Tag: யாழில் -வீட்டை உடைத்து தங்க
Posted in இலங்கை செய்திகள்
யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
Author: நலன் விரும்பி Published Date: 09/09/2020 Leave a Comment on யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
யாழில் -வீட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்தவேளை
பட்டப்படகலில் 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றதாக என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.
பின்னர், அதுதொடர்பில் ஆராய்ந்த போதே 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






