Tag: வாக்காளர் அட்டை விநியோகம்
Posted in இலங்கை செய்திகள்
வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்
Author: நலன் விரும்பி Published Date: 28/07/2020 Leave a Comment on வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்
வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நாளை தினத்திற்குள் முழுமையாக விநியோகிக்க முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி 95 சதவீதம் வரை நிறைவு பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாளைய தினத்திற்குள் இந்த வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் பிரதேசத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று
தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன குறிப்பிட்டார்






