Author: நலன் விரும்பி
புயலினால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
புயலினால் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
வலுவிழந்து இருக்கிறது என்று சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 5 ஆம் திகதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு இழக்கிறது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர தொடங்கி,
தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கடும் மழை
பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் ‘புரெவி’ என்ற புயல் உருவாகி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். தமிழகத்தின் ஏனைய
மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில்
அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்- இலங்கை
அடுத்த வருடம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படும்- இலங்கை
அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான
நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்லாத்துறை
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்
ஐரோப்பாவுடன் பிரிந்ததன் பின்னர் -அதிகரித்த பிரிட்டன் நாணய பெறுமதி
ஐரோப்பாவுடன்பிரிந்ததன் பின்னர் -அதிகரித்த பிரிட்டன் நாணய பெறுமதி
பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிந்த இரண்டு ஆண்டுகளின் வெள்ளிக்கிழமை நாணய மாற்றும் பண மதிப்பு அதி
உச்சத்தை எட்டி பிடித்தது
1.35 ஐந் தாக இதன் பெறுமதி காண பட்டது
இதனால் தமிழர்கள் குஷியில் உறைந்துள்ளனர்
எதிர்வரும் இரு நாட்களுக்குள் ஒடி சென்று பணத்தை இலங்கைக்கு அனுப்பி விடுங்கள் ,இதுவே திங்கட்கிழமை வழமை போன்று
உலகான பங்கு சந்தையில் ,பிரிட்டன் நாணய மாற்று அதிக சரிவை நோக்கி செல்லும் ,சாட் தெளிவாக காண்பிக்கிறது
இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம் – மிரட்டும் இஸ்ரேல்
இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம் – மிரட்டும் இஸ்ரேல்
இஸ்ரேல் உளவுத்துறையால் ஈரானின் இராணுவ தளபதி மற்றும் அணுகுண்டு
தயாரிப்பு விஞ்ஞானி ஆக்கிரோயர் மூன்று நாளுக்குள் மிக கோரமாக படுகொலை செய்ய பட்டனர்
இதனை அடுத்து இஸ்ரேலை அமைத்துள்ள பகுதியில் ஈரானின் ஆதரவு தீவிவாத குழுக்கள் ஒன்று கூடி வருவதாகவும் விரைவில்
இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டம் இட்டு வருவதாக இஸ்ரேலும் குற்றம் சுமத்தியுள்ளது
ஈராக்கில் உள்ள அமெரிக்காச இராணுவ தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஓப்பான தாக்குதல்களை ஈரானின் ஆதரவு படைகள்
இஸ்ரேல் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதனை அடுத்து ஹிஸ்புல்லா இராணுவ தலைவர் மற்றும் ,முக்கிய தளபதிகளை போட்டு தள்ளும் விரிவான நகர்வுகளில் இஸ்ரேல் ஈடுபட கூடும் என அடித்து கூறலாம்
14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்
14 வயது சிறுவனை சுட்டு கொன்ற இஸ்ரேல் இராணுவம்
பலஸ்தீனம் வடக்கு ரமல்லா பகுதியில் உள்ள Mughayer கிராமத்தி சேர்ந்த பதின் நான்கு வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேல்
இராணுவத்தால் வயிற்றில் சுட பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளான்
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
எனினும் இவர்கள் புரிந்த போர் குற்றங்களை தட்டி கேட்க மறுத்து ஐநா உறக்கத்தில் உள்ளமைக்கு குறிப்பிட தக்கது
சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
சோமாலியாவில் இருந்து இராணுவத்தை விலக்கும் அமெரிக்கா
சோமாலிய நாட்டில் ,அந்த நாட்டுக்கு ஆதரவாக அமரிக்கா இராணுவம்
கடமையில் ஈடுபட்டு வந்தது ,தற்போது அந்த நாட்டில் இருந்து எதிர்வரும்
தைமாதம் பதின் ஐந்தாம் திகதி பலநூறு இராணுவத்தினர் மீள
நாட்டுக்கு திருப்பி அழைக்க படவுள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது
டிரம்ப் தனது ஆட்சி காலம் முடிவதற்குள் ,அவசர அவசரமாக இந்த படைவிலக்களை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஒரேநாளில் 504 பேர் பலி – 16,298 பேர் பாதிப்பு
பிரிட்டனில் ஒரேநாளில் 504 பேர் பலி – 16,298 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி சுமார்
504 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1,261 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,அது தவிர 16,298 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் குளிர் காலம் ஆரம்பித்துள்ளதால் மெயின் பாதிப்பு பலமடங்கு
அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மேலும் லொக் தற்போது நீக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது
பேருந்தில் குண்டு ஒன்றுடன் பயணித்த குடும்பம்
பேருந்தில் குண்டு ஒன்றுடன் பயணித்த குடும்பம்
இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில்
தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களான கணவனும்
மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள்
தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம்
அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 கொரனோ நோயாளிகள்
தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 கொரனோ நோயாளிகள்
தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் 160 கொரோனா தொற்றாளர்கள்
நேற்று இனங்காணப்பட்டனர் என தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும் இரத்மலானையில் 70 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட 2139 பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து 160 கொரோனா
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகளில் 52 சத வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமை
கைதிகளில் 52 சத வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமை
சிறைக் கைதிகளில் 52 வீதமானோர் போதைப் பொருளுக்கு அடிமையாகி யுள்ளார்கள். இவர்கள் சமுகமயப்படுத்தப்பட்டாலும் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இவ்வாறான கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதற்காக நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று தேவை என்று தெரிவித்த அமைச்சர், இவ்வாறான கைதிகளை சிறையில் அடைப்பது தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காகவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும்
இடம்பெறாதிருப்பதற்காகவும் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் , இந்த குழு இன்றைய தினம் மஹர சிறைச்சாலையை அவதானிப்பதற்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.
- 29ஆம் திகதியளவில் நாட்டின் சிறைச்சாலைகளில் 28,541 சிறைக் கைதிகள் இருந்தனர். இவர்களுள் 20,723 பேர் விளக்கமறியல் கைதிகள். 7818 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்றும் அமைச்சர் கூறினார்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மஹர சிறைச்சாலையில் 2891 கைதிகள் இருந்துள்ளனர். இவர்களுள் 2559 பேர் விளக்கமறியல் கைதிகளாவர், 732 பேர் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள். அங்கு இடம்பெற்ற சம்பவத்தினால் 2020.12.02 ஆம் திகதி வரையில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 106 பேர் காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 38 பேர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையிலும், ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் 24 பேர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 53 கைதிகள் மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான இரண்டு அதிகாரிகளும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைச்சாலை திணைக்களம் நேற்றைய தினம் இந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான
காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. இவற்றின் மூலம் கைதிகள் மத்தியில் மோதல்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கைதிகளின் உயிர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறைச்சாலை கைதிகள் 11,500 பேர் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும்,. இதற்கு
மேலதிகமாக இவர்களுக்கு ரபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், வீரவில திறந்தவெளி
சிறைச்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான மத்திய நிலையம் ஒன்று எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
யாழில் மூவரை காணவில்லை – தேடும் உறவுகள்
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன்இ வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல்
போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும்
சேதமடைந்துள்ளன. சண்டிலிப்பாய்இ சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளன. இ இடம்பெயர்பவர்களைத் தங்கவைப்பதற்காக நான்கு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன
புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
ரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 170 வீடுகள் ஓரளவிற்கு சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
நேற்று நாட்டுக்குள் நுழைந்த புரெவி சூறாவளியை தொடர்ந்து
தற்பொழுது உள்ள நிலைமை தொடர்பாக அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில் இந்த விடயங்களை தெரிவித்தார்.
இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்
இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி inner-west பகுதியில் ஆண் மற்றும்
பெண் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்
இதில் பலத்த காயமடைந்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்
விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்
ஈரானின் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை புரிந்தது
இதனை அடுத்து தற்பொழுது குறித்த குற்றாவளிகள் மீது தகுந்த பதிலடி
தாக்குதல் வழங்க படும் எனவும் ,எமது பழிவாங்கும் தகத்தல்கள் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது
லெபனானின் பாரிய குண்டு வெடிப்பை நடத்திய சில மாதங்களில் ஈரானில்
இரு முக்கியஸ்தர்கள் மூன்று நாள் இடைவெளியில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்
இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,எங்கும் எப்போதும்
யாரையும் நாம் கொலை செய்வோம் என இஸ்ரேல் மிரட்டுகிறது ,இந்த
மிரட்டல்களுக்கு ஈரான் அஞ்சுமா..? தொடரும் இவ்வாறான கொலைகளுக்கு பதிலடி வழங்காது உறங்குமா ..? வரும் காலங்கள் இதற்கு உரிய பதில் கிடைக்கும் என நம்பலாம்
அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை
அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை
அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5
ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு பற்றி உள்ளூர் செய்தி சேனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.
அதைத் தொடர்ந்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடினார்கள். அங்கு
பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாம். இந்த
தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம்
பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3.
இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாம். இதன்மூலம் கடந்த
அக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்தக் குழந்தைக்கு அவரும், அவரது கணவர் டினாவும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.
அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
இதுபற்றி பென் கிப்சன் கூறும்போது, “நாங்கள் நிலாவுக்கு மேலே இருப்பது
போல மகிழ்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்” என்று குறிப்பிட்டார்.
பென் கிப்சன் ஒரு ஆசிரியை. இவரது கணவர் டினா சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஆவார்.
அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு
அரசியல் கட்சி துவக்கம்- ரஜினி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல்
கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக
இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
மாத்துவோம்எல்லாத்தையும்மாத்துவோம்
இப்போஇல்லேன்னாஎப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி
பிரிட்டனில் பாரிய வெடிப்பு – நால்வர் பலி
இன்று பிரிட்டன் Wessex Water’s Bristol பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு
நிலையத்தில் உள்ள தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் நல்லவர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்
தற்போது குறித்த பகுதியில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
சுகாதார அதிகாரி முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி
அட்டுளுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர், பொது சுகாதார
பரிசோதகர் அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன்,
குறித்த பரிசோதகரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரகம-அட்டுளுகம பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், குறித்த பிரதேசத்தில் அடையாளம்
காணப்பட்ட தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, அந்த தொற்றாளர் குறித்த அதிகாரியின் முகத்தில் உமிழ்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்
இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக,
கொவிட் 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 402 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பில் இதுவரை
பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10, 140 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 188 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,502 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்19 தொற்றாளர்களாக 878 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தம்பதிகள் சடலமாக மீட்பு- நடந்தது என்ன ..?
தம்பதிகள் சடலமாக மீட்பு- நடந்தது என்ன ..?
மினுவாங்கொட ஓபாத பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் – மனைவி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர்
கணவன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மனைவி 37 வயதுடையவர் என்றும் கணவனுக்கு 45 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








