Author: நலன் விரும்பி
கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்
கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்
மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானப் பொலிஸாரின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலானப்
பொலிஸாரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானப் பொலிஸாருடன் நெருங்கிப் பழகிய 300 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகை
மத்திய வங்கி 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகை
கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை மத்திய
வங்கி, நான்கு சதவீத உத்தேச மூலதன கடனுக்கான சலுகைக் காலத்தை நீடிக்துள்ளது.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக்
கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக்
கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.
எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான
கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதல் எதுவுமின்றி கடன்களை மீளச்செலுத்துவதற்கு கடன்பெறுநர்களுக்கு
வசதியேற்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன்வசதியின் கீழ்
பதிவுசெய்யப்பட்ட கடன்களுக்கு ஏற்புடைய சலுகைக் காலத்தினை, கடன்பெறுநர்களால் முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான
கோரிக்கையின் மீது மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 9 மாதங்களைக் கொண்ட சலுகைக் காலப்பகுதியொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்புகின்ற
இத்தொழிற்படு மூலதனத் திட்டங்களின் பயனாளிகள் தொடர்புடைய வங்கிக்கு எழுத்திலான கோரிக்கையொன்றினை அனுப்புமாறு கோரப்படுகின்றனர்.
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி
நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக
இருக்கும். இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அமையவுள்ளது.
இது தொடர்பான யோசனையை மின்வலு எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவின் பதவியேற்று ஒரு வருடம்
பூர்த்தியாகும் தருணத்தில், கட்டுமாணப் பணிகள் ஆரம்பமாகுமென அவர் கூறினார்.
இலங்கையில் கொரோனா – இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா – இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:
இலங்கையில் பதிவான 30 ஆவது கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானவரின் மரணம் சற்று முன்னர் இடம்பெற்றதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அவர்கள் உறுதி செய்தார்.
நேற்றைய (05) தினம் மரணமான இந்த நோயாளி அங்கொட தேசிய தொற்று
நோயில் பிரிவில்; சிகிச்சை பெற்றுவந்த 23 வயதுடைய முகத்துவாரம், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த ஆண் நபராவார்.
இந்த மரணத்திற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நீரிழிவு நோய் பிரச்சினையுடன் கொவிட்19 வைரசு தொற்றும் ஏற்பட்டதாகும்.
15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
15 பிள்ளைகள் பெற்ற தம்பதிகள் – எதுக்கு தெரியுமா இப்படி ..?
தாம்பத்திகள் மணம் முடித்து குழந்தை பெற்றனர் ஆனால் ,இவர்க, பெண்
பிள்ளைக்கு ஆசை பட்ட பொழுதும் அது கிடைக்கவிலை தொடர்ந்து பதின் நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தன
ஆனாலும் அவர்கள் தமது செயலை கைவிடவில்லை ,இறுதியாக 15 வது
பிள்ளையாக பெண் பிள்ளை பெற்றுள்ளனர்
இத்துடன் அவர்கள் பிள்ளை பெறுவதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்
ஆசைக்கு ஒரு பெண் பிள்ளையை பெறுவதற்கு இதனை பாடு பட்டு இருக்காங்க ,பாவம்யா அந்த பொண்ணு

அமெரிக்கா வாக்கு சாவடிக்கு அருகில் துப்பாக்கியுடன் நின்ற இருவர் கைது
அமெரிக்கா வாக்கு சாவடிக்கு அருகில் துப்பாக்கியுடன் நின்ற இருவர் கைது
அமெரிக்கா Philadelphia வாக்கு சாவடிக்கு அருகில் துப்பாக்கியுடன்
நின்ற இருவர் போலீசாரால் சுற்றிவளைக்க பட்டு கைது செய்ய
பட்டுள்ளனர்
தாரிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் பைடன் முன்னிலையில் தொடர்ந்து உள்ளதுடன் அவர்
ஆட்சியமைக்க போதுமான இடங்களை பெற்றுள்ளார்
எனினும் அதனை டிரம்ப் ஏற்க மறுத்து குளறுபடி செய்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை
லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை
பிரிட்டன் ,மற்றும் லண்டன் பகுதியில் புதிதாக விதிக்க பட்டுள்ள அடித்து பூட்டும் நிகழ்வின் கீழ்
hair salons, gyms, cafes and tattoo parlours என்பன அடித்து பூட்ட
உத்தரவிட பட்டது ,ஆனால் இவர்கள் தொடர்ந்து திறந்து வைத்துள்ளனர்
இதனால் சலூன் ,டாட்டோ மற்றும் gyms என்பன வற்றுக்கு தண்டம் அறவிட
பட்டுள்ளது ,இரவு பத்து மணிக்கு மேல் திறந்து நடத்தியவர்க்ளுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் தமது புதிய சட்ட விதிகளை மீறி திறப்பவர்களுக்கு தண்டம் அறவிட
படுவதுடன் அவர்களை உரிமமும் இரத்து செய்ய படும் என குறிப்பிட படுகிறது குறிப்பிட தக்கது
பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு
பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
கொரனோவில் சிக்கி 828 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 60,486 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து 4,331 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
அவ்வாறு ஏனினின் எதிர் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
மக்களே எச்சரிக்கை உங்களை நீங்களே பாது காத்து கொள்ளுங்கள்
பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 355 பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் 23,287 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
எதிர்வரும் நான்கு வாரத்திற்கு முழு அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெற
கூடும் என்பதுடன் ஊரடங்கு சட்டம் அமூல் அப்துத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை
பிரிட்டன் Manchester ல் வாலிபன் வெட்டி கொலை
Manchester,Birchenall Street, Moston,பகுதியில் பதிண்று வயது
கறுப்பின வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த
பட்டுள்ளது ,
இந்த கொலையை புரிந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
லண்டன் ,பகுதியில் தொடராக கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்று வருகிறது ,
இதனை தடுக்க கமராக்கள் மற்றும் இரசிய போலீசார் உள்ளிட்டவர்கள்
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொழுதும் அதனை மீறி இந்த கொலைகள் இடம்பெறுவது பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம்
பிரிட்டனில் அடித்துபூட்டு விதிகளை மீறிய 190 பேர் கைது -200- முதல் 10,000 தண்டம் –
மத்திய லண்டன் பகுதியில் அரசு விதித்த அடித்து பூட்டும் விதிகளை மீறி
போராட்டத்தில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்ய பட்டதுடன் அனைவருக்கும் 200 முதல் தண்டம் அறவிட பட்டுள்ளது
இந்த பேரணியை ஏற்பாடு செய்த நபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் ,அயல் வீட்டாருடன் சென்று வாசலில் உரையாடி
கொண்டிருந்த நபர்களை அவதானித்த போலீசார் அவர்களுக்கும் தண்டம் அறவிட்டுள்ளனர்
தொடர்ந்து வீதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது
வத்தளையில் 115க்கு கொரோனா
வத்தளையில் 115க்கு கொரோனா
வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது
கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 26 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
மேலும், 382 வாகனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றச்சாட்டுகளில் இதுவரை 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
199 பொலிஸ் அதிகாரிகளுக்கு , கொரோனா
199 பொலிஸ் அதிகாரிகளுக்கு , கொரோனா
மேல் மாகாணத்தில் இன்று (6) வரை 199 பொலிஸ் அதிகாரிகள்,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் 258 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1,350 பேர்
சுயத்தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29
இலங்கையில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29
இலங்கையில் இன்று கொவிட்-19 வைரசு தொற்றினால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைவாக கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இன்றைய தினம் (05) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்ட கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மரணம் விபரம் பின்வருமாறு:
- கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர் ஆவார். இவர் பிம்புறு ஆதார வைத்தியசாலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளார். இந்த நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டு இந்த
- வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததுடன் நீண்டநாள் சிறுநீரக நோயினாலும் அவதிப்பட்டுள்ளார்.
- வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஆவார்.மார்பு வலியினால் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய (04) தினம் உயிரிழந்துள்ளார்.
- கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில்
- அடையாளங் காணப்பட்டுள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
- கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஆவார். தனது வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் பிரேதபரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என அடையாளங்
- காணப்பட்டுள்ளார். மரணத்திற்கு காரணம் என்ற ரீதியில் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அடையாளங் காணப்பட்டுள்ளது.
- கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண் நபர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்று
- உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளமை கொவிட் 19 தொற்று பாதிப்பினால் ஏற்பட்ட இருதய பாதிப்பாகும்.
இதற்கு மேலதிகமாக இலங்கையில் பதிவான கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமானோரின் எண்ணிக்கை 29
ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்ன அவர்கள் உறுதிசெய்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரேனா
கொழும்பு மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரேனா
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரேனா தொற்றுக்கு உள்ளானவர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எமக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்தார்…
இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது
இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் எனக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றினால்
பாதிக்கப்பட்ட வர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு நிவாரணத்தை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தின்
மூலம் எமக்கு சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கமைவாக அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப
அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய
உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு 13 பிரதேச செயலாளர்களுக்கும் நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.
இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அதாவது இரண்டு வாரங்களுக்கு போதுமான ரூபா 10,000/= பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்;.
இதற்கமைவாக அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது
சில சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின் கிராம கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படவேண்டும் அவர்களுக்கு தனித்தனியாக உணவு பொருள் பொதி வழங்கப்படும்
சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் அடிக்கடி உங்களது வீட்டுக்கு அருகில் காணப்படுவார். அவருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த அதிகாரிக்கு இதுதொடர்பான தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார.; அப்படியும் இல்லாதபட்சத்தில் இதற்கென உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது உலர் உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார்..
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதா
நிறைவேறி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வடகொரியாவில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை
கோப்புப்படம்
சியோல்:
வடகொரியாவில் அபூர்வ நிகழ்வாக அந்த நாட்டின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கூடியதாகவும், அதில் பொது இடங்களில் சிகரெட்
புகைக்க தடை விதிக்க வகை செய்யும் புகையிலை தடை சட்ட மசோதாவும், கம்பெனி சட்ட திருத்த மசோதாவும் நிறைவேறி இருப்பதாக சியோலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு நிறைவேற்றப்பட்டுள்ள புகையிலை தடை சட்ட மசோதா, சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான சட்ட மற்றும் சமூக கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதின் மூலம் மக்களின்
வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வழிவகை செய்துள்ளது. புகை பிடிப்பது தொடர்பாக அனைத்து
நிறுவனங்களும், அமைப்புகளும், பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் வகுத்துள்ளது.
மேலும், அரசியல் நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பொது இடங்கள், குழந்தைகள் வளர்ப்பிடங்கள், பொது சுகாதார
நிறுவனங்கள், வணிக மற்றும் பொது உணவு நிறுவனங்கள், பொது போக்குவரத்து சாதனங்கள் ஆகியவற்றில் புகை பிடிக்கவும் தடை விதித்துள்ளது.
இந்த சட்டத்தை மீறி பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சிகரெட் புகைக்கும் வழக்கம் உடையவர். இந்த சட்டத்தால் அவர் இனி புகை பிடிப்பதை கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை பரவலை தடுப்பதற்காக இங்கிலாந்தில் 4 வார ஊடரங்கு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
இங்கிலாந்தில் 4 வாரம் ஊரடங்கு அமல் – வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
கோப்புப்படம்
லண்டன்:
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 9-வது இடத்தில் உள்ளது. அங்கு 11 லட்சத்துக்கும்
மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். சுமார் 48 ஆயிரம் பேர் வைரசுக்கு இரையாகி உள்ளனர். அங்கு கடந்த மார்ச் மாதம்
முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று குறையத்தொடங்கியபோது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது 2-வது அலையாக
பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் 492 பேருக்கு கொரோனா புதிதாக தாக்கி உள்ளது. இது மே மாதம் 19-ந் தேதிக்கு பிறகு
அதிகபட்ச பாதிப்பு ஆகும். புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்து விட்டது.
2-வது அலையாக பார்க்கப்படுகிற இந்த பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டில் மீண்டும் 4 வார கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை
செய்யும் கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளவை மூடப்பட்டுள்ளன.
கல்வி, வேலை போன்ற அத்தியாவசிய காரணங்களையொட்டி மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலையை பொறுத்தமட்டில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத சூழலில் மட்டுமே வெளியே சென்று வரலாம்.
எந்த பொழுதுபோக்கு அமைப்புகளும் அங்கு இயங்கவில்லை. ஓட்டல்கள், உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த ஊரடங்கைப்போல இல்லாமல், இந்த முறை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்கள் மற்றும் நர்சரிகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களுடன் வசிக்காதவர்களை வெளியே பூங்கா அல்லது கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று சந்திக்க முடியும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது
ஊரடங்கு பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “இந்த ஊரடங்கு 4 வாரங்கள் நடைமுறையில் இருக்கும். டிசம்பர் 2-ந் தேதி தானாகவே காலாவதியாகி விடும். இதுதான் நம்நாட்டுக்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான பாதை” என கூறினார்.
இந்த 2-வது ஊரடங்கை இங்கிலாந்து நாட்டின் எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.
2-வது ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வேலை இழப்புகளை தடுப்பதற்காக 80 சதவீத தொழிலாளர்களின் சம்பளத்தை அரசு தருகிற திட்டத்தை வசந்த காலம் வரையில் (மே மாதம் 31-ந் தேதி வரை) நீட்டிக்க வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர், இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வென்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
ஜெனிபர் ராஜ்குமார், கேஷாராம், நிமா குல்கர்னி, வந்தனா சிலேட்டர், பத்மா குப்பா.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் அபாரவெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் தமிழர்கள் ஆவார்கள்.
அங்கு நடந்த மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 5 பெண்கள், 7 ஆண்கள் என 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தி, அந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
- வெர்மாண்ட் மாகாண செனட் சபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கேஷா ராம் (34) வெற்றி பெற்று, முதல் பெண் செனட் உறுப்பினர் என்ற சிறப்பை அங்கு பெற்றுள்ளார்.
- கென்டக்கி மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு நிமா குல்கர்னி என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.
- வந்தனா சிலேட்டர் என்ற பெண் விஞ்ஞானி, வாஷிங்டன் மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
- மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு பத்மா குப்பா என்ற பெண், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
- ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் போகலை வீழ்த்தி, ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை செய்துள்ளார்.
- வட கரோலினா மாகாண செனட் சபை தேர்தலில் ஜெய் சவுத்ரி (வயது 51) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
- அரிசோனா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமிஷ் ஷா ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.
- பென்சில்வேனியா மாகாண செனட் சபைக்கு நிகில் சாவல் (37) ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
- மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ரஞ்சீவ் பூரி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- நியுயார்க் மாகாண செனட் சபை தேர்தலில் ஜெரேமி கூனி ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார்.
- கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய ஆஷ் கல்ரா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
- டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்தலில் ரவி சாண்டில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாண தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் அபார வெற்றி பெற்றிருப்பதை இம்பேக்ட் என்று அழைக்கப்படுகிற இந்திய வம்சாவளி அரசியல் நடவடிக்கை குழு பாராட்டி உள்ளது.
இந்த அமைப்பு, அமெரிக்க தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வெற்றிருப்பதை வரலாற்று தேர்தல் என்று கூறி உள்ளது.
இந்த அமைப்பின் செயல் இயக்குனர் நீல் மகிஜா கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டு தேர்தல் அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் பெரிய பங்களிப்புக்கு வழிவகுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பின் ஆதரவை இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்காக 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.75 கோடி) இந்த அமைப்பு தேர்தல் நிதியாக திரட்டி உதவியது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்து மந்திரியிடம் மத்திய வெளியுறவு செயலாளர் நேரில் வலியுறுத்தினார்.
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை
விஜய் மல்லையா, நிரவ் மோடி
லண்டன்:
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய்
மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர
வியாபாரி நிரவ் மோடியும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் அங்கு கைது செய்யப்பட்ட
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதில் ஜாமீனில் வெளியில் இருக்கும் விஜய் மல்லையாவின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தியாவில் கோடிக்கணக்கில் கடன் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் இருவரின் நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா இங்கிலாந்துக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதை மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா நேரில் சென்று கோரிக்கையாக வைத்து உள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட அவர், லண்டனில் அந்த நாட்டின் பல்வேறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். குறிப்பாக உள்துறை செயலாளர் பிரிதி படேல், தெற்கு ஆசியாவுக்கான வெளியுறவு மந்திரி லார்டு தாரிக் அகமது ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது நிரவ் மோடி மற்றும் மல்லையாவை விரைவில் நாடு கடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து ஷ்ரிங்லா கூறுகையில், ‘நாடு கடத்தும் விவகாரத்தில் அனைத்துவிதமான சட்டப்போராட்டங்களை முடித்துள்ள பொருளாதார குற்றவாளி மல்லையாவை விரைவில் நாடு கடத்தும் இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் தீவிரமாக சுட்டிக்காட்டினோம். அதைப்போல நிரவ்மோடியை நாடு கடத்துவது குறித்தும் லார்டு அகமது மற்றும் பிரிதி படேலிடம் வலியுறுத்தினோம். இதை இருவரும் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டனர். குறிப்பாக நமது முன்னுரிமை மற்றும் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்தார்.
இதைத்தவிர கொரோனா தடுப்பூசி ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இங்கிலாந்து தலைவர்களுடன் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா பேசினார்.








