Author: நலன் விரும்பி
சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா
சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
சீன மாணவர்கள் 1,000 பேரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா – டிரம்ப் நிர்வாகம் அதிரடி
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகம் தொடங்கி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் நகரில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், அதை உடனடியாக மூடவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 2018-19 ஆண்டு கணக்கீட்டின் படி 3 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்புகள் படிக்க விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் சீன மாணவர்களில் 1,000 பேரின் விசாவை டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி மற்றும் பட்டப்படிப்பு பயின்றுவருபவர்கள் ஆகும்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ரகசிய தகவல்கள் திருடப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவத்துடன் ரகசிய தொடர்பில் இருந்து அவர்களுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு உள்ளிட்ட ரகசிய தகவல்களை இந்த மாணவர்கள் அளிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இதனால் அவர்களது விசா ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டை சேர்ந்த 1,000 மாணவர்களின் விசாவை அமெரிக்கா ரத்து செய்யப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக முதன் முதலாக மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழகம்,
ஜியாமென் பல்கலைக்கழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பு இது. இந்த தடுப்பூசியை
மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 100 பேருக்கு மூக்கு வழியாக
‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் – கடற்படை
எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் – கடற்படை
நிர்கதிக்குள்ளாகியுள்ள எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் கல்முனை துறையில் இருந்து 50 கடல் மைல் தொலைவிற்கு அப்பால்
இழுத்துச்சௌ;ளப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா நேற்று (10) தெரிவித்துள்ளார்.
இன்றிலிருந்து குறித்த நடவடிக்கையில் சிங்கப்பூர் டக் படகும் இணைந்துகொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கப்பலை அண்மித்த கடற்பரப்பில் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டு அவை தொடர்பான விசாரணைகளை உரிய
அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளைஇ நேற்று (10) காலை 10.00 மணியளவில் உளவு நடவடிக்கைகளை மேற்கோள்வதற்காக சீனக்குடா விமான
நிலையத்திலிருந்து பீச்கிராப்ட் ரக விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
குறித்த கப்பலை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் கொண்டு செல்லுமாறு எம்ரீ நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர் உட்பட
அனைத்து வெளி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி தர்ஷனி லஹண்டபுற தெரிவித்தார்.
இதேவேளை, சிங்கப்பூரை தளமாக கொண்ட சர்வதேச நிறுவனமான ஸ்மித் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தின்
பணியாளர்கள்இ எம்ரீ நியூ டயமண்ட் கப்பலின் நிலைமை குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி
மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி
மட்டக்களப்பில் சிறு கைத்தொழிலில் ஈடுபட்டு வரும் முயற்சியாளர்களுக்கு சுயசக்தி கடன் திட்டத்தின்கீழ் தொழில் விருத்தியினை மேற்கொள்வதற்காக 30 இலட்சம் ரூபா
பெறுமதியான காசேலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவினால் நேற்று (10) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் செயற்பட்டு வரும் சிறுகைத்தொழில் அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டலில் சிறுதொழில் முயற்சியில்
ஈடுபட்டு வருகின்ற உற்பத்தியாளர்களின் தொழில் விருத்தியினை மேம்படுத்தும் நோக்குடன் நிதி மற்றும் துணைச் சேவைப்பிரிவு
இவர்களுக்கான கடன் வசதியினைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது.
நாட்டின் பொறுளாதாரத்தினை மேம்படுத்தும் அரசின் திட்டத்திற்கமைய சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இக்கடன்
வசதிகளை வங்கிகள் மூலம் 5.5 வீத வட்டியில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இம்மாவட்டத்தில் தையல் தொழில், அரிசி மா உற்பத்தி, சீமெந்து மற்றும் செங்கல் உற்பத்தி, மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் மற்றும் மிக்சர் உற்பத்தி
போன்ற தொழில்களில் ஈடுபட்டுவரும் 12 தொழில் முயற்சியாளர்களுக்கு ஹட்டன் நெசனல் வங்கியினால் தலா 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா கடன் வசதி முதற்கட்டமாக வழங்கி
வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதன்போது அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் படித்து பட்டம் பெற்றுவிட்டு அரசாங்க தொழிலை மாத்திரம் எதிர்பாரத்திருக்கும் மனநிலை இளம்சமுதாயத்திடமிருந்து
மாறவேண்டும். அவர்கள் சிறு கைத்தொழில் முயற்சியில் ஈடுபட்டு தங்களையும், தாங்கள் சார்திருப்போரையும், நாட்டையும் பொருளாதார ரீதியாக உயர்த்திட முன்வரவேண்டும். பிரபல
தொழிலதிபர்களாக விளங்குபவர்கள் பெரும்பாலும் ஒரு சிறிய தொழிலை ஆரம்பித்து முன்னேறியவர்களே. இக்கடன் வசதியினைப் பெற்றுக் கொள்பவர்கள் தமது தொழிலுக்காக
மாத்திரம் அதனைப் பயன்படுத்தி தொழில் விருத்தியடையச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி
போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கையை சேர்ந்த தம்பதியர் சிக்கினர். அவர்களிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி
பாஸ்போர்ட்
சென்னை:
சென்னை அண்ணாநகர் மேற்கு அன்பு காலனியில் வசித்து வரும் தனியார் காப்பீடு நிறுவன ஊழியர் தாஜூதீன் (வயது 55), அவரது மனைவி ஆஷா (60) ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள்
என்றும், அவர்கள் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்பட அரசு அங்கீகார அட்டைகள் பெற்று
இருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக தமிழக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 2 பேரிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘தாஜூதீனும், ஆஷாவும் இலங்கை நாட்டில் இருந்து கடந்த 1987-ம் ஆண்டு தமிழகம் வந்து, நெல்லை மாவட்டத்தில் தங்கி
இருந்ததும், பின்னர் 1998-ம் ஆண்டு அவர்கள் சென்னையில் குடியேறியதும், தற்போது அவர்களுடைய மகன் ஜூலியன் (33) பெங்களூருவில் இருப்பதும் தெரிய வந்தது.
இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் என அரசு அங்கீகார அட்டைகளை பெற்று சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது.
பின்னர் ‘கியூ’ பிரிவு போலீசார் அவர்கள் 2 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மத்திய
குற்றப்பிரிவு போலீசாரும் இலங்கை தம்பதியிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
போலி ஆவணங்கள் தயாரித்தது எப்படி? இதற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில் தாஜூதீன் கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவி ஆஷாவை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது
வரவேண்டும் என்று சொல்லி போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
மாணவனை அடித்து கொன்ற யானை – கண்ணீரில் கிராமம்
மாணவனை அடித்து கொன்ற யானை – கண்ணீரில் கிராமம்
கிராந்துருகோட்டை பஹலரக்கிந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு
உள்ளாகி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த மாணவன் 16 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்த கொரனோ நோயாளர்கள்
இலங்கையில் அதிகரித்த கொரனோ நோயாளர்கள்
நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனா
தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152 ஆக அதிகரித்துள்ளது.
மாலைத்தீவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்த 2,951 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
194 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டு தமிழர்களை இலங்கை வர அழைக்கும் – ஹிட்லர் மகிந்தா
வெளிநாட்டு தமிழர்களை இலங்கை வர அழைக்கும் – ஹிட்லர் மகிந்தா
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றி எம்முடன் இணைந்துப்
பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற
முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“எமது அரசாங்கம், உங்களுக்ளுக்கான முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன், உங்களிடம் யாராவது தரகுப் பணம்
அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால், நீங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடியாகத் தெரியப்படுத்தலாம்.
“வெயில் – பனி என்று பாராமல் உங்களை வருத்தி, நீங்கள் உழைக்கும் பணத்தை, உங்கள் மண்ணில் நீங்கள் தைரியத்துடன்
முதலீடு செய்வதற்கு, எமது அரசாங்கம் என்றும் உங்களுக்குப் பக்கபலமாகச் செயற்படும்.
“எம் அனைவரதும் அழகிய இலங்கைத் தீவை, உங்கள் வரவால் வெகு விரைவில் இன்னும் பன்மடங்கு அழகிய மற்றும் வளம்
கொழிக்கும்; உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு, நாம் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம்” என,
புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களிடம், பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஈராக்கில் இருந்து 3000 இராணுவத்தி விளக்கும் அமெரிக்கா
ஈராக்கில் இருந்து 3000 இராணுவத்தி விளக்கும் அமெரிக்கா
ஈராக்கில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தினரில்
மூவாயிரம் பேர் இம்மாதம் முழுமையாக விலக்க பட்டு விடுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்து
அங்கு ஈரானின் எதிர்ப்பு பலமாக உள்ளத்தினாலும் ,குறித்த இராணுவத்தினரின்
முகாம்கள் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாலும்
இந்த படை விலகுதலை அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது
தேர்தல் வேளையில் ஈரான் ஏதாவது சதி செய்ய கூடும் என்ற அச்சம்
காரணமாக இந்த கண்துடைப்பு விலக்கல் இடம்பெறுவதாக நம்ப படுகிறது
20 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மாமூத் எலும்பு கூடுகள் 100 மீட்பு
20 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மாமூத் எலும்பு கூடுகள் 100 மீட்பு
இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னார் வாழ்ந்த மாமூத் இன எலும்புக்கூடுகள் மெஸ்சிக்கோ நாட்டில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
,மலையடிவார சுரங்கம் அருகில் இவை கண்டு பிடிக்க பட்டுள்ளன
இவை நோயினால் இறந்தோ அல்லது கொலை செய்ய பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது
எனினும் தொடர்ந்து இது குறித்து மரபியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு ,பரிசோதனையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

20 ஆயிரம் ஆண்டு பழமை 
பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
இலங்கை கொடிய சிறை சாலையாக விளங்கும் பூசா சிறை சாலையில்
தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்
விசாரணைகளில் ஏதும் இன்றி பல்வேறு பட்ட குற்ற சாட்டில் அடைத்து
வைக்க பட்டுள்ள இவர்களே இவ்விதம் உண்ணவிரத போரில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
பெரியபந்தன் பகுதியில் காதலர்கள் சடலமாக மீட்பு
பெரியபந்தன் பகுதியில் காதலர்கள் சடலமாக மீட்பு
கிளிநொச்சி பெரியபந்தன் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லை என அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளர். இந்த நிலையில் பெரியபரந்தன் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனை தொடர்ந்தே இன்று (10) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்றவர் என்றும் இளைஞர் இலங்கை மின்சார
சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்..
அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை- மக்களுக்கு எச்சரிக்கை
அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை- மக்களுக்கு எச்சரிக்கை
நாம் பாதுகாப்பாக இல்லாமல் மெத்தனமாக இருந்தால் அக்டோபரில் கொரோனா இரண்டாவது அலை வருவதை யாராலும்
தடுக்க முடியாது என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் திருவேற்காடு நகராட்சியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர்
பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் 2
பூங்காக்களையும் அவர் திறந்துவைத்தார்.அமைச்சர் பாண்டியராஜன் இதனை நேற்று ஆய்வு செய்தார்
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் தெரிவிக்கையில் நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் 2-வது அலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால்
நாம் மெத்தனமாக இருந்துவிட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது.
கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் சுவரொட்டியாக ஒட்டி உள்ளனர். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர்
இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் இவ்வாறு ஒட்டி உள்ளனர். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத
வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என்றும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்..
நாடு பூராகவும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – கோட்டா உத்தரவு
நாடு பூராகவும் 5,000 குளங்கள் உடனடியாக புனர்நிர்மாணம் – கோட்டா உத்தரவு
புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு பூராகவும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள வயல்கள் 120,000 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ‘தேசிய உணவு உற்பத்தி பங்களிப்பு வேலைத்திட்டம்’
நடைமுறைப்படுத்தப்படும். குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.
கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (09)
முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உத்தேசிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
‘இதற்கு முன்னரும் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது நிபுணர்களினதும் மக்களினதும் பலத்த விமர்சனத்திற்குள்ளாகியது. குளங்களை
தோண்டி ஆழப்படுத்தினாலும் நீரை தேக்கி வைக்கக்கூடிய புராதன தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியான முறைகள் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். அவ்வாறான
குறைபாடுகளை களைந்து பொதுவான வழிமுறைகளின் மூலம் அந்தந்த பிரதேசங்களுக்கு மற்றும் குளங்களுக்கு உரிய
முறைமைகளின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்’ என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
குளங்களில் படிவுகள் நிரம்புவதினால் அவற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது. அதிகளவான குளங்களில் கரைகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்போகத்தை இலக்காக்கொண்டு அவற்றை
உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதன் அவசியத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வயல் நிலங்களுக்கு மாத்திரமன்றி குடிநீரை பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏனைய நீர்த் தேவைகளை நிறைவு
செய்துகொள்வதற்காகவும் குளத்து நீரை பயன்படுத்துவதன் இயலுமை பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நீர்ப்பாசன கட்டமைப்பின் மூலம் இயங்குகின்ற விவசாய காணி பயன்பாடு தொடர்பாக காணி உபயோகத் திணைக்களம் மற்றும் கமத்தொழில் திணைக்களம் ஒன்றிணைந்து கணக்கெடுப்பு
ஒன்றை செய்துள்ளது. இதன் மூலம் கண்டறியப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு சிறப்பான முறையில் நீரை
முகாமைத்துவம் செய்து ஏனைய போகங்களில் இனங்காணப்பட்ட 17 வகையான பயிரினங்களை பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குளங்களை புனர்நிர்மாணம் செய்தல்இ குளம் சார் கைத்தொழில்களை பாதுகாக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். விவசாயம் சார் நிறுவனங்கள்
மற்றும் விவசாய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். குளங்களை புனர்நிர்மாணம் செய்வதுடன்இ கால்வாய்கள்
உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
பயிர்ச் செய்கைக்கான நீரை வழங்குதல் மற்றும் குடிநீர் விநியோகத்தை நோக்கமாகக்கொண்டு திட்டமிடப்பட்ட ‘உத்துரு மெத மகா எல’ (வடமத்திய பாரிய கால்வாய்) மற்றும் ‘வயம்ப எல’
(வடமேல் கால்வாய்) திட்டங்களை துரிதமாக நிறைவு செய்வதன் அவசியம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதன் கீழ் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 1500 கிராமிய
குளங்கள் சார்ந்த 80இ000 ஹெக்டெயார் பயிர் நிலங்களில் இரு போகங்களிலும் பயிரிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் ஆறுகளை அண்டிய பகுதியில் உள்ள வன ஒதுக்கீடுகளை ஆறு மாதங்களுக்குள்
வர்த்தமானி மூலம் அறிவிப்பது தொடர்பாகவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.
வன ஒதுக்கீடுகளுக்குள் உள்ள 500 சிறியளவிலான குளங்களை மிருகங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உடனடியாக புனர்நிர்மாணம் செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை
வழங்கினார். அதற்காக நீர்ப்பாசனஇ வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு வருட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
நீர்ப்பாசனத் துறையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற பொறியியலாளர் மற்றும் தொழிநுட்ப அதிகாரிகள் வெற்றிடங்களை தாமதமின்றி நிரப்புவதன் அவசியம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய விவசாய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளம் தொழில் முயற்சியாளர்கள் 500 பேரை சேதனப் பசளை விவசாயத்திற்கு ஈடுபடுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள (தருன
கொவி சௌபாக்கியாஇ காபனிக்க கொவிபல வெடசட்டஹன) – ‘இளம் விவசாய சுபீட்ச சேதனப் பசளை பயிர் நில வேலைத்திட்டம்’ பற்றியும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. மாதுறு ஓயவின் தெற்கு
கரையில் 5,000 ஏக்கர்களை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷஇ இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சுஇ இராஜாங்க அமைச்சுக்களினதும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள்
விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது
தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷ நேற்று ( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன்
பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும்
சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில்
உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட
விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளின்போது குறிப்பிடத்தக்க தரப்பினரை விசேடமாக கருத்தி கொண்டு கொடுப்பனவுகள்
வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி
கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ‘சபிரி கமக்’ (வளமான கிராமம்) வேலைத்திட்டத்திற்காக ரூபாய் 28 பில்லியன்
ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாட்டின் 14021 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் ரூபாய் 2 மில்லியன் வீதம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, பிரதமரின் ஆலோசனைக்கேற்ப கிராமிய சனசமூக குழுக்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட கீழ்காணும் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
- கிராம வீதிகள், படிகள், வடிகால்கள், சிறிய பாலங்கள், பக்க வடிகால் என்பவற்றை மேம்படுத்துதல்
- விவசாய பொருட்கள் உற்பத்திக்கு தேவையான களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல்
- கிராம மட்டத்தில் பொருளாதார மையங்கள், வாராந்திர சந்தைகள் மற்றும் சந்தை இடங்களின் மேம்பாடு
- சிறிய குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள், குளங்கள், விவசாய கிணறுகள் புனரமைப்பு
- சமூக குடிநீர் விநியோக திட்டங்கள்
- கிராமப்புற மருத்துவ மையங்களை நவீனமயப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்
- பாடசாலைகளுக்கான மின்சாரம், நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்
- வனவிலங்குகளினால் மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அபாயங்களை இல்லாது செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான திட்டங்கள்
குறித்த சந்தர்ப்பத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் அரச வளங்கள் அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, மத்திய வங்கியின் ஆளுநர்
பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், அரச வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொலிசார் வேட்டை -420 பேர் கைது
பொலிசார் வேட்டை -420 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (09) காலை 05 மணிமுதல் இன்று (10) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை- இலங்கை அறிவிப்பு
பொதுமக்கள் தினமாக திங்கட்கிழமை- இலங்கை அறிவிப்பு
அடுத்த வாரம் முதல் பொது மக்கள் தினமாக திங்கட்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
60 வருட காலமாக பொது மக்கள் தினமாக புதன் கிழமை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த அமைச்சர் அன்றைய தினத்தில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதினால் அமைச்சர்கள்
பாராளுமன்றத்திற்கு சமுகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
- திங்கட்கிழமையை அரச நிறுவனங்களில் ‘பொதுமக்கள் தினம்’ ஆகப் பிரகடனப்படுத்தல்
அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் புதன்கிழமையை தற்போது ‘பொதுமக்கள் தினம்’ ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும்
திங்கட்கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தினால் மக்களுக்கு மிகவும் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றிலிருந்து திங்கட்
கிழமை ‘பொதுமக்கள் தினமாக’ பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின்
தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
நடிகை ஸ்ரவானி
மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித்
தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத்
மதுராநகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி
வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகை ஸ்ரவானி
இளம் வயதில் சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை திடீர் நிறுத்தம்
கொரோனா தடுப்பூசி பரிசோதனை
லண்டன்:
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு
செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு
காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி
வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில
சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர் எங்கு இருக்கிறார், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
கொரோனா தடுப்பூசிக்கான 3-வது கட்ட சோதனைகள் மேற்கொண்டிருக்கும் 9 நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா
நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- 10 பேர் பலி
தாக்குதல் நடந்த பகுதி
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே இன்று தலைநகர் காபூலில் பாதுகாப்பு வாகன
அணிவகுப்புடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. இந்த பயங்கரவாத தாக்குதலில் துணை
அதிபர் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். துணை அதிபரின்
பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.,
ஆப்கன் துணை அதிபர் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்
தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி
வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும்
ஆதரவாளர்களை ஒழிப்பதற்கும் நடக்கும் போராட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் நிற்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.







