Tag: கணவனை
கணவனை குத்தி கொன்ற மனைவி
கணவனை குத்தி கொன்ற மனைவி
கணவனை குத்தி கொன்ற மனைவி ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலை 19 வயது இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், 31 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், வீரசேகரகம பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறியதாகவும், உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்திய இளம் பெண், ஹல்தமுல்லவில் உள்ள சொரகுனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், வெல்லவாய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்தார்.
கைது செய்யப்பட்ட இளம் பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை

- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்

- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.

- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
கரந்தெனிய – குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர்,
வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை
- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்
- கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்
- விசாரணைக்காக ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை
















