Tag: கொரோனா தொற்று
கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா
கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா
குவைட்டில் இருந்து வந்து கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்
ஒருவருக்கு மீண்டும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று அனுராதபுரம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.
குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர்
கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் நேற்று
முன்தினம் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்றிரவு 11.30 இற்கு விடுத்த அறிக்கையின்
பிரகாரம் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின்
எண்ணிக்கை 514 ஆகும். மொத்தமாக 366 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். ஒன்பது பேர் நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
அதேவேளை கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்து நேற்று 23 பேர்
வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிச் சென்றார்கள். இவர்கள் ஐடிஎச்,
வெலிகந்த, முல்லேரியா, இரணவில ஹோமாகம அரசினர் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்.
கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 52 ஆகும்.
கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 751ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக 33 பேர் இனங்காணப்பட்டனர்.
நேற்று புதிதாக அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 நோயாளிகளில் 31 பேர் கடற்படையைச்
சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மற்ற இரண்டு நோயாளிகளும் கடற்படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளான இரண்டு நோயாளிகளும் 13 வயது பிள்ளை மற்றும் 70 வயது பெண் என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைவாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 751ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் 549 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் நாட்டில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி இதுவரையில் 194 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்தார். அதற்கமைய இலங்கையில் கொரோனா
தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயிர்வடைந்துள்ளது.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 137 பேர்
கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்தள்ளது.







