Posted in இலங்கை செய்திகள்

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

தனியார் கட்டிடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டிடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய

ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம், அமைச்சர்களும், அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார்

கட்டிடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்

      சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
      Posted in இலங்கை செய்திகள்

      50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை

      50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை

      நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல்

      திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      எனினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்

      மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள்

      சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

      வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய

      மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வரை

      அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          நல்லூர் ஆலயத்திற்கு மக்கள் செல்ல தடை – கோட்டாவின் ஆட்டம் ஆரம்பம்

          நல்லூர் ஆலயத்திற்கு மக்கள் செல்ல தடை – கோட்டாவின் ஆட்டம் ஆரம்பம்

          வடக்கில் தமிழர்களின் மிக புகழ் பெற்ற வணக்க தளமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிகு நல்லூர் கந்தன் திருவிழா நடை பெறவுள்ளது

          இந்த திருவிழாவில் இம்முறை மக்கள் ஒன்று திரண்டு கலந்து கொள்ள தடை விதிக்க பட்டுள்ளது


          அத்து மீறி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்

          இதனால் இம்முறை நல்லூர் கந்தன் சோகை இழந்து காணப்படுவதுடன் ,அதன் பண வரவும் வீழ்ச்சியடையும் என தெரிவிக்க படுகிறது

              Posted in உலக செய்திகள்

              சீனாவில் மீள வேகமாக பரவும் கொரோனா

              சீனாவில் மீள வேகமாக பரவும் கொரோனா

              சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

              சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு
              கொரோனா வைரஸ்
              பெய்ஜிங்:

              சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது. இதன்பின்னர் உலகம்

              முழுவதிலும் இந்த வைரசின் பாதிப்பு பரவ தொடங்கியது. கண்ட தொற்று என்ற வகையில் ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும்

              ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது.

              இதன்பின்பு சீனாவில் இதன் பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன. இதனால் அந்நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு

              தளர்த்தப்பட்டன. எனினும், மற்ற நாடுகளில் தொடர்ந்து ஊரடங்கு முறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

              இந்த சூழலில், சீனாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம்,

              கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 57 பேர் பாதிப்புகளில் இருந்து குணமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

              இந்த 22 பேரில் 8 பேர் உள்ளூர்வாசிகள். மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இந்த 8 பேரில்

              பெருமளவிலானோர் சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங்கை சேர்ந்தவர்கள் ஆவர்.

              இதனால் சீனாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 808 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்து உள்ளனர்.

              சீனாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 79,519 ஆக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து

              சீனாவுக்கு வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,263 ஆக உள்ளது.

              இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் அறிகுறிகள் எதுவுமின்றி 20 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவர்களில்

              13 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட, ஆனால் அதற்கான அறிகுறிகளற்ற 300 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  தலைவர் பதவியை விட்டு கொடுக்க அடம் பிடிக்கும் ரணில்

                  தலைவர் பதவியை விட்டு கொடுக்க அடம் பிடிக்கும் ரணில்

                  இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியை சந்தித்தது ,


                  இந்த நிலையில் அதன் கட்சி கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது

                  இதன் பொழுது புதிய தலைவர் ஒருவர் தேர்த்தெடுக்க படுவார் என எதிர் பார்க்கக் பட்டது

                  ஆனாலும் தனது பதவியை விட்டு கொடுக்க மறுத்து வருகின்றார் ரணில்

                  விக்கிரமசிங்கா ,ஒருமுறை இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக வந்து

                  விட வேண்டும் என ரணில் துடிக்கின்றார் ,ஆனால் அதுவோ அவரது குள்ள

                  நரித்தனத்தால் மக்கள் செல்வாக்கு இழந்து பல்லு பிடுங்கிய

                  பாம்பாக ரணில் மாற்றம் பெற்றுள்ளார்

                  இன்று நடந்த கூட்டத்தில் முடிவுகள் ஏதுமின்றி வழமை போல கூட்டம் கலைந்து சென்றுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் கொரனோ தொற்று எணிக்கை 2,890 ஆக உயர்வு

                  இலங்கையில் கொரனோ தொற்று எணிக்கை 2,890 ஆக உயர்வு

                  இலங்கையில் இதுவரை கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
                  சுமார் 2,890 ஆக உயர்ந்துள்ளது

                  மேலும் வரும் காலங்களில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                  தேர்தலுக்காக இதன் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து அறிவித்த

                  அரசு அதன் பின்னர் அதன் பாதிப்பை தற்போது திடீரென அதிகரித்து அறிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      கடல்வழியாக இத்தாலியில் குவியும் அகதிகள் – திணறும் அரசு

                      கடல்வழியாக இத்தாலியில் குவியும் அகதிகள் – திணறும் அரசு

                      இத்தாலியில் , கடல் வழியாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு

                      அகதிகள் வருகை அதிகரித்துள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துளளது

                      கொடிய வைரஸ் நோயானது மக்களை படு கொலை செய்து வரும்

                      நிலையிலும் இவ்விதம் கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற

                      வாசிகள் நுழைவது அந்த நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      மத்திய தரைக் கடல் வழியாக துனிசியா ,சிரியா நாட்டு அகதிகள்

                      அதிகம் உள்ளே நுழைந்து வருவதாக அரசு குறிப்பிட்டுள்ளது

                      இதனை தடுப்பதற்கு பல்வேறு பட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்க பட்டுள்ளது

                      கடல்வழியாக இத்தாலியில்
                      கடல்வழியாக இத்தாலியில்
                          Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

                          நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்

                          நிர்வாணமாக கொரனோவை கொண்டாடிய நபர்கள் -கட்டி பிடித்து படம் பிடித்த குமரிகள்

                          உலக நாடுகளை கொரனோ நோயானது மிகவும் மிரள வைத்து வருகிறது


                          இவ்வேளை நபர்கள் நிர்வாணமாக மிதி வண்டியில் ஊரவலம் சென்றனர்

                          இந்த சம்பவம் Philadelphia பகுதியில் இடம்பெற்றுள்ளது ,இவர்களை கண்ணுற்ற சில இளம்பெண்கள் அவர்களை கட்டி பிடித்து புகை படம் பிடித்து மகிழ்ந்து கொண்டனர்

                          அட பாவிகளா இப்படியுமா மனிதர்கள் ,என்ன சார் கொடுமை இது

                          நிர்வாணமாக கொரனோவை
                          நிர்வாணமாக கொரனோவை
                              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                              Posted in உலக செய்திகள்

                              பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்

                              பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்

                              அமெரிக்கா Ohio பகுதியில் பிறந்த நாள் விழாவில் எட்டு வயது

                              சிறுமி ஒருத்தி கோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்

                              பலத்த காயமடைந்த நிலையில் சிறார் சிறப்பு மருத்துவமனைக்கு

                              எடுத்து செல்ல பட்ட பொழுதும்
                              அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

                              குறித்த நிகழ்வுக்குள் கலந்து கொண்ட நபர் ஒருவர் இந்த

                              கொலைவெறியாட்டத்தை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார்


                              இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

                              அங்கு வந்த அனைவரிடத்திலும் போலீசார் துரிதவிசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                  Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                  பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

                                  பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

                                  பிரித்தானியா அரசு தற்பொழுது கொரனோ நோயினை தடுப்பதற்கு

                                  ஆறுவகையான தடுப்பூசிகளை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது ,அதேபோலவே அமெரிக்காவும் குறிப்பிட்டுள்ளது

                                  பிரிட்டன் 36 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளது


                                  வரும் வாரங்கள் முதல் இந்த மருந்தானது மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படுகிறது

                                  இது போன்றே அமெரிக்காவிலும் இடம் பெறுகிறது .

                                  மேற்படி இரண்டு நாட்டு கண்டு பிடிப்புக்களை கைக்கிங் செய்த ரசியா தானும் குறித்த மாதிரியான தடுப்பு மருந்துகளை

                                  வெளியிட்டுள்ளது
                                  ,அது வெற்றிகரமாக முடிவடைவந்துள்ளது எனவும் அறிவித்துள்ளது

                                  ரசியாவின் இந்த அறிவிப்பை அடுத்து அவசர அவசரமாக பிரிட்டன்

                                  ,அமெரிக்கா தாமும் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது

                                      சஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது

                                      தேசிய பட்டியல் தொடர்பில் மனோ கணேசன்
                                      தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும்தான் எங்கள்

                                      இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும்.

                                      இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித்

                                      பிரமதாசவை, சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராக காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணை போக முடியாது.

                                      சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள

                                      மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படி

                                      சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரசாங்க கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே

                                      சஜித் பிரேமதாசவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து,

                                      ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசாங்கம் மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம்.

