இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு

Spread the love

இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு

இன்று காலை வரை புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சேனபுர மத்திய நிலையத்தில் தங்கியிருந்தவர்களாவர். எஞ்சிய ஆறு பேரும்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி மத்திய நிலையங்களில் இருப்பவர்கள் என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று காலை வரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 597 ஆகும். இன்று அதிகாலை கட்டாரிலிருந்து பத்துப் பேர் நாடு

திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் இராணுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 171 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு புறப்பட்டுச்

சென்றுள்ளனர். இதுவரை 27 ஆயிரத்து 105 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளனர். தற்போது முப்படைகளின்

38 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 409 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

நேற்று ஆயிரத்து 410 பேர் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 53

ஆயிரத்து 65 பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை ஆறு மணி வரை 15 பேர் முழுமையாக குணமடைந்து

வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்.

      Leave a Reply