1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு

Spread the love

1300 இரண்டாம் மொழி பயிலுனர்களுக்கு ஆப்பு வைத்த கோட்டா – இருந்த தொழிலும் போச்சு

அன்மையில் தேசிய ஒருமைபாடு அரசகரும மொழிகள் சழூக மேப்பாடு அமைச்சின் ஊடாக இரண்டாம் மொழியை கற்பிப்பதற்கு மொழிகளில் தகமை உள்ள 1300 விண்ணப்பதாரிகள்; தெரிவு

செய்யப்பட்டார்கள். இவர்களுக்காகன நியமன கடிதங்கள் முன்னால் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னால் பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் கடந்த 2019

செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி அலரி மாலிகையில் வழங்கி கைக்கப்பட்டது. இவர்களில் தமிழ் மொழி மூலம் 800 பேரும்

சிங்களமொழி மூலம் 300 பேரும் ஆங்கில மொழிமூலம் 200 பேருமாக அடங்குவர்.

இந்த இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக தெரிவு செயய்பட்டவர்களுக்கு நாடாளாவிய ரீதியில் காணப்படும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஊடாக பயிற்சிகள்

ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வந்தன. கடந்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக இவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதும் இது வரை பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந் நிலமை குறித்து பயிலுனர்கள் குறித்த பயிற்சி நிறுவன அதிகாரிகளையும் பயிற்றுவிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு வினவிய போதும் பொருத்தமான பதில்கள் வழங்காததினாலும்

பயிற்சிகள் ஆரம்பிப்பது குறித்து உரிய திகதியை வழங்காதிதினாலும் பயிற்றுவிப்பாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

குறிப்பாக இந்த நியமனங்களை பெற்றவர்கள் ஏற்கனவே சில அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிந்தவர்கள். தங்களுக்கு ஒரு பொருத்தமான தொழி;ல் கிடைக்க போகின்றது என்ற நோக்கில்

இருந்த தொழிலையும் விட்டுவிட்டு இந்த தொழிலில் இணைந்து பயிற்சிகளை பெற்று வந்தனர். இவ்வாறான நிலையில் இவை எந்த காரணம் இன்றியும் உரிய பதில்கள் இன்றியும் இடை

நிருத்தப்பட்டமையால் பயிலுனர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டாம் மொழி சிங்களம் கற்பிக்க தமிழ்மொழி மூலம் 800 பயிலுனர்கள் தெரிவு செயய்பட்டு

இருந்தனர.; இவர்களில் பெரும்பாலானோர் மலையத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள். இவர்களுக்கு சிங்களமொழியில் கூடிய பரீட்சயம் இருந்ததாலும் சிங்களவர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்க

கூடிய தகமை இருந்ததாலும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளதுடன். உலரீதியில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

தற்போது தெரிவு செய்யபட்ட சில பயிலுனர்களுக்கு இருந்த தொழிலும் இல்லாமல் போய் கிடைத்த தொழிலும் இல்லாமல் போய் உள்ளது. நாட்டில் மொழிக் கொள்கையை திறம்பட முன்னெடுத்து

செல்ல வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதனை நம்பி இத்துறைக்கு விண்ணப்பித்து தற்போது நிர்க்கதியாகி

உள்ளவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Author: நலன் விரும்பி

Leave a Reply