                                      இந்த தொலைநோக்கு பார்வையினாலேயே, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வு

                                      தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்க கூடாது என நாம் முடிவு செய்தோம். இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து

                                      இனங்களையும் அணைத்து செல்லும் ஒரேயொரு சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவையும், ரணில்

                                      விக்கிரமசிங்கவை போன்று, சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமானவராக காட்டும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் துணை போக முடியாது என தீர்மானித்தோம்.

                                      ஆகவே இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்கு கொண்ட எமது நிலைபாட்டை எமது

                                      வாக்காளர்கள், சிவில், சமூக பிரதிநிதிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள்

                                      உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன் தெரிவு

                                      செய்யப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                      இந்த முன்னணி விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                                      தமது முன்னாள் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் பிடிவாதம் காரணமாக , புதிய ஒரு கட்சியை அமைத்த, சில

                                      நாட்களுக்கு உள்ளேயே, தேர்தலை சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற கூடிய பலரை

                                      கொழும்பில் கட்சி தலைமையகத்தில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, சஜித் பிரேமதாச தமிழ்,

                                      முஸ்லிம் பங்காளி கட்சிகளிடமும், ஜாதிக ஹெல உறுமயவிடமும் விளக்கி கூறினார். நாம் எதிர்பார்த்த பத்து தேசிய பட்டியல்

                                      கிடைத்து இருக்குமாயின் இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்காது எனவும் கூறியிருந்தார்.

                                      நமது கட்சிக்கு உரிய தேசிய பட்டியலை தேடி பெறுவது என்பதில் நாம் மிகவும் அக்கறையுடன் இருந்தோம். ஆகவே நாம் அமைதியாக இருக்கவில்லை. அது தொடர்பில் எமது குரலை நாம் உரக்க

                                      எழுப்பினோம். எனினும் முடிவு எடுக்கும் போது நாம் நிதானமாக முடிவுகளை எடுத்தோம். எமது தேசிய கூட்டணியை

                                      உடைத்துக்கொண்டு நாம் சென்றால் அரசாங்கம் மகிழ்வடையும். அதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தி என்ற

                                      எமது தேசிய கூட்டணி உடையுமானால், அது இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்திகளாக இருக்கும். பின், இந்நாட்டில் வாழும் தமிழ்

                                      பேசும் மக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே தேசிய நம்பிக்கையும் இழந்து, நாம் மேலும் பலவீனமடைவோம்.

                                      ஏற்கனவே வடக்கில், கிழக்கில் இந்த அரசாங்கம் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனடைய செய்துள்ளது. அங்கே ஊடுருவி உள்ளது.

                                      இந்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து நாம் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற இந்த தேசிய

                                      கூட்டணியையும் நாம் சிதைக்கவும், பலவீனமடையமும் விட முடியாது. ஆகவேதான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளேயும், தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுகளை எடுத்தோம்.

                                      தேசிய பட்டியல் என்பது வேறு. நமது மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் எம்பீக்கள் தெரிவு செய்யப்படுவது என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.

                                      இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் இன்னமும் சற்று அதிகமாக சிந்தித்து

                                      வாக்களித்திருந்தால், கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகமாக வாக்களித்து இருந்தால், இந்த மாவட்டங்களில் தமிழ்

                                      எம்பீக்கள் மேலதிகமாக உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மக்கள் வாக்களிக்காமல் தவறு செய்து விட்டார்கள்.

                                      இரத்தினபுரியில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை சுமார் 75 ஆயிரம். ஆனால், எமது வேட்பாளர் சந்திரகுமாருக்கு சுமார் 36

                                      ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள். இன்னமும் சுமார் 9 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தால், சந்திரகுமார் அங்கே தமிழ் எம்பியாக உருவாகி இருப்பார். கேகாலை மாவட்டத்தில்

                                      மொத்த தமிழ் வாக்கு 40 ஆயிரம். எமது வேட்பாளர் பரணீதரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அங்கே இன்னமும் 5

                                      ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தால் அவர் அங்கே தமிழ் எம்பீயாக வெற்றி பெற்று இருப்பார்.

                                      இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது தொலைபேசி சின்னத்துக்கு எதிரான அணிகளில் போட்டியிட்ட

                                      தமிழ் வேட்பாளர்கள் என்ற போலி நபர்களில் ஒருவர்கூட அவ்வந்த மாவட்டங்களில், இருநூறு (200) விருப்பு வாக்குகள் கூட

                                      பெறவில்லை. பணம் வாக்கிக்கொண்டு எம்மை அழிக்க வேண்டும் என கெட்ட எண்ணத்தோடு மட்டும் செயற்பட்ட இவர்கள்

                                      படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆனாலும், தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த பொய், புரட்டு போலி பிரசாரங்கள் மக்களை அதைரியப்படுத்தின. ஆகவே இவர்கள்தான், இரத்தினபுரி,

                                      கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாமைக்கு மூலக்காரணங்கள் ஆகும்.

                                      அதேவேளையில், தேர்தல் காலங்களில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, எமக்கு ஆதரவாக ஒரு ஊடகங்களில் எழுதாத, சமூக ஊடகங்களில் பதிவு போடாத, தேர்தல் நிதி இல்லாமல் நாம்

                                      பட்ட எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, எமக்கு எந்தவித உதவியும் செய்யாத, அதையும் மீறி சென்று எமக்கு உபத்திரவம்

                                      செய்வதற்காக, எமக்கு எதிரான அணி அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, போலி

                                      வேட்பாளார்களாக போட்டியிட்டு, எமக்கு எதிராக பொய் பிரசாரங்களை செய்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த,

                                      சோரம்போன அரசியல் வியாபாரிகள், இன்று வெட்கமில்லாமல் “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை

                                      எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் எமக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

                                      கூக்குரலிடுகிறார்கள். நிறுவனரீதியான பாரம்பரியமற்ற, சில சுயாதீன ஊடகங்களிலும் இத்தகைய பல போலிகள் ஒளிந்து

                                      தேர்தல் கால வியாபாரம் செய்து பணம் தேடியுள்ளார்கள். இத்தகைய சோரம்போன போலி நபர்களுக்கு நாம் எமது

                                      வெற்றிகளின் மூலம் மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுத்துள்ளோம். இனியும் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

                                      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                      பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

                                      பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

                                      நேற்று மதியம் லண்டன் Grays, Essex.பகுதியில் ஆண் ஒருவரை

                                      நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று கடத்தி சென்றது

                                      வீதியால் சென்றவரை பின்தொடர்ந்த மேற்படி நால்வர் அடங்கிய

                                      கும்பல் இவரை கோரமாக தாக்கி அவுடி
                                      காரில் கடத்தி சென்றனர்

                                      மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் காவல்துறையினருக்கு விரைந்து

                                      வழங்கிய தகவலை அடுத்து போலீசாரை விசேட தேடுதலை நடத்தினர்

                                      அப்பொழுது குறித்த கார் ,Richmond Road. பகுதியில் கண்டு பிடிக்க பட்டது ,

                                      இந்த கடத்தலுடன் தொடர்புடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப் பட்டார் .

                                      இந்த கடத்தலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                      விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      அடிகாயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார்

                                      மேற்படி திகில் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


                                      மக்களே யாக்கிரதை ,கடத்தல் கறார்கள் உங்கள் அருகில் .

                                      பட்ட பகலில் - லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
                                      பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

                                      பிரிட்டனில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

                                      பயிரிடன் ஸ்கொட்லாந் Newtownards பகுதியில் கார் ஒன்றின் மீது திடீரென

                                      மர்ம நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தினர்
                                      இதில் கார் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது

                                      மேற்படி தாக்குதலை மேற்கொண்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
                                      மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                      இதுவரை இந்த தாக்குதலை மேற்கொண்ட எவரும் கைது செய்யப்படவில்லை ,எனினும் இந்த தாக்குதலுக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                          Posted in உலக செய்திகள்

                                          லண்டனில் இடியுடன் மழை வெள்ளம் ஏற்படும் – மக்களுக்கு எச்சரிக்கை

                                          லண்டனில் இடியுடன் மழை வெள்ளம் ஏற்படும் – மக்களுக்கு எச்சரிக்கை

                                          பிரிட்டன் பரவிய நிலையில் கடும் மழை ,காற்று இடியுடன் பொழியும்

                                          என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
                                          இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

                                          பொழியும் கன மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் இதனால் மின்சாரம் துண்டிக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                                          எனவே மக்களே உசார் ,போக்குவரத்துக்கள் தடை படும் நிலை ஏற்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              போலீஸ் இராணுவம் சுற்றிவளைப்பு – 38 பேர் கைது

                                              போலீஸ் இராணுவம் சுற்றிவளைப்பு – 38 பேர் கைது

                                              இலங்கை மோதன உயன குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் இராணுவத்தினர்

                                              மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில்
                                              அறுபத்தி ஒரு பேர் கைது செய்ய பட்டுளள்னர்

                                              இவர்கள் அனைவரும் போவதிவஸ்து பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

                                              கைதானவர்கள் உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஓகஸ்ட் 20ஆம் திகதி

                                                  9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஓகஸ்ட் 20ஆம் திகதி

                                                  புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 175 பேர் இதுவரை ஒன்லைன் மூலம் பாராளுமன்றத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

                                                  இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

                                                  அன்றை தினம் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின்

                                                  கொள்கைக் பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

                                                  20 ஆம் திகதி காலை 9.30இற்கு புதிய பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து

                                                  பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

                                                  சத்தியப்பிரமாண கொள்கையின் பின்னர் பிரதி சபாநாயகர் குழுக்களின் பிரதித் தலைவரகள்; தெரிவு இடம்பெறவுள்ளது.

                                                  அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

                                                  சபை அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருகைதரும்போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர்

                                                  நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராhளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள்.

                                                  இதன்போது ஜனாதிபதி தலைமையில் கொடி ஏற்றிவைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. படைக்கலசேவிதர், பிரதிப்

                                                  படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட

                                                  குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி

                                                  அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      கொரனோவால் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் விடுவிப்பு.

                                                      கொரனோவால் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் விடுவிப்பு.

                                                      டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில்

                                                      தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் இன்று (15) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                                                      அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், அவர்களது சொந்த இடங்களான கம்பஹா, கொழும்பு,

                                                      கண்டி, கேகாலை, திருகோணமலை, களுத்துறை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                                      குறித்த பயணிகளிற்கான பி.சீ.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று

                                                      பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                                                      கொரோனா நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

                                                      அந்த வகையில் கடந்த 3ஆம் திகதி டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு

                                                      அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விற்பனை செய்யப்படவில்லை – அரசு அறிவிப்பு

                                                      ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விற்பனை செய்யப்படவில்லை – அரசு அறிவிப்பு

                                                      நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை விற்பனை

                                                      செய்ய முயன்றாலும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான

                                                      செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் பிரசன்ன

                                                      ரணதுங்க தெரிவித்துள்ளார்.

                                                      நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

                                                      ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்கும் நிலையை

                                                      மாற்றியமைப்பதே சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் கூறினார்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          லஞ்ச ஊழலில் ஈடுபட்ட 15 சிறை அதிகாரிகள் பணி நீக்கம்

                                                          லஞ்ச ஊழலில் ஈடுபட்ட 15 சிறை அதிகாரிகள் பணி நீக்கம்

                                                          கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை பல்வேறு ஊழல்

                                                          நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணி நீக்கம்

                                                          செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                                                          கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

                                                          மேலும் குறித்த 15 சிறை அதிகாரிகளும் மஹர, மெகசின், பூஸ்ஸ, கொழும்பு,

                                                          வெலிகடா, காலி, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் அங்குனுகொல

                                                          பெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                          இதேவேளை, பூஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்த 10 அதிகாரிகளும் நீர்கொழும்பு

                                                          சிறைச்சாலையை சேர்ந்த 9 அதிகாரிகளும் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை- சந்திரிக்கா

                                                              ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை- சந்திரிக்கா

                                                              ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

                                                              ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                                              இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

                                                              எங்கே என நான் தேடி வருகிறேன். கடந்த ஆண்டு சிறிசேன இதை அழித்துவிட்டார்.

                                                              ராஜபக்ஷவின் அரசியலை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அவர் சக்திமிக்க தலைவராவார்.

                                                              ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எண்ணி வருத்தம் அடைகின்றேன். அழுவதா

                                                              சிரிப்பதா என்று தெரியவில்லை. சிறிசேன மோசமான முறையில் கட்சியை

                                                              அழித்துவிட்டார். இப்போது கேவலமான முறையில் சில அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

                                                              எமது கட்சியின் தலைவருக்கு எதுவும் இல்லை. செயலாளருக்கு பத்திக்

                                                              அமைச்சு அதன்கீழ் நிறுவனங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.