Posted in இலங்கை செய்திகள்

சிங்கள பொலிசார் மீது திடீர் தாக்குதல் – பலர் கைது

சிங்கள பொலிசார் மீது திடீர் தாக்குதல் – பலர் கைது

பண்டாரகம, அட்டுலுகம, மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு

நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர்

கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்

சென்ற ஜீப் வண்டியை வழிமறித்து பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள பொலிஸ்

நிலையங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்கள்

காயமடைந்துள்ளதாகவும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நான்கு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் ஆகியோர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில்

இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் நிலைநாட்டியுள்ளார்.

நேற்று (08) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்

போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சாதணை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர்

100 மீற்றர் தூரத்தை 10 தசம் இரண்டு – இரண்டு வினாடிகளில் பூரணப்படுத்தியிருந்தார்.

யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

நிரம்பி வழியும் குளங்கள் – வெள்ள பெருக்கு அபாயம்

நிரம்பி வழியும் குளங்கள் – வெள்ள பெருக்கு அபாயம்

தற்பொழுது பெய்துவரும் கன மழை காரணமாக மத்திய மலைநாட்டில்

நீர் ஏந்து பிரதேசங்களான காசல்ரீ மற்றும் மவுசாகல நீர்த்தேக்கங்களின்

நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் நிலைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கெனியோன், லக்ஷபான, புதிய லக்ஷபா, பொல்பிட்டிய,

விமலசுரேந்திர ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் உயர்ந்தபட்ச மின்

உற்பத்தி கிடைக்குமென மின்சார பொறியிலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – 14,000 தீயணைப்பு வீரக்கள் களத்தில்

அமெரிக்காவில் பற்றி எரியும் காடுகள் – 14,000 தீயணைப்பு வீரக்கள் களத்தில்

அமெரிக்கா கலிபோனியாவில் உள்ள காட்டு பகுதி பற்றி எரிந்த வண்ணம்

உள்ளது ,இந்த காட்டு தீயினை அணைக்கும் முயற்சியில் பதின் நான்காயிரம்

தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்ந்து காடுகள் பற்றி எரிவதால் ,வனவிலங்குகள் மற்றும் அதனை அண்மித்த மக்கள் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன

தொடர்ந்து மீது படையினர் களமுனையில் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் Pizza Hu 29 கடைகள் அடித்து பூட்டு – 450 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Pizza Hu 29 கடைகள் அடித்து பூட்டு – 450 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் காரணமாக புகழ் பெற்று விளங்கும்

Pizza Hut தனது உணவகங்களில் இருபத்தி ஒன்பது அடித்து பூட்ட

பட்டுள்ளது ,இதனால் அங்கு பணிபுரிந்த 450 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து வரும் வாரங்களில் குறித்த நோயின் பரவல் அதிகரிக்கும்

என எதிர்வு கூற பட்டுள்ளநிலையில் தொடர்ந்து மேலும் அபிரிட்டன் தழுவிய

நிலையில் பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிகழ்வு இடம் பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

இந்த தகவலினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

சிறையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி

சிறையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதி

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து, ஹொரணை பகுதியில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கைதி,

கூரையை பிரித்து நேற்று (08) பிற்பகல் தப்பிச்சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை பமுணுகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், 1300 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் களுத்துறை

வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது

Posted in இலங்கை செய்திகள்

யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை

பட்டப்படகலில் 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றதாக என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.

பின்னர், அதுதொடர்பில் ஆராய்ந்த போதே 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கறுப்பு பட்டி அணிந்து பாராளுமன்றம் நுழைந்த எதிர்க்கட்சி

கறுப்பு பட்டி அணிந்து பாராளுமன்றம் நுழைந்த எதிர்க்கட்சி

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு இடமளித்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்துள்ளனர்.

முன்னதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அமர்விலிருந்து வௌிநடப்பு செய்துள்ளனர்.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி

1500 கிலோ வரை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (07.09.2020) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மீன் உணவு உற்பத்திகளை அதிகரிப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் அமைச்சரின்

கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனமானது தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா) ஆலோசனையுடன் கடந்த வருடம்

ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனமானது இலங்கையில் மீன்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் முதலாவது நிறுவனமாகும்.

