Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது
உழவு இயந்திரம் கவிழ்ந்தது ,பல பிரதேசங்களில் இடம்பெற்ற 5 வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு பரந்தன் வீதியில்வீதி விபத்து
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பரந்தன் வீதியில் மூங்கிலாறு பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்து மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் தம்பிராசபுரம், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உழவு இயந்திரத்தில் பயணித்த 14 பேர் முல்லயாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிற்காக பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி லொறியுடன் மோதல்
இதேவேளை, நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதியதில், பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பிலிபிட்டிய – நோனாகம மேரி ஹல்மில்லகெட்டிய பிரதேசத்தில் லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த இருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.
தெலில்பலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி – மைலோட் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்கம்பத்தில் மோதி விபத்து
மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குளியாபிட்டிய – நாரம்மல வீதியின் தும்மோதர பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இவ்விதமான விபத்துக்களை தடுத்திட அரசும் ,அரசு இயக்கும் காவல்த்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுவிக்க பட்டுள்ளது .
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது ,இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் குறித்த நால்வரையும் கைது செய்துள்ள குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு.
தீவிர விசாரணை
தீவிர விசாரணைக்காக சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு சந்தேக நபர்கள் நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு
இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐ.பி. எல் போட்டிகள் இடம்பெறுவதால் தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று அணிகள், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
இந்த கைதை அடுத்து மிக பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது .
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி
இராணுவவாகனம் மோதி யுவதி பலி ,யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாள்தோறும் வெளியாகவும் இலங்கை செய்திகளில் வாகன விபத்துக்கள் தலைப்பு செய்திகளாக வலம் வருகின்றன .
இலங்கையில் விபத்துக்கள் அதிகம் என்பதே இலங்கை தலைப்பு செய்திகள் ,மூலம் இலங்கை நாடு ஆபத்தான நாடக உள்ளதை இவை எடுத்து காட்டுகின்றன .
இந்த அவல நிலை மாற்றம் பெற்று இலங்கை வீதி போக்குவரத்திற்கு சிறந்த நாடக என்று மாற்றம் பெறும் என்பதே நமது மக்கள் வேண்டுதலாக உள்ளது .
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
இலங்கை வருகிறார் எலோன் மஸ்க் ,தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த ஆண்டு இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க
ஜனாதிபதி விக்கிரமசிங்க, காலநிலை விவகாரங்கள் தொடர்பான தனது ஆலோசகர் ருவான் விஜேவர்தனவுடன் நேற்று இந்தோனேசியாவின் பாலியில்
எலோனைச் சந்தித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
எவ்வாறாயினும், எலோனின் இலங்கை விஜயத்தின் சரியான திகதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படாததுடன் இலங்கை அரசாங்கம் எலோனின் குழுவுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை தீர்மானிக்கவுள்ளது.
“இலங்கை எவ்வாறு ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துகிறது என்பதைப் பொறுத்தே, அது முடிந்தவுடன், Starlink ஐ அறிமுகப்படுத்த எலோன் இலங்கைக்கு வருவார்.
இந்த ஆண்டின் இறுதியில் அவர் இலங்கைக்கு வருவார் என்று தற்காலிகமாக விவாதிக்கப்பட்டது” என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பில்லியனர் தலைவரும், எக்ஸ் சமூக தளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், ஸ்டார்லிங்க்
செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலிக்கு வந்தார்.
ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில்
ஸ்டார்லிங்க் சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு எலோன் விண்ணப்பம் அனுப்பியிருந்ததுடன், மேலும் அந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்.
இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவிகரமாக அமையும் எனவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிக்கிய திருட்டு கும்பல்
சிக்கிய திருட்டு கும்பல்
சிக்கிய திருட்டு கும்பல் ,பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 7 பேரை போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பிலியந்தலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 50 மாடுகளை இந்தக் குழுவினர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் மாடு திருட்டில் ஈடுபட்டும் வேன் ஒன்று உலாவுவதாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கிடைத்த தகவலின்
அடிப்படையில் பிலியந்தலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்படி மொரட்டுவை வீதியில் தெனிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்போது அந்த வேனில் இருந்து 02 கைக்குண்டுகள், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள், மாடுகளை அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாள்கள், மன்னா கத்தி, பொல்லு, கயிறுகள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த வாகனத்தில் இருந்த 05 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இராணுவ விசேட படையின் ஓய்வுபெற்ற ராணுவ சிப்பாய் ஒருவர் தலைமையில் மாடு கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் கெஸ்பேவ, பிலியந்தலை, கஹத்துடுவ, பொரலஸ்கமுவ, மொரந்துடுவ, பண்டாரகம மற்றும் ஹிரண ஆகிய 07 பொலிஸ் பிரிவுகளில் சுமார் 50 மாடுகள் திருடப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட மாடுகள்
இவ்வாறு திருடப்பட்ட மாடுகள், வத்தளை, மாபோல மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள இறைச்சி கூடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, மற்றுமொரு கைக் குண்டு, 05 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல போலி வாகன இலக்கத் தகடுகளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ருக்கஹவில நிட்டம்புவ, பண்டாரகம வெல்மின்ன, கொழும்பன்ன மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் ,ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு
முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன்,
பண்டிகைக் காலத்தின் தேவை
பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன.
எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும்
உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார் ,ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசியாவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவத்தின் போரிட சென்றதன் பின்புலத்தில் ,இலங்கைக்கான ரஷ்ய இலங்கை தூதர் உள்ளார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த விடயம் கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மகிந்தவின் ஆட்ச்சியில் அவரது சகோதரர் உறவு காரர் ஒருவர்ரஷ்ய தூதரக இருந்து கோட்டாவுக்கு ஆதரவை வழங்கி வந்தார் என்பது குறிப்பிட தக்கது .
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள் ,அக்கரைப்பற்றில் உள்ள 241ஆம் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையின் முன்னாள் .
இருக்கும் வேம்பு மரத்திலிருந்து கடந்த ஒரு வாரகாலமாக பால்போன்ற திரவம் வழிந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஆரம்பத்தில் சாதாரணமாக வெளியேற தொடங்கிய பால்போன்ற பதார்த்தம் தொடர்ந்தும் வழிந்து வருவதுடன் போத்தல்களில் சேமிக்கும் அளவிற்கும் வெளியேறி வருவதை காண முடிகின்றது.
போத்தல்களில் பால் சேமிப்பு
சில காலங்களில் சில வேம்பு மரங்களிலிருந்து இது போன்ற பால் வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட கண்ணகி அம்மனின் ஆலயங்கள்
திறக்கப்பட்டு திருக்குளிர்த்தி உற்வசங்கள் நடைபெற்றுவரும் இக்காலத்தில் இவ்வாறு பால்போன்ற திரவம் வழிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது இதனை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சி
இந்த அதியச வேம்பு மரத்தின் பால் சுரக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .
இதில் வடியும் திரவம் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பலவித பேச்சுக்கள் ஊசலாடுகின்றன .
குறித்த வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் பால்போன்ற திரவம் இனிப்பாக உள்ளமையும் அப்பிரதேசத்தில் ஒரு வகை வாசம் வீசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,
“முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன்” என்றார்.
பாடசாலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நாடத்திய சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டின் சட்டத்தை தமது கையிலெடுத்து ,தமது அதிகார வரைமுறையை மீறி ,அப்பாவி மாணவர்களை போலீசாரை தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவங்களை நடத்தி படுகொலை புரிதல் ,மற்றும் ,சிறையில் கைதிகளை கொலை செய்தல் என்ற குற்ற சாட்டுக்கள் போலீசார் மீது வைக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மந்திரவாதியால் பெண் படுகொலை
மந்திரவாதியால் பெண் படுகொலை
மந்திரவாதியால் பெண் படுகொலை ,பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த மந்திரவாதி யின் ஆலோசனைக்கு அமைய அவரது சீடரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா என்ற 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த காலத்தில் நிறைய பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது, அதற்கு பரிகாரமாக, தொடர்ந்து சாந்திகர்மா பூஜைகள் செய்த போதும், தலை நிமிர முடியாத அளவுக்கு தன் குடும்பத்திற்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அந்த சூனியத்தை அகற்றி பாதுகாப்பைப் பெறுவதற்காக கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள மந்திரவாதியிடம் அண்மைக்காலமாக அவர் சென்றுள்ளார்.
லட்ச ரூபாய் செலவு
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து அந்த சூனியத்தை போக்க முயன்றுள்ளதுடன், மந்திரவாதியால் அந்த பெண்ணுக்கு தங்கத்திலான தாயத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், தனது தாய் காணாமல் போனதாக அவரது மகன் எஹலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த எஹலியகொடை பொலிஸார் சந்திரிகாவின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுள்ளனர்.
அங்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கவனித்த பொலிஸார், ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி காலை, அவரது தொலைபேசிக்கு அந்த எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன.
