யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண் ,யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மருதங்கேணி பொலிஸ்

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பெண் ஒருவர் கொலை

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபரை நேற்று (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது ,புத்தளம் – கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் மருந்தகமொன்றில் கடமைபுரிந்து வந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனை செய்த போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உறங்கும்

அறையில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது 58 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 7,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதை மாத்திரைகள்

குறித்த போதை மாத்திரைகள் கொழும்பில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மாத்திரையொன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை தற்போது போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா

என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை கற்கும் மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு

பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம்,

பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது.

கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக

அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும்,

இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை எனவும் தலைவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்

ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் புகராளிப்பதற்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், மிகவும்

வறுமையான பிரிவுகளின் கீழ்

வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவின் தலைவருக்குப் பதில் வழங்கினர்.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்தது.

மேலும், மேன்முறையிடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டது. இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல்,

நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின்

எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

கிராம சேவகர் பிரிவில்

அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும்

எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்

கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார். உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையுடன் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர்

வலியுறுத்தினார். முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த

உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,

எஸ்.எம்.எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, உதயன கிரிந்திகொட மற்றும் சுதத் மஞ்சுள ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி

இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி

இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வில், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சியின் தலைவரும், பெண்கள் மற்றும் சமத்துவத்துக்கான நிழல் மாநிலச் செயலாளருமான Anneliese Dodds MP மூலம் நேற்று ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டார். ,

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தின் போது சர்வதேசக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை இழந்தவர்களின் நினைவைப் போற்றுதல். இங்கிலாந்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் செய்தி

கெய்ர் ஸ்டார்மரின் முள்ளிவாய்க்கால் செய்தியை வழங்கும் தொழிலாளர் கட்சியின் தலைவி அன்னெலிஸ் டாட்ஸ்

ஸ்டார்மர் தனது ஆணித்தரமான செய்தியில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்து,

அவர்கள் அனுபவித்த கொடுமைகளால் ஏற்பட்ட நீடித்த வலியை ஒப்புக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக மட்டுமன்றி நீதிக்கான அவசரத் தேவையை அப்பட்டமாக நினைவூட்டுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைப் போரின் போது நடந்த கொடுமைகளை மறக்கக் கூடாது என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
Posted in இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில் ,முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டசெயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே, குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை ஆகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன்,

தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும்,

தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடையப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதிஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ளநிலையில் மீளவும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜூலைமாதம் 04ஆம்திகதி கெக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் இந்த வழக்கு அழைக்கப்படவுள்ளதாக இந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிறஞ்சன்

தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதி அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதால், குறித்த வீதிக்கு பதிலாக மாற்றுவீதியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும்,

அகழ்வாய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல்களை வழங்குமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவித்தார்.

மேலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்தொடர்பான இடைக்கால பகுப்பாய்வு அறிக்கையொன்று, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் ஏற்கனவே நீதிமன்றிம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள் 1994ஆம் ஆண்டிற்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டிற்கு பிற்படாததுமான எச்சங்களெனவும் அந்த ராஜ்சோமதேவவின் இடைக்கால பாகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது

கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது

கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது ,ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவை

ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவைக்கு இலங்கையர்களை சுற்றுலா விசா மூலம் அனுப்புவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் தலா 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ரஷ்ய-உக்ரைன் போர் களத்திற்கு செல்லும் நிலைக்கே இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.

அதன்படி, நேற்று நுகேகொடை ஸ்டென்லி திலகரட்ன மாவத்தையில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் என இருவரும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி ,கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது

கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட

அலதெனிய பொலிஸார் வேனையும் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் ஒருவர் இந்த மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரான சந்தேக நபர், தனது நண்பர்களுடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வேனை பயன்படுத்தி இந்த பாடசாலை மாணவியை கடத்த வந்துள்ளார்.

காதல் உறவு

பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் மாணவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு பல முறை சென்றுள்ள நிலையில் இந்த காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் திருமணமானவர் என தெரியவந்ததையடுத்து மாணவி அவரை கைவிட்டுச் சென்றதுடன் சந்தேக நபரின் அழுத்தத்தினால் மாணவியின் பெற்றோர், அவரை குலுகம்மான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர்.

அங்கிருந்தவாறு பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை ,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார

திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன்று மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள்

தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். ஏனெனில் இந்த விவாதத்தில் இருவரும் பங்கு பெறாத போக்கே காணப்படுகிறது.

நான் உண்மையில் ஜனாதிபதியிடம் பொது விடுமுறையை அறிவித்து இந்த விவாதத்தைப் பார்க்குமாறு இலங்கை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரினேன்.

இவர்கள் இருவரின் விவாதத்தைப் பார்த்து எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப போகிறார்கள் என்று பார்ப்போம்.

ஏனெனில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என முதலில் பார்க்க வேண்டும்.

இது ஒரு வாய்ச்சவடாலே.

இதை செய்ய முடியாது என்பது இரு தரப்புக்கும் தெரியும்.

ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார்.

மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார்.

இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது.

வாய்ச்சவடாலின்றி செயலில் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த

கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதிபதி சந்துன் விதான தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம் ,2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும்.

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர்.

அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை.

ராணுவத்தினரின் எண்ணிக்கை

எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர் ,ஏதாவது வேலை கொடுங்கள் நான் பசி போக்கி கொள்வேன் என கையேந்தி நிற்கும் பரிதாப காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக பிரான்ஸ் வீதியில் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியாது ஐந்து தமிழர்கள் காணப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன .

உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்

அவ்வாறான கால பகுதியில் தற்போது ,அதே பிரான்ஸ் நாட்டில் உண்ண உணவின்றி வீதியில் உறங்கும் தமிழர் காட்சிகள் வெளியாகி ,உலக தமிழரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அகதிகளாக பிரான்ஸ் நாட்டுக்கு வந்து ,பல உளவியலுக்கு பாதிப்புக்கு உள்ளான நிலையில் ,பல தமிழர்கள் வாழ்ந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

உணவின்றி வீதியில் தவிக்கும் இந்த தமிழ் , முதியவரை பிரான்ஸ் தமிழர்களே காப்பற்றி கரம் கொடுங்கள் .

சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ள அந்த காணொளியில் வெளியான கைபேசி இலக்கத்தை இங்கே தருகிறோம் .அதன் ஊடாக தொடர்பு கொண்டு உதவுங்கள் மக்களே .0033 753038400

full வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில் இன்று இடம்பெறுகிறது .

பிரிட்டன் எதிர்கட்சியாக விளங்கும் தொழில் கட்சியின் மிக முக்கிய அமைச்சர்கள் எம்பிக்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்ட தொடரில் முக்கிய முடிவுகள் எட்ட படும் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழ் இனஅழிப்பு

தமிழ் இனஅழிப்பு இடம்பெற்று 14 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் , இதுவரை பாதிக்க பட்ட தமிழருக்கான தீர்வு எட்டப்படவில்லை .

அதனை அடுத்து பிரிட்டன் பாரா ளுமன்றில் இடம்பெறும் இந்த நினைவு கூறல் கூட்ட தொடர்பில் ,பாதிக்க பட்ட தமிழருக்கான முள்ளிவாய்க்கால் நினைவுதினமாக இது அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போர்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரும் அதனால் ஏற்படுத்த பட்ட இன நிலை நிலையில் ,தற்பொழுது அது போன்று தமிழருக்கான அரசியல் விடுதலை பெற்று தர வேண்டும் என எதிர் பார்க்க படுகிறது .

ஒன்று பட்டு தமிழ் அரசியல் கட்சிகள் செயல் படுகின்ற பொழுது தான் ,தமிழருக்கான தீர்வும் ,விடுதலையும் கிட்டும் என உலக மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .

தனி ஈழம் வெற்றி பெறும்
Posted in இலங்கை செய்திகள்

தனி ஈழம் வெற்றி பெறும்

தனி ஈழம் வெற்றி பெறும்

தனி ஈழம் வெற்றி பெறும் ,தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு எம்.பி.யான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை

இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ. நா. சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியின் மீது பலஸ்தீனம் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. யுத்தம் கொடுமையானது.

யுத்தத்தின் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் நேரிடும்.அப்பாவி மக்களே கொல்லப்படுவார்கள்.


பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா,ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சிங்களவர்களையும்,முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்யும் போது புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித

பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.அதேபோல் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணைகளை கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு அப்பாவி மக்களை கொலை செய்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது

குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் . இது சாதாரணமானதல்ல.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றிப் பெறும் என்றார்.

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ,பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட 2 அமைச்சரவைப் பத்திரங்களுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

இதற்கமைய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 14 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், சகல ஊழியர்களும் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட 3 நாள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாக கிராம அதிகாரிகள் இணைந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது .

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் தேர்தலில் வெற்றி பெற்றிட தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள சிலருக்கு பணம் வழங்க படுகிறது சஜித்

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் என பெரும் அரசியல் சூதாட்டம் நடந்து வருகிறது.

இதன் மூலம் வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் கிடைத்தாலும், நாட்டுக்கும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நேர்ந்த பயன் ஏதுமில்லை.

போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள்

அரசியல்வாதிகள் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குவதை போல மது மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபான நிறுவனங்கள் இன்று சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டன. இந்நிறுவனங்களால் எந்தவொரு பிரபல நபரையும் பணத்துக்காக எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முறையான வரிகளை செலுத்தத் தவறிவிடுகின்றனர்.

பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி

பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி செலுத்தாமல் இருப்பது ஒருபுறமிருக்க,மறுபுறம் நாட்டு மக்களையும், பிள்ளைகளையும், இளைஞர்களையும் மரணப் படுக்கைக்கு இட்டுச்செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரியவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தாலும் இளைஞர்கள், பிள்ளகைகளை இதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கசப்பான உண்மை

இதிலுள்ள கசப்பான உண்மையைப் பேச வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மதுபான, பியர் அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பது உகந்த காரியமல்ல.

தற்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றன.

எதிர்ப்புகள் வந்தாலும் அவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டே வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மூச்சுத் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக மஹர, மல்வத்து, ஹிரிபிட்டிய வைத்தியசாலைக்கு 1,300,000 பெறுமதியான Mini Autoclav 1 மற்றும் Pulse Oximeter 1

என்பவற்றை நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று(14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பிள்ளைகள், மது, சிகரெட் போதைவஸ்துக்களை அடியோடு ஒழிப்போம். இது குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவற்றைச் சொன்னால் வாக்குகளை இழக்க நேரிடும். மனசாட்சிப்படி பேச வேண்டும். பிள்ளைகளை உரிய முறையில் பராமரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் இளம் தலைமுறையினர் மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று பல்வேறு போதைக்கு முற்றுபுள்ளி என பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பாடசாலை பருவத்தில்

பல்வேறு திட்டங்களின் மூலம், ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை மது ஒழிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க நாம் அர்ப்பணிப்போடு செற்பட வேண்டும். மதுபானம்,

போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்தாத ஓர் நபராக இதை கைவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை தாம் கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும்

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். ராகம வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று சிகிச்சை திட்டம் இயங்கி வருகின்றது.

இதன் காரணமாக கசப்பான உண்மையை வெளிக்கொணர வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LTTE மீதான தடை நீட்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு ,தமிழீழ விடுதலை புலிகள் தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதக அறிவித்துள்ளது புலிகள் அழிக்க பட்ட பின்னரும் தொடரும் தடை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.

அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் உயிரோடு இந்தியா

தடை குறித்த அறிவிப்பில், “விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை.

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கை

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன.

போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.

இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. என இந்து தெரிவித்துள்ளது .

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் ,காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

கொன்று உடலை கழிவறை குழியில் வீசிய கோரம்

பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது.

இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

நிலுஷிகா சந்தமாலி 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து

தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.

பொலிஸ் விசாரணைகள்

இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.

அடித்துக் கொன்று உடல் மறைப்பு

இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார் ,யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான

பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக;கு உதவியாக

நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ்

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம்

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
Posted in இலங்கை செய்திகள்

 பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை மிக கொடூரமாக கொன்று குவித்து வருகிறது .கொலையை கண்டித்து பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரையாற்றினார் .

பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை

வரலாற்றியல் தொட்டு நிகழ்கால நிலவரங்கள்வரை மிக பேசியுள்ளார் .செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரையில் ,பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை எவ்வாறான கொடூர செயல் என எடுத்துரைத்தார் .

மிகவும் உணர்ச்சி பூர்வாமாக செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய பேச்சு வலி தோய்ந்த பாலஸ்தீன மக்களின் குரலாக காணப்பட்டது .

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுகக்கீம் இலங்கை பாராளுமன்றில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து செல்வராசா கஜேந்திரன் தனது பேச்சை ஆற்றினார் .

இலங்கை புரிந்த படுகொலை

300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழர் தாயாக பகுதியில் இலங்கை புரிந்த படுகொலைக்கு ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார் .

தமிழர் மனங்களில் எழுகின்ற கேள்வியை பாரளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் எழுப்பியுள்ளது உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

அந்த உரையையினை கேட்பதற்கு கீழே இணைப்பு வழங்க பட்டுள்ளது .

full video

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல் இடம்பெறவுள்ளது .குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டன் Harrow பகுதியில் நாளை புதன்கிழமை (15/05/24)நடைபெற உள்ளது.

இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் குமுதினிப் படுகொலை கருதப்படுகின்றது .

குமுதினிப் படுகொலை

குமுதினிப் படுகொலை இடம்பெற்று 39 வருடங்கள் கடந்த நிலையில் நாளை லண்டனில் இந்த நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற உள்ளது.

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும்,புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய பொழுது இடம்பெற்றது .

குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

1985 ஆம் ஆண்டு காலை 07 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது 36 பேரை குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.

அவ்வாறன இனவாத அரசாள நடத்திய அந்த குமுதினி நினைவு நாள் இடம்பெறுகிறது என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்தியுள்ளனர் .

தகவல் –ஈழம் ரஞ்சன்