Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸில் சிக்கி கர்ப்பிணி பெண்களை அதிகம் பலி – தடு மாறும் அரசு

கொரனோ வைரஸில் சிக்கி கர்ப்பிணி பெண்களை அதிகம் பலி – தடு மாறும் அரசு

உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொடிய கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி பல நாடுகள் பாதிக்க பட்டுள்ளன

அவ்விதம் தற்போது கென்யா நாட்டில் பரவி வரும் இந்த நோயில் சிக்கி

கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது

மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது குறித்த நாடு திணறிவருகிறது

Posted in உலக செய்திகள்

சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்

சுரங்க பாதைக்குள் புகுந்த வெள்ளம் – மிதக்கும் வாகனங்கள்

நில கீழ் சுரங்க குகை ஒன்றுக்குள் திடீரென வெள்ளம் புகுந்ததினால் அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது

மேற்படி வெள்ள நீரை வெளியேற்றும் நகர்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் ,அந்த வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை

,மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடு பட்ட வண்ணம் உள்ளனர்

இதனால் அவ்வழி போக்குவரத்து முற்றாக பாதிக்க பட்டுள்ளது

சுரங்க பாதைக்குள்
சுரங்க பாதைக்குள்
      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் -முன்னாள் பெண் போராளிக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

      யாழில் -முன்னாள் பெண் போராளிக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

      யாழ் வல்லிபுர பகுதியில், சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட டுவுவுநு பயங்கரவாத அமைப்பின் மாலதி படைப் பிரிவின்

      முன்னாள் போராளிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கு உதவியுள்ளது

      யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவின் வழிக்காட்டலின் கீழ் நன்கொடையாளரான திரு

      குமார வீரசூரியவின் நன்கொடை நிதியுதவியுடன் இந்த வீட்டின் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

      முன்னாள் பெண் போராளியான திருமதி சிவரஞ்சன் நந்தனிக்கு வசிப்பதற்கு வீடில்லா குறையை அவதானித்து இவருக்கு உதவும்

      முகமாக இராணுவத்தினரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேஹொடவின் வழிக்காட்டலின் கீழ் 551 ஆவது படைத்

      தலைமையகத்தின் கண்காணிப்பின் கீழ் 16 ஆவது டுiபாவ ஐகெயவெசல (ளுடுடுஐ) காலாட் படையணியினால் இந்த வீட்டை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

      இம்மாதம் (20) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் நன்கொடையாளரான திரு

      குமார வீரசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் இந்த புதிய வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.


      இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் படையினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

      யாழில் -முன்னாள் பெண்
      யாழில் -முன்னாள் பெண்
          Posted in இலங்கை செய்திகள்

          மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நபர் கண்டுபிடிப்பு

          மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நபர் கண்டுபிடிப்பு

          முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

          வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

          பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அந்நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


          திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதான இவர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

          சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவரது நிழற்படம் மற்றும் தகவல்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியிருந்தனர்.

          இவர் கொழும்பு பிரதான வீதிக்கு எப்படி வந்தார் என்பது பற்றி தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திலிருந்து வெலிகந்த கொரோனா வைத்தியசாலைக்கு

          கடந்த 9ஆம் திகதி அழைத்துவரப்பட்டார். அதன் பின்னர் 15ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

          சந்தேகநபரை வைத்தியசாலைக்கு அருகில் அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை கந்தக்காடு தொற்றொதுக்கல் மத்திய நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              வவுனியால் இளம் தமிழ் பெண் மாயம் – தேடும் குடும்பம்

              வவுனியால் இளம் தமிழ் பெண் மாயம் – தேடும் குடும்பம்

              வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர்

              வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்

              வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) 4 பிள்ளைகளின்

              தாயான 31வயதுடைய கிரிதரன் வக்சலா (சுரேக்கா) கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

              அன்றைய தினம் மாலையாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை அதனையடுத்து அவரின் கணவரினால்

              மனைவியை காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

              தாயாரை காணாது அவரின் மூன்று பிள்ளைகளும் தவிர்த்து வருவதுடன் சாப்பாட்டினையும் தவிர்த்து சோகத்தில் நிற்கின்றனர்.

              காணாமல் போன குறித்த பெண்ணின் இடது பக்க கண்ணத்தில் கருப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவரின் இறுதியாக

              சென்ற சமயத்தில் நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற சுடிதார் காலும் அணிந்துள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

              இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கவும்.

              கிரிதரன் – 0775255861

              மோகன் – 0766327556

              முகிசன் – 0778899787

              Posted in இலங்கை செய்திகள்

              கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளும் வெற்றி- இராணுவ தளபதி

              கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளும் வெற்றி- இராணுவ தளபதி

              கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி அளித்துள்ளதாக

              இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.

              நேற்றைய தினம் (24) கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியிலிருந்து ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற

              கைது செய்யப்பட்டுள்ளார். இந் நபர் பயணித்த முச்சக்கர வண்டி சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

              இதேவேளை, அயல் நாடுகளிலிருந்து எவருக்கும் கடல் வழி மூலமாக இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.

              இவ்வாறான வருவோரை தடுப்பதற்காக கடற்படையும் இராணுவமும் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை

              நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிததார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  திடீரென பற்றி எறிந்த பேரூந்து – பயணிகள் கதறல்

                  திடீரென பற்றி எறிந்த பேரூந்து – பயணிகள் கதறல்

                  கண்டி, தெல்தெனிய பகுதியில் அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

                  நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் கண்டி மாநகர சபையின்

                  தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

                  தீப்பரவல் காரணமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம்

                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம்

                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இன்று

                      (25) காலை 8.30 மணியளவில் மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஜுன் மாதம் 7 ஆம் திகதி

                      உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

                      நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

                      இந்த நிலையில் குறித்த பஸ் நிலையத்தில் அரச தனியார் பேருந்து சேவைகள் வைபவ ரீதியாக இடம் பெறும் வகையில் இன்றைய

                      தினம் காலை 8.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களினால் உத்தியோக பூர்வாமாக கையளிக்கப்பட்டது.

                      குறித்த நிகழ்வில் தனியார் பேருந்து சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட போதும் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொழும்பில் நபர் தீக்குளித்து தற்கொலை – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                          கொழும்பில் நபர் தீக்குளித்து தற்கொலை – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                          இலங்கை வெலிக்கடை பகுதியில் இளம் நபர் ஒருவர் தனக்கு தானே தீமூட்டி

                          தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
                          எனினும்

                          இது முறையான தற்கொலை தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது ,மேற்படி மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் இந்திய நபர் ஒருவர் வீட்டி,ல் தூக்கு

                          மாட்டி தற்கொலை புரிந்துள்ளார் ,இதுவும் தற்கொலை என்றே கூறப்படுகிறது

                          தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான மரணங்களின் பின்புலத்தில் மர்ம கொலையாளிகள் உள்ளதாக நம்ப படுகிறது

                          கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவ்விதமான மர்ம கொலைகள் தொடராக இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்

                              மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்

                              இலங்கையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த

                              கைதி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

                              போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் சிகிச்ச்சை பெற்று வந்த நபரே இவ்விதம் தப்பி ஓடியுள்ளதாக போலீசாரை தெரிவித்துள்ளனர்

                              இவரை கண்ணுற்றால் தங்களுக்கு அறியத்தரும்படி போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

                                  மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

                                  ஜனாதிபதி அவர்களின் கைகளை பலப்படுத்துவதுடன், நாட்டை புதிய திசையில் முன்கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை

                                  வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் உறுதியளித்தனர்.

                                  பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் பிற்பகல் கம்பஹா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை

                                  மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இம்முறை பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய தருணம்

                                  என்பதால் பாராளுமன்றத்தில் பலமான சக்தியை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவது மக்களின் பொறுப்பு என கம்பஹா மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.

                                  ராகம புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதம் நிறுத்தாமல் செல்வதால் அலுவலக ஊழியர்கள் பல இன்னல்களுக்கு

                                  முகங்கொடுத்து வருகின்றனர் அது பற்றி அவதானம் செலுத்துமாறு ராகமை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அவர்களிடம் கூடியிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

                                  வேட்பாளர் மதுமாதவ அரவிந்த ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். கடலரிப்பு உஸ்செட்டகெய்யாவ பிரதேசத்தின் நாளாந்த மீன்பிடி தொழிலுக்கு

                                  பாரிய சவாலாக உள்ளது. மீன்பிடி இறங்குதுறை ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் அப்பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியுமென மீனவர்கள் சிலர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

                                  வேட்பாளர் நிமல் லன்சா வத்தளை நாயகந்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். அனுமதியின்றி இடம்பெறும் மணல் அகழ்வினால் பிரதேசத்தின் மீனவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

                                  வேட்பாளர் மெரலி பெரேரா ஜா எலயிலும் வேட்பாளர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கட்டான கே.சி.த சில்வா விவசாய மத்திய நிலையத்திற்கு முன்னாலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள், கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடினார்.

                                  வேட்பாளர் இந்திக்க அனுருத்த திவுலபிட்டிய நகர மத்தியிலும் வேட்பாளர் கோகிலா ஹர்ஷனி மீரிகம பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள பொது விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு கூடியிருந்த மக்கள் அமோக வரவேற்பளித்தனர். மீரிகமை அபிவிருத்தித்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றை திருமதி. கோகிலா ஹர்ஷனி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

                                  பாரம்பரிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களான தாம், ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை கொண்டிருப்பதால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சிலர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

                                  மாபெரும் வெற்றியை
                                  மாபெரும் வெற்றியை
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

                                      வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

                                      இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக இராணுவ மருத்துவ முதுமாணி கற்கை நெறிஆரம்பம்

                                      நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தும்

                                      செயற்பாடுகளிலும் இராணுவ மருத்துவ குழுக்கள் முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை

                                      வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

                                      நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (ஜூலைஇ23) இடம்பெற்ற இராணுவ மருத்துவக் கல்லூரியின் இராணுவ மருத்துவத்துறை

                                      முதுமானி கற்கை நெறி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                                      யுத்தத்தின் போது காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்கி அவர்களின் உயிர்களை பாதுகாத்தன் ஊடாக முப்படைகளின் மருத்துவ குழுக்கள் தமது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளனர்

                                      என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளின் போது இராணுவத்தினரே முதலில் நின்று பணியாற்றுபவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                      ‘அது ஒரு களப் போராகவே அல்லது எந்தவொரு அனர்த்தமாக இருந்தாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சேவையை வழங்குபவர்கள் இராணுவ மருத்துவர்கள்; இராணுவ வீரர்களோ

                                      அல்லது சிவிலியனோ அது யாராக இருந்தாலும் சரி ஆரம்பம் முதல் இறுதிவரை தமது சேவையை வழங்குபவர்களாக இராணுவ மருத்துவ பிரிவினர் திகழ்கின்றனர் ‘ என்று அவர் கூறினார்.

                                      இராணுவ மருத்துவர்களால் வழங்கப்படும் சேவையின் வகிபாகமானது அரச பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதுடன் இதன்மூலம்

                                      எந்தவொரு வழக்கமான அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

                                      இங்கு சிறப்புரையாற்றிய செயலாளர் ஐக்கிய நாடுகளின் பணிகளில் ஈடுபடுவதற்கு இராணுவ மருத்துவ பணியாளர்கள்

                                      தேவை எனவும் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாட்டவர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை அது வழங்கும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

                                      ‘அங்கீகாரம் கிடைத்தவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலிருந்து பங்கேற்பாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு பன்னாட்டு அமைப்பாக எமக்கு இதை மேம்படுத்த முடியும் எனவும் அவர்களின்

                                      சேவைகள் தேவைப்படும் எந்தவொரு நிலையிலும் அவர்களுக்கு சேவை வழங்கும் அதே வேளை சிறந்த கல்விப் பின்னணியுடன் அவர்களை சேவையில் ஈடுபடுத்துவது அதன் தேவையாக உள்ளது.’

                                      எனவும் தெரிவித்தார் மேலும் இராணுவ மருத்துவ துறையில் முதுமானி கற்கை நெறி திட்டத்தை அறிமுகப்படுத்தும் மருத்துவ கல்லூரியை இதன்போது பாராட்டினார்.

                                      முப்படைகளை சேர்ந்த மருத்துவத் துறையின் இளம் தலைமுறையினர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதம் ஏந்தும் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள். தொற்றுநோய்கள் போன்ற முக்கியமான

                                      சூழ்நிலைகளின் போது அதனை எதிர்த்துப் போராடுவதற்கான பரந்த அளவிலான அறிவை வளர்ப்பதற்கு இப்புதிய கற்கை நெறித்திட்டம் பங்களிப்பு வழங்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.

                                      சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இக்கற்கைநெறி போர், மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்து ஆகியன முப்படை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதுடன், இராணுவ நெறிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், பேர் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இராணுவ உளவியல் போன்ற பாடநெறிகள் இலங்கை இராணுவத்தினாலும் விமான போக்குவரத்து பாடநெறி விமானப்படையினாலும், சுழியோடல் மற்றும் ஹைபர்பாரிக் மருத்துவம் பாடநெறிகள் கடற்படையினராலும் மேற்கொள்ளப்படும்.

                                      இராணுவ மருத்துவ கற்கை நெறியை அறிமுகப்படுத்தியதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுமாணி மருத்துவ கற்கை நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

                                      இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, உயர்கல்வி தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுரா திசாநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன, மருத்துவ முதுமாணி கற்கை நிலைய பணிப்பாளர் பேராசிரியர் செனக ராஜபக்ஷ, சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் மருத்துவ முதுமாணி கற்கை நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?

                                      வடக்கு லண்டனில் துப்பாக்கி சூடு – மூவர் காயம்- நடந்தது என்ன ..?

                                      கடந்த தினம் Willan Road in Haringey பகுதியில் ,காரில் வந்த துப்பாக்கி தாரி வாலிபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்

                                      இதில் 15,முதல் 19 வரையிலான மூன்று இளம் வாலிபர்கள் படுகாயமடைந்தனர் ,

                                      காயமடைந்தவர்கள் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
                                      ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                                          லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்

                                          லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்

                                          லண்டன் Yalding, a village near Maidstone, Kent பகுதியில் உள்ள பப் ஒன்றில் வைத்து இளம் பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                          கழுத்து பகுதியில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                          இந்த படுகொலை தாக்குதலுக்குரிய கரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                          குறித்த பெண் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

                                              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                              Posted in உலக செய்திகள்

                                              அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்

                                              அமெரிக்கா சிறையில் வைரஸ் நோயில் சிக்கி 15 கைதிகள் மரணம்

                                              அமெரிக்கா சிறையில் பல்வேறு பட்ட குற்ற செயல்களை புரிந்த கைதிகள் அடைத்து வைக்க பட்டனர்


                                              இவ்விதம் அடைத்துவைக்க பட்டவர்களில் 15 பேர் பரவி வரும் கொரனோ

                                              நோயின் தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளதாக சிறை சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

                                              இறந்தவர்கள் அனைவரும் பல் வேறு பட்ட கொலை குற்ற சாட்டில் தடுத்து வைக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

                                              Posted in உலக செய்திகள்

                                              சவூதி இளவரசருக்கு மேற் கொள்ள பட்ட ஆபிரேசன் வெற்றி – மருத்துவர்கள் மகிழ்ச்சி

                                              சவூதி இளவரசருக்கு மேற் கொள்ள பட்ட ஆபிரேசன் வெற்றி – மருத்துவர்கள் மகிழ்ச்சி

                                              சவூதி நாட்டின் ஆளும் அதிகாரம் பொருந்திய 84 வயதுடைய இளவரசருக்கு

                                              மேற்கொள்ள பட்ட பல மணி நேர பித்தப்பை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக

                                              மேற்கொள்ள பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

                                              இவரது ஒத்துழைப்புடன் அமெரிக்காவுக்கு உலகில் அதிக தொகையில்

                                              எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது
                                              இவரது

                                              ஆதரவுடனேயே அமெரிக்கா மிக பெரும் செல்வ மிக்க நாடாக வலம் வருவது குறிப்பிட தக்கது

                                              இவ்வாறான சவூதி நாட்டுக்கே ஈரான் பெரும் அச்சறுத்தல் விடுத்தது வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  வாகன விபத்துக்களை தடுப்பதற்கு மீண்டும் வாகன சாரதி புள்ளி முறை- புதிய நடைமுறை சட்டம்

                                                  வாகன விபத்துக்களை தடுப்பதற்கு மீண்டும் வாகன சாரதி புள்ளி முறை- புதிய நடைமுறை சட்டம்

                                                  நுகேகொடை மேம்பாலத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கவனம் செலுத்தும் பொழுது சமீப காலத்தில்

                                                  இடம்பெற்ற வீதி விபத்துக்கள் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம் என்பது தெரியவந்தது.

                                                  வீதி விபத்துக்களை தடுப்பதற்காக சட்டம் கடுமையாக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

                                                  இந்த விடயங்கள் தொடர்பில் நேற்றைய தினம் எரிபொருள் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது

                                                  போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்பாக தெரிவிக்கையில் பல

                                                  வருடங்களாக இது தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

                                                  வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை

                                                  மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

                                                  தினமும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின்

                                                  அனுமதிப்பத்திரங்களுக்கு பூச்சியத்திலிருந்து 24 வரை புள்ளிகளை வழங்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

                                                  இந்நடைமுறையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் 24 இலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த புள்ளிகள் குறைக்கப்படும்.

                                                  இம்முறையின் கீழ், புள்ளிகள் குறையும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும்

                                                  போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      புலிகளை தோற்கடிக்க உதவிய பாகிஸ்தான் – பாதுகாப்பு மந்திரி

                                                      புலிகளை தோற்கடிக்க உதவிய பாகிஸ்தான் – பாதுகாப்பு மந்திரி

                                                      இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு – இராணுவ உதவிகள் தொடர்பாக பேச்சு

                                                      இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு

                                                      நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

                                                      யுத்த சமயத்தில் இலங்கை முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின் போது பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட

                                                      ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டிய பாதுகப்பு செயலாளர், புலிகளை தோற்கடிக்கும் கடுமையான போர் நடவடிக்கையின் போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் வலுவாக காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

                                                      நீண்ட தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக சுமத்திய சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை ஒருபோதும் மறக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

                                                      ‘ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்’ எனும் கூற்றுக்கு அமைய இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்த சமயத்தில் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பங்களிப்பினை இலங்கையர்கள் என்ற வகையில் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்’ என அவர் வலியுறுத்தினார்.

                                                      இலங்கையும் பாகிஸ்தானும் தமது உறவுகளை மிகவும் ஆரோக்கியமாக பேணி வருவதாகவும் இந்த உறவுகள் அன்று முதல் இன்று வரை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

                                                      பாகிஸ்தானின் குவெட்டா நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘நூற்றாண்டு பதக்கங்கள்’ வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                                      இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று காலை மாகொல, படலந்தவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் இடம் பெற்றது.

                                                      இந்த நிகழ்வின் வரவேற்புரை, 2015 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் மாணவ அதிகாரியாக பயிற்சி பெற்றவரும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகருமான கேர்ணல் சஜ்ஜாத் அலியினால் நிகழ்த்தப்பட்டது.

                                                      குவெட்டா நகரில் உள்ள பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்நிகழ்வின்போது ‘நூற்றாண்டு பதக்கங்கள்’ வழங்கிவைக்கப்பட்டன.

                                                      பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற இலங்கை பட்டதாரிகளில், 10 அதிகாரிகள் தற்போதும் சேவையில் உள்ளதுடன் ஏனைய 27 அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர்.

                                                      இந்த பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் பழைய மாணவ அதிகாரிகளில் ஒருவரான பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு பாக்கிஸ்தான் இஸ்லாமிய

                                                      குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக்கினால் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

                                                      2000 ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் குணரத்ன, பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கற்கை நெறியை தொடர்ந்த வேளையில்

                                                      தற்போதைய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் குவெட்டா பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கட்டளை பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

                                                      1960-2005 வரை பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை அதிகாரிகளுக்கு இந்த பதக்கங்களை பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.

                                                      இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள அதேசமயம், பதக்கங்கள் பெற்றவர்கள் சார்பில் இலங்கை அரசாங்கம், பாகிஸ்தான் அரசு,

                                                      பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மற்றும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த உயர் ஸ்தானிகராலயம் அதிகாரிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.

                                                      1905 ஆம் ஆண்டில் குவெட்டாவில் ஸ்தாபிக்கப்பட்ட பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரி பாகிஸ்தான் இராணுவத்தின் பழமைவாய்ந்ததும் பெருமைக்குரியதுமான ஒரு கல்லூரி ஆகும்.

                                                      பீல்ட் மார்ஷல்ஸ்களான ஆர்க்கி போல்ட் வேவல், பெர்னார்ட் மோண்ட்கோமெரி, சர் கிளாட் ஆச்சின்லெக் மற்றும் வில்லியம் ஸ்லிம் (இங்கிலாந்து), பிளார்னி (அவுஸ்திரேலியா), அயூப் கான்

                                                      (பாகிஸ்தான்) மற்றும் சாம் மானேக்ஷோ (இந்தியா) உள்ளிட்ட பல புகழ்பெற்ற இராணுவ இந்தக் கல்லூரியில் கற்று வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                      உலக இராணுவ மரபுகளுக்கு அமைய 1960 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்த கல்லூரியில் பயில சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

                                                      அன்றிலிருந்து இன்றுவரை குறித்த பாதுகாப்பு கல்லூரியில் பயின்ற இலங்கை மாணவர்கள் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை நிறைவு

                                                      செய்ய தமது பங்களிப்பை வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

                                                      வருடாந்தம் வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு அமைய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு வந்ததாகவும் எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் உள்ள

                                                      பாதுகாப்பு கல்லூரிகளில் மேலும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

                                                      இந்த நிகழ்வில், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும், இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல்

                                                      சுமங்கல டயஸ், படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

                                                      புலிகளை தோற்கடிக்க
                                                      புலிகளை தோற்கடிக்க
                                                      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                      பிரிட்டனில் takeaways கடைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் – புது சட்டம் அமூல்

                                                      பிரிட்டனில் takeaways கடைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் – புது சட்டம் அமூல்

                                                      பிரிட்டனில் வேகமாக மீள பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை

                                                      தடுத்திட கண்டிப்பாக takeaways உணவகங்களுக்கு ,கடைகளுக்கு ,செல்பவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் ,

                                                      அவ்வாறு மீறி செயல் பட்டால் உங்கள் மீது சட்டம் பாயும் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                      மேலும் இதே உணவகங்களில் குந்தி இருந்து சாப்பிட்டால் அதற்கு முக கவசம் தேவை இல்லை என அறிவிக்க பட்டுள்ளது

                                                      இதனை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் ,இவ்வேளை மேற்படி

                                                      விதிகளை கடைபிடிக்காது செயல் பட்டால் உங்களுக்கு தண்டம் அறிவிட படும் என்பதாக தெரிவிக்க படுகிறது

                                                      எனவே பிரிட்டன் மக்களே உசார் ,இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி காப்பாற்றி கொள்ளுங்கள்

                                                      உணவகங்கள் மட்டும் அல்லாது கடைகளுக்கும் இது பொருந்தும் என்பதாகும்

                                                      பிரிட்டனில் takeaways கடைகள்
                                                      பிரிட்டனில் takeaways கடைகள்
                                                          Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                          லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்

                                                          லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்

                                                          லண்டனில் நிறுவனம் ஒன்றை திறந்து அதன்ஊடாக வியாபார

                                                          நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இத்தாலியை சேர்ந்த மாபியா

                                                          கும்பல் ஒன்று லண்டன் குற்றவியல் காவல்துறையினரால் மாடக்கி பிடிக்க பட்டுள்ளது

                                                          லியோட்ஸ் வங்கியில் கணகை திறந்து அதன் ஊடாக இடம்பெற்று

                                                          வந்த வியாபார நடவடிக்கையின் ஊடாக பெற பட்ட இரண்டு

                                                          மில்லியன் இலாப பணத்திற்கு வரி செலுதாது மேற்படி கும்பல் அந்த

                                                          பணத்தை இத்தாலிக்கு மாற்றிட முயன்ற பொழுது சிக்கினர்

                                                          மேற்படி விடயம் தொடர்பாக இடம் பெற்று வந்த நீண்ட விசாரணைகளின்

                                                          பின்னர் குறித்த நிறுவனம் பிரிட்டனில் போலியான முகவரியில் இயங்கியதும் அம்பலமாகியுள்ளது

                                                          அதாவது குறித்த முகவரியில் எவ்வித பயன் பாடும் அற்று காணப்பட்டுள்ளது

                                                          இத்தாலிய காவல்துறையினர் இணைந்து வழங்கிய ஆதரவுடன் இந்த நபர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

                                                          பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பதை இதைத்தான் போலும் .