தற்போது இங்கு மீன்களுக்கான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் இயந்திரங்களின் வினைத்திறனற்ற செயல்பாடுகள் காரணமாக உற்பத்தியை முழுவீச்சுடன் மேற்கொள்ள முடியாத

நிலையேற்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை அமைக்கப்பட்ட போது விசேடமாக தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் தற்போது உலகில்

பாவனையில் உள்ள அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்ளுக்கு இணையானவை அல்ல என்பதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்களும் எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின் பொறியியலாளர்களும் இவ்வியந்திரங்களை நவீனமயப்படுத்தவதற்கு பாரிய

முயற்சிகளை மேற்கொண்ட போதும் இத்தொழிற்சாலையின் மூலம் தற்போது நாளாந்தம் குறிப்பிட்ட அளவிலான மீன் உணவுகளையே உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

ஆகவே பொருத்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை பெற்றுத் தருமாறு இத்தொழிற்சாலையின்

உரிமையாளர்களால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து பொருட்களையும் இலங்கையிலேயே உற்பத்தி செய்யும்

கொள்கையின் அடிப்படையில் நாட்டுக்கு தேவையான மீன் உணவவு அனைத்தையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதே

அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து

தீர்க்கமான மற்றும் சாதகமான முடிவொன்றை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய இயந்திரமொன்றை கொள்வனவு

செய்வதைவிட இருக்கும் இயந்திரங்களை மேலும் மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொழிற்சாலைக்கான தனது விஜயத்தின் பின்னர் இவ்விடயம்

தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா, எக்ரி ஸ்டார் பிஷ் மீல்ஸ் தனியார் நிறுவனத்தின்

பணிப்பாளர் ஜயந்த குரே, கடற்றொழில் ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, நாரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

பெரும்போகத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரம் – ஜனாதிபதி பணிப்பு

பெரும்போகத்திற்கு தட்டுப்பாடு இன்றி உரம் – ஜனாதிபதி பணிப்பு

இம்முறை பெரும்போகம் விவசாய வரலாற்றில் ஒரு புரட்சி…

• சேதனப் பசளையின் பங்களிப்பு 25% வீதம் வரை….

• அவசியமான உரத்தை நாட்டிற்குள் உற்பத்தி செய்வதற்கு திட்டம்…

பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. கைவிடப்பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட

பரந்தளவிலான பயிர் நிலங்களில் பல தசாப்தங்களின் பின்னர் நெல் உட்பட பல பயிரினங்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு உரிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் அவசியமான உரத்தை உரிய அளவில்இ உரிய நேரத்தில், உயர் தரத்துடன் வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள்இ இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க

அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பயிர்ச் செய்கையில் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ குறிப்பிட்டார். தட்டுப்பாடு இன்றி உரத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் மற்றும் தனியார் துறையின்

இறக்குமதியாளர்களுக்கு வேண்டிய பின்புலத்தை தயார் செய்து கொடுத்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

இறக்குமதியில் தங்கி இருக்காது நாட்டுக்கு தேவையான உரத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை நடத்தி இருப்பதனால் பிரதான

உர வகைகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு வழங்க முடியுமென்று பெசில் ராஜபக்ஷ கூறினார்.

எப்பாவல போஸ்பேட் சார் Single superphosphate ஐ நாட்டுக்கு அவசியமான அளவில் உற்பத்தி செய்ய முடியுமென்று ஆய்வுகளின்

மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நெனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய உர வகைகளின் உற்பத்தி தொடர்பாகவும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

உர உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அவசியமான முதலீடுகளை கமத்தொழில் அமைச்சு வழங்கும்.

கடந்த போகத்தில் 25,000 ஹெக்டெயர்கள் சேதனப் பசளை பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல் 30% வீதத்தை தாண்டியுள்ளதாக கமத்தொழில் அமைச்சின்

அதிகாரிகள் குறிப்பிட்டனர். பெரும்போகத்தில் முழு பயிர் நிலத்தில் 25% வீதத்தை சேதனப் பசளையை பயன்படுத்துவதற்கான இயலுமை பற்றி உடனடியாக கண்டறியுமாறு ஜனாதிபதி

ஆலோசனை வழங்கினார். அதன் மூலம் இரசாயன உரப் பாவனையை இவ்வருடத்தில் 25% வீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சேதனப் பசளை பயன்பாட்டினால் பெறுகின்ற விளைச்சல் மற்றும் ஏனைய பிரதிபலன்கள் தொடர்பாக விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை

தயார்படுத்தும்படி ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இரசாயன உரத்தின் மூலம் நீர் மற்றும் பயிர் நிலத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும், சிறுநீரக

நோயினாலும் ஏனைய நோய்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்கும், சுற்றாடல் சமநிலை தன்மையை

பாதுகாப்பதும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.

இரசாயன உரம் மற்றும் சேதனப் பசளை 70% மற்றும் 30% என்ற வீதத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

மரக்கறி பயிர்ச் செய்கையாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து 6 வகையான மரக்கறிகள் அடங்கிய பொதியை 350 ரூபாவிற்கு கொழும்பு மாவட்டத்தில் 10 இடங்களில் இன்று

வெற்றிகரமாக விற்பனை செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாத்துஇ கமத்தொழில் அமைச்சு மற்றும் துறைசார் அமைச்சுக்கள்

ஒன்றிணைந்து நேரடியாக நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேஇ இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வாஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் உர நிறுவனங்களின்

பிரதிநிதிகள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம்

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம்

இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர்

சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒரு முழுமையான தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் ஆய்வுகூடம் (நேற்று) 8

ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

குறித்த வசதிகள் மூலம் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான சோதனைகளை நடத்துவதினூடாக

அரசாங்கத்தின் தேசிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.

தற்போது, நாடு முழுவதும் உள்ள 20 ஆய்வகங்களில் வைராலஜிஸ்ட் ஆலோசகர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்களின்

மேற்பார்வையில் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் கிருஷாந்த பெர்னாண்டோவின் அழைப்பின் பேரில் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின்

தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம

அதிதியாக கலந்து கொண்டு பிரதான வைத்தியசாலை கட்டிடத்தில் குறித்த வசதியினை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த வசதிகளை மேற்கொள்வதற்கு சம்பத் வங்கி பி.எல்.சி, வரையறுக்கப்பட்ட டபிள்யூ.எஸ்.ஓ 2 லங்கா தனியார் நிறுவனம்

மற்றும் இலங்கை பிஸ்கட் லிமிடெட் இணைந்து ரூபா 30 மில்லியன் நிதியுதவியினை அளித்துள்ளன.

குறித்த திறப்பு விழாவிற்கு இராணுவ சுகாதார சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் தற்போதைய சுகாதார மற்றும்

சுதேச மருத்துவ நடைமுறைகள் அமைச்சின் செயலாளருமான மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் அனுசரனையாளர்களின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில், புதிய தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வக வசதி சுமார் 300 கொவிட்-19 தொற்று நோய் மதிப்பீடுகளுக்கான திறனைக் கொண்டிருக்கும், மேலும் பயிற்சி பெற்ற ஊழியர்களை

இணைப்பதன் மூலம், தேசிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதன் சோதனை திறனை 600 வரை அதிகரிக்க மிக விரைவில் திட்டமிட்டுள்ளது. அத்துடன். இந்த நோய்த்தொற்றின் பரவலான

சமூக பரவலைத் தடுப்பதில் மூலோபாய அணுகுமுறை அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளில் கடுமையான தொற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் அனைத்து நிகழ்வுகளையும்

தனிமைப்படுத்துதல், விரிவான தொடர்புத் தடமறிதல் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட தொடர்புகளின் தனிமைப்படுத்தல் மற்றும் பரவும் சங்கிலிகளை முறியடிக்க தேவையான பயனுள்ள பொது

சுகாதாரம் மற்றும் தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றினை கொழும்பு இராணுவ வைத்தியசாலையானது பிரதிபலிக்கின்றது.

குறித்த திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ‘இலங்கையில் மிகவும் பயனுள்ள ஆய்வக சோதனை

மூலோபாயத்தைத் தொடர்வது நமது நாட்டில் கொவிட் – 19 தொற்றுநோயை மட்டுமல்லாமல் மற்ற தொற்று நோய்களையும்

இந்த புதிய நோய்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.

எனவே தேசிய முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான சரியான திசையில் ஒரு படியாக இருக்கும். ‘இராணுவ வரலாற்றில் முதல்முறையாக, ஊழுஏஐனு-19 மட்டுமல்லாமல் பிற தொற்று

நோய்களையும் கண்டறியக்கூடிய இந்த நவீன வசதியை நாங்கள் பெற முடிந்தது அதிர்ஷ்டம். தானியங்கி இயல்பு இதுபோன்ற நோயறிதல் சோதனைகளை துரிதப்படுத்த உதவும் ஒரு குறுகிய

எழுத்து மற்றும் இது நமது தேசிய முயற்சிகளுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கும், இது ஜனாதிபதி மற்றும பிரதமர் மற்றும் பிற பங்குதாரர்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.’

‘சமுதாயத்தில் இன்னும் கொவிட் தொற்று நோய் பரவல் காணப்படவில்லை என்றாலும், நாம் அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க

வேண்டியது அவசியம், ஏனெனில் ஒரு சிறிய குறைபாடு கடந்த காலங்களில் நாம் அனுபவித்ததைப் போல பரவலை ஏற்படுத்தும். இந்த கொவிட் -19 ஆய்வகத்தினை நிறுவும் திட்டத்தின்

பின்னணியில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றிய மேஜர்

ஜெனரல் சஞ்சீவ முனசிங்க காணப்பட்டார் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நமது அண்டை இந்தியாவைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது ஒரு நாளைக்கு 90,000 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்று நோய் பதிவாகியுள்ளது. குறித்த பரவலை கட்டுப்படுத்துவதில் எங்கள்

முயற்சிகளை ஆதரிக்கும் ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் காணப்படும் எங்கள் மக்கள் நடந்து கொண்டதாக நாங்கள்

உணர்கிறோம், இந்த நடைமுறை தொடரப்பட வேண்டும், ‘என்று அவர் கூறினார்.

இந்த தொற்று நோயால் உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் ஆய்வகத்தின் ஆதரவாளர்கள் தங்கள் தேசிய

அக்கறைக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டினார்.

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்

பிரிட்டனில் நில நடுக்கம் -Milton Keynes இல் குலுங்கிய வீடுகள்

பிரிட்டனில் இன்று காலை 9,45 மணியளவில் திடீர் நிலநடுக்கம்

ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கமானது Milton Keynes and High Wycombe. வரை உணரபட்டுள்ளது

வீடொன்றில் பொருத்த பட்டிருந்த கமராவில் இந்த நிலநடுக்க அதிர்வுகள்

பதிய பெற்றுள்ளது ,வீடுகள் குலுங்கிய பொழுது அங்கிருந்த செல்ல பிராணிகள் தப்பி ஓடும் காட்சிகளும் பதிய பெற்றுள்ளன

இதன் தாக்கம் 3.3ஆக பதிய பெற்றுள்ளது ,இதனால் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன

,எனினும் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவர்வில்லை

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு

    கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு

    பிரிட்டனில் குளிர்காலத்தை முன்னிட்டு மீள வேகமாக பரவி வரும்

    கொரனோ நோயின் தாக்குதலினால் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது

    இதே பகுதியில் உள்ள போல்டன் எனும் பிரதேசத்தில் உள்ள பார்கள் ,உணவகங்கள்

    ,இரவுகளியாட்ட விடுதிகள் என்பன நடத்த தடைகள் விதிக்க பட்டுள்ளன ,

    உணவகங்களில் டெக்கே வே மட்டும் சுகாதாரமுறைக்கு உட்படுத்த பட்டு எடுத்து செல்ல அனுமதிக்க படுகிறது

    இங்கே ஒருலட்சம் பேரில் 120 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது

    கண்டுபிடிக்க பட்டுள்ளதை அடுத்து சுகாதார அமைச்சின்

    வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி

      பிரிட்டனில் கொரனோ தாக்குதல்-57,400 பேர் பலி

      பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

      சுமார் 57,400 பேர் பலியாகியுள்ளனர் என தற்போது அறிவிக்க பட்டுள்ளது

      மேலும் மீளவும் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகின்றன


      எதிர்வரும் குளிர்காலத்தை முன்னிட்டு இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும்

      எனவும் இதனால் எண்பத்தி ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்

      பலியாக கூடும் என நோய் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

      இதற்கான பல காரணங்கள் முன் வைக்க படுகிறது ,மேலும் மக்கள் அரசு

      அறிவுறுத்தும் சுகாதார முறைமையை பின்பற்றாது அலட்சியமாக செல்வதாகவும் ,

      இதனால் இதை விட பாதிப்பு இரட்டிப்பாக செல்லும் அபாயம் எழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டா ஆட்சியில் புதுமையான பஸ் நிலையம்- பாருங்க

      கோட்டா ஆட்சியில் புதுமையான பஸ் நிலையம்- பாருங்க

      கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய

      மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது. தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.

      இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும். இது வரைக்கும் திருத்தி

      அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்

      இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும்

      ஆசிரியர்களும் கிராம மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர்.

      இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண

      போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு

      1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு

      அன்மையில் தேசிய ஒருமைபாடு அரசகரும மொழிகள் சழூக மேப்பாடு அமைச்சின் ஊடாக இரண்டாம் மொழியை கற்பிப்பதற்கு மொழிகளில் தகமை உள்ள 1300 விண்ணப்பதாரிகள்; தெரிவு

      செய்யப்பட்டார்கள். இவர்களுக்காகன நியமன கடிதங்கள் முன்னால் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னால் பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் கடந்த 2019

      செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அலரி மாலிகையில் வழங்கி கைக்கப்பட்டது. இவர்களில் தமிழ் மொழி மூலம் 800 பேரும்

      சிங்களமொழி மூலம் 300 பேரும் ஆங்கில மொழிமூலம் 200 பேருமாக அடங்குவர்.

      இந்த இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக தெரிவு செயய்பட்டவர்களுக்கு நாடாளாவிய ரீதியில் காணப்படும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஊடாக பயிற்சிகள்

      ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக இவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் இது வரை பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.

      இந் நிலமை குறித்து பயிலுனர்கள் குறித்த பயிற்சி நிறுவன அதிகாரிகளையும் பயிற்றுவிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு வினவிய போதும் பொருத்தமான பதில்கள் வழங்காததினாலும்

      பயிற்சிகள் ஆரம்பிப்பது குறித்து உரிய திகதியை வழங்காதிதினாலும் பயிற்றுவிப்பாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

      குறிப்பாக இந்த நியமனங்களை பெற்றவர்கள் ஏற்கனவே சில அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிந்தவர்கள். தங்களுக்கு ஒரு பொருத்தமான தொழி;ல் கிடைக்க போகின்றது என்ற நோக்கில்

      இருந்த தொழிலையும் விட்டுவிட்டு இந்த தொழிலில் இணைந்து பயிற்சிகளை பெற்று வந்தனர். இவ்வாறான நிலையில் இவை எந்த காரணம் இன்றியும் உரிய பதில்கள் இன்றியும் இடை

      நிருத்தப்பட்டமையால் பயிலுனர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டாம் மொழி சிங்களம் கற்பிக்க தமிழ்மொழி மூலம் 800 பயிலுனர்கள் தெரிவு செயய்பட்டு

      இருந்தனர.; இவர்களில் பெரும்பாலானோர் மலையத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள். இவர்களுக்கு சிங்களமொழியில் கூடிய பரீட்சயம் இருந்ததாலும் சிங்களவர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்க

      கூடிய தகமை இருந்ததாலும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளதுடன். உலரீதியில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

      தற்போது தெரிவு செய்யபட்ட சில பயிலுனர்களுக்கு இருந்த தொழிலும் இல்லாமல் போய் கிடைத்த தொழிலும் இல்லாமல் போய் உள்ளது. நாட்டில் மொழிக் கொள்கையை திறம்பட முன்னெடுத்து

      செல்ல வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதனை நம்பி இத்துறைக்கு விண்ணப்பித்து தற்போது நிர்க்கதியாகி

      உள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

      Posted in உலக செய்திகள்

      கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி

      கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி

      உலக நாடுகளை மிரளவைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

      சிக்கி பிரேசில் மற்றும் மெஸ்சிக்கோ நாடுகளில் அதிகளவான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

      இதில் பிரேசில் நாட்டில் 310 பேரும் மெஸ்சிக்கோவில் 223 பேரும் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

      மேலும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசுகள் தினறி வருகின்றன

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்காவில் – தீயில் எரிந்து இரண்டு மில்லியன் ஏக்கர் காடு

      அமெரிக்காவில் – தீயில் எரிந்து இரண்டு மில்லியன் ஏக்கர் காடு

      அமெரிக்காவில் கடந்த பன்னிரண்டு மாதங்காளிகள் சுமார்

      இரண்டு மில்லியன் ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

      இந்த தீ விபத்தினால் பல நூறு வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிந்துள்ளன

      வன விலங்குகள் மற்றும் உடைமைகள் என்பனவும் தீயில் எரிந்து அழிந்துள்ளன


      மக்கள் வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      பிரபாகரனைச் சந்தித்தது ஏன்?

      பிரபாகரனைச் சந்தித்தது ஏன்?

      பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின்

      சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?” என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

      யாழ்ப்பாணத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

      அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2002ஆம் ஆண்டில், அப்போதைய நாட்டின்

      பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தாரென்றார்.

      அத்தோடு, இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும்

      ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் வினவினார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இரத்தினக்கல், தங்க ஆபரணக் கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்

      இரத்தினக்கல், தங்க ஆபரணக் கைத்தொழில் மீது விதிக்கப்பட்ட வரி நீக்கம்

      ஆபரண உற்பத்தியாளர்களுக்கு 4மூ வீத வட்டிக்கு ஒரு மில்லியன் ரூபா

      இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14மூ வீத வருமான வரி

      மற்றும் 15மூ வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

      1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில்

      நீக்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் இதன் மூலம் வெளிக்கொணரப்படாத நிலை தோன்றியது.

      2018ஆம் ஆண்டு தங்க இறக்குமதிக்கு 15மூ வீத வரி விதிக்கப்பட்டது. தங்க நகைகளின் விலை உயர்வடைவதற்கு இவ்வரி காரணமாக அமைந்தது. குறித்த வரியை உடனடியாக

      நீக்கிஇ இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழிலின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

      இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (07) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

      உலகச் சந்தையில் இலங்கை இரத்தினக்கல்லின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முடியாமல் போனமைஇ அவை சார்ந்த

      பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே முன்வைத்த 14 ஆலோசனைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

      இந்நாட்டில் கண்டெடுக்கப்படாத உலகின் ஏனைய நாடுகளுக்குரிய விலை கூடிய இரத்தினக்கற்களை இறக்குமதி செய்வதற்கான

      வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் மற்றும் இரத்தினக்கல் கையிருப்பை பாதுகாத்து வருவதன் முக்கியத்துவம் பற்றியும் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டினார்.

      இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும்போது இடம்பெறுகின்ற தாமதங்களை தடுப்பதற்காக உரிய அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில்

      ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பிரதாய ரீதியாக தங்க நகைகளை

      உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கிகளினால் 4மூ வீத சலுகை வட்டி அடிப்படையி்ல் 10 இலட்சம் ரூபா கடன் வழங்குமாறு ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

      பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய இரத்தினக்கல் படிவுகளைக்கொண்ட பயிரிடப்படாத காணிகளை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு வழங்குவதற்கு தடையாக உள்ள விடயங்களை

      நீக்கி அகழ்வுக்காக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை

      சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

      இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன.

      இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகளை உடனடியாக

      நிறுத்துவதற்கும் சம்பிரதாயமாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்து வருகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

      தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் இரத்தினக்கல் ஆய்வு கூடத்தை சர்வதேச தரத்திற்கு தரம்

      உயர்த்துதல் உட்பட இத்துறையின் மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

      அமைச்சர் விமல் வீரவங்சஇ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்

      செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் இரத்தினக்கல்இ ஆபரணக் கைத்தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.