Posted in இலங்கை செய்திகள்

ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.

ஒன்று கூடி தண்ணியடித்த எட்டு வெறிக்குட்டிகள் கைது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை பொருட்படுத்தாது, ஜா-எல –சுதுவெல்ல

பிரதேசத்தில் வீடொன்றில் மதுபான விருத்தில் பங்கேற்ற 8 பேர், நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் புதிய 45 கொரனோ நோயாளர்கள்

கண்டியில் புதிய 45 கொரனோ நோயாளர்கள்

கண்டி மாவட்டத்தில் இதுவரை 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

காணப்பட்டுள்ளனரென, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கங்கவட்டகோரள, உடபலாத, பாத்ததும்பர, தொலுவ, மெததும்பர,

யட்டிநுவர, உடதும்பர, துன்பனே,ஹரிஸ்பத்துவ, மினிபே, அக்குறனை

மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

5000 ரூபா நிவாரணப் பொதி யாழ் மாவட்டத்திலும் வழங்க ஏற்பாடு

5000 ரூபா நிவாரணப் பொதி யாழ் மாவட்டத்திலும் வழங்க ஏற்பாடு

Covid – 19 தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1700 பேருக்கு

அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா

பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண

பொதிகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என எனக்கு தெரியப்படுத்தியிருந்தது

இந்நிலையில் இது தொடர்பில் நேற்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசியதன் பயனாக அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக

தனிமைப்படுத்தலில் உள்ள அனைவருக்கும் முதற்கட்டமாக நிவாரண பொதிகளை வழங்கி வைக்க சகல அரச அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஒரு ஐனாதிபதி, ஒரு அரசாங்கமே இதில் இன, மத மொழி என்ற

பாகுபாடு இன்றிய ஒரே நாடு என்ற அடிப்படையில் அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனவே தென்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் வடபகுதி மக்களுக்கு கிடைக்காமல் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக சிலர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை.

எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையும் இலலை என்றும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

பல மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் மண்சரிவு அனர்த்த கட்டம் ஒன்றின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெளியகொடை, எலபாத்த, குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும்

, கேகாலை மாவட்டத்தில் ரூவான்வெல்ல பிரதேச பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையை கவனத்தில் கொண்டு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவத்தின் பொது முகாமையாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், குறிப்பிட்ட

பிரதேசங்களில் தற்போது நிலவும் காலநிலையை கவனத்தில் கொண்டு முதல் கட்ட மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதிகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முப்படையினரும், பொலிசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

அனர்த்தங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் 177 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன்

அனர்த்த நிலை தொடர்பான தகவல்களுக்காக எந்த நேரத்திலும் பொது மக்களால் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் 07பேருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 06 பேருக்கும் அதிகாரி

ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு பெண் கைதிகளும் இதில் உள்ளதாக தகவல்.

தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு

பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்

தஞ்சையில் எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் கடித்து கொன்றது. பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தது.

நாய் நன்றியுள்ள விலங்கு ஆகும். வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மனிதர்களிடம் கூட காணாத

குணம் நாயிடம் உண்டு. மேலும் நாயிடம் குறும்பும் அதிகம் உண்டு. சினிமாக்களில் நாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது, தன்னை வளர்த்த எஜமானர்களை, அவர்கள்

வீட்டில் உள்ளவர்களை பாம்பு, திருடர்களிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற சம்பவங்கள் இடம் பெற்று இருக்கும். இதே போன்ற சம்பவங்கள் நிஜத்திலும் ஆங்காங்கே நடைபெறுவது உண்டு.

தஞ்சையில் தன்னை வளர்த்த எஜமானர் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை ஒரு நாய் கடித்து கொன்றது. மேலும் பாம்பு கடித்ததில் நாயும் இறந்தது.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிந்து நகரைச் சேர்ந்தவர் எழில்மாறன்-மாலா தம்பதியினர். இவர்களது வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று

வீட்டில் எழில்மாறன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.

இதனை பார்த்த ரியோ என்ற நாய், பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது. இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது.

இரவில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிய எழில்மாறன் தம்பதியினர் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாய் ரியோவும் இறந்து

கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகிலேயே மற்றொரு நாயான ஸ்வீட்டி கண்களில் நீர்வடிந்தபடி சோகத்தில் படுத்திருந்தது.

வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்
வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்துக்கொன்ற நாய்
Posted in உலக செய்திகள்

பிரபல கட்சியில் இணையும் விஷால்

பிரபல கட்சியில் இணையும் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல கட்சியில் இணையும் விஷால்
விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. பின்னணி வேலைகள் முடிவடைந்தவுடன் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இவரே இயக்கி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு

நவம்பர் 9 முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஷால்

நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், உள்ளிட்டோர் பிஜேபியில் இணைந்து வரும் நிலையில் விஷாலும் அந்தக் கட்சியில் இணைய

இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், விஷாலோ திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷாலை அணுகி திமுகவில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு விஷால் சம்மதம்

தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஷால் திமுகவில் இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – சீனா எச்சரிக்கை

தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில்

அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – சீனா எச்சரிக்கை
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்
பீஜிங்:

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.

இதனால் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தைவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் 2.37 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 ஆயிரத்து 478 கோடி) மதிப்புடைய 100

ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 600 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 485 கோடி) மதிப்பில் ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா

விமானங்களை தைவானுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் “தைவானுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்கா சீனாவின் உள் விவகாரங்களில்

மிருகத்தனமாக தலையிடுகிறது. மேலும் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பு நலன்களையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

சீன அமெரிக்க உறவுகள் மட்டும் தயவால் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க

இதுபோன்ற அனைத்து விற்பனையிலும் அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்தில்

அமெரிக்காவுக்கு சரியான மற்றும் தேவையான பதிலடி கொடுக்கப்படும்” என்றார்

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சேர்த்து 5 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர்

பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிற கீழ்சபை எம்.பி.க்கள் ஆவர். அவர்கள், டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் ஆவார்கள்.

செனட் சபை என்று அழைக்கப்படுகிற மேல்சபையில் கமலா ஹாரிஸ் எம்.பி.யாக இருந்தார்.

இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர்.

இவர்களில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற

பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

டாக்டர் அமி பெரா (வயது 55), கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் தொடர்ந்து 5-வது

முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் தோற்றுப்போனார்.

ரோகன்னா (44), கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு

வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் தோல்வி அடைந்தார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி (47), இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருக்கிறார். லிபர்டேரியன்

கட்சி பிரஸ்டன் நெல்சன் தோல்வியைத் தழுவினார். ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழ்நாட்டினர். அந்த வகையில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார்.

பிரமிளா ஜெயபால் (55), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற குடியரசு

கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் தோல்வி அடைந்தார். பிரமிளா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி என்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார், அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டேவிட்

ஸ்வெய்கெர்ட் தோல்வி அடைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் உறுதியானால், டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி, பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பை பெறுவார்.

ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர்

மார்க் போகலை வீழ்த்தி இருக்கிறார். ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி இவர் என்பது சிறப்பு.

இதே போன்று நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி

வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தினார். இந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பு, இவருக்கு கிடைத்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழில் வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல்

இலங்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த

மர்ம வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த வயோதிபர் மீது வெட்டு தாக்குதலை மேற் கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது

உடல்களில் பல வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்

போதன வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நோய் தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோய் அறிகுறிகள் இல்லை

இலங்கையில் நோய் தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோய் அறிகுறிகள் இல்லை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டினதும் தற்போதைய நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் நேற்று (03) பாராளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார்.

சுகாதார நடவடிக்கைக்காக உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மேலும் 22 மில்லியன் டொலர்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு வரை செலவழிக்க வேண்டும். இதுவரை 35 மில்லியன் டொலர்கள் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளது.

தொற்றொதுக்கல் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் அது தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ள நேர்ந்ததாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரம் புதிய திருத்தத்தின் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 63,600 பேர் சுயதனிமைப்படுத்தலில்

இலங்கையில் 63,600 பேர் சுயதனிமைப்படுத்தலில்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் சுமார் 63 ஆயிரத்து 600இக்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இதிர் குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 452 குடும்பங்கள்

சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்

பெறுமதியான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகளை

விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைது

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத

75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (04) தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 15ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு

அமைய முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமானதாகும்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 409 தொற்றாளர்களுள் 146 பேர்

கம்பஹா மாவட்டதையும் 122 பேர் கொழும்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்களென,

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், குருநாகல்-7, கேகாலை-

12, இரத்தினபுரி-12, காலி-19,நுவரெலியா-2, ஹம்பாந்தோட்டை-5, மொனராகலையில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படை

கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படை

திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் (நவம்பர்,02) முன்னெடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள இம் மாசு பொருட்களை அகற்றும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மிதக்கும் கடல் பிளாஸ்டிக் கழிவு போலல்லாமல், பெரும்பாலும் கடல் பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்கு அடியில் தங்குவதால் அவற்றை சுழியோடல் நடவடிக்கைகள் மூலமே எடுக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகள் பாரமற்றவையாக இருப்பதால், அவை கடலோரத்தில் பரவி சிக்கிக் கொள்கின்றன.

கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்பறவைகள் என்பவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கிக்கொள்வதனால் அவை பெரும்பாலும் உயிரிழக்கின்றன. இதேவேளை, சில ஈரூடக வாழி இனங்கள் தங்கள் ஆயுட்காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

எதிர்கால சுற்றுச்சூழல் பேரழிவை மனதில் இருந்தி, கடலோரப் பகுதியின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டைச் சூழவுள்ள கரையோரங்களின் தூய்மையை பேணவும், கடல் சுற்றுச்சூழல் மற்றும் அதன் உயிரியல் பல் வகைமைகளுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கவும்
இவ்வகையான திட்டங்கள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தினை திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் முதல் கடற்கரை வரை முன்னெடுக்க கிழக்கு கடற்படை கட்டளையாகம் எதிர்பார்த்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் சுழியோடும் படைவீரர்களினால் பெருமளவிலான கடல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் குப்பைகள் அகற்றப்பட்டன.

கரையோரங்களை சுத்தப்படுத்தும் இந்த நடவடிக்கையில் திருகோணமலை பொலிஸ் குழுவினரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.43 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 12.27 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

அமெரிக்காவில் இன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் எது தெரியுமா?

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு

மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவியது. துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது.

நவம்பர் 3 மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி (உள்ளூர் நேரப்படி இரவு) ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருந்தார்.

அமெரிக்க மக்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர். தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்தவண்ணம் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் இன்று கூகுள் தேடலில் முதலிடம் வகித்த வார்த்தை எது என்று பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், உற்சாக பானங்களை வாங்குவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர். என் அருகில் உள்ள மதுக்கடைகள் ( ‘Liquor stores near me’) என்ற வார்த்தை கூகுள் தேடலில் இன்று முதலிடத்தில் இருந்ததாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

மனைவி செய்த துரோகத்தை ஆதாரத்துடன் நிரூபித்த கணவன்

மனைவி செய்த துரோகத்தை ஆதாரத்துடன் நிரூபித்த கணவன்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் தன் மனைவி தனக்கு

செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார்.மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய

கணவன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவர் முன்னிலையிலும் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன்

வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.


வீடியோ ஸ்பானிஷ் மொழியில் உள்ளது. இருந்தாலும் கூட அந்த வீடியோ நம்மை திடுக்கிட வைப்பதை மறுக்க முடியவில்லை. இந்த

சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த வீடியோ வைரலாகியுள்ளத

துரோகத்தை ஆதாரத்துடன்
துரோகத்தை ஆதாரத்துடன்
Posted in இலங்கை செய்திகள்

ஆணியை புடுங்காதீர்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

ஆணியை புடுங்காதீர்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகமாக நடமாடும் அரச அரசசார்பற்ற

மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏன் ஒவ்வொரு வீடுகளிலும் சுகாதார நோக்கம் கருதி தொற்று நீக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரச நிறுவனம் ஒன்றில் தொற்று நீக்கி பாதுகாப்பாகவும் களவாடி செல்ல முடியாதவாறும் பாதுகாப்பு பெட்டி ஒரு

அமைக்கபட்டு இருப்பது அனைவரையும் ஒரு கனம் சிந்திக்க வைத்துள்ளது. இதனை எடுத்து செல்வது என்னாறல் ஆணியை

பிடுங்கி பெட்டியை உடைக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இந்த செயற்பாடு பாவனையாளரின்

நம்பிக்கையை எந்தளவுக்கு நம்பியுள்ளார்கள் என்றும் தெரிய வருகின்றது. எது எவ்வாராயினும் இவர்களது செயற்பாடு

பாராட்டதக்கது. இந்த செயற்பாடு கண்டி பேராதெனிய பிரதேசத்தில் காணப்படும் அரச நிறுவனம் ஒன்றில் இதனை காணக் கூடியதாக இருந்தது.

கை கழுவுவோம் முக கவசம் அணியுவோம் தூரத்தில் இருப்போம் சுகாதார

பழக்க வழக்கங்களை பின்பற்றுவோம் கொரோனாவில் இருந்து எம்மையும் எம் நாட்டு மக்ககளையும் காப்பாற்றுவோம்.

ஆணியை புடுங்காதீர்கள்
ஆணியை புடுங்காதீர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

எட்டியாந்தோட்டை இங்கிரியாவத்த பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி

பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் குறித்த பெண்,

ஐ.டி.எச்-இல் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று

காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.