சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்
Posted in இலங்கை செய்திகள்

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் டெலிபோன்வெளியேறும்

அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்

தலைவருமான சஜித் பிரேமதாச, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு ஐ.ம.ச வெளியேறும் என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இடையே பொது நிகழ்ச்சி நிரல்,வேலைத்திட்டம், கருத்து ஒற்றுமை, கூட்டுப் பொறுப்புடன் ஒரு கருத்துடன் செயற்படும் நிலைப்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்வெளியேறும்

நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி ஒருவேளை இந்த கலந்துரையாடலுக்குச் சென்றாலும்,இந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும் என்றார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கப் பேச்சுவார்த்தை நேர்மையுடன் நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும்,வெற்றிபெற வேண்டுமானால், பேச்சுவார்த்தைகள் தூய்மையான நோக்கத்துடன் நடக்க வேண்டும் என்றும், அது அரசியல்

ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது என்றும்,நாட்டு நலனுக்காக செய்யப்படும் பணியாக பேச்சுவார்த்தை அமையப்பெறுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்வெளியேறும்

அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும் என்றும், இந்த கலந்துரையாடல்களுக்கு தாம் அழைக்கப்பட்ட போதிலும், நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் குறித்து தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை

என்றும்,நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பக்கம் இருந்து எதிர்க்கட்சி இதில் கலந்து கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 134 உறுப்பினர்களுக்கும் இடையில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன .கலந்துரையாடலுக்கு வருவதற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளை சமாளித்து ஒரு நிலைப்பட்ட கருத்தொற்றுமைக்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்

லண்டனில் வசமாக சிக்கிய தமிழ் லோயர்

உங்கள் மீதான குற்ற சாட்டு தொடர்பில் எமக்கு ஏதாவது தெரிவிக்க விரும்பினால் ,அது தவறு என கருதினால்
எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,அதனை இங்கே பதிவிட தயாராக இருக்கிறோம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்

இந்த சந்திப்பின் போது இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐ.நாவின் உதவி குறித்து ஆராய்ந்தார்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று முன்தினம் (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் கண்ணீர் புகைக்குண்டு ஒன்று வெடித்ததாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (24) மாலை கஹட்டகஸ்திகிலிய, குடாபட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய பிரதேசத்தில் விவசாய கிணற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

கழுத்தை அறுத்து மகன் கொலை தந்தை கைது

விசாரணையில், இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவே இந்த திருத்த சட்டத்தை தனிநபர் ​பிரேரணையாக கொண்டுவரவுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பொலிஸ் அதிகாரம் கட் 22ஆவது திருத்தம் வருகிறது

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுயைாக நடைமுறைப்படுத்தும் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பொலிஸ் அதிகாரத்தை பின்னரும் ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருந்தார்.

அதற்காக சர்வக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதுடன், அது இருள் சூழ்ந்த யுகத்துக்கே தள்ளப்பட்டிருந்தது என்றார்.

இந்நிலையில், தேசப்பற்றாளர்களை இனங்காணும் வகையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், பொலிஸ் அதிகாரங்களை களையும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது என்றார்.

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்

வெடித்த ஏவுகணை கிடங்கு பல இராணுவம் காயம்


9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

9 இந்திய மீனவர்கள் கைது

9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டன் குரோலி பகுதியில் இடம்பெற்ற காராட்டி நிகழ்வு ,
18 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்காற்றி சிறப்புற இடம்பெற்று முடிவுற்றது .

லண்டனில் இளங்கோ மார்க் எனும் தமிழரினால் நடத்தி முடிக்க பட்ட மாபெரும் சாதனை நிகழ்வின் இரண்டாம் பாதிப்பு .

காணொளியை முழுவதுமாக பாருங்கள் மக்களே .

ethirinews குழுமத்தோடு தொடர்பு கொள்ள 0044 7536707793

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
    Your browser does not support iframes. Your browser does not support iframes. டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்புமகாகனதரவ குளக்கரையில் பார்சலுக்குள் டி-56 ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன மிஹிந்தலையில் உள்ள மகாகனதரவ குளக்கரையில் உரிமையாளர் இல்லாமல் கிடந்த ஒரு பார்சலில் இருந்து, டி-56 ரக தாக்குதல் துப்பாக்கி, நான்கு தோட்டாக்கூடுகள் மற்றும் 25 தோட்டாக்கள் ஆகியவற்றை இலங்கை காவல்துறை மீட்டுள்ளது. அங்கு…
  • பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
    Your browser does not support iframes. Your browser does not support iframes. பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன பொரலஸ்கமுவ, மலானி புலத்சிங்கல மாவத்தையில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று இரவு (04) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பொரலஸ்கமுவ பொலிஸார் கூடுதல் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டை, பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர் என நம்பப்படும் “தெஹிவல சண்டோ” என…
  • பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன
    Your browser does not support iframes. Your browser does not support iframes. பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன எரிவாயு விலை குறைந்ததன் காரணமாக, இன்று (5) நள்ளிரவு முதல் ஒரு கப் பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை ரூ. 5 குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்…
  • கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னருவா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான மின்னல் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (05) இரவு 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும். அதன்படி,…
  • தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது ஆகஸ்ட் 29 அன்று தெஹிவலாவின் ஓபன் பிளேஸ் பகுதியில், ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரை மவுண்ட் லவினியா பிரிவு…
  • நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு
    Your browser does not support iframes. Your browser does not support iframes. நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்புஇரண்டு நேபாளியர்கள் உயிருடன் மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து, நேபாள சுரங்கத்திலிருந்து சீன நாட்டவர் மீட்கப்பட்டார். இமயமலைப் பள்ளத்தாக்கை பனி, பாறை மற்றும் மண் சுவர் ஒன்று உடைத்துக்கொண்டு சென்றதில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 5,600- க்கும் மேற்பட்டோர் காணாமல் போன 10 நாட்களுக்குப்…
  • இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Your browser does not support iframes. Your browser does not support iframes. இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல் நினோ வானிலை முறைமையால் ஏற்பட்டுள்ள வறண்ட வானிலையால், இலங்கையின் ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 1,15,534 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்…
  • கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
    Your browser does not support iframes. Your browser does not support iframes. கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி கல்பிட்டியாவின் பாலக்குடவா பகுதியில் 26 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் (03) நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்த அப்பெண், கல்பிட்டியா மருத்துவமனையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் அனுமதிக்கப்பட்டிருந்த…
  • சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் 36 வயது நபர், குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி துணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளுக்குக் கிடைத்த புகாரின்…
  • அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர், கடல்சார் வர்த்தகம், முதலீடு கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ-பசிபிக் பிராந்திய சந்தைகளுடன் இணைக்கும் கப்பல்…
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் (24) தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.

பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.

மனிதாபமானமின்றி , குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.

டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரவிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ

ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop vis
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa

லண்டனில் வேலை விசா பெற்று மாதம் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய்களை சம்பாதிக்க இலக்குவன் வழி .

பல தமிழர் கடைகள் இப்பொழுது லங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைக்கின்றனர் .

அவ்வாறு அழைக்கும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பான ,விபரங்கள் காணொளியில் உள்ளது பாருங்கள் .

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.