Tag: விசேட அறிவித்தல்
ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது.
இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்
எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
- தேசிய தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்த நாள் National Leader Prabhakaran’s 72nd Birthdayby நிருபர் காவலன்
- மோட்டார் சைக்கிள் திருட்டர்கள் 4பேர் கைதுby நிருபர் காவலன்
- டி-56 ரக துப்பாக்கித் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி துபாயில் கைதுby நிருபர் காவலன்
- எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oilby நிருபர் காவலன்
- அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fallby நிருபர் காவலன்
சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்
சமுர்த்தி பயனாளிகளுக்கு விசேட அறிவித்தல்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுர்த்தி பெறுனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது














