Posted in இலங்கை செய்திகள்

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நபர் கண்டுபிடிப்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நபர் கண்டுபிடிப்பு

முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அந்நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதான இவர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவரது நிழற்படம் மற்றும் தகவல்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியிருந்தனர்.

இவர் கொழும்பு பிரதான வீதிக்கு எப்படி வந்தார் என்பது பற்றி தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திலிருந்து வெலிகந்த கொரோனா வைத்தியசாலைக்கு

கடந்த 9ஆம் திகதி அழைத்துவரப்பட்டார். அதன் பின்னர் 15ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சந்தேகநபரை வைத்தியசாலைக்கு அருகில் அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை கந்தக்காடு தொற்றொதுக்கல் மத்திய நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்

      மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்

      இலங்கையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த

      கைதி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

      போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் சிகிச்ச்சை பெற்று வந்த நபரே இவ்விதம் தப்பி ஓடியுள்ளதாக போலீசாரை தெரிவித்துள்ளனர்

      இவரை கண்ணுற்றால் தங்களுக்கு அறியத்தரும்படி போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்