Tag: சிறுமி மரணம்
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மஹியங்கனை வைத்தியசாலையில் சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த மாத்திரை அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.
கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்
கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்
மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், பியகம சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு
by நிருபர் காவலன் - ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு
by நிருபர் காவலன் - எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
by நிருபர் காவலன் - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்
by நிருபர் காவலன்
வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வீட்டுக் கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்விப்பயிலும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் சனிக்கிழமை(27) மாலை விழுந்துள்ளார்.
சிறுமியை காணாத நிலை தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரிய வந்துள்ளது.
சிறுமி உடனடியாக மீட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
Featured
தொட்டில் புடவை சிக்கி சிறுமி மரணம்
தொட்டில் புடவை சிக்கி சிறுமி மரணம்
இலங்கை கப்புத்தளை பகுதியில் தொட்டில் புடவை கழுத்தில் சிக்கியதில் 12 வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார் .
தங்கை ஒருவரை தூங்க வைக்க தொட்டிலை தயார் செய்ய முயன்ற வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
சிறுமியின் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் ,பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

















