Posted in இலங்கை செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல் பரப்புரை – தயாராகும் கள்ள ஒட்டு

சூடு பிடிக்கும் தேர்தல் பரப்புரை – தயாராகும் கள்ள ஒட்டு

இலங்கையில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில மேலும் மகிந்த சகோதர ஆட்சி தேர்தலை நடத்திட முனைப்பு காட்டி வருகின்றனர்

தற்போது மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது எனவும் ,கொரனோ நோயின் தாக்கம் உள்ள நிலையில் மக்கள் வாக்குகளை தாம்

இலகுவா கள்ள வாக்குகளாக பதிவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஆளும் கோட்டா அரசு தீவிரமாக செயல் பட்டு வருகிறது

கொரனோ நோயினால் மக்கள் வாக்கு பதிவு இம்முறை குறைவடையும் ,அதனை பயன் படுத்தி இந்த கள்ள வாக்குகளை போடும் முயற்சிகள் தீவிர படுத்த பட்டு வருகின்றன

தனி பெரும் பான்மையுடன் தனது ஆட்சியை நிலை நிறுத்தும் முகமாக கோட்டபாய ஆட்சி பீடம் துடிக்கிறது ,அவ்விதம் இம்முறை

கிடைப்பதற்குரியய பலம் உள்ளதென்றே நம்ப படுகிறது ,ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்த உள்கட்சி மோதல்கள் பெரும் பின்னடைவை யானை காட்சிக்கு வழங்கும் எனவும் நம்ப படுகிறது

அத்துடன் கூட்டமைப்பும் பலத்த இழப்பை சந்திக்கும் என்றே நம்ப படுகிறது ,சுமந்திரனின் தமிழ் தேசிய இழி செயல் இதற்க்கு காரணமாக உள்ளது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்

      வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்

      பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நாளை தினத்திற்குள் முழுமையாக விநியோகிக்க முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

      வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி 95 சதவீதம் வரை நிறைவு பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

      நாளைய தினத்திற்குள் இந்த வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் பிரதேசத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று

      தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன குறிப்பிட்டார்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு

          இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு

          இன்று காலை வரை புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சேனபுர மத்திய நிலையத்தில் தங்கியிருந்தவர்களாவர். எஞ்சிய ஆறு பேரும்

          வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி மத்திய நிலையங்களில் இருப்பவர்கள் என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

          கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று காலை வரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 597 ஆகும். இன்று அதிகாலை கட்டாரிலிருந்து பத்துப் பேர் நாடு

          திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

          இன்றையதினம் இராணுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 171 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு புறப்பட்டுச்

          சென்றுள்ளனர். இதுவரை 27 ஆயிரத்து 105 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளனர். தற்போது முப்படைகளின்

          38 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 409 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

          நேற்று ஆயிரத்து 410 பேர் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 53

          ஆயிரத்து 65 பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை ஆறு மணி வரை 15 பேர் முழுமையாக குணமடைந்து

          வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்.

              Posted in இலங்கை செய்திகள்

              தேர்தலுக்கான கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

              தேர்தலுக்கான கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு

              2020 பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

              ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக

              தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

              நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , வீட்டிற்கு வீடு செல்வதும் துண்டுப்

              பிரசுரங்களை விநியோகிப்பதையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

              வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் எதிர்வரும் 4ம் திகதி எந்தப் பிரசார நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. தேர்தல்

              தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும்

              தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது

                  பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது

                  வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து

                  பேரை நேற்று முன்தினம் (ஜூலை 26) கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                  சலுகை வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொலைபேசி மூலம் வங்கிக் கணக்கின் விபரங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள்

                  வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடி செய்ததாக பெண் ஒருவரினால் கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                  அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பிடபெத்த, வெல்லம்பிட்டிய மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய

                  பிரதேசங்களை சேர்ந்த 30, 39 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

                  குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், வங்கிஅட்டைகள், லேமிண்டிங் மெஷின், ஓட்டுனர்

                  அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகள், போலி ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், ரப்பர் ஸ்டாம்ப், சர்வதேச ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டன.

                  சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பான

                  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                      மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      தொடராக மோதி சிதறிய வாகனங்கள் – மூவர் பலி

                      தொடராக மோதி சிதறிய வாகனங்கள் – மூவர் பலி

                      பேராதெனிய – கம்பளை பிரதான வீதியின் கெலிஓய, கரமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதினர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

                      நேற்று (27) மாலை 6.50 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      கெலிஓய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

                      இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதையில் விழுந்த பாதசாரியின் மீது பின்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று

                      மோதி பின்னர் குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்கள் இருவர் கம்பளை

                      வைத்தியசாலையிலும், பாதசாரி மற்றும் முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றமொரு நபரும் கண்டி

                      வைத்தியசாலையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேராதெனிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      சம்பவத்தில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர்.

                      வெலம்பொட பகுதியை சேர்ந்த 54 மற்றும் 53 வயதான தம்பதினர் மற்றும் கெலிஓய பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பாதசாரி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

                          ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

                          கொரோனா தொற்று காரணமாக ஜோர்தானில் வேலைவாய்பை இழந்த இலங்கையர்கள் குழுவினரினால் ஏற்பட்ட பதற்றமான

                          சூழ்நிலையை கட்டுப்படுத்த அந்நாட்டு பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

                          ஜோர்தானின் அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் சேவையாற்றிய இலங்கையர்களினால்

                          முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதோ இவ்வாறு கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                          கொரோனா தொற்று காரணமாக 5 மாதங்களாக குறித்த இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்ததை அடுத்து அது தொடர்பில் விசாரணை

                          செய்வதற்காக நேற்று (27) ஜோர்தானில் உள்ள இலங்கை தூதராக அதிகாரிகள் தொழில் பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.

                          இதன்போது சுமார் 340 பேர் கொண்ட குழுவினர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை

                          அடுத்து அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு

                              குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு

                              குருணாகல் அரசவை கட்டிடம் என கருதப்படும் புவனேக ஹோட்டல்

                              நடத்திச் செல்லப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டமை தொடர்பில்

                              குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு

                              நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை- மகிந்த உறுமல்

                              விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை- மகிந்த உறுமல்

                              இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் வீதிகள் தோறும் கொலை செய்யப்பட்ட யுகமொன்று மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு இம்முறை

                              தேர்தலில் தெளிவான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

                              தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் இன்று (2020.07.27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர்

                              , அன்றைய பயங்கரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் படித்த, புத்திசாதுர்யம் மிக்க இளைஞர்களை நாடு இழக்க நேரிட்டதாக குறிப்பிட்டார்.

                              பாரியளவிலான பட்டதாரிகள் இந்த பயங்கரவாதத்தின் போது கொலை செய்யப்பட்டதுடன், அதில் 4 ஆயிரத்து 210 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

                              அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக

                              சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

                              பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு

                              முயற்சித்தாலும் அந்த முயற்சியை தோற்கடிக்க எமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று.

                              அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு

                              தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தாலும் பிரபாகரன் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

                              பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும்

                              தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது

                              எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

                                  Posted in உலக செய்திகள்

                                  டிக்டாக், லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                                  டிக்டாக், லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                                  டிக்டாக் லைட் உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                                  டிக்டாக் லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு மீண்டும் அதிரடி
                                  கோப்பு படம்
                                  புதுடெல்லி:

                                  கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

                                  இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

                                  இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

                                  இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

                                  இந்த செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என செயலிகளின் குளோன்கள் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மீண்டும் இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.

                                  இந்த செயலிகள் அனைத்துமே இந்தியாவால் தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களின் கீழ் இயங்கும் பிரதியாகும்.

                                  இந்நிலையில், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன செயலிகளிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                                  இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                                  47 சீன செயலிகளுக்கான தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

                                  இந்த தடையின் மூலம் மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகளின் மொத்த எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என எச்சரிக்கை

                                  பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என

                                  எச்சரிக்கை

                                  பிரிட்டனில் தற்போது விலங்குகளுக்கும் கொரனோ நோயானது

                                  தொற்றியுள்ளது ,

                                  இதனை அடுத்து மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் பூனைகளை தொடவோ ,

                                  மற்றும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

                                  இந்த விலங்குகளில் இருந்து மக்களுக்கு உடனடியாக நோயானது பரவும்

                                  அபாயம் உள்ளதாகவும் இதனால் மக்களை மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      தேவாலயம் சென்ற 40 பேருக்கு கொரனோ பரப்பிய பாதர்

                                      தேவாலயம் சென்ற 40 பேருக்கு கொரனோ பரப்பிய பாதர்

                                      north Alabama Baptist church தேவாலயத்தில் ஆதரனை நிகழ்வில்

                                      கலந்து கொண்ட நாப்பது மக்களுக்கு கொரனோ பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                      இந்த நோயானது அங்கு போதனையில் ஈடுபட்ட பாதர் ஒருவர் மூலம் பரவி உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      இதனை அடுத்து குறித்த தேவாலயம் சீல் வைக்க பட்டுள்ளதுடன்

                                      ,பாதிக்க பட்ட அனைவரும் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                                      மக்களை தொடர்ந்து நிகழ்வுகளில் அதிகமாக கூடிட வேண்டாம் என

                                      வேண்டுதல் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை செவி மடுப்பதாக தெரியவில்லை

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது- தேர்தல் ஆணையம்

                                          நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது- தேர்தல் ஆணையம்

                                          தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக ஜுலை மாதம் 30 ஆம் திகதி

                                          ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள

                                          முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

                                          தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை

                                          திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                          அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு

                                          பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

                                              சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

                                              50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் இம்முறை சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

                                              இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெல் அறுவடையில் 200,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு

                                              செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு தேவையான 10,400 மில்லியன் ரூபாவை அரச வங்கிகள் ஊடாக நெல் சந்தைப்படுத்தும்

                                              சபைக்கு வழங்குவதற்கு திறைசேரியினால் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                              ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக புதிய

                                              அரசாங்கத்தினால் கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட 50 ரூபா

                                              விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன் இம்முறை சிறுபோகத்தில் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை

                                              கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதிலும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

                                              முன்னைய வருட சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் சம்பா அரிசி நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

                                              புதிய அரசாங்கம் நெல்லை கொள்வனவுசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நெல்லுக்காக 50 ரூபா உறுதி

                                              செய்யப்பட்ட விலையின் கீழ் மொத்த அறுவடையையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  யாழ். அராலி ஓடைக்கரைகுள தடுப்புச் சுவர் கட்டுமானம் – மகிந்த தலையீட்டுடன் தீர்வு

                                                  யாழ். அராலி ஓடைக்கரைகுள தடுப்புச் சுவர் கட்டுமானம் – பிரதமரின் தலையீட்டுடன் தீர்வு

                                                  அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

                                                  இது தொடர்பில், யாழ்.வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

                                                  ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி, பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

                                                  இதனை பரிசீலனை செய்த பிரதமர் அவர்கள், கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும்

                                                  தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

                                                  பிரதமரின் கோரிக்கைக்கு அமைய அராலி ஓடைக்கரை குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 6.705 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

                                                  தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் 2020 ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      இதுவரையில் 5073 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

                                                      இதுவரையில் 5073 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

                                                      2020.07.24 ஆம் திகதி பி.ப 4:00 மணி முதல் 2020.07.25 ஆம் திகதி பி.ப

                                                      4:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள்

                                                      அறிக்கையிடப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில்

                                                      தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு..

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      11 ஆம், 12ஆம், 13ஆம் தர வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

                                                      11 ஆம், 12ஆம், 13ஆம் தர வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

                                                      அரச பாடசாலைகளில் தரம் 11ஆம், 12ஆம், 13ஆம்

                                                      வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று அரம்பமாகி

                                                      காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

                                                      எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் நாளை முதல் (28) எதிர்வரும்

                                                      வெள்ளிக்கிழமை (31) வரை தத்தமது பாடசாலைகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

                                                      இந்தக் காலப் பகுதியில், உதவித் தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு

                                                      பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்- தொடரும் விசாரணை

                                                      ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்- தொடரும் விசாரணை

                                                      முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர்

                                                      குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

                                                      மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம்

                                                      வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      ரிஷாட் பதியுதீன் வவுனியா CID கிளையில் ஆஜர்

                                                      ரிஷாட் பதியுதீன் வவுனியா CID கிளையில் ஆஜர்

                                                      முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார்.

                                                      அவரை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

                                                      ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட்,

                                                      ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.

                                                      அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு

                                                      அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம்

                                                      அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

                                                      இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிஷாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை

                                                      ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை

                                                      திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆயாராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.

                                                      அதற்கமைய இன்றயதினம் காலை 10 மணிக்கு ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆஜராகியிருந்தார்.

                                                      ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின்

                                                      பாராளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      வெளிநாடுகளில் கப்பல்களில் வேலைசெய்த இலங்கையர் நாடு திரும்பினார்

                                                      வெளிநாடுகளில் கப்பல்களில் வேலைசெய்த இலங்கையர் நாடு திரும்பினார்

                                                      வெளிநாட்டு கப்பல்களில் சேவையாற்றியவர்கள் உட்பட 55 இலங்கையர்கள் இன்று (27) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

                                                      குறித்த குழுவினர் கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                      இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்

                                                      பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.