இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Spread the love

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும்

சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14) காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றறிய இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தோட்ட

மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட

மக்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த சந்தர்ப்பத்தில் என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின்

அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு

சேவையினை முன்னெடுப்பேன். இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன்,

தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *