அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Spread the love

அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற

உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யார் எதை கூறினாலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய அரசாங்கத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள்

பணியை முன்னெடுத்து செல்லும் என்று இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமான் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கடந்த 5ஆம் திகதி நடைnhற்ற ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன

பெரமுன கட்சி நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஏற்பட்ட

வெற்றிடத்திற்காக போட்டியிட்டு வெற்றி பெற்ற இளம் வயது மலையக பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் நேற்று கண்டி தலதா மாளிகை மகுல்மடுவ மண்டபத்தில்

நடைபெற்ற புதிய அரசாங்க அமைச்சர்கள் பதிவிப்பிரமாண நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு

வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, மலையகத்தில் இவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள சீ.எல்.எப்க்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு உரையாற்றுகையில், இலங்கை

தொழிலாளர் காங்கிரஸை யார் விமர்சித்தாலும், எடுத்தெறிந்து பேசினாலும் மக்களின் சேவையை இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதில்

பின்வாங்கப்போவதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலங்களில் 40 நாட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல

கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என ஒரு புறத்தில் விமர்சிப்பும், மறுபுத்தில் எதிர்பார்ப்பும் உள்ள

நிலையில் சிறப்பான அபிவிருத்திகளை இங்கு முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply