Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் – பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வசதி

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் – பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வசதி

குளியாப்பிட்டிய பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் உயர்தர பரீட்சைக்கு

தோற்றும் பரீட்சாத்திகள் தடையின்றி பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான ஆலோசணைகள் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்;பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இருப்பினும் நாளை (22 ஆம் திகதி) ஆரம்பிக்கப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில்

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் குளியாப்பிட்டிய

மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடை

முறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இடம்பெறாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை

மீறிய குற்றச்சாட்டில் 125 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை

மீறிய குற்றச்சாட்டில் 513 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா சிகிச்சை நிலையம்; கிருஷ்ணபுரம் மக்கள் அச்சம்

கொரோனா சிகிச்சை நிலையம்; கிருஷ்ணபுரம் மக்கள் அச்சம்

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையம் தொடர்பில், பிரதேச

மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் இன்று (20) மகஜரும் கையளித்தனர்.

கிருஷ்ணபுரம் பகுதியில் நேற்றுக்காலை ஒன்றுகூடிய பிரதேச மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டை

தெரிவிப்பதற்காக கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிகாரிகள், ஊடகவியலாளர்களையும் அழைத்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குறித்த சிகிச்சை நிலையத்தால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும், இவ்விடயம்

தொடர்பில் மீள்பரிசீலணை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வரும் காணி 14 பேருக்குச் சொந்தமான காணி எனவும், இது இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு

, அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் மக்கள், பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்த விடயங்களைக் கேட்டறிந்த பொலிஸ் அதிகாரி, இது தொடர்பில் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதாகவும்

மேற்படி வைத்தியசாலையானது இப்பகுதி மக்களுக்காகவே உருவாக்கப்படுவதாகவும் வெளி இடங்களில் இருந்து

அழைத்துவந்து இங்கு யாருக்கும் சிகிச்சை வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சில

பிரிவுகளை, குழுநிலையில் திருத்தி நிறைவேற்றலா​ம் என

உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதென, சபாநாயகர்

மஹிந்த யாப்பா அபேவர்தன, சற்றுமுன்னர் சபைக்கு அறிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?

அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ, எதிர்வரும் 28 ஆம்

திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இருதரப்பு கலந்துரையாடலில் பங்கேற்பாரென, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்த

பின்னரே, அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

புங்குடுதீவு தற்காலிக முடக்கம் நீக்கம்

புங்குடுதீவு தற்காலிக முடக்கம் நீக்கம்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை (20.10.2020) நீக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில்

அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று

ஏற்படவில்லையென சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது இன்று காலையிலிருந்து வழமைக்குத் திரும்பும் எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறையினை

கட்டாயம் பின்பற்ற வேண்டும், அப்பகுதிக்கு சென்று வரும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற

வேண்டும் என்றும் குறித்த பகுதியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக

கண்காணிக்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம்

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம்

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம்

வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர்

பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம்

தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண

தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கணபதி கனகராஜ் ஆகியோர் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்ட பகுதிகளில் உணவு, மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பு

ஊரடங்குச் சட்ட பகுதிகளில் உணவு, மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடங்களில் உணவு

மற்றும் மருந்து விற்பனை நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இவை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்

என கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான செயற்பாட்டு நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

கொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா

கொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா

உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டி படைத்தது வரும் கொரனோ

நோயினால் அந்த நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது .

இவ்வாறான நிலையில் சீனாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சியை

எட்டடி பிடித்துள்ளது ,சுமார் 4.9 விகிதம் அதன் பொருளாதார வளர்ச்சி இவ்வேளை இடம் பெற்றுள்ளது

உலக சண்டியர் அமெரிக்காவின் பொருளாதாரம் இதனை விட

அதிக பாதாளத்திற்குள் வீழ்ந்து கிடக்கிறது .

முகக் கவசம் மற்றும் கொரனோ சோதனை கிட்டுக்கள் என்பன சீனாவில்

இருந்து பில்லியன் கணக்கில் இறக்குமதி செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது

இப்போது கேள்வி எதுவெனில் யார் வல்லரசு ..? சீனா வா ..?அமெரிக்காவா …?

Posted in உலக செய்திகள்

துருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு

துருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு

துருக்கி எல்லையோரத்தில் அகதிகள் தமது நாட்டுக்குள்

நுழைவதை தடுக்க கிரேக் பெரும் கம்பி வேலிகளை கொண்டு

தடுப்பு சுவர் அமைத்தது .

