Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்
சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நேற்று(03) இரவு 7 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் பஸ் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
சாவகச்சேரியில் பஸ் விபத்து; சாரதி படுகாயம்
இவ்விபத்தினால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், பஸ் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பஸ்ஸின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லை என சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
சடலத்தின் இடது கையில் மதுசங்க
சடலத்தின் இடது கையில் மதுசங்க
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் ரேஞ்சில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களுக்குப் பிறகே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் சஞ்சய் வீரசேகரவினால் நடத்தப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மேலும் பரிசோதிக்கப்பட வேண்டியதன் காரணமாக பிரேத பரிசோதனை அறிக்கை மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட நிபுணர் சட்ட வைத்தியர் தெரிவித்ததாக லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் 40-45 வயதுடைய பெண் எனவும், இடது கையில் மதுசங்க என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலத்தின் இடது கையில் மதுசங்க
உயிரிழந்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் லிந்துலை பொலிஸாருக்கு வழங்குமாறும், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கிரேட் வெஸ்டர்ன் கீழ் பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிரேட் வெஸ்டர்ன் மலைத்தொடரில் முகாமிட வந்த சிலர் தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரேட் வெஸ்டர்ன் மலைப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, கிரேட் வெஸ்டர்ன் காப்புக்காட்டுக்குள் நுழைவதையும் மலை உச்சியில் முகாமிடுவதையும் தடை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலடபா வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொதடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரிய பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடுவலை பகுதியில் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
36, 46 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
ஹம்பலாந்தோட்டையில் நில நடுக்கம்
ஹம்பலாந்தோட்டையில் நில நடுக்கம்
ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருகில் உள்ள பல வீடுகளுக்கும் இந்த சத்தம் கேட்டது. இது மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வினவிய போது, அவ்வாறான நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு நீர் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 22 இலட்சம் எனவும் மேலதிக பொது முகாமையாளர் தெரிவித்தார்.
மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
குடிநீர் விநியோகத்தில் இதுவரை பெரிய பிரச்னை ஏற்படவில்லை என்றும், வாகனங்களை கழுவுவதற்கும், பூக்கள் மற்றும் பிற செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் நீர் வழங்கல் வாரியத்தால் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், குளித்தல் போன்ற நடவடிக்கைகளின் போது வீட்டிற்கு அருகிலுள்ள நீரூற்றுகள் (மழை) அல்லது ஆறுகள் மற்றும் ஓடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குடிநீரை சேகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
மாடுகளை திருடிச் சென்றவர் கைது
மாடுகளை திருடிச் சென்றவர் கைது
வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து 3 மாடுகளை திருடிச் சென்ற ஒருவர் வியாழக்கிழமை (03) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நவாலி மயானத்துக்கு அருகில் வைத்து, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை
ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை
இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஒரே வீட்டில் ஐவர் தற்கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சகோதரன்,
தூக்கில் தொங்கி சாவை தளுவி கொண்டுள்ளார் .
இதே வீட்டில் சகோதரர் ஒருவர் முன்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து ,
கொண்ட அதே அறையில் ,ஐவரும் அதே போன்று தற்கொலை செய்துள்ளார் .
இது முன்னர் இறந்த ஆவியின் செயலினால் இடம்பெற்று இருக்கலாம் என,
அந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .
குறித்த வீட்டாரை பேய் வீடு எனவும் மக்கள் சிலர் அழைத்து வருகின்றனராம்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவை பெண் எம்பிக்கள் சந்தித்தனர்
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவை பெண் எம்பிக்கள் சந்தித்தனர்
நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களான ஜெசிந்தா
ஆர்டெர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை அண்மையில் சந்தித்ததாக நாடாளுமன்ற ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சீதா அரம்பேபொல, ரோஹினி குமாரி விஜேரத்ன, பவித்ராதேவி வன்னியாராச்சி, கீதா சமன்மலி குமாரசிங்க, தலதா அத்துகோரள, கோகிலா
குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, பாராளுமன்ற பொதுச் செயலாளர் ஹரிஷானி குமரசூரிய
ரோஹணதீர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹதியால்தெனிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் ஐம்பது சதவீதத்தில் அதிகரிக்கிறது என நீர் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசூலிக்கும் மக்கள் ,
பெரும் நெருக்கடியை சந்திக்க போகின்றனர் .இந்த விலை உயர்வை அடுத்து மக்கள் போராட்டங்கள் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறதுby நிருபர் காவலன்
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியாby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்by நிருபர் காவலன்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
ஓட்டம் எடுத்தார் மனைவி: ஓட்டோவுக்கு தீ வைத்தார் கணவன்
ஓட்டம் எடுத்தார் மனைவி: ஓட்டோவுக்கு தீ வைத்தார் கணவன்
தன்னுடைய மனைவி, அவருடைய கள்ளக்காதலுடன் ஓட்டோவில் இருப்பதைக் கண்ட கணவன், அந்த ஓட்டோவை தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹொரனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஓட்டோவுக்கு தீ வைத்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருடைய மனைவி, ஹொரனை பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்றார்.
ஓட்டம் எடுத்தார் மனைவி: ஓட்டோவுக்கு தீ வைத்தார் கணவன்
இன்று(02) கடமைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து காலை வெளியேறியுள்ளார்.
எனினும், தன்னுடைய மனைவி மற்றுமொருவருடன் ஓட்டோவில் இருப்பதாக கணவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அந்த ஓட்டோவை நோக்கி கணவன் ஓடியுள்ளார்.
இதனை கண்ட அந்த காதல் ஜோடி, ஓட்டோவை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டது.
ஆத்திரமடைந்த கணவன், ஓட்டோவுக்கு தீவைத்து கொளுத்தியுள்ளார். இந்த தீயால் அந்த ஓட்டோ முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்
கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்
மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், பியகம சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், எதிர்திசையில் பயணித்த
பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்
மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்
இலங்கையில் மக்களை மிரட்டும் மர்ம கொலைகள் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
நாள் தோறும் காடுகள் ,ஏரிகள் ,நீர் நிலைகள்,வீதிகளில் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித உடல்கள் மீட்க படுகின்றன .
தொடராக மிதக்கும் இந்த கொலைகளினால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .பாதுகாப்பற்ற நாடக இலங்கை மாறி செல்வதற்கு ,ஆளும் அரசியல்வாதிகளே காரணம் என குற்றம் சுமத்த படுகிறது .
இந்த கொலைகளினால் பின்னால் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாது உள்ளமையே ,இவை பின்புலத்தில் அரசியல் உள்ளதாக பேச படுகிறது .
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்
கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்
இலங்கையில் ஆளும் அரசு க்ளஞ்சா செய்யகையை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்க சட்டம் ,
இதனால் இலங்கை உலகில் இதற்கான முதலிடத்தை வகிக்கும் என ,சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார் .
குற்றங்கள் ,வன்முறைகள் அதிகரிக்கவும் ,நாடு சீரழிந்து செல்வதற்கும் நிலைப்பாடு அடித்தளமாக மாற்றம் பெறுகிறது .
,அரசியல் தலைகள் மில்லியன் கணக்க்கில் சம்பாதிக்க உருவாக்க பட்டுள்ளதே இந்த சட்டம் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
இலங்கை சிறைகளில் வழியும் கைதிகள்
இலங்கை சிறைகளில் வழியும் கைதிகள்
இலங்கை சிறைகளில் கைதிகள் வருகையால் இட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துளளார் .
இலங்கை சிறைகளில் 13,241 கைதி கள் தங்க வைக்கும் வசதிகளே உள்ளன ,ஆனால் தற்போது 29 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் உள்ளதினால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவை இலங்கையில் பல்கி பெருகியுள்ள குற்ற செயல்கள் ,எண்ணிக்கையை எடுத்து காண்பிக்கிறது ,சட்டம் ,விதிகள் தளர்வு நிலையில் காணப்படுவதே இதற்கு கரணம் என படுகிறது
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
லங்கா ஐ.ஓ.சியும் விலையை உயர்த்தியது
லங்கா ஐ.ஓ.சியும் விலையை உயர்த்தியது
லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இந்த விலை அதிகரிக்கின்றது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்
சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுர்த்தி பெறுனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்
வவுனியா சம்பவம்; சிசிடிவி உதவியுடன் சிக்கிய ஐவர்
வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மெதவெத்தியகுளம், சிவபுரம், பாம்பேமடுவ மற்றும் நெலக்குளம் ஆகிய பகுதிகளில் வைத்து நேற்று (31) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகியுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்தவர்களை தாக்கி வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.
இதன்போது 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தம்பதி உயிரிழந்தனர்.
02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். .
முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டிற்கு தீ வைப்பதும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதுமான சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதுடன், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ்,பொருளாதார ரீதியில் பின்தங்கிய இருபது பாடசாலைகளைச் சேர்ந்த 7500 மாணவர்களுக்கு, அப்பியாச கொப்பிகள் திங்கட்கிழமை (31) வழங்கிவைக்கப்பட்டன.
பெரெண்டினா நிறுவனத்தின் அறிவிச்சுடர் கல்வி மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில்,பிரதம விருந்தினராக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட கலந்து சிறப்பித்தார். மற்றும் நுவரெலியா வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பெரெண்டினா நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் . அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.