாடங்கள், காட்சி அடுக்குகள் போன்ற ஏனைய தனிப்பட்ட கண்காட்சியாளர்கள்

                              தொடர்பான ஒட்டுமொத்த செலவுகளுக்கு அனுசரணை வழங்கிய சி.எல்.டி.பி. மூலம் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் உதவியுடன்


                              ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முக்கியமான வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க இலங்கையால் முடிந்தது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                ஒருவர் வெட்டி கொலை தொடரும் குழு மோதல்

                                ஒருவர் வெட்டி கொலை தொடரும் குழு மோதல்

                                இலங்கை மத்துகமவில் பகுதியில் இளம் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .

                                பாதாள உலக குழுக்களுக்கு இடையில், இடம்பெற்று வரும், குழு மோதல்களில், இந்த நபர் சரமாரியாக , இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் ,

                                இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் .

                                குறித்த வெட்டி கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

                                  ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

                                  இலங்கை கம்பஹா பகுதியில், ஊந்துருளியில் வந்த மர்ம நபர்களினால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

                                  குறித்த நபர் மீது சரமாரியாக சுட்டு விட்டு ,மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது .

                                  பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான, நபர் அவ்விடத்திலேயே பலியானார்.

                                  இளநகையில் நாள் தோறும் இவ்விதமானதுப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

                                    இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

                                    நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளது.

                                    இதேபோன்று மசகு எண்ணெய்யுடனான மற்றுமொரு கப்பல் நேற்று (23) நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

                                    இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

                                    ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

                                    இதேவேளை,  மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாக நிதி

                                    உதவியை வழங்கும் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த யோசனையாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                                    குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு இந்தத் தீரு;மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

                                    ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

                                      லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

                                      லங்கா சதொசவில் அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

                                      நேற்று முதல் இந்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

                                      இதற்கமைவாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.
                                      இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபா.
                                      ஒரு கிலோ பருப்பு 460 ரூபா.
                                      ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபா.
                                      இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபா.
                                      ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபா

                                      இவ்வருடம் ஜூன் மாதம் முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன, மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்குவதற்கு

                                      சதொச நிறுவனம் செயற்படும் எனவும், பொருட்களின்
                                      விநியோகத்தை கருத்திற்கொண்டு ஏனைய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.