மேலும், அதே எண்ணுக்கு அவர் அழைப்பு விடுத்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்
குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் கிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார்
கண்டறிந்து, மேலதிக தகவல்களைத் தேடிய போது, குறித்த நபர் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்தில் தங்க தாயத்தினை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது குறித்த தாயத்து காணாமல் போன பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை கிரியெல்லவிற்கு அழைத்து வந்து கொன்றதாகவும், தான் மந்திரவாதியின் சீடன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூனியத்தை அகற்றுவதாக குறித்த பெண்ணுக்கு வழங்கிய தாயத்து பலனளிக்கவில்லை என பல தடவைகள் குறித்த மந்திரவாதியை தொலைபேசியில் அழைத்து திட்டியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் “தாயத்தை பலப்படுத்தி மீண்டும் தாயத்தை போடுவதாக மந்திரவாதி கூறியுள்ளதால் கிரியெல்லவுக்கு வருமாறு கூறியுள்ளார்.
பெண்ணால் நிறைய பிரச்சனைகள்
பின்னர் ஏப்ரல் 24ஆம் திகதி காலை அந்த பெண் எஹெலியகொடையில் இருந்து கிரியெல்லக்கு வந்துள்ள நிலையில், மந்திரவாதி தனது சீடனிடம், “இந்தப் பெண்ணால் நிறைய பிரச்சனைகள் உள்ளது, ஏதாவது செய் என்று கூறியுள்ளார்.
அதன்படி, குறித்த நபர், குறித்த பெண்ணிடம் குறுக்குவழி இருப்பதாக கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்து படுகொலை
கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க தாயத்தை எடுத்துக் கொண்டு, உடலை காட்டில் நிறைய கிளைகளுக்கு அடியில் மறைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், பொலிசார் குறித்த இடத்தில் இருந்து சடலத்தை மீட்டுள்ள போதும் விலங்குகளால் சடலம் சேதப்படுத்தப்பட்டதால் உடல் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்ட பின்னர் பொலிஸார் மந்திரவாதியையும் கைது செய்துள்ளனர்.
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை ,மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.
இன்று (19) காலை 42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மாலதெனிய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்த்த மூன்று நபர்கள் ஒரே இரவில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த மூவர் படுகொலைகானக காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
சடலங்களை மீட்ட போலீசார் தற்போது தொடர் கொலை குற்ற பின்புலத்தை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் சமீபகாலங்களாக இவ்வாறான கொலைகள் இடம்பெற்று நாட்டை உலுப்பி வருகிறது .
இந்த மர்ம படுகொலைகளின் பின்னால் மறைந்த்துள்ள அந்த நபர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியாது இலங்கை பொலிசார் திணறி வருகின்றனர்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை ,இலங்கையில் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு
இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை .
விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய
பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு
மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு .
வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர மேலும் தெரிவித்தார்.
மக்களுக்கு விடுக்க பட்டுள்ள இந்த அறிவிப்பால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை தேடி நகர் ஆரம்பித்துள்ளனர்
முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி
நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி .முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலியை செலுத்தியுள்ளார் .
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை(18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி
குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுததப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் .
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில்
அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு ,இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (18) வடக்கு -கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மன்னாரில் சனிக்கிழமை(18) காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்னம் அடிகளார் ஏற்றி மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
-அதனைத் தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை யொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தமிழின படுகொலையின் பதினைந்து ஆண்டுகள் ஆகியும் எதுவுமே மாறவில்லை.
இனப்படுகொலை நடைபெற்று 15 ஆண்டுகள்
இனப்படுகொலை நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிய போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை .
பல்வேறு விதமான ஆணைக் குழுக்கள் அனைத்தும் பயனற்று போனது.தமிழ் அரசியல்வாதிகளும் ஒழுங்கு முறையான திட்டமிட்ட தொடர் நடவடிக்கை எதையும் இனப்படுகொலை விவகாரத்தை முன்னோக்கி நகர்த்தவில்லை.
அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்கு முறையும் தனிமனித பேச்சு சுதந்திர அடக்கு முறையும் பயங்கரவாத விசாரணைகளும் அச்சுறுத்தல்களும் சிவில் செயற்பாட்டில் ராணுவ தலையிடும், பௌத்த
ஆக்கிரமிப்பும் ஏகாதிபத்தியமும் அரசியல் வேற்றுமைகளும் மாற்றுக் கருத்துக்களை முடக்கு வதும் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதும் என தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும், ஏற்படுத்தவில்லை .மாறாக தொடர்ந்து வலியை யே ஏற்படுத்தி வருகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் அர்த்தம் இல்லாத நடைமுறைச் சாத்திய
மற்ற தீர்மானங்களை காலத்துக்கு காலம் எடுத்ததே தவிர அதனால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எந்த மாறுதலும் நிகழவில்லை வெறும் காகிதங்களுடன் முடங்கிப் போனது.
மனித உரிமை ஆர்வலர்கள் என உலகின் பல பாகங்களிலும் இருந்து இங்கு வந்து எம்மை வேடிக்கை பார்த்தனரே தவிர நீதியை நிலைநாட்ட வில்லை.உலகின் எல்லா கனவான்கள் என வேடம் தரித்தவர்கள் சேர்ந்தே
இலங்கையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள். அவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.
இந்த உலகம் வலி யோனுக்கு நீதியையும் அறத்தையும் நியம நியதிகளுக்குள் ஒருபோதும் நிலை நாட்டியதாக எங்கும் வரலாறு இல்லை எல்லாம் நலன் சார்ந்த நிகழ் தகவுகளே.
அநீதியை விதைத்தவனிடம் நீதியின் நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியுமா? இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேசமும் எம்மை தொடர்ந்து ஏமாற்றுகிறது ஏமாற்றியது இனப்படுகொலையின் பங்கு தாரராகியது.
மனித உரிமை வாழ்வியல்
நீதி போதிக்கும் சம தர்மம் மனித உரிமை வாழ்வியல் உரிமை என உச்சரிக்கும் அநீதிக்கு துணை போகும் நீதி இல்லா நாதியற்ற போலி
கனவான்களே இனியாவது உங்கள் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இந்த உலகம் இனியும் உங்களை நம்ப தயார் இல்லை. 15 ஆண்டுகளில் உங்கள் ஏமாற்று வித்தைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்புகள் நன்கு உணர்ந்து விட்டன.
ஆகவே எமக்குள் நாம் பேதங்களை கடந்து இனத்துவ ,மொழித்துவ, வாழ்வியல் ,சுயநிர்ணய உரித்துக்களை பெற ஒருமித்து ஒருங்கிணைவதே ஒரே வழி.
அது தான் எமக்கான நீதியை நாமே பெற்றுக் கொள்வதற்கான வழியும் கூட. 15 ஆண்டுகள் வெறுமையாக பயனின்றி கடந்து விட்டது என்பதே கசப்பான உண்மை.
தமிழ் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்
இதற்கு வல்லான்மை அற்ற தமிழ் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே தமிழர் ஒரே தேசமாக திரள்வோம். அதுவே நமக்கான இன்றைய தேவை. இல்லையேல் முள்ளிவாய்க்காலில் மரணித்த ஆன்மாக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்காது.
அது நிகழாத வரை சிங்கள தேசம் நம்மை பிரித்தாளும் வேலையே தொடர்ந்து செய்யும். ஆகவே விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச துறையில் ஊழல் மோசடி
அரச துறையில் ஊழல் மோசடி
அரச துறையில் ஊழல் மோசடி ,ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார்.
அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள்
மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி,
“வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இதுவரை பொதுமக்களின் நலன்களுக்காகப் பாரிய பணிகளைச் செய்துள்ளது. வெளிப்படையான
மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க பொறிமுறையை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அது தொடர்பாக, அரசதுறையின் செயல்பாடு குறித்து, துறைசார் மேற்பார்வைக் குழு ஆய்வு செய்து வருகிறது.
உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை
இதன்போது உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைக் கட்டமைப்பு, அமைச்சுகள் போன்ற அனைத்து அரச நிறுவனங்களின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகளை ஆய்வு செய்கிறோம்.
ஆனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின்படி, சில நிறுவனங்களின் செயல்திறன் 23 வீதமாகவே இருக்கிறது.
இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, பல்வேறு பதில்கள் கிடைத்தன. எவ்வாறாயினும், இந்நிலைமையைத் தவிர்க்கும் வகையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில்
அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் உட்பட மக்களுடன் நெருக்கமாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதன்போது மக்களுக்கு எவ்வாறு திறமையான மற்றும் நட்புறவான சேவையை வழங்குவது என்பது குறித்து அவர்களுக்கு தெரிளிவூட்டப்பட்டது.
மக்களுக்கு தங்கு, தடையற்ற சேவை
மேலும், மக்களுக்கு தங்கு, தடையற்ற சேவையை வழங்க அரச ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான
அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது.
அடுத்த வருடமும் சம்பளம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் அரச ஊழியர்கள், மக்களுக்கான கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
கண்ணீருடன் வரும் மக்களை சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பும் வகை
அரசியல் பொறிமுறையால் கொள்கையை உருவாக்க முடியும். அரச நிறுவனத்திற்கு கண்ணீருடன் வரும் மக்களை சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பும் வகையில் அரச சேவை செயல்பட வேண்டும்.
மேலும், அரசதுறையில் ஊழல் மோசடிகளைத் தடுக்கும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை நடத்த அவசியமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள முறைகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.
அரச பொறிமுறை திறம்பட செயல்பட
அரசபொறிமுறை திறம்பட செயல்படுவதற்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். மேலும், வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வெளிப்படையான மற்றும்
பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி மேலும் தெரிவித்தார்.
மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
மழையுடனான வானிலை வௌ்ள அபாயம் ,நிலவும் மழையுடனான வானிலையினால் ஆறுகளை ஒட்டிய தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
அதி தீவிர மழையுடன் புறநகர் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மழையின் தீவிரம் மற்றும் அளவைப் பொறுத்தே வெள்ளத்தின் வலிமை மற்றும் அபாயம் தங்கியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட
ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
கடும் மழையினால் பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து
இதேவேளை, கடும் மழையினால் பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக நேற்று (17) இரவு 8.00 மணி முதல் தற்காலிகமாக
மூடப்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதி இன்று காலை 06.00 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் ,மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,
பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான
விசேட செயலமர்வு
விசேட செயலமர்வு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையில் அண்மையில் (13) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் குறித்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற
உறுப்பினர் மதுர விதானகே, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எம். வாகீசன், பூநகரி, கண்டாவளை, கரச்சி மற்றும் பச்சிளைப்பள்ளி ஆகிய
பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஆலோசகர் ஷியாமா சல்காது, இயலாமையுடைய
நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பதிரகே உள்ளிட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இயலாமையுடைய நபர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் தரப்பினர் உள்ளிட்ட பலரும் இங்கு பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும்
சேகரிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்துக்கள், ஆலோசனை மற்றும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், வடமாகாணத்தில் சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிலும் இயலாமையுடைய
நபர்களை வழிநடத்துவதற்கான குழுவொன்றை நியமிக்குமாறும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு
விசேட இடத்தை ஒதுக்குமாறும் கோரிக்கை
விசேட இடத்தை ஒதுக்குமாறும் கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இந்த நடைமுறை நாட்டின் சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சகல மாவட்டங்களிலும் ஆகக் குறைந்தது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு
பாடசாலையாவது இருக்கின்றபோதும், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் அவ்வாறான ஒரேயொரு பாடசாலையே காணப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்குள் காணியொன்றைப் பெற்றுக்கொடுத்தால் அவ்வாறானதொரு பாடசாலையொன்றை அமைப்பதற்கு பிரித்தானியாவில் வசிக்கும் ரஞ்சித் சந்திரசேகர என்ற இலங்கைப் புத்திஜீவி ஒருவர் விருப்பம்
தெரிவித்திருப்பதாகவும், இதற்கமைய உரிய காணியை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபர் மற்றும் சமூக சேவைகள் செயலாளரிடம் ஒன்றியத்தின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி
அத்துடன், தற்பொழுது செயலிழந்து காணப்படும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் புள்ளிவிபரங்களுக்கு அமைய ஒட்டுமொத்த சனத்தொகையில் 8.2% அதாவது ஏறத்தாழ 17 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களாக அடையாளம்
காணப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிராந்தியத்துக்கும் ஏற்ற வகையில் தரவுகளைப் பார்க்கும்போது அதில் வேறுபாடுகள் இருப்பதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தகவல்
நாடளாவிய ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சரியான தரவு முறைமை இல்லாததன் பிரச்சினையை அவர் இங்கு தெரியப்படுத்தினார்.
அத்துடன், இயலாமையுடைய நபர்கள் பொதுப் போக்குவரத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் இங்கு வருகை தந்திருந்த பலரும் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்நாட்டின் போக்குவரத்து
சேவையில் இணைப்பதற்காக பஸ்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பஸ்களில் இயலாமை உடைய நபர்களின் தேவைக்குரிய பஸ்களையும்
உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றியத்தின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இங்கு தெரிவித்தார்.
பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ ,ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் தேசியத்தின்பால் உள்ள தமிழ்
கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கலநாதன் தெர்வித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறா தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எமது பூர்வீகம் ஓடுக்கப்படுகின்ற எங்களது தேசத்திலே அதனை மீட்டெடுக்கின்ற வகையிலும் எங்களது நிலங்களை பாதுகாக்கின்ற
வகையிலும் எங்களது மக்களுடைய சுவிட்சமான வாழ்வை பெற்றுக் கொடுக்கின்ற வகையிலே தமிழீழ விடுதலை இயக்கம் தனது கடமையினை செய்து கொண்டிருக்கின்றோம்.
தமிழ் ஈழ விடுதலை
தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது ஒற்றுமையாக தமிழ் கட்சிகளை அணிதிரட்டுகின்ற செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதோடு
தேசியத்தினை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளினை உள்வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கின்றோம்.
அந்த வகையிலே எமது மக்களிற்காகவும், மண்ணிற்காக துப்பாக்கி ஏந்திய நாம் எம் மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் செயற்பாட்டினை தொடர்ந்து செய்வோம்.
மேலும் எமது வன்னி மாவட்டத்தை குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் பூர்வீகத்தை ஒழிக்கின்ற தென்னிலங்கை சக்திகளின் செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.
தமிழரசு கட்சி மீது வழக்கு
நீதிமன்றத்தில் தமிழரசு கட்சி மீது வழக்கு இருப்பதன் காரணமாக கட்சிகளை ஒன்றினைக்கும் எமது செயற்பாடு தொடர்பாக இதுவரை தமிழரசு கட்சியுடன் கலந்துரையாடவில்லை.
இவ்வழக்கு தொடர்பான முடிவு வரும் பட்சத்தில் அவர்களுடன் பேசி பொதுச் சின்னத்தில் இணைந்து அதன் ஊடாக அக்கட்சியின் ஊடக எல்லாவிதத்திலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்
ஜனாதிபதி தேர்தலின் முன்னர் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும் என செய்திகள் வருகின்றன.
எங்களை பொறுத்த வரை எமது மக்களின் பிரச்சனை ஓங்கி ஒழிக்க வேண்டியதே பிரதானமாகும். அந்த வகையிலே இரண்டு தேர்தல்களையும் சந்திப்பதற்கு தயாராகவே இருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் மாவட்டம்தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலே திருகோணமலையிலே பொலிஸார் அடாவடிதனமாகவும்
மூர்க்கத்தனமாகவும் பெண்களை இழுத்து மோசமாக நடாத்துகின்ற செயற்பாட்டிற்கு எமது கன்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளிற்கு தடை உத்தரவு போடுகின்ற யாராக இருந்தாலும் எமது மக்கள் மண்ணிக்க மாட்டார்கள்.
மக்களை மோசமாக நடாத்துபவர்கள்
அந்தவகையில் எமது மக்களை மோசமாக நடாத்துபவர்கள், எமது நிலங்களை அபகரித்தவர்களிற்கு ஜனாதிபதி தேர்தலின் போது எமது மக்கள் முகம்கொடுக்க மாட்டார்கள்.
அத்தோடு இவ்வாறான செயற்பாடு காரணமாகவே பொது வேட்பாளர் என்ற விடயம் மேலோங்கி இருக்கின்றது என்றார்.
ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் ,ரஷ்ய – உக்ரைன் போரின் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக
விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்யாவின் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்:
தற்போது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை
நடத்தி வருகின்றன. சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள்.
ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்ற கேள்விதான் தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி ரஷ்யாவில் 600-800 வரையிலானவர்கள் அல்லது அதற்கு அதிகமானவர்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவில் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவம்
எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், ரஷ்யாவில் இருக்கும் இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் போரில் பங்கேற்றிருப்பது
தொடர்பில் தகவல் வௌிப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி. ரஷ்யாவில் இவர்கள் தங்கியிருக்கும் பிரதேசம் தொடர்பில் அறிய முடியாமல் இருப்பதே தற்போதைய சிக்கலாகும்.
ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆள் கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக
அறிய கிடைத்துள்ளது. இந்த ஆள்கடத்தல் செயற்பாடுகளில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
எவ்வாறாயினும் ரஷ்யாவிற்கு ஆட்களை அனுப்புவது நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலைமையை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
பின்னர், இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடி அங்கு சென்றுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என நம்புகிறோம். அரசாங்கம் அதற்காக முழுமையாக அர்பணிக்கும்.
வெளிவிவகார அமைச்சர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையிலும், ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்கான விஷேட தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ரஷ்ய தூதுவர், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.































