Posted in உலக செய்திகள்

பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கியது

பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கியது

சீனாவில் ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது.

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கி விட்டது
விமான போக்குவரத்து
பீஜிங்:

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு

வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால்

சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது

அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை

இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், “ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான

போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான

சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
கோப்பு படம்
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும்

பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் ஒரே நாளில்

சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 64 லட்சத்து 15 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை

பெறுபவர்களில் 64 ஆயிரத்து 640 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால்

இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 54,14,660
பிரேசில் – 32,29,621
இந்தியா – 23,96,638
ரஷியா – 9,07,758
தென் ஆப்பிரிக்கா – 5,72,865
பெரு – 4,98,55
மெக்சிகோ – 4,98,380
கொலம்பியா – 4,33,805
சிலி – 3,80,034
ஸ்பெயின் – 3,79,799

Posted in உலக செய்திகள்

பிரேசிலை மோசமாக தாக்கும் கொரோனா-பல்லாயிரம் பேர் பலி

பிரேசிலை மோசமாக தாக்கும் கொரோனா-பல்லாயிரம் பேர் பலி

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-

க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.70 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 1,160-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை- அரசியல்வாதி கைது

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை- அரசியல்வாதி கைது

திருகோணமலை பன்குளம் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியருக்கு

பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எனவும் தற்பொழுது

திருகோணமலை சோனகவாடி பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரியாய் சந்தியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் தனக்கு பாலியல்

தொந்தரவு கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை ,அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை இன்று (14) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம்

தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது

செய்யப்பட்டதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தூர இடங்களில் இருந்து வருகை தந்த வைத்தியர்களினால் இடமாற்றம்

பெறுவதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

150,000 வேலைவாய்ப்பு – கோட்டா அதிரடி உத்தரவு

150,000 வேலைவாய்ப்பு – கோட்டா அதிரடி உத்தரவு

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (16) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல்

ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி தனக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர்

மாதம் 01 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும்

சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றறிய இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தோட்ட

மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட

மக்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சந்தர்ப்பத்தில் என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின்

அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு

சேவையினை முன்னெடுப்பேன். இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன்,

தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில்

முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(13.08.2020) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த

காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் சரியான வரவேற்புக் கிடைத்திருக்கவில்லை.

இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர்.

ஆனால் தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில், அற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள்

எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும்

புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில்

மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

அமைச்சர் என்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள்

தொடர்பான விவகாரங்களில் அவதானம் செலுத்த வேண்டியிருப்பதுடன், நன்னீர் நிலைகளில் நீர் வேளாண்மையை

விருத்தி செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாரிய எதிர்பார்ப்புடன் குறித்த அமைச்சினை

வழங்கியுள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையையும் மக்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, ஒரு அரசியல்வாதி என்ற வகையில் எதிர்பார்ப்புக்களுடன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தான்

, தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினை – அபிவிருத்தி – அரசியல் தீர்வு ஆகிய விடயங்களுக்கும் தீர்வினை

பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, தற்போது நாட்டில் அமைந்துள்ள நிலையான அரசாங்கத்தின் ஊடாக, பொருத்தமான சூழலை உருவாக்குதல்

மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட நாள் கோட்பாட்டின் அடிப்படையிலுல் தென்னிலங்கை

கட்சிகளுடன் கட்டியெழுப்பியுள்ள தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தன்னிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்

அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கைது.

மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கைது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த இரண்டு வாரங்களில் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய்

மற்றும் திருகோணமலை போல்டர்பாயிண்ட் ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் மீன்பிடி சாதனங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பல்லுயிர் பாதிப்பு ஏற்படுவதைத்

தடுக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய் மற்றும்

திருகோணமலை போல்டர்பாயிண்ட் ஆகிய கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத

மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வலைத்தோட்டம், பூனாடி, கோகிலாய், நிர்கொழும்பு, வவுனியா

மற்றும் பொடுவக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 27 நபர்கள், 05 டிங்கிகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி உபகரணங்களுடன்

திருகோணமலை மற்றும் முல்லைதீவு மீன்வள உதவி இயக்குநர்களிடமும் குச்சவேலி மீன்வள ஆய்வாளரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25க்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

Capture Ministry Se

Capture Securatary

01.திரு.டப்ளியு.எம்.டீ.ஜே.பெர்ணான்டோ

அமைச்சரவைச் செயலாளர்

  1. திரு.ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிரி

நெடுஞ்சாலைகள் அமைச்சு

  1. திரு.எஸ்.ஆர். ஆடிகல

நிதி அமைச்சு

  1. திரு.ஜே.ஜே.ரத்னசிறி

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

  1. திரு.ஜகத் பீ. விஜேவீர

வெகுசன ஊடக அமைச்சு

  1. திரு. ரவீந்திர ஹேவாவிதாரன

பெருந்தோட்டத்துறை அமைச்சு

  1. திரு. டீ.எம். அனுர திசாநாயக்க

நீர்ப்பாசன அமைச்சு

  1. திரு. டப்ளியு..ஏ சூலாநந்த பெரேரா

கைத்தொழில் அமைச்சு

  1. திருமதி. வஸந்தா பெரேரா

மின்சக்தி அமைச்சு

  1. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி

சுற்றுலா அமைச்சு

  1. திரு.ஆர்.ஏ.ஏ.கே. ரணவக

காணி அமைச்சு

  1. திரு. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரன

தொழில் அமைச்சு

  1. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க

கடற்றொழில் அமைச்சு

14.மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சு

  1. திரு. எம்.கே.பீ. ஹரிஷ்சந்திர

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு

  1. திரு. என்.பீ.மொன்டி ரணதுங்க

போக்குவரத்து அமைச்சு

  1. கலாநிதி பிரியத் பந்து விக்ரம

நீர்வழங்கல் அமைச்சு

  1. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன

வர்த்தக அமைச்சு

  1. மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்ஹ

சுகாதார அமைச்சு

  1. மேஜர் ஜனரால் (ஓய்வுபெற்ற) ஏ.கே சுமேத பெரேரா

கமத்தொழில் அமைச்சு

  1. திரு. அனுராத விஜேகோன்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு

  1. திருமதி. கே.டீ.ஆர் ஒல்கா

வலுசக்தி அமைச்சு

  1. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொழம்பகே

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

  1. வைத்தியர் அனில் ஜாசிங்க

சுற்றாடல் அமைச்சு

  1. பேராசிரியர் கபில பெரேரா

கல்வி அமைச்சு

  1. திரு சிறிநிமல் பெரேரா

நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு

Posted in இலங்கை செய்திகள்

யாழில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் பெண்கள் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்கள்

இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட

விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம்

பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன்,

கைதுசெய்யப்பட்ட இரு பெண்களும் 20 மற்றும் 25 வயது கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Posted in இலங்கை செய்திகள்

அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யார் எதை கூறினாலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய அரசாங்கத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள்

பணியை முன்னெடுத்து செல்லும் என்று இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமான் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கடந்த 5ஆம் திகதி நடைnhற்ற ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன

பெரமுன கட்சி நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஏற்பட்ட

வெற்றிடத்திற்காக போட்டியிட்டு வெற்றி பெற்ற இளம் வயது மலையக பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் நேற்று கண்டி தலதா மாளிகை மகுல்மடுவ மண்டபத்தில்

நடைபெற்ற புதிய அரசாங்க அமைச்சர்கள் பதிவிப்பிரமாண நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு

வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, மலையகத்தில் இவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள சீ.எல்.எப்க்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு உரையாற்றுகையில், இலங்கை

தொழிலாளர் காங்கிரஸை யார் விமர்சித்தாலும், எடுத்தெறிந்து பேசினாலும் மக்களின் சேவையை இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதில்

பின்வாங்கப்போவதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலங்களில் 40 நாட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல

கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என ஒரு புறத்தில் விமர்சிப்பும், மறுபுத்தில் எதிர்பார்ப்பும் உள்ள

நிலையில் சிறப்பான அபிவிருத்திகளை இங்கு முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்பீடுகளை அறிவிக்க வலியுறுத்தல்

வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் சொத்துக்கள், பொறுப்பீடுகளை அறிவிக்க வலியுறுத்தல்

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு

முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு அமர்வதற்கு அல்லது பாராளுமன்றத்துக்கு வாக்களிப்பதற்கு முன்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஊடாக தமது

சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.

இதேபோன்று தேர்தல் பெறுபேறு மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவித்த பின்னர் ஓரு மாத

காலத்திற்குள் தெரிவுசெய்யப்படாத அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்பீடுகள் தொடர்பான தகவல்களை வழங்கத்தவறும் வேட்பாளர்கள் குறித்து இலஞ்சம் மற்றும்

மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

வலஸ்முல்ல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத

ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த

தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை

துப்பாக்கி ஒன்று, தோட்டாக்கள் 11 உட்பட மேலுமட் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின் போது 61 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை

பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்

பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்

வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது

கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்

Posted in இலங்கை செய்திகள்

நோய்களை தடுப்பதற்கு தாதியர்களுக்கு பயிற்சி

நோய்களை தடுப்பதற்கு தாதியர்களுக்கு பயிற்சி

தொற்றா நோய்களை தடுப்பது தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் தாதியர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.

இதனை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணிமனை ஏற்பாடு செய்துள்ளதாக தொற்றா நோய் தடுப்புப் பிரிவின்

பணிப்பாளர் டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார். இக் கருத்தரங்கானது

தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளைச் சேர்ந்த தாதியர்களுக்காக நடத்தப்படுகின்றது.

இதன் பிரகாரம் தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிப்பது, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை

எடுப்பது, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி அறிவூட்டுவது,

தரவுகளை திரட்டுவது போன்றவைபற்றி தாதி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

முதற்தொகுதிக்கான பயிற்சிகள் மொறட்டுவ சர்வோதய வள நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் டொக்டர் விந்தியா குமாரபேலி தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் – சவுதி அரேபியா அதிரடி

பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் – சவுதி அரேபியா அதிரடி

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவியும், கச்சா எண்ணெய் உதவியும் நிறுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது

. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் – சவுதி அரேபியா அதிரடி – முடிவுக்கு வந்த நட்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
ரியாத்;

பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்த நாடு சவுதி அரேபியா. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு நீடித்து வந்தது.

சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகித்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது

பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்த சலுகையில் 3 பில்லியன் டாலர்கள்

கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் சவுதி ஒப்புதல் அளித்தது.

இந்த சலுகை மூலம் சவுதியில் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றுள்ளது.

இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமிய

கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து வருகிறது.

மேலும், சவுதி தலைமையிலான அந்த கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை.

இது தொடர்பாக கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி

ஷா முகமது குரேஷி சவுதி
அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய குரேஷி,’காஷ்மீர் விவகாரத்தில்
நீங்கள் (சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு) இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை

எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.

முகமது பின் சல்மான் மற்றும் நரேந்திர மோடி

இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என நான் மீண்டும் மரியாதையுடன் கூறுகிறேன்’ என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியின் இந்த கருத்து சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலும், ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலும் இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் மந்திரியின் கருத்தால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது.

இதன் மூலம் 3 பில்லியன் டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடனுதவியும், 3.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அறிவிப்பின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகையை உடனடியாக திரும்பித்தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சவுதி அரேபியா-பாகிஸ்தான் நட்பு முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்

இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்

சிரியாவின் தெற்கு இட்லி பகுதியை இலக்கு வைத்து அரசா இராணுவம் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியது

இதில் Al-Fterah, Kansafrah, Sfuhen, Fulayfel, Al-Hallouba, Al-Ruwayha, Bayanin குறித்த பகுதி வாழ்விடங்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இதனால் மக்கள் உயிரை காப்பற்றி கொள்ளும் நோக்குடன் உடைமைகளை கைவிட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்

தொடர்ந்து இரு பகுதிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன

Posted in உலக செய்திகள்

ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி

ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி

இன்று ஸ்கொட்லாண்ட் north of Edinburg இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்


குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் மக்களை மீட்டுள்ளனர் ,பெரும் புகை வான் பரப்பை சுற்றிய வண்ணம் நிலவியது

இதுவரை இந்த விபத்துக்குரிய உரிய கரணம் ,உடனடியாக தெரியவரவில்லை

ஸ்கொட்லாண்டில் ரயில்
ஸ்கொட்லாண்டில் ரயில்
Posted in உலக செய்திகள்

பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு

பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு

அவுஸ்ரேலிய தலைநகர் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபர்கள் பெரும் பண கடத்தலில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கடத்தல் குழுவை பின்தொடர்ந்த உளவு பிரிவினர்

இவர்கள் மேற்கொண்டு வந்த பெரும் பணக் கடத்தலை முறியடித்ததுடன் ,இவர்கள் முப்பது மில்லியபி பணம் கடத்தலில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது

இந்த கடத்தலில் ஈடுபட்ட முக்கிய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,உள்ளது

பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு - பெரும் பண கடத்தல் முறியடிப்பு
பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு
      Posted in இலங்கை செய்திகள்

      இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று

      இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று

      இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.

      இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24

      மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.

      கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834

      பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.

      தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்

      மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.