150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான்

150இஸ்ரேலின் இலக்குகளை தாக்கிய ஈரான். இச்செயல் நாட்டின் இராணுவ தளங்கள் உள்ளிட்ட 150 இலக்குகளை குறிவைத்து ஈரான் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .

தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் தங்கியிருந்த இராணுவ தலைமையகத்தை அண்மித்த இராணுவ குடியிருப்புக்கள் சேதமாகின .

பல அடுக்குமாடி கட்டடங்கள் அழித்து ஒழிக்க பட்டன .,ஆடம்பர கார்கள் ,வீடுகள் என்பன சிதறி காணப்படுகின்றன .

ஈரான் இராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதலில், இதுவரை ஏழு இஸ்ரேல் இராணுவம் காயமடைந்துள்ளனர் .மேலும் இராணுவ குடும்பங்கள் பலர் பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் ஈரான் நடத்திய தாக்குதலில் எமக்கு இழப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது .

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதியாக இவை காணப்படுகிறது .

கட்டி வைத்து ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கட்டி வைத்து ஒருவர் படுகொலை

கட்டி வைத்து ஒருவர் படுகொலை

கட்டி வைத்து ஒருவர் படுகொலை ,இலங்கையில் நபர் ஒருவர் கட்டி வைத்த படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகி உள்ளது.

இத்தாலியில் வசிக்கும் நபரது காவல் அதிகாரியாக பணியாற்றிய 64 வயதுடைய நபரை தற்பொழுது கால் ,கைகள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ,அங்கிருந்த வாகனம் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவரது உறவின கூறி வந்தவரை இவரை கட்டி வைத்து படுகொலை செய்துவிட்டு ,அந்த வாகனத்தை திருடி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் ,ஆதரவான விசாரணைகளை குற்ற தடுப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள விடயங்கள் தெரிய வரவில்லை இவை மிகப்பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாண படுகொலை சம்பவங்கள் மற்றும் அவ்வாறான நிகழ்வுகள் தற்போது தமிழ் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ,மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தை திருடுவதற்காக இவ்வாறு கட்டி வைத்து இவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றது .

பொழுதும் தொடர்ந்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி செய்திகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு

அநுர ஜேர்மன் அமைச்சர் சந்திப்பு ,ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மன் பொருளாதார

ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார்.

உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்,

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் மற்றும்

சுகாதாரம் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஜேர்மனி வழங்கும் பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

அந்தப் பங்களிப்புகள் மற்றும் ஆர்வத்தையும் எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு

வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை ,சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

இன்று (13) பிற்பகல், உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.

தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர்.

பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார்.

அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச்

சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.

இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.

இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு இன்று (13) நீதிமன்றத்தால்

இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.

இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள்

வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள்

மன்னாரில் ஆபத்தான பொருட்கள் ,மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.

முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றியெறிந்த எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறிய அதே போன்ற வடிவமுடைய பொருளே மேற்படி தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.

இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் (3) கரையோர காவல் திணைக்களம், கடற்படை, இராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை

ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.

குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்றமையினால்

முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
Posted in இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள் உலக செய்திகள்

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்

மீண்டும் ஒரு இந்திய விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க,

மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக

ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.

ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.

இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா

இந்திய விமான விபத்துக்கு இவைதான் காரணமா

உலக அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கும் இந்திய விமானம் வெடித்து சிதறியமைக்கான காரணங்கள் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.

விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம்

அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.

அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.

விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.

விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.

இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.

விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது.

விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.

ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.

அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும்.

ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது.

ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.

ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், “அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன.

அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு.

எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா?

என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.

ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர்.

என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.

ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.

இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்
Posted in இலங்கை செய்திகள்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர்

விமானத்தில் பலியான ஒரு குடும்பத்தினர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு ஜூன் 12 புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி

தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.

Pratik Josh – கடந்த ஆறு வருடமாக இலண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.அவரது மனைவி டொக்டர் komi vyas. 2 நாட்களுக்கு முன்னதாக – வேலையை ரிசைன் பண்ணிருக்காங்க.. கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு இலண்டனில் செட்டில் ஆகும்

முடிவில் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இப்போது ஐந்து போரும் இல்லை அவங்க இன்றைக்கு flight கிளம்பிய நேரம் எடுத்த Last Selfie வெளியாகியுள்ளது.

இலங்கையின் கண்டிக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட குடும்பத்தின் படம் சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்தக் குடும்பம் எப்போது இலங்கைக்கு விஜயம் செய்தது என்பது இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் லண்டன் சென்று குடியேற முடிவு செய்து விமானத்தில் பயணித்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம்

பனஸ்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரின் கணவர் பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உட்பட மொத்தமாக 3 குழந்தைகள் இருக்கின்றன. இதனால் லண்டனில் இருந்து அவ்வப்போது ராஜஸ்தான் வரும் பிரதிக் ஜோஷி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மொத்தமாக

லண்டனில் குடியேற முடிவு செய்து அதற்கான அனைத்து விஷயங்களையும் செய்து, குடும்பத்தினரை அழைத்து செல்வதற்காக இந்தியா வந்துள்ளார்.

இதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவர் கோமி வியாஸ் தனது பணியையும் ராஜினாமா செய்து லண்டனில் குடியேற தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் லண்டன் புறப்பட்ட கோமி வியாஸ், பிரதிக் ஜோஷி, மகள் மிராயா, மகன்கள் நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோர் விமானத்தில் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.

ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதால், குடும்பத்தினர் 5 பேரும் உயிரிழந்தனர். புதிய வாழ்க்கையை லண்டனில் தொடங்க புறப்பட்ட குடும்பத்தினர் மொத்தமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது

சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விமான விபத்தில் பலியானோரின் உடல்கள் இன்னும் முழுமையாக யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பொருட்கள் ,சமீபத்தில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3

கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் கூறுகையில், அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்தார்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம்

உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட எச். எம். பி. அபேகோன் மேலும் தெரிவித்தார்.

அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, கரையொதுங்கும்

பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்
Posted in இலங்கை செய்திகள்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் ,தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை குற்றவியல் முறையில் தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துசித ஹல்லொலுவ இன்று (ஜூன் 13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னாருவ பகுதியில் உள்ள வயல் ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) மாலை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஏறக்குறைய 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு

யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு

யாழ்மாநகரின் ஆட்சியை தனதாக்கிய தமிழரசு ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (13) யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண

உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும்,

தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்

முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது
Posted in இலங்கை செய்திகள்

சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது

சீ.விக்கினேஸ்வரனை காப்பாற்ற முடியாது

வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக்

கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

எதிர்வருங்காலத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை எனத் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்

நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை (11) கைச்சாத்திட்டனர்.

இதுபற்றி அன்றைய தினம் கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன்,

கடந்த பொதுத்தேர்தலின்போது தாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும், இருப்பினும் தமது சங்கு சின்னத்திலேயே போட்டியிடவேண்டும்

என அவர்கள் நிபந்தனைகளை விதித்ததாகவும் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், அந்நிபந்தனைகளுக்கு உடன்படிமுடியாது என்பதால் தாம் தனித்து செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு உள்ளுராட்சிமன்றங்களில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதை விடவும், தமிழரசுக்கட்சியுடன் இணைவது தமக்கு அதிக சந்தோஷத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,

சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

‘வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஜுன் 14 ஆம் திகதி அப்போதைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது’ என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி,

அந்நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாற்றை விக்னேஸ்வரன் மறந்துவிட்டதாகத் தெரிவித்த சித்தார்த்தன், எதிர்வருங்காலத்தில் தமிழரசுக்கட்சியினால்

விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றார்.

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது
Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது ,இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள்

எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும்

இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார்.

தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது.

இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம்.

பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன.

கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல்

எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.

அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக

இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு

பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் பேக்கரி உற்பத்திகளுக்கு விலைகள் அதிகரிக்கக் கூடுமோ என அச்சம் எழுந்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை எனவும்

விலைகளை அதிகரிக்க வேண்டாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாண் விலை அதிகரிப்பு என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாதாரச் சம்பவமாகும்.

இது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரச் செலவுகள், மற்றும் மக்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடியது.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், பாண் விலை உயர்வுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.

பேக்கரி உற்பத்திக்கான விலைகள் அதிகரிக்கப்படுமாயின்,

சாதாரண குடும்பங்களுக்கு பாண் போன்ற அடிப்படை உணவுப் பொருள்களை வாங்கவே கடினமாகும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மூன்று நேர உணவையும் தவிர்க்கும் நிலை உருவாகும்.

சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களில் நாள் ஒன்றுக்கு கிடைக்கும் வருமானம் உணவுக்கே போதாத அளவில் இருக்கும்.

யாழ் மாநகர சபை முதல்வர் யார்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மாநகர சபை முதல்வர் யார்

யாழ் மாநகர சபை முதல்வர் யார்

யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும்.

இம்முறை எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்

முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் எலிக் காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் எலிக் காய்ச்சல்

நாட்டில் எலிக் காய்ச்சல்

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக

சமூக சுகாதார நிபுணர் டொக்டர் துஷானி தபரேரா தெரிவித்தார்.

இந்த நோய் ஒரு பாக்டீரியாவால் பரவுகிறது என்றும், இந்த பாக்டீரியா பொதுவாக பாலூட்டிகளின் சிறுநீர் பாதையில் வாழ்கிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்குள் செல்லும்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறைகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கொவிட் ஒருபக்கம் பரவுவதாகவும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுவரும் இந்நிலையில், தற்போது எலிக் காய்ச்சல் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் மரணங்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் மரணங்கள்

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட

மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,

“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.

இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.

அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் பத்திற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவற்றையும் அகழ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.

முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில்

மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன

சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன

சீ விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் திடீரென சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதோடு சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் செய்யப்பட்டுள்ளது.

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும்

ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.