Posted in இலங்கை செய்திகள்

போலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது

போலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது

இலங்கையில் ஆளும் ஆட்சியின் அதிவிஷ்டா உத்தரவின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும்

முற்றுகை தேடுதல் நடவடிக்ககையில் சுமார் 502 பேர் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போதை வாஸ்து பாவனையில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர்

தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      வெள்ளவத்தையில் பற்றி எரியும் கடை – குவிக்க படும் தீயணைப்பு படை

      வெள்ளவத்தையில் பற்றி எரியும் கடை – குவிக்க படும் தீயணைப்பு படை

      இலங்கை வெள்ளவத்தை பகுதியில் உள்ள கடை தொகுதி ஒன்றில் திடீரென பற்றி பிடித்த தீயினால் கடையொன்று பலமாக எரிந்த படி உள்ளது

      சம்பவத்தை அறிந்த தீயணைப்பு படைஒயினர் விரைந்து வந்த வண்ணம் உள்ளனர்

      இந்த தீயினால் ஏற்பட்ட முழுமையான செத்த விபரங்கள் உடனடியாக தெரியவர்வில்லை


      இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – கொதிப்பில் மாணவர்கள்

          யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – கொதிப்பில் மாணவர்கள்

          யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை

          வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை காணப்படுகிறது.

          யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகொன்றை நிறுவி அதனூடாக சுற்றுலா, விருந்தோம்பல் முகாமைத்துவம்

          கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான பாடத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வணிக, முகாமைத்துவ பீடச் சபை,

          பல்கலைக்கழக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உள்ளகத் தர நிர்ணய அலகின் பரிந்துரையுடன் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனால் 2019 ஆம்

          ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

          பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அதன் 1023 ஆவது கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

          அதன்படி 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழகங்களில் 2019 / 2020 கல்வி ஆண்டுக்கு சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்

          கற்கைநெறியைத் தொடர்வதற்கான விண்ணப்பமும் பல்கலைக்கழக அனுமதிகளுக்கான கையேட்டின் மூலம் கோரப்பட்டிருந்தது.

          சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவ கற்கைநெறி சிறப்புப் பட்டமானது வியாபார நிருவாகமானி (சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்) ஆக 4 ஆண்டுகள் கொண்ட முழுநேரக்

          கற்கையாகவும், 4 வருட காலத்தில் முதலிரண்டு வருடங்களும் முகாமைத்துவ பீடக் கற்கைகளும், 3 ஆம் ஆண்டின் போது

          பல்கலைக்கழக நடைமுறைகளுக்கமைவாக சிறப்புத் துறையை மாணவர்கள் தெரிவு செய்யப்படலாம் எனவும் வரையறை செய்யப்பட்டிருந்தது.

          கற்றை நெறிக்கான கட்டடம் உட்பட்ட பௌதிக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக உயர்கல்வி அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு உட்பட்ட நிதியீட்டங்களும் பெறப்படக் கூடியதாக

          இருந்தது. அத்துடன் சுற்றுலாத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவரும் கற்கைநெறியின் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

          எனினும், பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகு ஆரம்பிக்கப்படாமல் இழுபறி

          நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. நிலமைகளை ஆராய்ந்து கற்றல்

          நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்வதற்காக பேரவையினால் இரண்டு முன்னாள் துணை வேந்தர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

          ஒரு பீடத்தின் உள்ளக முரண்பாடுகளினால் எமது பகுதிக்கு வர வேண்டிய வளங்கள் வீணாய்ப் போகின்றன என்று வணிக

          முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

              வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
              Posted in இலங்கை செய்திகள்

              சிவாஜிலிங்கம் பொலிஸாரால் திடீர் கைது

              சிவாஜிலிங்கம் பொலிஸாரால் திடீர் கைது

              தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

              வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

              பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

              கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில்

              ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  விசேட விமானத்தில் -இலங்கை வந்திறங்கிய துருக்கிய கடற்படையினர்

                  விசேட விமானத்தில் -இலங்கை வந்திறங்கிய துருக்கிய கடற்படையினர்

                  காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சேவையாற்றுவதற்காக

                  துருக்கியில் இருந்து 24 கடற்படையினர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

                  துருக்கியின் செடான் நகரில் இருந்து விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் வருகை தந்துள்ளனர்.

                  இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                      சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
                      Posted in இலங்கை செய்திகள்

                      இன்றைய வானிலை எச்சரிக்கை

                      இன்றைய வானிலை எச்சரிக்கை

                      மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று

                      காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

                      ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்

                      அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                      நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்

                      வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை

                      மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு

                      40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

                          Posted in உலக செய்திகள்

                          மக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்

                          மக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்

                          அமெரிக்காவில் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் வேகமாக வந்த யாக்குவார் கார் ஒன்று புகுந்துள்ளது .


                          இதன் பொழுது இருவர் பலியாகினர் மேலும் இருவர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த குற்ற செயலை புரிந்த சாரதி

                          காவல்துறையினரால் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ள பட்ட படுகொலை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

                          கோபத்தில் உறைந்த மக்கள் கார் மீது தாக்குதலை நடத்தினர் ,ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

                          போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை

                              வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை

                              கடந்த சனிக்கிழமை மதியம் 3,20 மணியளவில் children’s play park in

                              London பகுதியில் நபர் ஒருவர் சுட்டு படுகொலை
                              செய்ய பட்டுளளார்

                              பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய நபர் சம்பவ இடத்திலே துடி துடித்து பலியானார் .

                              இந்த சுட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,

                              காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                              தற்போது பிரிட்டனில் குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றன ,குற்றங்களை தடுப்பதற்கு போலீசார்


                              அதி தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் மேற்படி சம்பவங்களை தடுக்க முடியாது

                              பொலிசார் தினறி வருவதை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கிறது குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள்

                                  சிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி

                                  சிரியாவில் அரச இராணுவ தாக்குதல் 40 கிளர்ச்சி படைகள் பலி

                                  சிரியாவில் அரச இராணுவத்தினரின் தாக்குதலில் சிக்கி கிளர்ச்சி படையை சேர்ந்த நாப்பது பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                  இவ்வாறு படுகொலை செய்ய பட்டவர்கள் மீது சிரியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்தினர்

                                  அதன் தாக்குதல் எதிரொலியே இந்த இழப்பு என தெரிவிக்க பட்டுள்ளது

                                  இட்லி பகுதியில் துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் ரசியா ஆதரவுடன் போராடி வரும் சிரியா அரச இராணுவத்திற்கும் இடையில் பலத்த மோதல்கள் வெடித்து பறப்பது குறிப்பிட தக்கது

                                  சிரியாவில் அரச
                                  சிரியாவில் அரச
                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு

                                      பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு

                                      பிரிட்டனில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வியாழக்கிழமை முதல் வங்கிகள்

                                      வழங்கி வரும் ஓவர்டிராப் overdraft கடன் உதவி கட்டண தொகை

                                      இரட்டிப்பாக அதிகரிக்கிறது

                                      தற்போது நபர் ஒருவருக்கு ஐநூறு பவுண்டுகள் வழங்கிட அனுமதி வழங்க

                                      பட்டுள்ளது ,ஆனால் அதன் கட்டண வட்டி தொகை இரட்டிப்பாக அதிகரிக்க படுகிறது

                                      தேவையற்று பணத்தை பெற்று கொள்ளும் மக்களே யாக்கிரதை மாத

                                      இறுதியில் உங்களுக்கு பெரும் சுமை காத்துள்ளது ,தப்பித்து கொள்ளுங்கள் ,விழித்து கொள்ளுங்கள்

                                      Changes to overdraft charges are being brought in next week – so people with overdrafts are being urged to take action.

                                      From next Thursday, July 9, banks will start to double their charges

                                      பிரிட்டன் மக்களே
                                      பிரிட்டன் மக்களே
                                          Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                          லண்டன் கட்போர்ட்டில் ஐயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே

                                          இன்று சனிக்கிழமை லண்டன் கட்போர்ட்டில் இந்துமத குருக்கள் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை புரிந்துள்ளார்

                                          தற்போது லண்டன் கார்போர்ட் CATFORD பகுதி ஆலயத்தில்

                                          பணியாற்றி வந்த குருக்களே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

                                          தீபன் என அழைக்க படும் குருக்கலான இவர் குடும்பத்தில் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளதால் .

                                          பெரும் மன அமைதி குன்றிய நிலையில் காணப்பட்டார் ,அவ்விதமான நிலையில் குடும்பத்தில் எழுந்த அதிக முரண்பாடுகள் காரணமாகவும் ,இவரது தனி நபர் போக்கின் விளைவாகவும் பெரும்

                                          மன அழுத்தத்தில் இருந்த இவர் இவ்விதம் லண்டன் கட்போர்ட் பகுதியியல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

                                          மேலும் இவரது தற்கொலையை அடுத்து பண சேகரிப்பில் சில குழுக்கள் ஈடு பட்டுள்ளனவாம் ,

                                          லூசியம் சிவன் ஆலயத்தில் கடந்த எட்டு வாரங்களுக்கு முன்னதாக கோபி குருக்கள் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்தார் ,அவரது

                                          அண்ணன் முறையானவரே இவர் என தெரிவிக்க படுகிறது ,இவர் முன்னர் கெவின்றி பகுதி ஆலயம் பணியாற்றியவர்

                                          அங்கிருந்து பணியில் இருந்து விலக்க பட்ட பின்னர் கட்போர்ட் பகுதியில் பணிபுரிந்து வசித்து வந்துள்ளாராம்

                                          அவ்விதமான ஒருவரே இந்த திடீர் துன்பியல் நிகழ்வை மேற்கொண்டுள்ளார்

                                          ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பி இவ்விதம் இறந்துள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இதற்குள் நிலவும் மர்மத்தை

                                          கண்டறிய வேண்டிய கடப்பாட்டில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

                                          இவரது மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லூசியம் பகுதியில் இடம்பெற்ற இரு

                                          குருக்கள் தற்கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,கொரனோ காலத்தில் கடும் மன அழுத்தம்

                                          காரணமாக இடம்பெற்ற நான்காவது தற்கொலை இதுவாக தமிழர்கள் மத்தியில் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது

                                              போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது

                                              போதைபொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்புகளைப் கொண’டிருந்ததாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்

                                              11 அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

                                              போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளைப்பேணிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் போதைப்பொருள்

                                              தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர், இரு சாஜன் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருமாகும்.

                                              இவ்வாறு கைது செய்யப்பட 11 சந்தேகநபார்களில் ஒரு தொகை போதைப்பொருளை போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மீள

                                              விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                              இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேலதிகவிசாரனைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு

                                              திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

                                              பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குறித்த அதிகாரிகளை எதிர்வரும் (ஜூலை 08) புதன்கிழமை வரை

                                              தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  முககவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2000 பொலிஸார் விஷேட கடமையில்

                                                  முககவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2000 பொலிஸார் விஷேட கடமையில்

                                                  கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள்

                                                  தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

                                                  பொலிஸ் சீருடைக்கு மேலதிகமாக சிவில் உடையிலும் புலனாய்வு அதிகாரிகளும் இந்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளில்

                                                  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

                                                  சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அசமந்த நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற

                                                  தகவல்களை அடுத்தே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                                                  இதேவேளை, முககவசங்களை அணிந்த நிலையில் குற்றச் செயல்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் பொலிஸார் மேற்படி விஷேட பொலிஸ் குழுக்கள்

                                                  கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்படி குழு மேற்கொண்டுள்ளன.

                                                  இவ்வாறு முககவசங்கள் அணியாத சட்டத்தை மதிக்காத சுமார் 2731 நபர்கள் தமது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின்

                                                  கண்காணிப்பின் கீழ் சுயதனிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

                                                  அத்துடன் முககவசம் இல்லாத நபர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் சுமார் ஒரு இலட்சம் முககவசங்கள் இலவசமாக

                                                  விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலுள்ள சிறிய பாடசாலைகளுக்கு தேவையான முககவசங்கள் சமூக பொலிஸ்

                                                  பிரிவின் உதவியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்

                                                  தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்

                                                  யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக வாக்களித்து தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

                                                  முன்னைய காலத்தில் நடந்த கேலிக்கூத்தான தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சிலர் தெரிவு செய்யப்பட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.

                                                  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நேற்று (03) வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                                  இவ்விடயம் தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

                                                  நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாகும். இதில் மக்களுடைய தீர்ப்பு என்பது அவசியம். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நடந்த எந்த ஆட்சி முறைகளிலும் இல்லாத வித்தியாசமான ஆட்சிமுறை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

                                                  அதாவது இராணுவ ஆட்சி இன்று தலை தூக்கியுள்ளது. முன்னர் எப்போதும் இராணுவ ஆட்சி இருந்தது இல்லை. 2015 ஆண்டு நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த ஆட்சி முன்னேற முடியாமல் கவிழ்ந்து பழையபடி முன்னர் ராஜபக்ஷ ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது. ஆனால் பழையபடி ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது என்பதை சரியான விளக்கமாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது.

                                                  தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளது.

                                                  அண்ணன் 24 வயதில் பாராளுமன்றத்திற்கு சென்றவர். இப்போது 50 வருட பாராளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

                                                  பாராளுமன்ற ஜனநாயகத்தில்தான் மஹிந்த பயிற்றப்பட்டனர். அவரை ஜனநாயகவாதி என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவருடைய பயிற்சி முழுவதும் பாராளுமன்றத்தில்தான் இருந்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயிற்சி முழுவதும் இராணுவத்துடன் தொடர்பட்டே இருந்தது.

                                                  இராணுவத்திலே கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, மாற்று கருத்துக்கு உரிமை கிடையாது, கலந்துரையாடலுக்கு உரித்து இருக்காது. கட்டளையிடுவதும் இடப்படும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியதுமே இராணுவத்தின் பயிற்சியில் உள்ளது.

                                                  இவ்வாறான பின்புலத்தில் இருந்து வந்தவர் இன்று நாட்டில் தலைவராக வந்துள்ளார். அதனால்தான் இன்றைய ஆட்சி முறை இராணுவமயப்பட்டதாக உள்ளது. குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் செயலணிகளுக்கும் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் நியமிக்கின்றார்.

                                                  இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியும் இப்போது இரண்டாக உடைந்து போயுள்ளது.

                                                  எனவே அரசை எதிர்க்க சக்தி இல்லாத எதிர்கட்சிதான் நாட்டில் உள்ளது. தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இதுவரை காலமும் ஒரே மாதிரியானதாகத்தான் இருந்து வருகின்றது.

                                                  56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஸ்டி தீர்வுக்கே வாக்களித்து வந்தார்கள். சமஸ்டி என்பது நீண்ட கால ஜனநாயக தீர்ப்பாகும். அதில் எந்தவித சலனமும் இடையில் ஏற்படவில்லை. 56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டுமே ஆணைகொடுத்து வந்துள்ளார்கள்.

                                                  சமஸ்டி என்பதுதான் மக்கள் தந்த ஆணை. இருப்பினும் 77 ஆம் ஆண்டு தேர்தலின் போது தனிநாட்டுக்கான ஆணையையும் கொடுத்தார்கள். யுத்த காலத்தில் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாத பாரளுமன்றமும் இருந்திருக்கின்றது.

                                                  அல்லது கேலிக்கூத்தான் தேர்தல்களில் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தமது பிரதிநிதிகளை மக்கள் வாக்களித்து தெரிவு செய்யலாம் என்ற சூழ்நிலையில் எங்களுடைய ஒரே நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது அவசியமானது.

                                                  இப்போது மாற்று கட்சிகள் என்று சொல்லி பலர் முன்வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதனால் மாற்று அணி ஒன்று வேண்டும் என்று கூறி வருகின்றவர்களின் எதிர்பார்ப்பு தமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.

                                                  தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்பது முழுமையான பொய்யான பிரச்சாரமாகும். விசேடமாக கடந்த 5 ஆண்டில் ஒரு அரசியல் தீர்வினை கொண்டுவருவதற்கு முயற்சித்தோம்.

                                                  அதிகாரப்பரவல் தொடர்பில் அனைத்து கட்சிகளும் இணங்கிய வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு நிறைவேறாவிட்டாலும், அது முக்கியமான மயில் கல்லாகும். மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு விடிவு பெற்றுக் கொடுத்துள்ளோம்.

                                                  குறிப்பாக இராணுவத்திடம் இருந்த ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் சில மாதங்களுக்குள்ளேயே 3 இல் 2 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

                                                  முழு நாட்டையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது மற்றைய பிரதேசங்களில் நிகழாத அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன. சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டது. பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு பலவிதமான அபிவிருத்திகள் இங்கு நடத்திருக்கின்றன.

                                                  பல விடயங்கள் இன்னும் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது என்பதும் உண்மை. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது முழுமையான பொய்யாகும். இனிவரும் காலத்தில் விசேடமாக ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

                                                  குறிப்பாக தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீட்சியாகும். மக்களுக்கு அரசியல் தீர்வு வரும் வரைக்கும் காத்திருக்காமல் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்.

                                                  இவ்வாறு வாழ வேண்டுமாக இருந்தால் மக்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தி நிற்கக் கூடாது. அப்படியான மாற்று பொருளாதார கட்டமைப்பை கொண்டு வருவதற்கு பல முன்னெடுப்புக்களை செய்துள்ளோம்.

                                                  தேர்தலுக்கு பின்னர் அத்திட்டங்களை அமுல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதில் முக்கியமான விடயமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.

                                                  இளைஞர்களுக்கு வேலை இல்லாதுவிட்டால் அவர்கள் வெளிநாட்டிற்குத்தான் போவார்கள். அரசியல் தீர்வை கவனிக்கும் போது சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காக வேலை செய்வோம்.

                                                  இவற்றை செய்ய வேண்டுமானால் நாங்கள் பலமான அணியாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். வேறு அணிகளுக்கு வாக்குகள் போகுமாக இருந்தால் அவை வீணாகவும், சிதைவடைந்து போகும் வாக்குகளாகும் என்றார்.

                                                  தமிழ் தேசியக் கூட்டமைப்பை 10 ஆசனங்களுக்கு அடக்கிவிட்டு ஏனைய கட்சிகளில் இருந்து ஒருவர் இருவர் பாராளுமன்றத்திற்கு சென்றால் அதைவிட பலவீனமான சூழல் என்று ஒன்று இருக்க முடியாது.

                                                  எனவேதான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும். என்றார்.

                                                  Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                  லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல் நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை

                                                  லண்டனில் ,ரயில் நிலையம் ,தேவலாயங்களில் குண்டு தாக்குதல்

                                                  நடத்த இருந்த முஸ்லீம் பெண்ணுக்கு சிறை

                                                  மேற்கு லண்டனைச் சேர்ந்த 37 வயதான சஃபியா ஷேக் (25.05.83) பிரிட்டனில்

                                                  உள்ள தேவலாயங்கள் ,மற்றும் நிலக்கீழ் சுரங்க நிலையங்கள் ,உணவகங்கள்

                                                  என்பனவற்றின் மீது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திட முயன்ற

                                                  முஸ்லீம் பெண் ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டார்

                                                  இவ்வாறு கைது செய்ய பட்டவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையில்

                                                  பதின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

                                                  இவ்வாறு இந்த தாக்குதல் நிகழ்த்த பட்டிருந்தால் பல நூறு மக்கள் பலியாகி

                                                  இருப்பார்கள் என தெரிவிக்க படுகிறது ,பிரிட்டன் உளவுத்துறையின்

                                                  இந்த செயல் பாடுகள் காரணமாக இவ்விதமான தாக்குதல்கள் முறியடிக்க பட்டு மக்கள் காப்பாற்ற பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                                  லண்டனில் ரயில் நிலையம்
                                                  லண்டனில் ரயில் நிலையம்
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை

                                                      உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை

                                                      2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம்

                                                      இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட விஷேட பொலிஸ் விசாரணைப் பிரிவில்

                                                      நடைபெற்று வந்த விசாரணைகள் போதிய சாட்சியங்கள் இல்லாதினால் பூர்த்தியடைந்துள்ளன.

                                                      இதுதொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

                                                      2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்தடி சில்வாவிடமும்

                                                      உலகக்கிண்ண போட்டியின் அப்போதைய அணித் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்காரவிடமும் பெறப்பட்ட

                                                      வாக்குமூலங்களின் பிரகாரம் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக

                                                      பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

                                                      இவ் விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நேற்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

                                                      இப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,முன்னாள் தெரிவுக்குழு த அரவிந்த டி சில்வா மற்றும் குமார்


                                                      சங்கக்கார ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கொரோனா நோயால் – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக உயர்வு

                                                          கொரோனா நோயால் – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக உயர்வு

                                                          கொரோனா வைரசு தொற்றினால் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளது.

                                                          COVID-19 பரம்பலின் தரவுகள்

                                                          புதுப்பிக்கப்பட்டது 2020-07-04 09:31:59

                                                          2069
                                                          உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                                          195
                                                          சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                                          0
                                                          புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                                          1863
                                                          குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                                          11
                                                          இறப்பு எண்ணிக்கை

                                                          Posted in உலக செய்திகள்

                                                          பாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                                                          பாரிய நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்

                                                          Puerto Rico ,-5.3 hit just southwest பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது

                                                          ,இதனால் அவ்வேளை வீடுகள் ,கட்டடங்கள் என்பன குலுங்கின இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                                                          இதுவரை எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள்

                                                          தெரிவிக்கின்றன ,எனினும் முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை

                                                              Posted in உலக செய்திகள்

                                                              கனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

                                                              கனடாவில் ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – மூவர் பலி

                                                              கனடாவில் இலகுரக விமானம் ஒன்று plane crash south of Edmonton. பகுதியில்

                                                              உள்ள நீர் ஏரியில் வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுதும் அதில் பயணித்த மூவர் பலியாகினர்

                                                              மேற்படி விமான விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


                                                              நீர் ஏரியில் மூழ்கிய விமானத்தில் இருந்து சடலங்கள் மீட்க பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                              கனடாவில் ஆற்றுக்குள்
                                                              கனடாவில் ஆற்றுக்குள்
                                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                  இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்

                                                                  இன்றில் இருந்து பிரிட்டனில் சாராய கடைகள் ,திறக்க அனுமதி -குஷியில் குடி மகன்கள்

                                                                  பிரிட்டனில் இன்றில் இருந்து இரவு வரை ,விடிய விடிய சாராய கடைகள் ,

                                                                  பார்கள்,நைட் கிளப்புக்கள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது

                                                                  ,அதாவது மீள இயல்பு வாழ்வுக்கு பிரிட்டன் இயங்கிட அனுமதி வழங்க பட்டுள்ளது

                                                                  இதனால் குடி மகன்கள் ரெம்பவே குஷியில் உள்ளனர் ,டாக்சி ,மற்றும் உணவகங்கள் என்பனவும் குஷியில் உள்ளன

                                                                  கொரனோ வைரஸ் நிலவியதின் பின்னர் இந்த உத்தரவு கிடைத்து இருப்பது

                                                                  மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எனினும் தொடர்ந்து

                                                                  கொரனோ நோயினால் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                                  இன்றில் இருந்து
                                                                  இன்றில் இருந்து