ஆனால் அவர்களுக்கு அல்வா கொடுத்து அகதிகள் அந்த சுவரை

தண்டி ஏறி குதித்து உள்நுழையும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது

அமெரிக்காவின் பாணியில் சுவரை கட்டிய பொழுதும் ,அதற்கு

மாற்று வழிகளை கண்டுபிடித்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழைந்து வருகின்றனர்

இது அந்த நாட்டுக்கு பெரும் தலை இடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

துருக்கி எல்லையில் தடுப்பு சுவர்
துருக்கி எல்லையில் தடுப்பு சுவர்
Posted in உலக செய்திகள்

அலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி

அலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி

அலெக்ஸ்சா கடல் பகுதியில் 7,5 அளவில் பாரிய நிலநடுக்கம்

ஏற்பட்டுள்ளது ,இது சுனாமி தாக்குதலை ஏற்படுத்தும் வல்லமை

பொருந்தியதாக உள்ளது ,எனினும் எதிர்பார்த்தது போலவே சுனாமி பெருகவில்லை

இதனால் இழப்புக்கள் தடுக்க பட்டது ,எனினும் இந்த நில

நடுக்கத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

மக்கள் சுனாமி ஏற்படும் என எதிர் பார்ப்பதால் ,அங்கு பீதி நிலவுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் – அரச வங்கிக்குப் பூட்டு

கொரோனா வைரஸ் – அரச வங்கிக்குப் பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட , மத்துகம-

கொழும்பு சொகுசு பஸ் சாரதி, அகலவத்த பகுதியிலுள்ள அரச ​வங்கி ஒன்றுக்கு,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளதையடுத்து, அதனை இன்று (19)

முதல் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகலவத்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி சாரதி அடங்களாக இந்தப் பகுதியில் இதுவரை தொற்றாளர்களாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அகலவத்த ஓமந்த வீதி, வலவ்வத்த மற்றும் பேரகம ஆகிய

பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு

(பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, சட்டாமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு

சமூகமளிக்காதமையால், இவ்வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதம் 2ஆம், 10ஆம் மற்றும் 16ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான இந்த வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி

டி.சூசைதாசன் முன்னிலையில், இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி ஒத்திவைக்கப்பட்டன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்

அவர் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், அதற்கான நீதிமன்ற அனுமதியை, சட்டத்தரணி கோரினார்.

இவ்விடயத்தை, வெள்ளிக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென மேல் நீதிமன்ற விசேட நீதிபதி சூசைதாசன்

அறிவித்தாரென, சந்திரகாந்தனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு

மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை செய்யப்பட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை

முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து

தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரிஷாட் பதியுதீன் 6 நாட்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வெறியாட்டம் -3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரனோ வெறியாட்டம் -3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் 3 கிராமங்கள்

தனிமைப்படத்தப்பட்டிருப்பதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம

நவ ஜனபதய (பதுகம புதிய குடியிருப்பு கிராமம்) ஆகிய கிராமங்கள்

தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக ஊழுஏஐனு

19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சை மோசடி – விசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மோசடி – விசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில்

மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை

இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும்

மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Posted in உலக செய்திகள்

சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்

சூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்

அமெரிக்காவில் இடம்பெற்றவுள்ள தேர்தலை அடுத்து சமுக வலைத்தளங்களை

மையப்படுத்தி தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,

இதில் ஆளும் அரச அதிபர் டிரம்ப் பலத்த தோல்வியை தழுவுவார் எனவும் ,

பைடனே வெற்றிபெறுவார் என்ற கருது கணிப்பு பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவ்வாறு இந்த போர் நடந்து கொண்டிருக்க பேஸ்புக் ,மற்றும் இன்ஸாகிராமில்

சுமார் .22 லட்சம் விளம்பரங்கள் அகற்ற பட்டுள்ளன ,மேலும் 120,000 பதிவுகள் அகற்ற பட்டுள்ளன

பேஸ்புக் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவினால் டிரம் மற்றும் பைடன்

தரப்பு கடும் அதி திருப்தியில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?

நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?

நியுசுலாந்து கடல் பகுதியில் இராட்சத திமிங்கலங்கள் திடீரென

செத்து மிதந்துள்ளது .இந்த மீன்கள் இறந்தமைக்கான உடனடி காரணம் தெரிவிக்க படவிலை

சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட திமிங்கலகங்கள் கரையில் மிதந்ததாகவும்

இதில் சுமார் பல டசினுக்கு மேற்பட்டவை இறந்த நிலையில் காணப்படுவதாக

கடல்வாழ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது சுனாமி போன்ற

பேரழிவுகள் ஏற்பட கூடும் என்ற ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது

நியூலாந்தில் செத்து மிதந்த
நியூலாந்தில் செத்து மிதந்த
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி

இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி

இத்தாலியில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்

11,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

அதேபோல 69 பேர் பலியாகியுள்ளனர் ,இவை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக

கூடும் என்ற அச்சம் வெளியிட பட்டுள்ளது ,மக்கள் அரசு கூறும் விதிகளை

கடை பிடிக்க மறுத்துவருவதால் இந்த தொற்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு

ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு

உலக நாடுகளை மீள நடுக்கத்தில் உறைய வைத்து வரும் கொரனோ

வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நான்கு லட்சம் பேர் ஒரே

நாளில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதுவே எதிர் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

விடுக்க பட்டுள்ளது ,இவ்வாறு
பாதிக்க

பட்ட நாடுகளில் ஐரோப்பா முன்னிலை வகிப்பதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது