Tag: பொருட்களின் விலைகள்
Posted in இலங்கை செய்திகள்
அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 02/03/2024
அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்
இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாப்பாடு ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு









