Posted in இலங்கை செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் – நபர் சடலமாக மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் – நபர் சடலமாக மீட்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர்

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

76/1, பேராறு, கந்தளாய் பகுதியைச் 36 வயதுடைய ஏ.றுமைஸ் என்பவரே இவ்வாறு வீட்டுக்குள் கயிற்றினை கட்டி தூக்கில் தொங்கி

தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் மன நோய்க்குட்பட்டு இருந்த நிலையிலே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டு

அறைக்குள் சென்று கயிற்றினால் கட்டி தூங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்

ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

காருக்குள் இறந்த நிலையில் -இரு பிள்ளைகள் ,தாய் , சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

காருக்குள் இறந்த நிலையில் -இரு பிள்ளைகள் ,தாய் , சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

அமெரிக்கா Georgia Bureau பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து 25 வயது

தாய் மற்றும் அவரது பத்துமாத இரட்டை குழந்தைகள் என்பன இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

இவர்கள் எவ்விதம் இறந்தார்கள் என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்

மேற்படி மரண தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு

      அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு

      அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

      தாக்குதலில் சிக்கி ஒரு லட்சத்து ஐம்பதயிரம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர்

      கடந்த நான்கு நாட்களில் ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்

      மீளவும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது

      அமெரிக்கா தலைநகர் நியூ யார்க்கில் மட்டும் சுமார் எட்டு லாட்சம்

      கறுப்பினத்தவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

      குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்த நோயில் சிக்கி கறுப்பின

      மக்கள் பலியாகி வருகின்றமை பெரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          சேதனப் பசளையை ஊக்குவிப்போம் – பிரதமர் மகிந்தா

          சேதனப் பசளையை ஊக்குவிப்போம் – பிரதமர் மகிந்தா

          சேதனப் பசளை பாவனையை ஊக்குவித்து சேதனப் பசளை உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை

          தயாரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

          விதை மற்றும் தாவரக் கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு உள்நாட்டு விதைகளுக்கான கொள்கையொன்றை

          அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இன்று (2020.07.26) நுவரெலியா சினிசிட்டா மணடபத்தில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

          பல்கலைக்கழகங்களின் விவசாய பீடம், அரச விவசாய ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

          நுவரெலியா விவசாய பெருமக்களின் பிரதான கோரிக்கையான மரக்கறிகளை களஞ்சியப்படுத்தும் வசதி கொண்ட களஞ்சிய

          வளாகமொன்றை உருவாக்கி மேலதிக மரக்கறி உற்பத்திகளை முகாமைத்துவம் செய்வது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொறுப்பாக கருதப்படுகின்றது.

          நாட்டின் மொத்த மரக்கறி தேவையின் 35 வீதமானவற்றை உற்பத்தி செய்யும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை 80 வீதமான விவசாய உர

          மானியம் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள

          விவசாயத்துறையை ஊக்குவிக்கும் திட்டம் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

          குறித்த சந்திப்பில் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ,வேட்பாளர்களான

          ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

          பிரதமர் மகிந்தா
          பிரதமர் மகிந்தா
              Posted in இலங்கை செய்திகள்

              முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்- மனோ

              முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்

              – பிரசார கூட்டங்களில் மனோ கணேசனின் முதன்மை கருத்து

              ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்க கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும்,

              துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்து கூறக்கூடிய வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களின் கட்சி

              சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்

              என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

              கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

              சஜித் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கவே நாம் போராடுகிறோம். அந்த நம்பிக்கை எமக்கு நாளுக்கு நாள் வலுக்கின்றது. யூஎன்பி கட்சியை கைப்பற்றுவது

              யூஎன்பிகாரர்களின் நோக்கமாக இருக்கலாம். கூட்டணிகாரர்களான எமக்கு அதுவல்ல, நோக்கம். எமது நோக்கம், அலரி மாளிகையை கைப்பற்றுவதாகும். அங்கே பிரதமர்

              ஆசனத்தில் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவை அமர செய்வதாகும்.

              எது எப்படி இருந்தாலும், ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, இந்த நாட்டில் ஜனநாயகரீதியாக சண்டைபோட வேண்டிய இடத்தில், சண்டையிட்டு, அழுத்தம் திருத்தமாக எமது மக்களின்

              அபிலாசைகளுக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்க கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தெரிவு செய்ய வேண்டியது தமிழ், முஸ்லிம் மக்களின் கடமை.

              நேர்மை உள்ள, தூரப்பார்வை உள்ள, அர்ப்பணிப்பு உள்ள, துணிச்சல் உள்ள, பன்மொழி அறிவு உள்ள, விலை போகாத வரலாறு உள்ள, சொந்த இனப்பற்று உள்ள, சகோதர இன, மதங்களின் மீது

              மரியாதை உள்ள, உண்மையான தேசப்பற்றுள்ள வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறியுங்கள். இதை கண்டறிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் முன் வரும் வேட்பாளர்களை

              கொஞ்சம் கவனமாக ஒவ்வொருவராக அவதானித்து பார்த்தால், உண்மை அடையாளத்தை அறியலாம். எக்காரணம் கொண்டும்

              இதை கண்டறிய தவறிவிட்டீர்கள் என்றால், அடுத்து ஐந்து வருடங்கள் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகி விடும்.

              இதை நான் இன்று எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரம் கூறவில்லை. நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க தமிழ், முஸ்லிம்

              மக்களுக்கும் சொல்கிறேன். ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பிறகு இதை செய்ய முடியாது. இப்போதே உங்கள் தீர்மானங்களை எடுங்கள்.

                  Posted in உலக செய்திகள்

                  வட கொரியாவுக்குள் புகுந்த கொரனோ – எல்லைப்புற நகரங்கள் அடித்து பூட்டு

                  வட கொரியாவுக்குள் புகுந்த கொரனோ – எல்லைப்புற நகரங்கள் அடித்து

                  பூட்டுவட கொரியாவுக்குள் இதுவரை கொரனோ நோயானது

                  பரவவில்லை என அந்த நாட்டு அதிபர்ப் கிங் ஜோங் உன் தெரிவித்து

                  வந்தார்,ஆனால் தற்போது தென் கொரியா எல்லைப் புற வழியாக தமது

                  நாட்டுக்குள் குறித்த வைரஸ் நோயானது பரவியுள்ளது எனவும் தற்போது

                  சில நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது என வடகொரியா அதிபர் அறிவித்துள்ளார்

                  நோயினை கட்டு படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                  என்கிறார்,ஆனால் இந்த நோயால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை

                      Posted in உலக செய்திகள்

                      வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – படம் உள்ளே

                      வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கிய விமானம் – படம் உள்ளே

                      Utah suburb பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மேலே சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது


                      இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகினர்
                      மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                      வீடு பலத்த சேதமடைந்துள்ளது
                      வீழ்ந்து நொறுங்கிய விமானம் பற்றி எரிந்ததினால் அந்த வீடு

                      எரிந்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      வீட்டின் மேலே வீழ்ந்து
                      வீட்டின் மேலே வீழ்ந்து
                      வீட்டின் மேலே வீழ்ந்து
                      வீட்டின் மேலே வீழ்ந்து
                          Posted in உலக செய்திகள்

                          கொரனோ நோயால் அமெரிக்காவில் 150ஆயிரம் பேர் பலி

                          கொரனோ நோயால் அமெரிக்காவில் 150ஆயிரம் பேர் பலி

                          உலகில் பரவி வரும் கோரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

                          அமெரிக்காவில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது

                          41 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,

                          உலகம் தழுவிய நிலையில் 16 லட்சம் மக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .மேலு ஒன்றரை மில்லியன் மக்கள் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்

                              மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்

                              இலங்கை மலையக பகுதியில் தோட்டங்களில் பணி புரியும் மக்களுக்கு

                              நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க படும் என ஆளும் பிரதமர் மகிந்தா தெரிவித்துள்ளார்

                              எமது ஆட்சியில் மக்களுக்கு நல்லதை செய்வோம் என அவர் அடித்து கூறி வருகிறார்

                              தேர்தலில் வென்றிட இவ்வாறான ஆசை வார்த்தைகளை மகிந்த அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது

                                  காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது

                                  இலங்கை மேல்மாகாணத்தில் கடந்த இருபத்தி நமக்கு

                                  மணித்தியாலத்தில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை சோதனையின்

                                  பொழுது 364 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்,கைதானவர்களில் சிலர்

                                  பல்வேறு பட்ட குற்றங்கள் புரிந்து தப்பி சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம்

                                      கொரோனா வைரஸ் பரவல் சில நாடுகளில் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம்

                                      கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிரம் அடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் Tedros Adhanom Ghebreyesus எச்சரித்துள்ளார்.

                                      டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தார் இதன் போது அவர்

                                      கொரோனா வைரஸ் தொறறினால் 1½ கோடிக்கும் மேற்டிட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால்

                                      பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.


                                      உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.
                                      நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும். உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் என்ற ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும் என்று தெரிவித்தார்.


                                      நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும் என்றார்.

                                      கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர

                                      விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை

                                      மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும்

                                      என்றும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் மேலும் தெரிவித்தார்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          கோட்டா ஆட்சி நீடித்தால் – மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவார் – ரணில்

                                          கோட்டா ஆட்சி நீடித்தால் – மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவார் – ரணில்

                                          தோட்டப் புறங்களை நகர் புறமாக மாற்றி அமைத்தது எமது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

                                          நேற்று (25) மாலை ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

                                          அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மலையகத்தை தோட்டப் புறங்கள் என கூற

                                          முடியாது. அதனை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். மலையக மக்களை பாதுகாத்து கொள்வதும் ஐக்கிய தேசிய கட்சி.

                                          மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று வெவ்வேறு இடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள

                                          கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் விழ்ச்சி அடைந்துள்ளது.

                                          கொரோனா தொற்றை அரசாங்கம் பாதுகாப்பதில்லை. நாள் ஒன்று 5000 ஆம் பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.

                                          பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் இன்று இல்லை. சிறந்த பாதுகாப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

                                          நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொண்டால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால்

                                          தோசை கூட சாப்பிட முடியாது. எவ்வித இலாபமும் இருக்காது. வாழ்க்கையினை கொண்டுசெல்ல கஷ்டம். கொரோனா தொற்று

                                          மலையக பகுதிகளுக்கு பரவினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற பகுதிகளில் தான் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.

                                          நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மற்றுமொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்து கொள்ளுபவர்கள் டெங்கு

                                          நோயினால் உயிரிழக்க நேரிடும். ஆகையால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒரு நிலமை தான் தற்பொழுது கணப்படுகிறது. அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

                                          இங்கு எவ்வித தயார் நிலைகளும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினை பொருத்த வரையில் வெளிநாடுகளோடு எமக்கு சிறந்த தொடர்புகள் இருக்கின்றன. நாம் மீண்டும் 6 ஆயிரம் டொலர்களை

                                          நாம் தேடிகொள்ளுவோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக சுமார் 10 இலட்சம் பேர் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு எமது

                                          அரசாங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவோம். சிலர் எம்மை விமர்சனம் செய்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள்

                                          எங்கள் காரியாலயத்தை கைபற்ற வேண்டுமென கூறுகிறார்கள். திருட்டு கும்பல்களுக்கு யார் வாக்களிக்க போவது. இந்த வீட்டை

                                          இரண்டாக பிளவுபட செய்தவருக்கா அல்லது அந்த வீட்டை பிளவுபட செய்த மனிதருக்கா?

                                          சிலர் கூறுகிறார்கள் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி என கூறுகிறார்கள். இறுதியில் என்னை நீதிமன்றுக்கும் அழைத்தார்கள். சட்டம் என்பது எங்கு சென்றாலும் ஒன்று தான். நான் ஒன்றை

                                          கூறுகிறேன். இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் மாத்திரமல்ல சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தீர்பு ஒன்று தான். எனது

                                          காரியாலயத்தையோ அல்லது கட்சியின் காரியாலயத்தையோ யாராவது கைபற்ற நினைத்தால் நான் பொலிஸாருக்கு

                                          அறிவிப்பேன் கைது செய்யுமாறு. அதன் பிறகு பொலிஸ் சிறையில் இருக்க கூடும். அதற்கு பிறகு நீதவான் முன்னிலையில் முன்னிலையாக நேரிடும்.

                                          என்னை கூறுகிறார்கள் அரசாங்கத்தோடு டில் வைத்து கொண்டுள்ளதாக. ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்களுக்கு

                                          ஒன்று கூறுகிறேன். எமது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் நாட்டை பாதுக்க முடியும். வீட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும்.

                                          கைகளுக்கு பணம் வழங்க முடியும் அனைத்துக்கும். ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என குறிப்பிட்டார்.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              நாளை (27) முதல் பாடசாலைகள் ஆரம்பம்

                                              நாளை (27) முதல் பாடசாலைகள் ஆரம்பம்

                                              நாளை (27) முதல் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக மாத்திரம்

                                              பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..

                                              அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல்

                                              3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                                              2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது

                                              தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர்

                                              மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில்

                                              தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                              குறித்த கால பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு

                                              பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி

                                              தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது..

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

                                                  இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

                                                  கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற

                                                  கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் கந்தக்காடு புனர்வாழ்வு

                                                  மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ

                                                  தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      இந்திய ரிசேர்வ் வங்கியினால், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

                                                      இந்திய ரிசேர்வ் வங்கியினால், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

                                                      இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களில் இந்திய ரிசேர்வ் வங்கி கைச்சாத்திட்டுள்ளது.

                                                      இந்த பரஸ்பர நாணய பரிமாற்றல் 2022 நவம்பர் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

                                                      1. இந்த பரஸ்பர நாணய பரிமாற்றல் குறித்த தகவல்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு
                                                      2. வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 14 ஆம் திகதி
                                                      3. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்‌ஷ்மன் அவர்களுடன் பிரதி உயர் ஸ்தானிகர்
                                                      4. வினோத் கே ஜேக்கப் அவர்கள் பரஸ்பர நாணய பரிமாற்றம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
                                                      5. பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இலங்கையுடன்
                                                      6. சுமூகமான இருதரப்பு பேச்சுக்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது. ஜூலை 22 ஆம் திகதி இலங்கையின் இருதரப்பு கடன் மீள்கொடுப்பனவினை ஒழுங்கமைக்கும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுக்களை
                                                      7. இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த்து.
                                                      8. கொவிட் 19 காரணமாக மேலெழும் சவால்களை முறியடித்தல், பொருளாதார விவகாரம் மற்றும் இலங்கை இந்திய நட்புறவின்
                                                      9. பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பரஸ்பரம் நன்மை தரும் விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்ற
                                                      10. தலைமைத்துவங்களின் வினைத்திறன் மிக்க ஈடுபாடு அவசியம் என்பதை இந்த நேர்மறையான அபிவிருத்திகள் காண்பிக்கின்றன
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு

                                                          இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு

                                                          இலங்கையில் கொரனோ எண்ணிக்கை நோயாளர்கள் தொற்று தற்போது அதிகரித்துள்ளது


                                                          புதிதாக நால்வர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

                                                          உலகில் இலங்கையில் மட்டுமே இதுவரை 11 பேர் மட்டும் பலியான சாதனை இடம் பெற்றுள்ளது

                                                          சிங்கள இனவாத அரசு மக்கள் பலி எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் ,மக்கள் நோய் தொற்றை மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              ஆயுத தொழிற்சாலை முற்றுகை – ஆயுதங்கள் மீட்பு

                                                              ஆயுத தொழிற்சாலை முற்றுகை – ஆயுதங்கள் மீட்பு

                                                              இலங்கை ருவன்வெல்ல பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத தொழ்ற்சாலை ஒன்று முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                                              இங்கு உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் தயாரிக்க பட்டு வந்துள்ளமை கண்டறிய பட்டுள்ளது


                                                              மேற்படி ஆயுத தொழிற்சாலையில் ஆயுதம் தயாரித்த நபர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

                                                              காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                              ஆயுத தொழ்ற்சாலை முற்றுகை
                                                              ஆயுத தொழ்ற்சாலை முற்றுகை
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு

                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு

                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.

                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்
                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு

                                                                  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு

                                                                  தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின்

                                                                  அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

                                                                  இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த

                                                                  இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட

                                                                  வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.

                                                                  இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.

                                                                  இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

                                                                  போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்
                                                                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்
                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை

                                                                      சீனா புதிய இராணுவ செய்திமதியை விண்ணில் ஏவி சாதனை

                                                                      சீனா தற்போது புதிய இராணுவ செய்மதியை விண்ணில் ஏவி வெற்றி சோதனை நடத்தியுள்ளது


                                                                      தரையில் இருந்து விண்ணுக்கு பறந்து சென்ற மேற்படி செய்மதி தனது இலக்கு நோக்கி நகர்ந்து துல்லியமான தகவல்களை வழங்கி

                                                                      வருவதாக ரசியா விண்வெளி ஆராய்ச்சி கட்டுப்பட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது

                                                                      இது வானில் இருந்த படியே தரை நிலைகளை கண்காணிப்பதுடன் புதிய ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கை களையும் முறியடிக்கும் புதிய தொழில் நுட்பத்தை தாங்கி சென்றுள்ளது என குறிப்பிட பட்டுள்ளது

                                                                      சீனா புதிய இராணுவ
                                                                      சீனா புதிய இராணுவ
                                                                          Posted in உலக செய்திகள்

                                                                          பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

                                                                          பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

                                                                          பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கொரனோ நோயில் சிக்கி இதுவரை 85,238. பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 23 லட்சம் பேர் பாதிக்க

                                                                          பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது

                                                                          தொடர்ந்தும் குறித்த நாட்டில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் இரண்டாவது அலையாக இந்த நோயானது வேகமாக

                                                                          பரவும் நிலை உள்ளதாக மருத்துவ கண்டுபிடிப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது